இந்தியா ஒரு நாடன்று. ஒரு துணைக் கண்டம். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்புப் புள்ளிவிவரங்களின்படி இந்திய மக்கள் தொகை, உலகில் உள்ள பல கண்டங் களின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிக அளவில் 121 கோடியாக உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் 4,403 சமூக அமைப்பு களும், 3,502 மொழிப் பிரிவினரும் உள்ளனர் என்று இந்திய அரசின் மானுட ஆய்வுத் துறையின் புள்ளிவிவரம் சுட்டுகிறது. இச்சமுதாயப் பிரிவு கள், இனங்கள் தங்களுக்கென்று தனித்த அடை யாளங்களையும், மரபுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டுள்ளன. கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் தொல் பழங்குடியினர் பல்வகைத் தொழில்களை மேற் கொண்டு வாழ்ந்து வந்தனர். இத்தொல்பழங் குடியினர் பல்வேறு பண்பாடுகளைப் பின்பற்றி, பல்வேறு மொழிகளைப் பேசினர். மதங்களும், அவற்றின் அடையாளங்களும் இதற்குப் பின்பு தான் வந்தன.

பிரிட்டிணு ஆட்சியின்போதுதான் இந்தியா என்ற ஒரு நாடு என்ற கருத்தும், வரைபடமும் உரு வாக்கப்பட்டன. பேராசிரியர் இர்பான் அபிப் ‘அக் பரின் இந்தியா’ (Akbar and his India, p.97-98) என்ற நூலில் அக்பர் பின்பற்றிய பன்முகத் தன்மை யைப் பற்றி விளக்குகிறார். 1590ஆம் ஆண்டில் “சுதந்தரமான கருத்துகளைத் திறந்த மனதுடன் வெளியிடுவதற்கான தேவையை மன்னர் அக்பர் வலியுறுத்தினார். இதற்காக நாட்டினுடைய அமைப் பில் முதன்மையாக இடம் பெற்ற இந்து சமயச் சிந்தனையாளர்களையும், இசுலாமியர்களையும், கிருத்துவர்களையும் இணைத்து, யூத மதத்தினர், பார்சிகள், சமண சமயத்தினர், நாத்திகர்கள் உட்பட அனைவரையும் அழைத்து அடிக்கடி கலந்துரை யாடல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய் தார்”என்று இர்பான் அபிப் குறிப்பிடுகிறார்.

“வன்முறையும் அடையாளமும்-விதியின் மாயத் தோற்றம்” (Identity and Violence : An Illusion of Destiny, 2006) என்ற நூலில் அறிஞர் அமர்த்திய சென், இந்தியாவின் பன்முகத் தன்மைகளை அடை யாளம் காட்டுகிறார். “இந்தியாவின் மரபுகள் மதத் துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகள் என்று அடிக்கடி சுட்டப்படுவதுண்டு. பல்வகை யில் அவ்வாறு இருக்கலாம். இருப்பினும், உலகில் செம்மொழிகள் என்று கருதப்படுகிற கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு அல்லது அரேபிய மொழிகளைவிட, சமஸ்கிருத மொழியிலும், பாலி மொழியிலும்;தான் அதிக அளவில் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத கருத்துகளும், நாத்திகக் கருத்துகளும் உள்ளன” (Indian traditions are often taken to be intimately associated with religion and in many ways they are, and yet Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than any other classical language Greek or Roman, or Hebrew or Arabic) என்று ஆணித்தரமாகக் குறிப் பிட்டுள்ளார். இதே நூலில் அக்பர் தீன் இலாஹி என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டபோது, வட இந்தியாவில் வாழ்ந்த நாத்தி கர்களையும் அழைத்து அவர்களின் கருத்துகளை அறிந்தார் என்று குறிப்பிடுகிறார்.

 

வங்கக் கவிஞர் தாகூர்,

“யார் அழைத்து வந்தார்கள் யாருக்கும் தெரியாது!

பல ஆறுகள் நுழைவது போல, பல்வகை மனிதர்கள் வந்தார்கள்!

ஓய்வறியாத அலைபோலத் தெரியாத இடங் களிலிருந்தும் வந்தார்கள்!

