குஜராத் மாநிலத்தில் 2002ல் நடைபெற்ற கலவரத்தில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்க ளின் பல கோடி சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் சமூக விரோதிகளுக்கு சமமாக குஜராத் காவல்துறையும் முஸ்லிம் படுகொலைக ளில் பங்கெடுத்தது.

இவை போதாது என்று கலவ ரத்திற்கு பிந்தைய சூழலிலும் முஸ்லிம்களை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லுமாறு கீழ்மட்ட காவல்துறைக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதை அம்பலப்படுத்தியிருக்கி றார் குஜராத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் ஸ்ரீகுமார்.

குஜராத் கலவரத்தின் பல்வேறு வழக்குகளை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் நேரடி வழி காட்டுதலின்படி சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதைப் போலவே, குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ். பேடி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வாரம்தான் தனது விசாரணையைத் துவக்கியது. இக்குழுவிடம் 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார்.

தான் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. யாக பணியாற்றிய காலகட்டத்தில் டி.ஜி.பி.யும், முதல்வர் நரேந்திர மோடியும் மற்றும் உள்ள ஏனைய உயர் காவல்துறை அதிகாரிகளும் பலமுறை ரகசியக் கூட்டங்களை நடத்தியதாகவும், ஆனால் அந்தக் கூட்டங்கள் நடைபெற்றது குறித்த குறிப்புகள் எதுவும் எழுதப்படவில்லை. அவை ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்ததோடு, 2002ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் (அதாவது குஜராத் கலவரத்திற்கு பின் இரண்டு மாதங்கள் கழித்து) "தீவிரவாதிகள்' என்ற பெயரில் முஸ்லிம்களை அழிக்குமாறு தனக்கு உத்தரவிடப் பட்டதாகவும் ஆனால் அதை தான் நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.

முஸ்லிம்களை திட்டமிட்டு கருவறுக்கும் வேலையை குஜராத் அரசு போலி என்கவுண்ட்டர்கள் மூலம் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

ஸ்ரீகுமாரின் அறிக்கை, முஸ் லிம்கள் 2002 காலகட்டத்தில் அரசு பயங்கரவாதத்திற்கு உட்ப டுத்தப்பட்டனர் என்கிற செய்தியை தெளிவாக எடுத்துரைக்கி றது என்பதோடு, முதல்வர் மோடி தனது வீட்டில் காவல்துறை உயர திகாரிகளுடனான ரகசிய சந் திப்பை நடத்தி, முஸ்லிம்கள் மீது இந்துத்துவாவினர் நடத்தும் தாக்குதலை கண்டு கொள்ள வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று அக்கூட் டத்தில் கலந்து கொண்ட அப் போதைய உளவுத்துறை அதிகாரி யான சஞ்சீவ் பட் கூறியதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது.

சஞ்சய் பட்டின் இந்த குற்றச் சாட்டை மறுத்து மோடியை இதி லிருந்து காப்பாற்றும் வேலையை ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு செய்தது.

தற்போது, ஹெச்.எஸ். பேடி தலைமையிலான சிறப்பு புலனாய் வுக் குழு ஸ்ரீகுமாரின் இந்த குற்றச்சாட்டுகளை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

முதல்வர் மோடி மீதும், உயர் காவல்துறையினர் மீதும் இப்போது குற்றச்சாட்டை வைத்திருப்பது சாதாரண குடிமகனோ, முஸ்லிம் அதிகாரியோ அல்ல... பொறுப்பான பதவியில் இருந்த - அதுவும் பல்வேறு தகவல்களை பல கோணங்களிலும் பெறும் உளவுத்துறையின் மாநில அளவிலான பொறுப்பில் இருந்தவர் என்பதை ஹெச்.எல். பேடி தலைமையிலான புலனாய்வுக் குழு எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஸ்ரீகுமாரின் குற்றச்சாட்டுகளில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அப்படி போலி என்கவுண்ட்டருக்கு உத்தரவிட்ட போலீஸ் அதி காரிகள் யார்? அந்த உத்தரவுகளை நிறைவேற்றிய அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து இந்தக் குற்றவாளிகள் தப்பி விடாதபடி உச்ச நீதிமன்றத்தில் எல்லாவித ஆவணங்களையும் சமர்ப்பித்து தண்டனை வாங்கித் தர வேண் டியது புலனாய்வுக் குழுவின் பொறுப்பு.

ராகவன் தலைமையிலான புலனாய்வுக் குழு போன்று அர சுக்கு பயந்து அறிக்கை கொடுக்கா மல் நீதியை நிலை நாட்டும் வகை யில் ஹெச்.எல். பேடி குழுவின் அறிக்கை இருக்க வேண்டும் என் பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப் பாக உள்ளது.

- ஃபாரூக்