நாட்டின் கல்வி வளர்ச்சிதான் மக்கள் வளமேம் பாட்டுக்கு முதன்மையானது. இது அய்க்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டு உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருதுகோள். ஆனால் இதற்கு எதிர் மறையாக இந்தியாவில் கல்வி மறுக்கப்படுவது எழுதப்படாத சட்டம். இதற்கு இந்துச் சட்டம்-மனுச் சட்டம்தான் அடிப்படை. இதைத்தான் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துகிறது; உழவருக்கு ஏன் வேண்டும் கல்வி என்ற கொள்கையைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி 74ரூ பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றோர். இதைப் படிப்பறிவு அல்லது கல்வியறிவு கொண்டோர் எனக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் இந்தியாவின் வரையறைப்படி ஒருவர் தன் பெயரை எழுதவோ படிக்கவோ தெரிந்தவராக இருந்தாலே போதும்-அவர் எழுத்தறிவு பெற்றவராகக் கணக்கிடப் பட்டுள்ளது. ஏழு அகவைக்கு மேற்பட்டோருள் 30 கோடிப் பேர் தற்குறிகளாகவே 65 ஆண்டைய சுதந்தர - 62 ஆண்டைய குடியரசு இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யார்? அனைவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரே.

இதில் என்ன வியப்பென்றால் நாட்டின் உயர் சட்டம், அடிப்படைச் சட்டம் என்று கருதப்படுகிற இந்திய அரசமைப்புச் சட்டம் வழிகாட்டு நெறிகள் (Directive

Principles) பகுதியில் விதி 45 இல் 14 அகவைக் குட்பட்டோருக்குச் இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 26.01.1950-லிருந்து பத்தாண்டுகளுக்குள் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட அரசு ஆவன செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது எட்டாம் வகுப்புக் கல்வி தரப்பட வேண்டும் என்பது பொருள். ஆனால் இச்சட்டம் வந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும் மேற்சொன்ன இழிநிலைதான். இது இந்திய ஆட்சிக் கட்டிலில் இதுகாறும் இருந்து வந்தவர்களின் கயமைத் தனத்தைப் பறைசாற்றுகிறது. ஆனால் இந்தக் கய வர்கள் நாட்டை உயர் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுவதாகவும் வல்லரசாக்கவிருப்பதாகவும் கொஞ் சமும் மான ஈன மற்றவர்களாகப் பேசிவருகின் றார்கள்.

அரசமைப்புச்சட்டம் அடிப்படை உரிமை விதி 21இன் படி, தனியொரு மனிதனின் வாழ்வும் தனிச் சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது என்றிருப்பதைக் கல்வியைப் பெற்றிருந்தால் தானே உணர முடியும். அதனால்தான் 35 கோடி மக்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழியற்றவர்களாக வைக்கப்பட்டு இருந்தும் இவர்கள் மவுனிகளாக மடமைக்குள் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இந்த நிலைமை ஏன்? விதி 45 வழிகாட்டு நெறிகள் பகுதியின் கீழ் வருவதால் அதனை நீதிமன்ற வழியில் தீர்வு காணமுடியாது என்றும், அதனைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று பொருள்படாது என்றும் சப்பைக்கட்டு செய்யப்படுகிறது. ஆனால் கல்வியறிவின் முதன்மைத் தன்மை கருதித்தான் பத்து ஆண்டுகளுக்குள் 14 அகவைக்குள் உள்ள அனைவருக்கும் இலவயக் கட்டாயக் கல்வி எனக் காலவரையறை விதிக்கப்பட்டது. இருப்பினும் இதனைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்.

இந்த விதியை நீர்த்துப்போக வைக்கும் வகை யில், பள்ளிக்கல்வி அளிப்பதற்கான காலவரையறை யை நீக்கிவிட்டு அடிப்படை உரிமைப் பகுதியின் கீழ் விதி 21A என்று அரசமைப்புச் சட்டத்தை 1993இல் திருத்திச் சேர்த்துவிட்டனர். ஆனால் என்ன நடந்தது?

