இரண்டாம் உலகப் போர் வரையில், உலகின் கதிரவன் மறையாத மாபெரும் பேரரசு எனும் பெரு மையைப் பெற்றிருந்தது பிரித்தானியப் பேரரசு. தன் காலனிய நாடுகளை இழந்தபின் பிரிட்டன்  (United Kingdom-U.K.) என்று அழைக்கப்படுகிறது.

பிரிட்டன் 539 இலட்சம் மக்களைக் கொண்ட இங்கிலாந்து, 50 இலட்சம் மக்களைக் கொண்ட  ஸ்காட்லாந்து, 31 இலட்சம் மக்களைக் கொண்ட வேல்ஸ், 18 இலட்சம் மக்களைக் கொண்ட வடஅயர்லாந்து என்கிற நான்கு பகுதிகளைக் கொண்டதாகும்.  ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து மக்கள் தங்கள் தாய்மொழியையும், பிற தனித்த தேசிய அடையாளங்களையும் பேணிக் காப்பதில் தீவிரமான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரு கின்றனர். ஆங்கில மொழியில் மிகச் சிறந்த நாடக ஆசிரியரும் நாத்திகருமான பெர்னாட்ஷா எப்போதும் தன்னை ‘அய்ரிஷ்’காரராகவே அடையாளப்படுத்திக் கொண்டார். ஆங்கிலமொழியின் குறைகளைச் சுட்டிக்காட்டி பலவாறாகப் பகடி செய்தார்.

தெற்கு அயர்லாந்து, அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடாக இருக்கிறது. இந்நாட்டு  மக்கள் கிட்டத்தட்ட எல்லோரும் கத்தோலிக்கக் கிறித்துவ மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரிட்டனின் ஒரு பகுதியாக உள்ள வடஅயர்லாந்தில் பெரும்பான்மையினர் புரொட்டஸ் டென்ட் கிறித்துவர்கள். சிறுபான்மையினரான கத்தோ லிக்கர்கள் வடஅயர்லாந்தை, தனிநாடாக உள்ள கத்தோலிக்க அயர்லாந்துடன் இணைத்து இன-மொழி அடிப்படையில் ஒரே நாடாக ஆக்கிட வேண்டும் என்று பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். பிரிட்டிஷ் இந்தியா வின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் வடஅயர்லாந்தில் சுற்றுலாவுக்காகப் படகில் சென்று கொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது வடஅயர்லாந்தின் கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக பிரித் தானிய அரசுடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளனர். சென்னையில் வாழ்ந்த அன்னிபெசன்ட், அய்ரிஷ்காரர் என்பதால்தான், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டார்.

18-9-2014 அன்று, “ ஸ்காட்லாந்து தனிச் சுதந்தர நாடாக வேண்டுமா?” என்ற வினாவுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டும் தங்கள் கருத்தைத் தெரிவிக் கும் பொது வாக்கெடுப்பு  ஸ்காட்லாந்தில் நடக்கவுள்ளது. வேல்ஸ் பகுதி 300 ஆண்டுகளுக்குமுன் - 1707இல் தான் இங்கிலாந்து நாட்டுடன் இணைந்தது. ஆனால்  ஸ்காட்லாந்து பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்துடன் ஒன்றுபட்டு  இருந்தது. ஆனால் இப்போது தனிச்சுதந்தர நாடாகப் பிரிய வேண்டும் என்று ஏன் கேட்கிறது?

1979இல் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான மார்க்ரெட் தாட்சர் பிரிட்டனின் தலைமை அமைச்சரா னார்; 1990 வரையில் ஆட்சியில் இருந்தார். தான் நினைப்பதைச் செயல்படுத்திட வேண்டும் என்பதில் முரட்டுத்தனமான உறுதிப்பாடு கொண்டவர் தாட்சர். இவர்தான் புதிய பொருளாதாரக் கொள்கையை முதன் முதலாக விடாப்பிடியாக பிரிட்டனில் செயல்படுத்தியவர்.

பிரிட்டனில் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று, தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கியவர்; அவர் களின் நலத்திட்டங்களைக் குறைத்தவர். இறுதியில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியே மார்க்ரெட் தாட்சரின் புதிய பொருளாதாரக் கொள்கைகளையே தன் கட்சிக் கொள்கையாக ஏற்கும் நிலைக்குத் தள்ளியவர்.

இதே காலத்தில் 1980 முதல் 1989 வரை அமெரிக் காவில் எப்போதும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்டு ரீகன் இரண்டு தடவைகள் தொடர்ந்து குடியரசுத் தலை வராக இருந்தார். தாட்சரும், ரீகனும் கூட்டுச்சேர்ந்து பன்னாட்டு முதலாளியப் பெருங்குழுமங்கள் தீட்டித்தந்த புதிய பொருளாதாரக் கொள்கையை உலக  நாடுகளில் புகுத்தி, வலிமையாகக் காலூன்றி வளரச் செய்த பெருங்கேட்டைச் செய்தனர்.

 ஸ்காட்லாந்து மக்கள் நீண்டகாலமாகத் தொழிற் கட்சியை ஆதரிக்கும் இடதுசாரி சிந்தனை கொண்ட வர்கள். பத்தாண்டுகளுக்குமேல் தீவிரமான வலது சாரிக் கொள்கையைச் செயல்படுத்திய தாட்சரின் ஆட்சி யை எதிர்த்தனர். 1997இல் டோனி பிளேர் தலைமையிலான தொழிற்கட்சியின் ஆட்சி அமைந்தது.