ஒரு குகைக்குள் இணைந்தார்கள்!”

என்று பல்வகை மொழி, இனங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்து, இணைந்து வாழ் வதை அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

1926ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த வகுப்புக் கலவரங்களை நேரடியாகக் கண்டார் தாகூர். இன்றைய பா.ஜ.க. மற்றும் மதவாத அமைப் புகளின் முன்னோடியான இந்து மகா சபை, 1926 ஆம் ஆண்டில், மசூதிகளில் ஒலிபரப்பப்படும் இசை யைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தனது மாநாட்டில் வலியுறுத்தியது. வங்கத்தின் சிங்கம் என்று போற்றப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ், வங்க-இந்து- முசுலிம் உடன்படிக்கையை அறிவித்தபோது, காங்கிரசில் இருந்த பலர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இந்த இரு நிகழ்வுகளையும் கண்ட தாகூர், தர்மமோகா என்ற புகழ்மிக்க கவிதையை எழுதினார்.

“வழிபாட்டுத் தலங்களைக் குருதியால் கழுவு கிறார்கள்,

அடித்து நொறுக்கி, அடித்து நொறுக்கி வெறு மையைக் காண்கிறார்கள்,

மதநம்பிக்கை என்னும் சிறைச்சாலைச் சுவர்களைத் தகர்தெறியுங்கள்,

அறியாமை சூழந்த மண்ணில் அறிவென்னும் ஒளியைப் பாய்ச்சுங்கள்”

1926ஆம் ஆண்டில் மதம் என்ற போர்வையில் நடக்கும் மிருகத்தனமான படுகொலைகள், மத மாயை, பயங்கரவாதம் இவைகளைவிட நேர் மையான நாத்திகம் ஏற்றுக்கொள்ளக் கூடியது (Straightforward atheism was preferable to this terrible thing, delusion of religiosity…the satanic bestiality which wears the garb religion, The Mahatma and the Poet Edited by Sabyaschi Bhattaharya,p.15-16) என்று இந்நூலில் தாகூர் குறிப்பிடுகிறார். மேலும், காந்தியின் பொருளாதாரக் கொள்கை, காந்தி மேற்கோள் காட்டிய கீதையில் குறிப்பிட்டுள்ள வருணாசிரம தர்மம் ஆகிய கருத்துகளை இந் நூலில் தாகூர் கடுமையான முறையில் விமர் சனம் செய்துள்ளார். 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஆர்தர் எர்மன், காந்தியும், சர்ச்சிலும் (Gandhi and Churchill, 2008) என்ற நூலில், 1947 இந்திய விடுதலை, பாகிஸ்தான் பிரிவினை ஆகிய வரலாற்று நிகழ்வுகளைப் பல்வேறு ஆவணங் களுடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் காந்தியினுடைய கருத்துகள், குறிப் பாக இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றியும், பாகிஸ் தான் பிரிவினை பற்றியும் காந்தியின் கருத்துகள் எவ்வாறெல்லாம், நேரு, பட்டேல் போன்ற தலை வர்களால் புறக்கணிக்கப்பட்டன, மவுன்ட்பேட்ட னிடம் நேரு நட்புறவுக் கொண்டு தனக்குச் சாதக மான அரசியல் சூழல்களை உருவாக்கிப் பிரதமர் பதவியைப் பிடித்தார் என்பதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார். “சர்தார் (பட்டேல்) என்னுடைய ஆள் என்றும், பண்டிட்ஜியும் (நேரு) என்னுடைய ஆள்” என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்… ஒரு வரும் என்னுடைய பேச்சைப் கேட்பதில்லை. நான் கைவிடப்பட்டவன் (People say that the Sardar is my man and Panditji also is mine. I am a nobody and no one listen to me. p.577).. மேலும், 1947 டிசம்பர் 11ஆம் நாள் கர்ணுமீர் குறித்து தன்னிடம் எதுவும் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி பீடம் கூற வில்லை என்று காந்தி வருந்தினார். 