பெரிதாக எந்த மாற்றமும் நடந்துவிடவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் 2011 இலும் 30 கோடிப் பேர் எழுத்தறிவு அற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக 2009இல்குழந்தைகள் இலவயக் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை (Right of Children to Free and Compulsory Education Act 2009- RTE Act) இந்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் அதற்கேற்ற சட்டமாக இயற்றிக் கொள்ளவேண்டுமென அதில் வகை செய்யப்பட்டது. இதைத் தனதாக்கிக் கொள்ளத் தமிழக அரசு இரண்டாண்டு காலத்தை எடுத்துக் கொண்டு, 2011 இல் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு பல விதிகளையும் வெளியிட்டுள்ளது. 

இச்சட்டத்தின்படி அருகமை பள்ளித் திட்டம் நிறை வேற்றப்படும் என்றும் கருதப்படுகிறது. அருகமை பள்ளித் திட்டத்தின்படி ஒடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் நலிந்த பிரிவு சார்ந்த 14 வயதிற்குள்ளோர் தரமான பள்ளியைத் தேடித் வாழிடத்திலிருந்து வெகு தொலை வில் உள்ள பள்ளிகளைத் தேடி அலைய வேண்டாம். அப்பகுதியிலுள்ள தரமான தனியார் பள்ளியில் முதலில் 2012-13 கல்வியாண்டிலிருந்து அந்தப் பள்ளியிலுள்ள முதல் வகுப்பு மாணவர்களுக்கான இடங்களில் இவர் களுக்கென்று 25% ஒதுக்கித் தரப்படவேண்டும். இவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்றும் சட்டம் சொல்கிறது.

இந்தத் தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 25% இடங்களை அப்பள்ளிப் பகுதியிலுள்ள ஒடுக் கப்பட்ட வகுப்பைச் சார்ந்த குழந்தைகளுக்கு எத்தனை விழுக்காடு ஒதுக்கப்படும்? மேலும், 25% இடங்களுக்கும் மேலாக, மேற்சொன்ன இரு பிரிவுக் குழந்தைகள் பள்ளியில் சேருவதற்கு முன் வந்தால் இவர்களுக்குள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும்? இடம் கிடைக்காத குழந்தைகள் அதிகமாக இருப்பார்கள்? என்றால் அந்தச் சிக்கலைத் தீர்க்க வழி என்ன என்பவை கேள்விக்குறி. இதுபோன்ற பல்வேறு சிக் கல்கள் எழும். அதேபோன்று தனியார் பள்ளி நிறு வனங்கள் இதுபோன்ற குழந்தைகள் சேர்க்கையில் நெறியுடன் நடந்து கொள்வார்களா என்ற சிக்கலும் உள்ளது. நடுவணரசுப் வேலை, கல்விச் சேர்க்கை யில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பங்கீடு அளிக்கப்பட வேண்டுமென்று தெளிவான சட்டங்கள் உள்ள நிலை யிலும் நடுவண் அரசே தகுதி, திறமை, போதாமை எனக்கூறி உரிய பங்கீடுகளை மறுத்து வந்துள்ளனர் என்ற உண்மை நிலை இருக்க, தனியார் பள்ளி நடத்தும் வணிகர்கள் பேரவணிகம் செய்வது போன்று தான் வெறும் இலாபம் பெறும் நோக்குடன் பள்ளி நிருவாகமும், பள்ளிச் சேர்க்கையும் நடக்கும். பள்ளி என்ற பெயரில் குழந்தைகள் சீரழிக்கப்படும் கொடுமை தான் நிகழும்.

குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டதும் அவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தை அரசே இரு தவணைகளில் செலுத்தும் என்று சட்ட விதிகள் கூறுகின்றன. தற்போது அரசின் புள்ளி விவரப்படி தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 11 இலக்கம். இதில் 1.6 இலக்கம் அளவுக்கு முதல் வகுப்பில் உள்ள இடங்கள் இருக்கலாம். இதில் 25ரூ ஆன 40,000 இடங்களிலும் குழந்தைகள் சேர்க்கப்படுவரெனில், ஆண்டுக்கு குறைந்தது பத்துக் கோடி ரூபாய் அரசுக்குச் செலவா கலாம். இது ஒவ்வொரு ஆண்டும் செலவாகும் தொடர் செலவினமாகும். எட்டாம் வகுப்பு வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படும் காலத்தில் இச்செலவினம் ரூ.80 கோடியாகக்கூட ஆகலாம். பின் பணவீக்கம் என்று பள்ளிக் கட்டணம் உயர்ந்து கொண்டே போகும். அப்போது ரூ.100 கோடிகூடச் செலவாகலாம்.

