தமிழ்நாடு நாற்பது ஆண்டுகளில் அரசியலால் ‘குடி’ என்னும் நஞ்சு பாய்ந்து பலியானது தம்மினமே. இதில் ஒட்டி உறவாடி, சிலவற்றை இழந்து, பலவற்றை (பலத்தை) பிடித்தது சில குறிப்பிட்ட இனமே. தந்தை பெரியார் 135ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண் டாடும் தமிழ் இனம் இன்னும் விழித்திடவில்லை. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த மேல்வர்க்கம் பகுத்தறிவுச் சிந்தனையை சிந்திக்கவிட்டதில்லை.

இன்னமும் நமக்கு உயர்கல்வியை அரசே ஏற்று நடத்தி முழுமையாக கொடுக்கவில்லை. உங்களுக்கு இனாம் என்றால் ஆடு, மாடு, பன்றி, மிக்சி, கிரைண் டர், டி.வி., பிரியாணி, மது போன்றவைதான் நினை வுக்கு வரும். உங்கள் பிள்ளை படிக்க-உங்கள் சமு தாயம் நன்மை அடைய கட்டணமில்லாக் கல்வி, கட்டணமில்லா மருத்துவம், கட்டணமில்லா நல்ல குடிநீர், வரியில்லா சிமெண்ட், துணிகள், உணவுகள், பண்டங்கள் போன்ற நலத் திட்டங்களை நல்ல அரசுகள் அளித்திருக்க வேண்டும். சிறிது சிந்தியுங்கள். மூன்று வயது குழந்தையைப் பெற்றோர்கள் நல்ல கல்வி கிடைக்கும் என்று நினைத்து இரவு 12 மணியிலிருந்து மறுநாள் பகல் 12 மணி வரை காத்திருந்து மனுவைப் பெற்று விண்ணப்பித்து, ஆயிரக்கணக்கில் பணம் கட்டி சேர்க்கும் அவலத்தை ஊடகங்களும் படம் எடுத்து காட்டி உயரும் கேடான நிலையுள்ள இந்த அரசுகளின் போக்கைத் தட்டிக்கேட்க ஒரே வழி அவர் களுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது; இது உங்களால் முடியும். சிந்தியுங்கள்!

விவசாயம் நல்லா நடைபெற்றால்தான் பேஷ், பேஷ் என்று காபி குடிக்க முடியும்! மணி ஆட்டினால் எதுவும் கிடைக்காது. விவசாயம் செழிக்க உங்களால் முடியும். விவசாயத்திற்குப் பயன்படும் நீர்நிலைகள், நீர்வரவு வாய்க்கால்கள், ஓடைகள், ஆறுகள் போன்ற வற்றை நீங்களே பாதுகாத்துப் பயனடையுங்கள். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது சொந்தத் தாயையே கொன்றதற்குச் சமமாகும். சிந்தியுங்கள்! செயல்படுங் கள்!

- விவசாயி மகன் ப.வ.