“என் கண்கள் இப்பொழுது திறக்கப்பட்டு விட்டன, இப்போது காங்கிரசில் உள்ள ஒவ்வொருவரும் பதவிக்காக அலைகிறார்கள். இது பேராபத்தை விளைவிக்கும் (My eyes have now been opened…Today, everyone in the congress is running after power. That presages grave danger.p.578) என்று காந்தி குறிப்பிட்டார். இந் நிகழ்வுகள் எல்லாம் காந்தி விடுதலை பெற்ற இந்தியாவில் நடந்த வகுப்புக் கலவரங்களைக் கண்ணுற்ற பிறகுதான் குறிப்பிட்டார். காந்தி, சமுதாயத் துறையில் பின்பற்றிய பிற்போக்குத் தனமாக கொள்கைகள் தான் இறுதியில் இவ் விதப் பெரும் ஆபத்தினை உருவாக்கியது என் பது இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வின் சென்ட் சர்ச்சில் இது போன்ற வகுப்புக் கல வரங்கள், படுகொலைகள் நடைபெறும் என்று முன்னெச்சரிக்கை செய்தார் என்பதும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காந்தியே குறிப்பிட்டவாறு விடுதலை இயக்க வரலாற்றை முற்றிலும் உணர்ந்த அளப்பரியத் தியாகங்களைச் செய்த இந்தியாவின் முதல் பிரதமர் நேருவும், உள்துறை அமைச்சர் பட்டே லும்இ அதிகார வட்டத்தைச் சுற்றி வந்த காங்கிரசுக் காரர்களும் இந்தியாவில் நடைபெற்ற வகுப்புக் கலவர நிகழ்வுகளைத் தொலைநோக்குப் பார்வையோடு அணுகவில்லை, தீர்வு காண வில்லை என்பதையே தற்போது உத்தரபிரதேசம் முசாபர் நகரிலும், காணுÛÇலும், குஜராத்திலும், மராட்டிய மாநிலத்திலும் அடிக்கடி நடந்தேறும் வகுப் புக் கலவரங்கள் நமக்குச் சுட்டுகின்றன. வாக்கு அரசியலுக்காகவும், பதவி பெற்ற பிறகுஇ சொத்து சேர்ப்பதையே இலக்குகளாகக் கொண்டு பணி யாற்றும் இன்றைய தலைவர்கள் தொடரும் இந்த வன்முறையை எவ்வாறு தவிர்க்கப் போகிறார்கள்?

இந்தியாவில் 18 கோடி இசுலாமிய மக்கள் வாழ்கி றார்கள். இவர்களுடைய வாக்கு வங்கியால் 218 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று அரசியல் கட்சிகள் நம்புகின்றன. இதில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற பேதம் இல்லவே இல்லை. இந்த 218 நாடாளு மன்றத் தொகுதிகளில் 70 தொகுதிகளில் 20 விழுக் காட்டுக்கு மேற்பட்ட இசுலாமியர்கள் வாழ்கிறார் கள். 148 தொகுதிகளில் 10 விழுக்காடு இசுலாமி யர்களின் வாக்குகள் தேர்தலில் வெற்றி தோல்வி யை முடிவு செய்கின்றன.

காங்கிரசுக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சி களும் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வு கள் காணப்படும் என்று வாக்குறுதி வழங்கின. இசுலா மிய மக்களின் நிலை பற்றியும், அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் பற்றியும் நீதிபதி சச்சார் ஆய்வுக் குழு (2006) விரிவான பரிந்துரை களைக் கொண்ட ஓர் அறிக்கையை வழங்கியது. இதன் தொடர்பாகத் தேசியக் கட்சிகள் என்று தங்களைப் பறைச்சாற்றிக் கொள்கிற காங்கிரசு, பாஜக, தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் எவ்விதச் சமூக-பொருளாதார முன்னேற்றத் திட்டங் களையும் நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சியில்தான் குறிப்பாகக் கலைஞர்இ தன் ஆட்சியில்தான் தமிழ் பேசும் இசுலாமியர்களைப் பின்தங்கிய வகுப்பின ராக அறிவித்தார். மேலும், 2010இல் 3.5 விழுக் காடு தனி ஒதுக்Ñடாக கல்வி, வேலைவாய்ப்பு களில் வழங்கினார். இசுலாமியர்களின் வாழ்நிலை உயர்வதற்குத் தனியாக ஒரு துறையையும் அமைத் தார்.