இச்சட்டத்தால் பல கேடுகள் விளையும். அவை

* மக்கள் நலன் நாடும் மக்கள் நாயக அரசு என்று பீற்றிக் கொண்டுவரும் இந்திய அரசும், மாநில அரசுகளும் தங்களின் அடிப்படைக் கடமையான மக்களுக்கான தொடக்கக் கல்வி அளிப்பது என்ப திலிருந்து வஞ்சகமாக முழுமையாக விலக்கிக் கொள்வது.

* பள்ளிக் கல்வி இப்போது பகுதி வணிகப் பொரு ளாக இருந்துவரும் நிலை மாறி முழுதும் தனி யார் கல்வி வணிகர்கள் கொள்ளை கொள்ளும் முற்று வணிகப் பொருளாக மாறிவிடும்.

* சமூக மேம்பாட்டை உறுதி செய்யும் முதன்மைக் கூறான தாய்மொழி வழிக்கல்வி முற்றிலும் மறுக்கப்படும்.

* அடிமைத்தளையைப் பூட்டும் ஆங்கில வழிக் கல் விக்கு அங்கீகாரத்தை முற்றாக வழங்குதாகும்.

* தரமான கல்வியைத் தனியார் பள்ளியே வழங்கிட இயலும் என்ற பொய்மையை நிலைநிறுத்த முற்படுவதாகும்.

* தரங்கெட்ட கல்வியைத்தான் அரசு வழங்கி வருகிறது என்ற பொய்யை அரசே ஏற்றுக் கொள்வது.

* தாய்மொழிக்கல்வி மறுக்கப்படுவது ஆங்கிலக் காலனிய நாட்டில் இருந்தது போன்றே மக்கள் தங்கள் தங்கள் இனவழி மொழிவழி பண்பாட்டுக் கூறுகளை இழந்தவர்களாக எவ்வகைச் சுரண்டல் களுக்கும் ஆளாகும் சுரணையற்றவர்களாக மாற்றப்படுவர்.

* இந்தத் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண அளவை உயர்த்த வழக்குத் தொடுப்பதும், அதற்கு நீதிமன்றம் அரசு குழு அமைக்க அறிவுறுத்து வதும். குழு பரிந்துரை தருவதும். அரசு அதன் மீது ஆணை பிறப்பிப்பதும், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வதும், அதன்பின் நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பிப்பதும், இறுதி ஆணை பிறப்பிப்பதும், சற்றுக் காலம் சென்ற பின் - இதே தன்மையில் சிக்கல்கள் தொடர்கதையாகவே செல்வது உறுதி. இவ்வகைகளில் அரசு செயல்படச் செலவு. குழுக்களுக்கான செலவு, நீதிமன்றச் செலவு, நீதிமன்றத்திற்கு இதுபோன்ற தொடர் வெட்டி வேலைகளுக்காக விரையமாகும் செலவுகள் என அரசுக்குப் பலநூறு கோடி ரூபாய்கள் தொடர் செலவினமாகத்தான் இருக்கும்.

இவ்வாறு தமிழ்நாட்டில் அரசு தனியாருக்குக் கல்வியைத் தாரை வார்த்து அரசே செலவையும் ஏற்றுக் கொள்ளவதைக் காட்டிலும், தற்போதுள்ள அரசுப் பள்ளிகளிலேயே உள்ள அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டே இந்த 25% மாணவர் களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கென்று தனியாருக்குக் கொடுக்கவிருக்கும் ரூ.100 கோடியைப் பயன்படுத்திப் போதுமான அளவுக்கு அடிப்படைக் கட்டுமானங்களை ஏற்படுத்தியும், சில ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி ஆசிரியர்களைப் பணி அமர்த்தியும் அரசுக் கல்வியை உறுதியாக மேம் படுத்தலாம்.

