காட்டுத் தாயின் மடியில் பிறந்தோம்
கூட்டுப்புறாபோல் கூடி வளர்ந்தோம்
கிட்டும் பொருளை பொதுவில் வைத்தோம்
விட்டுக் கொடுப்பதில் மகிழ்ச்சி கொண்டோம்
ஒதுக்கப்பட்டதால் காட்டுவாசியானோம்
ஒடுக்கப்பட்டதால் பழங்குடியானோம்
அரசுப்படையால் தீவிரவாதியானோம்
மாவோயிஸ்டால் தோழர்களானோம்
அரசு எங்களைத் துரத்துது
காடு எம்மைக் காக்குது
அரை வயிறு கஞ்சிக்கும்
அரை நிர்வாண உடைக்கும்
ஆணும் பெண்ணும் அலைகிறோம்
அடக்குமுறையில் தவிக்கிறோம்
பழங்குடி மக்களை மிரட்டுவதும்
வாழும் மண்ணிலிருந்து விரட்டுவதும்
சட்டப்படிக் குற்றமென
அய்ந்தாம் பிரிவு சொல்கிறதாம்
இருநூறு இலட்சம் கோடியில்
இருக்கிறதாம் கனிமம் மண்ணுக்குள்
வாழ்வாதாரத்தை அழித்துப் பிடுங்க
வந்திடுமாம் அரசு கூலிப்படை
எதிர்கொள்ளும் எமது கொரில்லாப்படை
சமர்புரியும் எமது சமத்துவ படை
மரபுவழிப் போரின் மறவர்கள்
பழங்குடியாகப் பிறந்தவர்கள்
பசுமை வேட்டையை விரட்டுபவர்கள்
மாவோயிஸ்டாக மாறியவர்கள்
வன்முறையில் விருப்பமில்லை
வரும் தறுவாயில் அச்சமில்லை
கூண்டோடு ஒழிக்கத் திட்டமிட்டால்
கூடாரம் கூட மிஞ்சாது
உச்சிமலையின்
உள்ளிருக்கிறது பாக்சைட்டு
அடர்ந்த காடுகளின்
மடியிலிருக்கிறது இரும்பு
கனிமங்கள் கையில் வர
மனிதர்களை வெளியேற்ற
இராணுவம் வரவேண்டும்
அதற்கொரு எதிரி வேண்டும்
இந்து அடிப்படை வாதிக்கு
இசுலாமியனைக் கொல்ல வேண்டும்
பன்னாட்டு முதலாளிக்கு
மாவோயிஸ்ட் அழிய வேண்டும்
பொதுவுடைமைக் காரனுக்கு
முதலாளித்துவம் ஒழிய வேண்டும்
வேட்டி கட்டிய வேடதாரி
சீமான் சிதம்பரமே
முதலாளித்துவக் குள்ள நரி
பார்ப்பன முகர்ஜியே
இந்திய இத்தாலிக்காரி
பிடாரி சோனியாவே
அமெரிக்கக் கைக்கூலி
அடிமை மன்மோகன் சிங்கே
வகுப்பெடுப்பர் நக்சல்பாரிகள்
வருவீரா காட்டுக்குள்ளே.

- இரா.திருநாவுக்கரசு