முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்!!

ஆந்திர மாநிலம் தெலுங்கானாவிற்கு உட்பட்ட ஆறு தொகுதிகளுக்கான தேர்தலும், மெஹ்பூப் நகர் இடைத்தேர்தலும் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 21ம் தேதி வெளியாயின.

இதில் தனி தெலுங்கானா கேட்டு போராடி வரும் சந்திர சேகர ராவ் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அக்கட்சி சார்பாக மெஹ்பூப் நகர் இடைத் தேர்த லில் நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளரான சையத் இப்ராஹிம் பாஜக வேட்பாள ஸ்ரீநிவாச ரெட்டியிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந் துள்ளார்.

இவரது தோல்வியையடுத்து முஸ்லிம்கள் மத்தியில் டி.ஆர்.எஸ். கட்சி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. தெலுங்கானா வைப் பொறுத்தவரை தனித் தெலுங்கானா மாநிலம் கோரி போராடிவரும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு தெலுங்கானா பகுதி முஸ்லிம்கள் பெரும் ஆதரவ ளித்து வருகின்றனர்.

டி.ஆர்.எஸ். கட்சியும் தனித் தெலுங்கானா அமைந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, அரசியல் அதிகாரம் ஆகியவை உரிய வகையில் அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் பிரச்சாரம் செய்து தனித் தெலுங்கானா விற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் டி.ஆர்.எஸ். கட் சியின் முஸ்லிம் வேட்பாளர் மெஹபூப் நகர் தொகுதியில் வெறும் 1879 வாக்குகள் வித்தியா சத்தில் தோல்வியடைந்திருப்பது முஸ்லிம்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. டி.ஆர். எஸ். கட்சியின் தலைவர்கள் மெஹபூப் நகர் தொகுதியில் போதிய கவனம் செலுத்த வில்லை. இதற்கு காரணம் சாதிய உணர்வுதான் என்று குற்றம்சாட் டும் ஆந்திர முஸ்லிம்கள், டி.ஆர். எஸ். கட்சியிலுள்ள முக்கியத் தலைவர்களும், அக்கட்சியி லுள்ள ரெட்டி இனத்தவர்களும் (தங்கள் கட்சியின் முஸ்லிம் வேட்பாளரைப் புறக்கணித்து விட்டு) சாதிய உணர்வுடன் பாஜ கவைச் சேர்த்த ரெட்டி இன வேட் பாளருக்கு வாக்களித்து விட்ட னர் என்கின்றனர் அவர்கள்.

ஆந்திராவின் பல்வேறு கட்சி களிலுள்ள முஸ்லிம் தலைவர்க ளின் விரல்களும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிராகவே நீள்கின்றன.

மெஹபூப் நகர் தொகுதியில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இருந்தும் டி.ஆர்.எஸ். கட்சி அத்தொகுதியை கோட்டை விட்டிருக்கிறது.

முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர டி.ஆர்.எஸ். கட்சி முழு முயற்சி எடுத்த போதிலும், அக் கட்சியின் சில தலைவர்களும், வாக்காளர்களும் இன அடிப்ப டையில் இத்தேர்தலை அணுகி யுள்ளனர் என்கின்றனர் ஆந்திரா வின் அரசியல் விமர்சகர்கள்.

தனித் தெலுங்கானாவிற்காக போராடும் தனித் தெலுங்கானா விற்கான போராட்ட அமைப் பின் ஜே.ஏ.சி. (ஒர்ண்ய்ற் அஸ்ரீற்ண்ர்ய் இர்ம்ம்ண்ற்ற்ங்ங்) அமைப்பின் அரசியல் ஒருங்கிணை ப்பாளரான பேரா. கோதண்ட ராமரெட்டி முஸ்லிம்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவர் பாஜக வேட்பாளரின் வெற்றிக்காக வேலை செய்திருக்கிறார். இவ ரைப் போலவே டி.ஆர்.எஸ். கட் சியின் ரெட்டி இனத் தலைவர் களும் பாஜக வேட்பாளரின் வெற் றிக்கு உழைத்திருக்கின்றனர்.

அதோடு அனைத்து கட்சிகளி லுள்ள ரெட்டி இனத் தலைவர் களும் பாஜக வேட்பாளருக்கு இன அடிப்படையில் வாக்களிக் குமாறு பிரச்சாரமும் செய்திருக் கின்றனர்.

இந்தத் தகவல்கள் தேர்தல் காலத்தில் அரசல்புரசலாக வெளி வரத் துவங்கியதுமே டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரான சந்திர சேகர ராவைத் தொடர்பு கொண்ட தெலுங்கு தேசம் கட்சி யின் பொலிட் பீரோ உறுப்பின றும் "சியாசத்' என்கிற பிரபல உருது நாளிதழின் ஆசிரியரு மான ஜஹீருத்தீன் அலிகான், “மெஹ்பூப் நகர் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்'' என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜஹீருத்தீனின் அறிவுரையை ஏற்று இத்தொகுதியில் கூடுதலாக அக்கறை எடுத்து சந்திரசேகர ராவ் பிரச்சாரம் செய்திருந்தால் சையது இப்ராஹிமின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் என் கின்றன ஆந்திர ஏடுகள்.