தற்பொழுது இந்தியாவில் எட்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுள் 80% பேர் பொதுப்பள்ளிகளில் தான் பயின்று வருகின்றர். 20% பேர் மட்டுமே தன் நிதிப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவ்வாறுள்ள நிலையில் ஒட்டுமொத்த- கிட்டத்தட்ட இரண்டு இலக்கம் கோடி டாலர் (இரண்டு டிரில்லியன்) அதவாது ரூ.100 இலக்கம் கோடிக்கு மேல் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கொண்டது. 15 இலட்சம் கோடி ஆண்டுச் செலவு செய்யும் நாடான இந்தியாவால் எளிதாக மேற்சொன்ன வெறும் 20ரூ பேருக்கும் பொதுப் பள்ளியிலேயே பயில வைக்க நிதித்திறன் உள்ளது. ஆனால் இதில் கயமை என்னவென்றால் 80ரூ மாணவர்களைக் காலப்போக்கில் தனிநிதிப் பள்ளிகளுக்கு அனுப்பிடத் திட்டம் தீட்டுவதுதான் இந்தச் சட்டம்.

அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பது அரசின் அடிப்படைக் கடமை. அப்பொறுப்பை அரசு மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். அனைவருக்கும் பள்ளிக் கல்வி ஒரே வகையானதாகத்தான் இருக்க வேண்டும். மேலும் போதுமான ஆசிரியர்களை நியமித்துத் தரமான கல்வியை அளித்திட வேண்டும். மற்றும் பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறைகள், நல்ல இருக் கைகள் பயிற்சிப் பொருள்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சீராக எல்லாப் பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். இப்பணிகளை மேற்கொள் வதற்குப் போதிய நிதி ஆதாரம் இல்லை என்ற ஒரு சொத்தை வாதம் அரசால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அரசு கட்டுக்கோப்பற்ற பல்வேறு பயனற்ற வீண் தம்பட்டமான பணிகளை மேற்கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் பாழடிக்கிறது.

காட்டாக எல்லோருக்கும் இலவசமாக அரிசி வழங்கல், தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல், மாண வர்களுக்கு மடிக்கணினி வழங்கல், மின்விசிறி, மாவரைக்கும் பொறி போன்றவற்றை வழங்கல் இவை யெல்லாம் முற்றிலும் தனிமனிதனை வளப்படுத் தவோ, குடும்ப நலத்தைப் பெருக்கவோ பயன்படாது என்பதுடன் அவர்களின் துய்தல் உணர்வுக்குத் தூபம் போடவும், அவ்வழி அவர்களின் வீண் செலவுகளை அதிகமாக்கவும்தான் பயன்படும். முதன்மையாக மாணவனின் இளமைக் காலத்தை வீணடிப்பதற்காகத் தான் மடிக்கணி பயன்படும். இதற்கான செலவி னங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் தொட்டு விடும். இவையெல்லாம் ஆண்டுதோறும் தொடரும் செலவினங்களாகும். வாக்குப் பொறுக்குவதற்கு என அனைத்து அரசியல் கட்சிகளும் இவற்றை மேற்கொள் வதும் இழி செயல். இப்படி வீணடிக்கும் வேலைகளை அரசு உடனே அடியோடு கைவிடவேண்டும். அவ்வாறு கிட்டும் சேமிப்பைப் பள்ளிக் கல்விக்கு என்று ஒதுக் கினால் தனியாரிடம் கல்வியைத் தாரை வார்த்துக் கொள்ளையடிக்கப்படுவதை அடியோடு தவிர்த்து, உண்மையிலேயே ஒட்டுமொத்த, பள்ளிக் கல்வியை முழுதும் இலவசமாக மக்கள் நலம் பேணும் அரசாக இருந்தால் கொடுத்துவிட முடியும்.

இவ்வழி வீண் செலவினங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பதுடன் ஏற்கெனவே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளால் கல்வி வரியாகப் பல ஆண்டுகளாகப் பெறப்பட்டு கல்விப்பணிக்கென்று செலவிடப்படாமல் வீணே தேக்கி வைத்துள்ள பல நூறு கோடி ரூபாய் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதை ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக் கல்விக்குச் செலவிட வேண்டும்.

கல்வி வரியாக வருமான வரி செலுத்துவோரிட மிருந்து நடுவண் அரசு பெற்றுவரும் பல ஆயிரம் கோடி ரூபாயை நடுவண் அரசு உயர் கல்விக்கு என ஒதுக்கிவிடாமல், மாநிலங்களுக்குப் பள்ளிக் கல்விக் காகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். இன்னும் சற்று இந்த வரி அளவை உயர்த்திப் பள்ளிக்காக நிதி ஆதாரத் தைப் பெருக்கிக் கொள்வதும் மிகவும் முறையான நெறியாகும்.

