விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; அதிகாரப் பரவலாக்கலுக்கு சிங்கள அரசு முன் வர வேண்டும் என்றெல்லாம் கருத்துருவாக்கம் ஏற்பட்டு வரும் வேளையில், இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கை முஸ்லிம்களுக்கும் முக்கிய பொறுப்பிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களும் ஒன்றிணைந்து அதிகாரச் சக்தியாக மாறு வதை சிங்களச் சக்திகள் விரும்ப வில்லை. இதனைத் தடுத்து, முரண்பாடுகள் உள்ள ஒரு தேசமாகவே இலங்கையை வைத்திருக்க விரும்பும் அச்சக்திகள், பேரினவாதம் வீழ்ச்சியடைந்து விடக் கூடாது என்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.

"இலங்கையை ஒரு சமாதான நாடாக கட்டமைக்க வேண்டும் என்கிற ஜனாதிபதியின் உணர்வுகளை மதிக்காத தீய சக்திகள் எங்களை போராட்டக் குழுவாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர்...'' என குற்றம் சுமத்துகிறார் ஹசன் அலி.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடையேயான தொடர்புகள் குறித்து கூறும் கூட்டமைப்பின் செயலாளர்மாவை. சேனாதி ராஜா, "தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். முஸ்லிம் காங்கிரஸ் தவிர ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்...'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

கால் நூற்றாண்டையும் கடந்து நடைபெற்று வந்த யுத்தம் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை மாத்திரமின்றி சமூக வாழ்க்கையிலும் பெரும் இடைவெளியையும், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடுகளையும் உருவாக்கி விட்டது.

எதிர்கால சமாதான இலங்கையின் புணர்நிர்மானம் என்பது வெறும் அரசியல் ரீதியாகவோ, பொருளாதார வளர்ச்சியின் பின்னணியிலோ மட்டுமே சாத்தியமல்ல. சமூகங்களிடையேயான இணைப்பும், பிணைப்புமே அதனை முழுமையாக சாத்தியமானதாக்கும். இந்த வகையில் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இலங்கை முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

- ஃபைஸல்

Pin It