தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி முடிவடைந்துள்ளது. தமிழக வாக்காளர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பது வாக்கு எந்திரங்களை திறந்தால் தெரிந்து விடும். ஆனால் அதற்கு மே 13ம் தேதிவரை காத்திருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிந்த போதிலும் மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப் பது இரண்டு விஷயங்கள்தான்.

முதலாவது, தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட வாக்குப்பதிவு. இரண்டாவது, தேர்தல் கமிஷனின் அதிகபட்ச கெடுபிடி.

ஓயாது ஒலிக்கும் ஒலிப் பெருக்கிகள், தலைவர்களின் ஆளுயர கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள் போன்ற எந்த அம்சமும் இல் லாமல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் திருமங்கலம் பார்முலாவை உருவாக்கி அதனை இந்தத் தேர்தலில் நடமுறைப்படுத்த அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகளை தேர்தல் கமிஷன் நடத் திய வாகன சோதனைகள் முறிய டித்தன!

திருச்சியில் தனியார் பேருந்து ஒன்றில் வைக்கப்பட்டிருந்த லக்கேஜ்களை சோதனை செய்து 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கைப்பற்றியது, கிருஷ்ண கிரி மாவட்டம் தளி தொகுதியில் மூன்று லாரிகளில் கொண்டு வரப்பட்ட மதுப் புட்டிகளை கைப்பற்றியது போன்றவை தேர்தல் கமிஷ னின் நடவடிக்கைகளில் குறிப்பி டத்தக்கது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் நடந்த வாகன சோதனைகளில் மொத்தம் 52 கோடி ரூபாய் பெருமானமுள்ள பணம், பொருள்கள் கைப்பற்றப் பட்டன. அதில் தமிழகத்தில் பிடிபட்டது மட்டும் 42 கோடி என்பதை பார்க்கும்போது தேர் தல் கமிஷனின் உழைப்பை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இதில் ஆட்டம் கண்டதென் னவோ அரசியல் கட்சிகள்தான். தாங்கள் நினைத்தவாறு தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியவில் லையே என்று ஆடித்தான் போய் விட்டார்கள் அரசியல் வாதிகள்?

தேர்தல் கமிஷன் தேவையில்லாத கெடுபிடிகளைச் செய்வதாக குறை கூறினார்கள். வியா பாரிகளை வைத்து தாங்கள் பொருளையும், பணத்தையும் கொண்டு செல்வதற்கு தேர்தல் கமிஷன் தொந்தரவு செய்வதாக குற்றம் சாட்டினார்கள். தேர்தல் கமிஷன் மீது பலவித காரணங் களை கூறி வரிசையாக வழக்கு தொடுத்தார்கள்.

உச்ச கட்டமாக தமிழக முதல் வர் கருணாநிதி தமிழகத்தில் அறிவிக்கப்படாத மிசா அமுலில் இருப்பதாக தனது காட்டத்தை வெளிப்படுத்தினார்.

வீட்டு உரிமையாளர் அனுமதி அளித்தாலும் வீட்டுச் சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் விதித்த தடை பெரும் பகுதி மக்களிடத்தில் வரவேற்பை மட்டுமல்லாது உறுதியான ஆதரவையும் பெற்றுத் தந்துள்ளது.

தேர்வு நேரத்தில் தேர்தல் வைத்து விட்டார்களோ என்று தேர்தல் கமிஷனை திட்டித் தீர்த்த பெற்றோர்களும், மாணவர்களும் கூட ஒலிப் பெருக்கிச் சத்தம் அதிகம் கேட்காமல் நடைபெற்ற தேர்தலை கண்ட பிறகு தேர்தல் கமிஷனின் ஆதர வாளர்களாக மாறிப் போய் விட்டார்கள்.

இவை எல்லாம் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான அச்சம் என்ற போதிலும் அதற்கு எதிராக வலிமையான குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. சோனியா காந்தி பிரச்சாரத்திற்கு வந்து சென்ற பிறகு தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளில் சுணக்கம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால்தான் தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது என்றும் கூறினார்கள்.

இந்தக் குற்றச்சாட்டை பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி ஒட்டுமொத்தமாக தள்ளி விட முடியாது. மாநிலம் முழுவதும் கைபற்றப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிக தொகை வாக்காளர்களுக்கு விநியோகிக் கப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கூறுகின்றன.

இருந்தபோதிலும் ஓரிரண்டு சம்பவங்களைத் தவிர பெருமளவில் கலவரங்கள் நிகழாமல் பாதுகாத்து தேர்தலை நடத்தி முடித்தமைக்கு தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் சொல்லத்தான் வேண்டும்.

Pin It