கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் அழகான நகரம் புதுச்சேரி. பிரஞ்சுக்கா ரர்களின் ஆட்சியின் கீழ் புதுச்சேரி நக ரம் இருந்தபோது அவர்கள் அமைத்த நேர்க்கோட்டில் அமைந்த சாலைகள் புதுச்சேரிக்கு தனிச் சிறப்புதான். இதற் காகவே புதுச்சேரியைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. அது, "நீதி அழகு இல்லை என்றாலும் வீதி அழகு உண்டு' என்று!

இலக்கிய நயத்தோடு சொல்லப்பட்ட இந்த சொலவடையை உண்மைப்படுத்திக் கொண்டிரு க்கிறது புதுச்சேரி. ஆம்! எங்க ளுக்கு நீதி வேண்டும்! பயமில்லாத வாழ்க்கை வேண்டும்! என நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர் புதுச்சேரி பொது மக்களும், வியாபாரிகளும்.

புதுச்சேரியில் வன்முறை, கொலை சம்ப வங்கள் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது! விக்கிரவாண்டியைச் சேர்ந்த ஒருவர் அண் மையில் புதுவை திருக்கனூரில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக காவல் நிலையத்திற்கு சென்ற திருக்கனூர் எம்.எல்.ஏ. “இது என்ன ஊரா?'' எனக் கேட்டு கொந்தளித்திருக்கிறார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வியாபாரிகளுக்கும் காவல்துறைக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கூட - “இங்கு உழைப்பவர்களுக்கு பாதுகாப் பில்லை. 7 மணிக்கு மேல் வெளியே நடமா டவே பயமாக இருக்கிறது. போலீஸ் வைத்தி ருக்கும் துப்பாக்கியை எங்களுக்குத் தாருங் கள்...'' என போலீசிடம் கேட்டிருக்கின்றனர் வியாபாரிகள்.

அமைதியாக இருந்த புதுவை வன்முறைக் களமாக மாறி வருவதற்கு கடுமையான சட் டங்களோ தமிழகத்தைப்போல் சமூக விரோ திகளை என்கவுண்ட்டர் செய்வது மாதிரியான நடவடிக்கைகளோ இல்லாததுதான் என்கின்றனர் புதுவை வாசிகள்.

கடந்த வருடம் மே மாதம் 22ம் தேதி புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளைத் தோட்டத்தில் சத்திய மூர்த்தி என்பவரும் அவரது மகன் பிரகாஷும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஒரே வாரத்திற்குள் (ஜூன் 30) வைத்தி குப்பத்தைச் சேர்ந்த தம்பி துரை என்கிற மணி கொடூரமாக கொல்லப் பட்டார்.

அதே மே மாதம் 31ம் தேதி புதுச்சேரியின் மையப் பகுதி யில் ஐயப்பன் என்பவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூன் 1, 2011 அன்று புதுவை கரிகலாம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நமச்சிவாயம் என் பவர் குடும்பத் தகராறு காரணமாக சிவகுரு என் பரை துப்பாக் கியால் சுட்டதில் சிவகுரு சம்ப வ இடத்திலேயே மரணமடைந்தார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான ராஜ வேலுக்கும் கந்தசாமிக்குமிடையேயான தேர்தல் மோதலினால் ஏற்பட்ட கிருமாம் பாக்கம் கலவரம்.

இப்படி வன்முறை நகரமாக புதுச்சேரி மாறி வந்த சூழ்நிலையிலும் காவல்துறையின் நடவடிக்கை மக்களைத் திருப்தி அளிக்கும் வகையில் அமையவி ல்லை. தொடர் கொலைகளும், வன் முறைச் சம்பவங்களும் கடந்த மே 2011ல் நிகழ்ந்த போதும், வன்முறை யில் ஈடுபட்ட பழைய ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வில்லை புதுவை காவல்துறை.

இத்தனைக்கும் மார்ச் 10, 2011 அன்றே புதுச்சேரியில் குண்டர் சட் டம் அமுலுக்கு வந்து விட்டது. தேர்தல் பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரவுடிகள் மீது நடவ டிக்கை எடுக்க முடியாமல் இருந் தது.

கடந்த ஜூன் மாதம் முதல் வாரத் தில் புதுவை காவல்துறை எஸ்.எஸ்.பி.சந்திரன் செய்தியாளர் களுக்கு பேட்டியளிக் கையில், “புதுச்சேரியில் குற்றங்கள், தொடர் கொலைகள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. தற்போது குண்டர் சட்டத்தில் குற்ற வாளிகளை கைது செய்ய நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளி ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளோம். பரிந்துரை வந்தவுடன் கைது செய்வோம். அனைத்து குற்றவாளிகளையும் கண்கா ணித்து வருகிறோம்...'' எனத் தெரிவித்திருந் தார்.

“புதுவை குண்டர் சட்டத்தைப் பொறுத்த வரை ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறைக்கு முழுமையான அதி காரம் கிடையாது. இதற்காக கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். கலெக்டர் அனும தியைப் பெற்றுத்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியும். அதேபோல, குண்டர் சட்டத்தை தான் விரும்பியவாறு கலெக்ட ரும் பரிந்துரை செய்ய முடியாது.

ஏன் பரிந்துரை செய்யப்பட்டது என்று காரண காரியங்களுடன் குண்டர் சட்ட ஆலோசனைக் குழுவிற்கு கலெக்டர் விளக்கம் தர வேண்டும். இது, குண்டர் சட்டத்திற்கு கலெக்டர் அனுமதி வழங்கிய மூன்று வர காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும். இது போன்ற நடைமுறைகளால் குண்டர் சட்டத் திற்கு பரிந்துரை செய்தால் நாளை கோர்ட், விசாரணை என்று பதில் சொல்ல வேண்டி வருமோ என்பது போன்ற மன ரீதியான தயக்கம் அதிகாரிகளுக்கு ஏற்படுவதால் குண் டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவ தில்லை.

அதோடு, ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் மீண்டும் பழைய வழக்கிற் காக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது என்றும் இச்சட்டம் கூறு கிறது...'' என்கிறார் புதுவையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர்.

புதுவையில் ஆளுயர கத்திகள் லட்சக்கணக்கில் உள்ளது என்று கூறும் கண்ணன் எம்.பி., கடந்த 2ம் தேதி புதுவை ஆளுநர் இக்பால் சிங்கைச் சந்தித்து புதுச்சேரியின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

“புதுவையில் மக்கள் வாழ்வதா? குண்டர்கள் வாழ்வதா? இதில் அரசின் பதில் என்ன என்று ஆளுநரிடம் கேட்டுள்ளேன்...'' என செய் தியாளர்களிடம் அவர் தெரிவித்திருந்தார்.

புதுவையின் சட்டம் - ஒழுங்கு பலவீன மாக இருப்பதை உணர முடிகிறது. சமூக விரோதிகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை என்பதை புதுவை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. குண்டர் சட் டத்தை அமுல்படுத்த புதுவை அரசு தயக்கம் காட்டியே வருகிறது. இதனால் ரவுடிகளின் ஆதிக்கம் புதுவையில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தைப் போன்று சமூக விரோதி களை என்கவுண்ட்டர் செய்தால்தான் நாங் கள் நிம்மதியாக வாழ முடியும் என புதுவை வாசிகள் வெளிப்படையாகவே பேசி வரும் நிலையில், குண்டர் சட்டத்தை பிரயோகிப் பதற்கே புதுவை அரசு யோசனை செய்து வருகிறது.

Pin It