*             செங்கற்பட்டு மாவட்டத்தில், பெரிய எண்ணிக்கையில் உள்ள வன்னியர்கள், அரசு தரும் காடாரம்பமான நிலங்களைத் திருத்திப் பயிரிடுகிற வேளாண் கூலிகளாக இருந்தார்கள்.

*             அப்படி அவர்கள் திருத்திப் பயிரிட்ட நிலங்களைப் பார்ப்பனர்களும், மேல்சாதிச் சூத்திரர் களான வேளாளர்களும் கைப்பற்றிக் கொண்டார்கள்; வன்னியர்களைப் புதிய காடாரம்ப மான நிலங்களுக்குத் துரத்தினார்கள்.

*             அப்படித் துரத்தப்பட்டவர்களின் நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி, 1860 முதல் 1873 வரை 14 ஆண்டுகள் தம் சொந்தச் செலவில் அவர் போராடினார்.

*             அந்த அநீதியைக் களைய வேண்டி அவர் என்னென்ன செய்தார்?

1.            ஆங்கிலத்தில் - “Mirasi Right” “மிராசு பாத்தியதை” என்னும் தலைப்பில் ஒரு வேண்டுகோளை எழுதி, பிரிட்டனில் உள்ள, இந்திய விவகாரங்களுக்கான அமைச்சருக்கு (Secretary of State for India) 2-9-1861இல் விடுத்து வைத்தார்.

2.            பொது மக்களுக்கு அந்த அநீதியைப் புரிய வைக்கும் தன்மையில், “வெற்றிக்கொடி”, “விஜய விகடன்” மற்றும் “சுதேசமித்திரன்” முதலான தமிழ் ஏடுகளில் கட்டுரைகள் எழுதினார்.

3.            அத்துடன் அதிகாரிகளுக்கும், ஆங்கிலம் படித்த மற்றவர்களுக்கும் அதைப்புரிய வைக்கிற தன்மையில், “The Madras Times - மதராஸ் டைம்ஸ்” என்னும் ஆங்கில நாளேட்டில் 26-11-1863, 17-2-1886 நாள்களில் கட்டுரைகள் எழுதினார். “The Madras Mail”, “The Standard” என்னும் ஆங்கில நாளேடுகளிலும் எழுதினார்.

4.            அதைத் தொடர்ந்து, “அத்தனியம் டெய்லி நியூஸ்” - “Atiniam Daily News” என்னும் ஆங்கில நாளேட்டில் 27-8-1864, 13-10-1864, 28-9-1866, 31-10-1866, 17-4-1867, 19-4-1867 நாள்களில் கட்டுரைகள் எழுதினார்.

5.            கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு, 28-6-1871இல் Mirasi Right என்ற தம் நூலை அச்சுப் போட்டு அனுப்பி வைத்தார். அதையே அவரே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

6.            நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, வன்னியர்களுக்கு, அவர்கள் பயிரிட்ட நிலங்களை மீட்டுக்கொடுத்தார்.

இவற்றைப் பற்றி, எல்லாத் தமிழர்க்கும் அறிவிக்க வேண்டியே

அ. வேங்கடாசல நாயகரின் 214ஆவது பிறந்த நாள் விழா!

*             அவரைப் பற்றி மற்ற விவரங்களை அறிந்தவர்கள் அவற்றைத் தாருங்கள்.

*             விழா மிகச் சிறப்புற நடைபெற்றிடத் துணையாகச் செல்வந்தர்கள் நிதி தாருங்கள்.

*             விழா நடைபெறும் நாளில் பல்லாயிரவர் திரண்டு வாருங்கள்.

                - வே.ஆனைமுத்து