இலங்கை ராணுவத்துடனான சண்டைக்குப் பிறகு வடக்கு, கிழக்கு ஆகிய தமிழ் மாகாணங்களில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவையராக இருக்கின் றனர் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை, காமன்வெல்த் அலுவலகம் தெரிவிக்கிறது.

இலங்கையில் நிலவும் ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் மறுப்பு குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ள காமன்வெல்த் அலுவலகம் அதை விரிவாக விவரிக்கிறது.

இலங்கையில் போருக்குப் பிறகு குடும்பங்களை, அதிலும் குறி ப்பாக குழந்தைகளைக் கவனிக் கும் பொறுப்பு ஏராளமான இளம் தாய்மார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஏராளமான ஆண்கள் கொல் லப்பட்டுவிட்டதால் குடும்பங்க ளில் அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டிருக்கி றது.

தமிழர் பகுதிகளில் ஆயிரக்க ணக்கில் இலங்கை ராணுவ வீரர் கள்தான் தங்கியிருக்கின்றனர். சமூக ரீதியாகவும் வேறு வகையி லும் இது தமிழ்ச் சமூகத்தவருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது.

தமிழர்கள் தங்களுடைய பாரம்ப ரியக் குடியிருப்புகளில் மறு குடிய மர்த்தலுக்காகக் காத்திருக்கும் வேளையில், சிங்களர் குடியேற்றம் வெகு தீவிரமாகவும் பெருமளவி லும் நடக்கிறது. அத்துடன் தமிழர் களின் விளைநிலங்களும் வீடுக ளும் கைமாற்றித் தரப்பட்டுள்ளன.

தமிழர்களுக்காகப் பரிந்து மட் டும் அல்ல, பொதுவாக இலங்கை அரசின் போக்கை விமர்சிக்கும் ஜனநாயகவாதிகள்கூட கடுமை யான அச்சுறுத்தல்களுக்கும் தாக் குதல்களுக்கும் உள்ளாகின்றனர். தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்க ளும் கடுமையாக ஒடுக்கப்படுகின் றனர்.

போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் பூண்டோடு அழிக்கப் பட்டு விட்டதாக அறிவித்த பிற கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தில் இருந்தவர்கள் என்ற சந்தே கத்தின் பேரிலோ, விடுதலைப் புலி களின் ஆதரவாளர்களாக இருந் தார்கள் என்று சந்தேகித்தோ, இப் போதைய அரசுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் என்ற சந்தே கத்திலோ தமிழர்களை விசாரணைக் காக அழைத்துச் செல்வதும், பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போவதும் சகஜ மாக நடக்கிறது.

சாதாரணமான உரிமைகளைக் கேட்பவர்கள்கூட அரசின் எதிர்ப் பாளர்களாக முத்திரை குத்தப்பட்டு தீவிரவாதிகளைப் போல விசார ணைக்கு அழைத்துச் செல்லப்படு வதும், கடுமையான சித்திரவ தைக்கு உள்ளாக்கப்படுவதும், கொடுஞ்செயல்களுக்குப் பிறகு கொலை செய்து சடலமாக எங்கோ எப்படியோ வீசப்படுவதும் நடக்கி றது என்ற சந்தேகம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருக்கி றது.

போருக்குப் பிறகு விசாரணைக் காக போலீஸ் அல்லது ராணுவத் தால் அழைத்துச் செல்லப்பட்டவர் கள், வெளியில் சென்று வீடு திரும் பாதவர்கள் என்று பலரைப் பற்றி காவல் நிலையங்களில் கேட்டால் சரியாக பதில் தரப்படுவதில்லை. புகார் செய்தால் புகாரைப் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

அப்படியே வேண்டா வெறுப் பாக புகார்களைப் பதிவு செய்தா லும் விசாரணை செய்யாமல் அலட்சியப்படுத்துகின்றனர் என் றெல்லாம் பிரிட்டன் நாட்டு வெளி யுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் கடந்த வாரம் வெளியிட்ட 2011-ம் ஆண்டுக்கான அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை யின் வடக்கில் 2 அரசியல் தொண் டர்கள் காணாமல் போனார்கள்.