மும்பையில் இருந்து வெளிவரும் அரசியல், பொருளாதார வார ஏட்டில் (EPRW Sep.7இ 2013) இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் இசுலாமியர்களின் நிலை பற்றிக் குறிப்பிட்டுள்ளன. நல்ல வேளை யாகக் கட்டுரைகளைத் தீட்டிய இரு ஆய்வாளர் களும் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. விபதி பட்டேல் என்கிற ஆய்வாளர், டாடா சமூக வியல் ஆய்வு நிறுவனம், எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக்கழகம், மற்றும் பெண்கள் கல்லூரி இணைந்து 2011இல் மராட்டிய மாநிலத்தில் இசுலாமியர்களின் சமூக, பொருளாதார நிலை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டன. வேலைவாய்ப்பு, குடியிருப்பு, வங்கிக்கடன் ஆகியவற்றை இசுலா மியர்கள் வாழ்நிலையோடு இணைத்து மேற் கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெரும்பான்மை யான இசுலாமிய மக்கள் வாழ்நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இந்து, கிருத்துவ குடும்பங்களோடு ஒப்பிடுகையில் பெரும்பான்மையான இசுலாமி யர்கள் குடிசைப் பகுதியில்தான் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிக் கடன் அவர்களுக்கு உரிய அளவில் வழங்காத காரணத் தினால்தான் அவர்கள் சிறிய தொழில்களில்கூட ஈடுபட முடியவில்லை என்று ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன. இசுலாமியர்கள் மகராணுடிராவின் பன்முகப் பண்பாட்டுத்தளத்திற்குப் பெரும் பங்களிப்பை அளித்தாலும் அவர்கள் வாழ்நிலை உயரவில்லை என்பதையும் இவ்வாய்வாளர் குறிப்பிடுகிறார்.

நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்றால் பாலும், தேனும் பாரதத்தில் ஓடும் என்று பழைய காங்கிரசு பாணியிலேயே இன்றைய பாஜக பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. காஞ்ச இலையா என்ற தலித் ஆய்வாளர் நாடறிந்த நல்லறிஞர், அவர் முசுலிம் களின் முன்னேற்றம்-2000ஆம் ஆண்டுகளில் குஜராத் ஆந்திர மாநிலங்களின் ஒப்பீடு என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதியில் வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றாலும், இசுலாமியர்களின் வாழ்க்கை முன்னேறிக் கொண்டிருக்கிறது. குஜராத்தில் 1969இல் கலவரம், 2002இல் கோத்ரா படுகொலை ஆகியன நடைபெற்றுள்ளன. இசுலா மிய சமூகம் என்ற அடிப்படையில் இவர்களுக் கென்று ஆந்திராவில் தொலைக்காட்சியும், செய்தி ஏடுகளும் உள்ளன. இதன் வழியாகத் தங்களு டைய பிரச்சினைகளை வெளிக்கொணர முடி கிறது. ஆனால், ஒட்டு மொத்தமாக குஜராத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் மக்களுடைய வாழ் நிலை உயர்ந்திருந்தாலும், அரசுத் துறை வேலை வாய்ப்புகளில் சிறியத் தொழில்களில் கல்வி, உயர் கல்வித் துறைகளில் ஆந்திர மாநிலத்தைவிட குஜராத் மாநில இசுலாமியர்களின் வாழ்நிலை சரிந்து காணப் படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் வகுப்புக் கலவரங்களை அடக்கும் உணர்வோடு ஒரு அரசு, காவல் துறையை, இராணு வத்தைப் பயன்படுத்துவதைவிட இசுலாமியர்களுக் குக் கல்வியில், வேலை வாய்ப்புகளில் முன் னுரிமை அளிப்பதில்தான் சமூக நல்லிணக்கம் ஏற் படுவதற்கு வழிவகுக்கும் என்பதையே இக்கூற்று கள் சுட்டுகின்றன.