ஸ்காட்லாந்து மக்களுக்குத் தன்னுரிமை அதிகாரங்களை அளிப்பதாகத் தேர்தலின்போது பிரதமர் டோனி பிளேர்  வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில்,  ஸ்காட்லாந்துக்கென தனி அதிகாரங்கள் கொண்ட நாடாளு மன்றம் 1999இல் உருவாக்கப்பட்டது. மருத்துவம், பல்கலைக்கழகங்கள், சமூகநலத் திட்டங்கள் முதலான வற்றில்  ஸ்காட்லாந்து மக்களுக்குச் சமஉரிமையும், சம வாய்ப்பும் தரும் தன்மையில் சட்டங்கள் இயற்றப் பட்டுச் செயல்படுத்தப்பட்டன. ஆனால் பிரிட்டனில் பிற பகுதிகளிலோ மக்கள் நலனுக்கான நிதி குறைக்கப் பட்டு, தனியார் மயம் எல்லாத் துறைகளிலும் அரசால் ஊக்குவிக்கப்பட்டது.

பிரிட்டனின் தொழிற்கட்சி முற்றிலுமாக கன்சர் வேட்டிவ் கட்சியின் புதிய பொருளாதாரக் கொள்கை களை ஏற்றுக்கொண்டதால், இனிமேல் பிரிட்டனின் ஒரு பகுதியாக நீடித்துக் கொண்டு,  ஸ்காட்லாந்தின் தனித்த அடையாளங்களையும், மக்கள் நலனையும் காக்க முடியாது என்று ஸ்காட்லாந்தின் தேசியவாதிகள் முடிவு  செய்தனர். தனிச் சுதந்தர நாடு என்ற குறிக்கோளை முன்வைத்து  ஸ்காட்லாந்து தேசியக் கட்சி என்பதைத் தொடங்கினர். இதன் தலைவராக அலெக்ஸ் சல்மாண்ட் என்பவர் இருக்கிறார்.

2011ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலின் போது தொழிற்கட்சி, தனிநாடு கோரிக்கை மீது °காட்லாந்து மக்களிடம் தனியாகப் பொது வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்தது. தொழிற்கட்சியைச் சேர்ந்த பிரதமர் டேவிட் கேமரோன் தலைமையிலான ஆட்சி, 18.9.2014 அன்று  ஸ்காட்லாந்தில் தனிநாடாகப் பிரிவது குறித்துப் பொது வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.

 ஸ்காட்லாந்து தனிநாடாக வேண்டும் என்று கோரும்  ஸ்காட்லாந்து தேசியக் கட்சிதான்,  ஸ்காட் லாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியிலிருக்கிறது. சூலை மாதம் ‘ஹெரால்டு’ ஏடு நடத்திய கருத்துக்கணிப்பில் பிரிட்டனுடன் சேர்ந் திருக்க வேண்டும் என்று 56 விழுக்காட்டுப் பேரும், தனிநாடாக வேண்டும் என்று 44 விழுக்காட்டுப் பேரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

ஆனால்  ஸ்காட்லாந்து தேசியக் கட்சியினர், “வழக்கமான பொதுத் தேர்தலில் 50 விழுக்காட்டினர் தான் வாக்களிப்பார்கள். ஆனால் இந்தப் பொது வாக்கெடுப்பில் 80 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வாக்காளர்களான இளைஞர்கள் தனிநாடு வேண்டும் என்று வாக்களிப்பார்கள். இதனால் கூடுத லாக 10 விழுக்காடு வாக்குகள் எமக்குக் கிடைக்கும். எனவே °காட்லாந்து தனிநாடாக மலரும்” என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில் பிரிட்டனின் முதன்மையான அரசி யல் கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிற்கட்சி, லிபரல் கட்சி ஆகிய மூன்றும் ‘ ஸ்காட்லாந்து தனி நாடாக  வேண்டாம்’ என்று அம்மக்கள் வாக்களித்தால்,  ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு இன்னும் கூடுதலான தன்னுரிமை அதிகாரங்களை அளிப்போம் என்று கூறியுள்ளன.

ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் அலெக்ஸ் சல்மாண்ட், செப்டம்பர் 18 அன்று ‘தனிநாடு வேண்டும்’ என்பதே வெல்லும். 2016 மார்ச்சு மாதம்  ஸ்காட்லாந்து தனிநாடாக அமைக் கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவிலோ ‘ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்’ என்றும், ‘இந்தியத் தேசியம், இந்துத் தேசியம்’ என்றும் கூறிக்கொண்டு பாரதிய சனதா கட்சியும் காங்கிரசுக் கட்சியும் மாறிமாறி இந்திய அரசின் ஆட்சியிலிருந்து கொண்டு, தேசிய இனங்களை, மொழிகளை, ஒடுக்கி ஆதிக்கம் செய்து வருகின்றன.

50 இலட்சம் மக்கள் கொண்ட  ஸ்காட்லாந்து தனியதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தைப் பெற்றி ருக்கிறது. விரைவில் தனிநாடாகப் போகிறது. பல கோடி மக்களைக் கொண்ட தமிழ்த் தேசிய, தெலுங் குத் தேசிய, கன்னடத் தேசிய, வங்காளத் தேசிய மற்றும் பிற தேசிய இனமக்கள் இந்திய ஏகாதிபத்தி யத்திடம் கையேந்தி நிற்காமல், தன்னுரிமை கொண்ட நாடுகளாகிட ஒன்றுபட்டுப் போராட வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.4