“இந்தியாவின் நீண்ட நாளையக் கனவு நிறை வேறிவிட்டது. தனக்குத் தகுதியும் திறமையும் உண் டென்பதை உலக அரங்கில் இந்தியா எண்பித்து விட்டது” என்று மேட்டுக்குடியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

முதலில், மேற்குவங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சியில், கொல்கத்தாவிலும், பின்னர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது அய்தராபாத்திலும், அதன்பின் சென்னை, பெங்களூரு என இடந்தேடி அலைந்து, இறுதியாகத் தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள “புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்” திடலில் 27.10.11 அன்று உலகில் புகழ்பெற்ற ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்தின் தொடக்க விழா மாபெரும் வெற்றி விழாவாகக் கொண் டாடப்பட்டது. தொலைக்காட்சியில் விளையாட்டுச் சேனல்களில் மட்டுமே கண்டுகளித்துக் கொண்டிருந்த கார் பந்தயத்தை, இந்தியாவில் நேரில் காணும் நற்பேறு வாய்த்துவிட்டதென்று ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

2000ஆம் ஆண்டு முதல், அய்க்கிய நாடுகள் மன்றம், ‘உலக நாடுகளின் மனித வள மேம்பாட்டு அறிக்கையை’ வெளியிட்டு வருகிறது. மக்களின் சராசரி ஆயுள், ஒருவரின் தேசிய சராசரி வருவாய், கல்வி பயிலும் ஆண்டுகள், வேலைவாய்ப்பு, மருத்துவ ஏந்து கள் முதலானவற்றின் அடிப்படையில், நாடுகளின் மனிதவள மேம்பாட்டுத்தரம் கணக்கிடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

கணக்கில் கொள்ளப்பட்ட 184 நாடுகளில், தரவரிசை எண்ணிக்கையில், இந்தியா 137ஆவது இடத்தில் உள்ளது (தி இந்து, 10.11.2011). 2000 ஆண்டு அறிக்கை முதற்கொண்டே,இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (ழரஅயn னுநஎநடடியீஅநவே ஐனேநஒ - ழனுஐ) எண் இந்த இழிந்த - அவலமான நிலையில்தான் நீடிக்கிறது. இந்தத் தரப்பட்டியலில் நார்வே முதல் இடத்திலும், அமெரிக்கா 4ஆவது இடத்திலும், 187ஆவது இடத்தில் காங்கோவும் உள்ளன.

இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள், உணவு, உறையுள், கல்வி, குடிநீர், மின்சாரம், மருத்துவம், சுகாதாரமான சுற்றுச்சூழல், சாலைகள், போக்குவரத்து ஏந்துகள், வேலைவாய்ப்பு முதலான அடிப்படைத் தேவைகள் போதிய அளவில் கிடைக்காமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு இவற்றை அளிப்பதை முதன்மையான கடமையாக அரசு கருதாமல், 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்கிட வேண்டும் என்று ஆளும்வர்க்கம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது. அரசாலும் ஊடகங்களாலும், இந்த அபின் மயக்க உலக வல்லரசு மயக்கத்தின் ஒரு குறியீடுதான் நொய்டாவில் தொடங் கப்பட்ட ‘பார்முலா ஒன்’ கார் பந்தயம்.

தில்லி மாநகரை அடுத்து, உத்தரப்பிரதேச மாநில எல்லைக்குள் அமைந்துள்ள நொய்டாவில், 2500 ஏக்கர் பரப்பில் கார் பந்தயச் சுற்றுப்பாதை அமைக் கப்பட்டுள்ளது. இந்தியாவில் கார் பந்தயத்தை நடத்த வேண்டும் என்பதில் சாராய மன்னன் விஜய் மல்லைய்யா அச்சாணியாகச் செயல்பட்டார். கார் பந்தயச் சுற்றுப் பாதை 5.14 கி.மீ. கொண்டதாகும். “பார்முலா-ஒன் கார் பந்தயத்”தில், இந்தச் சுற்றுப் பாதையில் 60 முறை (308.4 கி.மீ. தொலைவு) தொடர்ச்சியாகக் காரை ஓட்ட வேண்டும். 1,50,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய இந்தக் கார் பந்தயத் திடல் 2000 கோடி உருபா (40 கோடி டாலர்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்னாட்டுக் குழுமமான, ‘ஜெபி குழுமத்’தின் ஒரு கிளையான, ‘ஜெபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல்’ இத்திடலை அமைத்துள்ளது.