இந்து மதம் என்பதே ஒருவரால் உருவாக் கப்படவில்லை. அதற்கென்று வகுக்கப்பட்ட கொள்கைகள் இல்லை. பார்ப்பனர்கள் உயர் தட்டிலும், மற்ற பிரிவினர் கீழத்; தட்டுகளிலும் வாழும்இ வளரும் சூழலை ஏற்படுத்தும் அடுக்கு முறை சாதிக் கட்டமைப்பில்தான் இன்றளவிலும் இயங்கி வருகிறது என்பதைத் தந்தை பெரியார் போல் பேரறிஞர் அம்பேத்கர் போல் யாரும் தோலுரித்துக் காட்டியது இல்லை. சாதிக்கு ஒரு நீதியைப் புகட்டுகின்ற சாதியத்தை, மூட பழக் கங்களை எதிர்ப்பவர்களைக் கொல்லுவதுதான் வழி-நெறி என்று நினைக்கும் மூடர் கூட்டம் இன்றும் உள்ளது. இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் காந்தியைக் கொன்றது யார்? மராட்டிய மண்ணில் நடைபயிற்சி மேற்கொண்ட தபோல்கரை மறைந்து நின்று கொன்றது யார்? என்ற வினாக் களுக்கு விடை கண்டால் சாதி மேலாதிக்கத்தின் கொடுங்கோல் தன்மையையும், மத வெறியையும் காண முடிகிறது.

வரலாற்றின் பல பக்கங்களில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த கொடுங்கோல் மன்னர்கள் அறிவியல் வளராத காலத்தில் பல்வேறு தாக்குதல்களை அப் பாவி மக்கள் மீது பல நாடுகளில் நடத்தியுள் ளார்கள். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கன்று. சுங்க மன்னன் புணுயமித்ரன், பௌத்தர்களைக் கொடுமைப்படுத்தியதும், பௌத்தர்களின் கல் வெட்டுகளை-வரலாற்றுச் சின்னங்களைத் தாக்கி வீழ்த்தியதும் இன்று§ கூட வாரணாசியில் அமைந் துள்ள அரசு காப்பகத்தில் காணக்கூடியதாகும்.

1837, மகாராஜா ரஞ்சித் சிங் இசுலாமியர்கள் மீது வரி விதித்ததையும், ஸ்ரீநகரில் உள்ள ஜூம்மா மசூதியை இடித்துத் தள்ளியதையும், பசுவைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்கிய தையும் வரலாற்று பக்கங்களில் காண முடிகிறது. 1863இல் மகராஜா ரன்பீர் சிங், இசுலாமியர்களுக்கு எதிராக அடக்கு முறையையும், ஒடுக்கு முறை யையும் ஏவி விட்டதையும், பெண்கள், குழந்தை களை வெட்டிக் கொன்றதையும் எவரால் மறுக்க முடியும்? யாதும் ஊரே, யாவரும் கேளிர்! என்ற உயர் நெறியை உலகிற்கு வழங்கிய தமிழ் மண்ணில் சமணர்கள் கழுவேற்றப்படவில்லையா?

அதே போன்று டச்சு, டானிணு, ஸபானிணு, ஆங்கிலேய கிழக்கிந்தியக் குழுமங்கள், பிரெஞ்சு இந்தியத் துணைக்கண்ட பகுதிகளில் நிறை வேற்றிய படுகொலைகளை யார் மறக்க முடியும்? இவ்வாறு இந்தியப் பகுதிகளில் நுழைந்த பல முஸ்லிம் மன்னர்கள் இந்தியக் கோயில்களைச் சூறையாடியதையும், அங்கே இருந்த பார்ப்பனர் களை வெட்டியதையும் யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் அடையாளம் காட்டி வெறுப்பதும், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதும் இந்தியத் துணைக்கண்ட ஜனநாயகத்தில் பெரும் விபத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும். இதைத் தொலைநோக்குப் பார்வை யோடு இந்திய அரசியல் தலைமை எப்பொழுது நோக்கப் போகிறது? எப்போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது தடுக்கப்படும்?