இவையன்றி நாட்டின் பாதுகாப்புகென்று இந்திய ஆண்டுச் செலவில் ஐந்தில் ஒரு பங்குக்கும். மேலாக ரூபாய்மூன்று இலக்கம் கோடியை நடுவணரசு-அதில் வீணடித்து பெரும்பகுதி கொள்ளை போவதைத் தவிர்த்து அதனைப் பெரியளவில் குறைத்துக் கொண்டு அதன் வழி நிதியைப் பள்ளிக்கல்விக்காக மாநிலங்களுக்குப் பங்கிட்டுத் தரவேண்டும். அண்மையில் பாகிசுத்தான் பாதுகாப்புத் தலைமை அலுவலர் மிகவும் பொறுப் புடனும் கவலையுடனும் தெரிவித்துள்ள கருத்து மனங்கொள்ளத்தக்கது. அதாவது இந்தியாவும் பாக்கிசுத் தானும் பாதுகாப்பு என்ற பெயரில் நிதியை ஒதுக்கி இரு நாடுகளும் வீணடிக்காமல் மக்களின் மேம்பாட்டுக்குக் பயன்படுத்திட வேண்டும் என்கிறார். மக்கள் நலன் பேணப்படுவது முதன்மையானது எனக் கருதும் பொதுவுடைமையாளர்கள் அமைப்புகளாயினும், மற்ற அரசியல் கட்சிகளாயினும் இதற்கென தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நடுவணர செயல்படுத்தச் வற்புறுத்த வேண்டும்.

பாதுகாப்புத் துறையினர் வெகுமக்கள் நலன் குறித்து இவ்வளவு கரினசத்தோடு எண்ணமுடியுமென் றால், பொருளியில் நிபுணர்களாக விளங்கும் இந்த மன்மோகனும், மான்டேகு அலுவலாலியாவும் பன்னாட்டு நிதி நிறுவனங்களில் பண்ணையடித்தவர்களா னாலும், அய்ரோப்பிய நாடுகளிலும் சப்பான், அமெரிக்கா, கனடா போன்ற பல முதலாளிய நாடுகளிலும் பள்ளிக் கல்வியை அரசே முழுமையாகப் பொறுப்புடன் மக்க ளுக்கு அளிப்பதைச் சற்றும் கருத்தில் கொள்ளாமலே, கழிசடையான நிதி மேலாண்மை மேற்கொண்டு வருவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே போன்று மேலை நாடுகளில் அரசுப் பணத்தை வாரி இறைத்துச் செலவு செய்து இந்திய நாட்டு அரசியல் வாதிகளும், அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அகில இந்தியப் பணியில் (All India Service) உள்ளோரும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது? அங்குள்ள அரசு மேற்கொண்டுவரும் கல்வி முறை இவர்கள் கண்ணிலும் கருத்திலும் ஏறவே இல்லையா? இவ்வாறு இருப்பது 30 கோடி மக்களுக்கும் மேலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 65 ஆண்டுகாலமாகக் கல்வி மறுக்கப்பட்டு எழுத்தறிவற்ற வர்களாகவே வைத்துக் கொண்டு இருப்பது கடைத்தெடுத்த கயமைத் தனமல்லவா? இவர்கள் அனைவரையும் கேள்விக்குட்படுத்தும் பொறுப்பைத் பொதுவுடைமையாளர்கள் தட்டிக்கழித்து வாழ்வது இன்னும் கொடுமை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைத்து வரும் வன்கொடுமை வஞ்சகத்தன்மை.

இக்கல்வி பெறும் உரிமைச் சட்டம் தாளில் மட்டுமே இருக்கும். பேசு பொருளாகவும், பெயரளவில் அனைவருக்கும் கல்வி என வெற்றுக் கூச்சலாகத்தான் அமையும் என்பதுதான் இந்திய வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. மிகவும் அடிப்படையான உரிமையான இலவயக் கல்வியை மக்களுக்கு அரசு மட்டுமே வழங்கிட வேண்டும் என்ற புரிதலை உடையவர்கள் வெகுமக்கள் நலன் நாடும் பொதுவு டைமை அமைப்புகளும், கட்சிகளும் என்பதை எண்பிக்கும் வகையில் யாவரும் ஒன்றிணைந்து தொடர் வேலைத் திட்டங்கள் வகுத்து இதில் வெற்றி கிட்டும் வரையில் இடைவிடாது போராட்டங்கள் மேற் கொள்ள வேண்டும்.