மெஹ்பூப் நகர் இடைத்தேர் தல் முஸ்லிம்களை தீவிரமாக சிந் திக்க வைத்திருக்கிறது. முஸ்லி மல்லாத பிற கட்சித் தலைவர்கள் முஸ்லிம்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தை விரும்பவில்லை என்ற உண்மையை இந்த இடைத் தேர்தல் தெலுங்கானா பகுதி முஸ்லிம்களுக்கு தெளிவுபடுத்தி யுள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் போலவே எல்லா அரசியல் கட்சி களும் முஸ்லிம்களை வாக்கு வங் கிகளாக வைத்திருக்கவே நினைக் கின்றன.

சையத் இப்ராஹிம் தோல் விக்கான முழுப் பொறுப்பை யும் டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் தான் ஏற்க வேண்டும். அவரது தனி தெலுங்கானா போராட்டத் திற்கு முக்கிய ஆதரவு சக்தியாக இருப்பது தெலுங்கானா பகுதி முஸ்லிம்கள்தான். இப்பகுதியி லுள்ள பல்வேறு மாவட்டங்க ளில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கறீம் நகர், மெஹ்பூப் நகர், நிஸாமா பாத் போன்ற மாவட்டங்களின் பெயர்களே இதற்கு சாட்சி.

1956ம் ஆண்டு ஆந்திராவுடன் தெலுங்கானா பகுதி இணைக்கப் பட்டபோதே தனி தெலுங்கானா விற்கான போராட்டம் வெளிப்ப டத் துவங்கியது. என்றாலும் 1969க்குப் பின்பே வீரியமிக்க போராட்டமாக மாறியது. 1969 முதல் நூற்றுக்கணக்கான முஸ் லிம்கள் தெலுங்கானா போராட் டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். ஆயினும் தெலுங்கானா முஸ்லிம்களின் இந்தத் தியாகங்கள் எல்லாம் சாதி உணர்வுகளுக்கு மத்தியில் மதிப்பற்றுப் போயிருக்கிறது.

இந்தத் தியாகங்கள் ஒருபுறமி ருக்கட்டும். தனித் தெலுங்கானா போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே லட்சியத் திற்காக 2010ல் நடந்த நிஸாமா பாத் (தெலுங்கானா) இடைத் தேர்தலில், தங்களின் கோபத்தை யும், வெறுப்பையும் ஒரு பக்கம் வைத்து விட்டு பாஜக வேட்பா ளரை ஆதரித்தவர்கள்தான் தெலுங்கானா முஸ்லிம்கள்.

இயல்பிலேயே மதச் சார்பற்ற தன்மை கொண்டவர்கள் முஸ் லிம்கள் என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் அந்தச் சமூகத்தின் பிரதிநிதிக்கு மெஹ் பூப் நகரில் தோல்வியைத் தந்தி ருக்கின்றனர் சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே! சாதி உணர் வின் உச்சம் என்றுதான் இத னைச் சொல்ல வேண்டும்.

பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தெலுங் கானாவில் இந்துத்துவாவிற்கு பாதை அமைத்துத் தரும் பணியை டி.ஆர்.எஸ். கட்சி செய் திருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

சொந்த கட்சியே சையது இப்ராஹிமின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் சொந்த சமுதாயமே இப்ராஹி மின் தோல்விக்கு தெரிந்தே காரணமாகியுள்ளது.

மெஹ்பூப் நகரில் டி.ஆர்.எஸ். கட்சியின் சையது இப்ராஹிமை எதிர்த்து நிஸார் அஹ்மது, முஹம்மது கவுஸ் முஹையித் தீன், அப்துல் கறீம், செல்வி சாஜிதா பேகம் என 4 பேர் கள மிறக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 2373 வாக்குகளைப் பிரித்து சையது இப்ராஹிமின் தோல் விக்கு வழி வகுத்திருக்கின்றனர்.

மேற்கண்ட நால்வரும் முறையே 449, 456, 230, 1230 என வாக்குகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் வெற்றி பெற மாட் டோம் என்று தெரிந்த நிலையி லேயே யாருடைய சதித் திட்டத்திற்கோ ஆளாகி வேட் பாளளர்களாக களமிறக்கப் பட்டுள்ளனர். இவர்கள் போட் டியிடாமல் இருந்திருந்தால் 594 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்க டித்திருப்பார் சையது இப்ரா ஹிம்.

இதுபோன்ற சூழல்கள் ஏற்ப டும்போது பலம் வாய்ந்த வெற்றி வாய்ப்புள்ள முஸ்லிம் வேட்பா ளரை எதிர்த்து போட்டியிடும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தல் களத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது முஸ்லிம்களின் பொறுப்பு என்பதை எல்லா மாநில முஸ்லிம்களும் உணர வேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் பிரதிநி தித்துவம் அரசியல் அதிகாரம் பெறுவதை பாஜக போன்ற இந் துத்துவா கட்சிகள் விரும்பா ததை அவை வெளிப்படையா கவே காட்டி வருகின்றன. ஆனால் முஸ்லிம்களின் நண்பன் என்று காட்டிக் கொள்ளும் கட் சிகள் முஸ்லிம்களின் பிரதிநிதித் துவத்தை உள்ளுக்குள் விரும்புவ தில்லை என்பதை வெளிப்படை யாக காட்டாவிட்டாலும், கூட் டணி, தொகுதி உடன்பாடு, தேர்தல் களம் ஆகியவற்றில் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த அரசியல் தந்திரத்தை, அரசியலின் அண்டர்கிரவுண்ட் சதிகளை முஸ்லிம்கள் தெளிவா கப் புரிந்து கொள்ள வேண்டும். மெஹ்பூப் நகர் இடைத் தேர்தல் இதைத்தான் சொல்லித் தருகி றது.

- அபு

Pin It