2010 முதல் பிரகீத் ஏகநெல்லிக் கொட என்ற சிங்கள கார்ட்டூ னிஸ்ட்டைக் காணவில்லை. அவர் இருப்பிடம் குறித்து யாதொரு தகவலும் இல்லை.

காணாமல் போனவர்களைத் தேடுவதில் முனைப்பு இல்லை, சில சந்தர்ப்பங்களில் புகார்கள் கூட பதிவு செய்யப்படுவதில்லை என்பதை இலங்கை அரசு நியமித்த "போர் படிப்பினைகள் சமரசத்துக் கான கமிஷன்' (எல்.எல்.ஆர்.சி.) என்ற அமைப்பே தெரிவித்துள் ளது.

தமிழர்களின் வசிப்பிடங்களில் குவிக்கப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் தமிழ்ப் பெண் களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாக இருக்கிறது. உலக அளவில் ஆண் - பெண் விகிதத்தில் இலங்கை படுமோசமாகச் சரிந்து 16-வது இடத்திலிருந்து 31-வது இடத்துக்குப் போய்விட்டது.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவி ருந்த மனித உரிமைகள் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாதபடி 42 பேர் தடுக்கப்பட் டனர்.

லலித்குமார் வீரராஜ், குகன் முரு கானந்தன் என்ற 2 தமிழர்கள் டிசம்பர் 9-ம் தேதி யாழ்ப்பாணத் துக்குச் சென்றபோது காணாமல் போனார்கள்.

மனித உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர் ஜே.சி. வெலியமுன வீட்டின் மீது கை யெறி குண்டு வீசி தாக்கியவர்கள் யார் என்பதைப் போலீஸார் விசா ரிக்கவே இல்லை.

சங்கரபிள்ளை சாந்தகுமார், ஸ்டீபன் சுந்தரராஜ் என்ற சிவில் சங்க உறுப்பினர்கள் காணாமல் போனது குறித்தும் போலீஸார் விசாரிக்கவே இல்லை.

இலங்கையில் பல்வேறு இடங்களில் சித்திரவதைக் கூடங் கள் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக 12 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பகிரங்க மாகவே இலங்கை அரசிடம் புகார் செய்தன. சித்திரவதைக்காகவே போலீஸ், ராணுவ வளாகங்கள் அல்லாத ரகசிய மையங்கள் பல செயல்படுவதாகத் தெரிய வந்துள் ளது.

அரசியல், மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் - திடீரென காணாமல் போகிறார்கள், விசார ணைக்காக சித்திரவதை முகாம்க ளுக்குக் கொண்டு செல்லப்படுகி றார்கள். அங்கு விசாரணையி லேயே உயிரிழக்கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.

2006 முதல் 2009 வரை நடந்த சித்திரவதைகளில் பாதிக்கப்பட்ட 35 பேர் துணிந்து அந்த விவரங் களை விசாரணை அமைப்புகளி டம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையில் உலகில் எங் குமே ஆதாரப்பூர்வமாகத் தகவல் கள் கிடைத்ததே இல்லை.

இலங்கை அரசின் அடக்குமு றைகளை, அதிகாரத் துஷ்பிரயோ கங்களை, மனித உரிமை மீறல் களை, போலீஸ், ராணுவத்தின் அராஜகங்களைத் தோலுரித்துக் காட்டும் பத்திரிகையாளர்கள் யாராக இருந்தாலும் கடத்தப்ப டுவதும் கொல்லப்படுவதும் தொடர்கிறது.

ஏராளமானோர் மறைமுக மிரட்டல்களுக்கும், அடி - உதைக ளுக்கும் ஆள்பட்டிருக்கின்றனர்.

"எல்லையற்ற நிருபர்கள்' என்ற உலக அமைப்பு, இலங்கை அரசு பத்திரிகையாளர்கள் மீது தொடுக் கும் அடக்கு முறைகளுக்காகவே இலங்கையை மிக மோசமான நாடாக 163வது இடத்தில் வைத் துள்ளனர்.

இத்தகவல்களை பிரிட்டிஷ் அமைச்சர் வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வளவு கொடூர மனம் படைத்த ராஜபக்ஷேவிற்கு தமிழகத்தில் சிலர் சாமரம் வீசுவதுதான் புரியாத புதிராக உள்ளது.

Pin It