அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடமும் வழங்க வேண் டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கிய அநீதியான தீர்ப்பிற்கு கடந்த 9.11.2011 அன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அலகாபாத் வழங்கிய தீர்ப்பு இந்துக்களுக்கு இரண்டு பங்கு, முஸ்லிம்களுக்கு ஒரு பங்கு என்ற நிலையை உருவாக்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகரா, அகில பாரத் இந்து மகாசபை, ராம் விரஜ்மான் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், ஜமாஅத்தே உலமா யே ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத் தில் அப்பீல் மனு தாக்கல் செய்தன.

வக்பு வாரியமும், உலமா அமைப்பும் தங்களது மனுவில், "இந்த தீர்ப்பு உரிய ஆதாரத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட வில்லை. மாறாக மத நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நிராகரிக்க வேண்டும். ராமர் பிறந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்ட தாக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக் கப்படாத நிலையில் அதை உறுதிப் படுத்தி பிறப்பிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு தவறானதாகும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்து மகாசபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "இந்த தீர்ப்பில் பாதியை நாங்கள் ஏற்கிறோம். அதேசமயம், ஒரு பங்கு இடத்தை முஸ்லிம்களுக்குத் தர வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்க்கிறோம். ஒட்டுமொத்த நிலத்தையும் இந்துக்களுக்கே ஒதுக்கி உத்தர விட வேண்டும்' என்று கோரியிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆப்தாப் ஆலம், நீதிபதி ஆர். எம். லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில் அலகாபாத் உயர் மன்றத் தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், “நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோர வில்லை. ஆனால், யாருமே கேட் காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது.

இது மிகவும் புதுமையான, புதிரான தீர்ப்பு. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தி யில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொடர வேண்டும்...'' என்று கூறி அலஹாபாத் நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சனம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடையும், அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்த விமர்சனமும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கும் நாளை நாடே எதிர் பார்க்கிறது.

Pin It