கார் பந்தயத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட 2500 ஏக்கர் நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. பணத்தைப் பெற்ற பெரிய விவசாயிகள் உடனே சொந்தமாக மகிழுந்து வாங்கிவிட்டனர். ஆனால் வேறு என்ன தொழில் செய் வது என்று புரியாமல் திகைத்துக் கிடக்கின்றனர். சிறு உழவர்களும், வேளாண்மையில் ஈடுபட்டிருந்த நில மற்ற உழைப்பாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவர் களும், மக்களும் பயணம் செய்ய வேறுபாதையில் பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் பேராசை யையும், ஆடம்பரத்தையும் வெறுத்த புத்தரின் பெயரை, இலாபவெறி கொண்ட முதலாளியத்தின் பணக்காரப் பகட்டு விளையாட்டுத் திடலுக்குச் சூட்டியிருப்பது உலக மயம் போட்ட ஏமாற்றுக் கோலமாகும்!

மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டில், 5 நாள்கள், ஒரு நாள், 20 : 20 என்று ஆட்டங்கள் இருப்பதுபோல், கார் பந்தயத்திலும் சிலவகைப் போட்டிகள் உள்ளன. ஆனால் இவற்றுள் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றிருப்பது ‘பார்முலா ஒன் போட்டி’யேயாகும். 2011 ஆம் ஆண்டில் மொத்தம் ‘19 பார்முலா ஒன் போட்டி’கள் நடைபெறவுள்ளன. இந்தியாவில் நொய்டாவில் நடை பெற்றது 17ஆவது போட்டியாகும். 27.10.2011 அன்று ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்தின் போட்டிகள் தொடங் கின. இறுதிச் சுற்று 30.10.2011 அன்று நடைபெற்றது. இதில் 12 அணிகளைச் சேர்ந்த 24 பேர் கலந்து கொண் டனர். 60 சுற்றுகள் கொண்ட 308.4 கி.மீ. தொலை வை, ‘ரெட்புல்’ (சுநன ரெடட) அணியின் செருமானிய வீரர் செபாஸ்டின் வெட்டல், 1 மணி 30 நிமிடம் 35 நொடியில் முதலில் கடந்து வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றினார். வெற்றிக் கோப்பையை உ.பி. முதல்வர் மாயாவதி வழங்கினார். கார் பந்தயத் திடலுக்காகத் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்த உழவர்கள், பந்த யத்தின் போது, ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் தடுத்த தற்காக, ஏற்பாட்டாளர்கள், மாயாவதியைப் பாராட்டி னார்கள்.

‘பார்முலா ஒன்’இல் முதல் 5 இடங்களைப் பிடித்த வர்களின் விவரம் :

 வ.              போட்டியாளர்                                                      அணி நேரம்

எண்.         பெயர்                                                                       ம.          நிமி.    நொ.

1.            செபாஸ்டின் வெட்டல்      ரெட்புல்                 1              30           35

2.            ஜென்சன்பட்டன்    மெக்ரலான்                        1               30            43

3.            அலோன்ச    ஃபெராரி                                           1                30           59

4.            மார்ச் வெப்பர்            ரெட்புல்                             1                31           00

5.            ஷுமாக்கர்    மெர்சிடஸ்                                     1                31           40

இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே இந்தியர் நரேன் கார்த்திகேயன். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர். ஹிஸ்பானியா அணியின் சார்பில் கலந்து கொண்ட இவர், 17ஆம் இடத்தைப் பிடித்தார். போட்டியில் கலந்து கொண்ட 24 பேர்களில் 19 பேர் மட்டுமே போட்டியின் முழுத் தொலைவையும் கடந்தனர்.

வழக்கமாகப் பயன்படுத்தும் மகிழுந்துகள் போல் அல்லாமல், பந்தயத்துக்கான கார்கள் தனியாக வடிவ மைக்கப்படுகின்றன. ‘பார்முலா ஒன்’ கார் பந்தயம் மிகவும் கடுமையான போட்டி என்பது உண்மையே. கார் பந்தயத்தின் போது, ஓட்டுபவர் அமர்ந்துள்ள இடத் தின் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயருகிறது. பந்தயத்தின் முடிவில் காரை ஓட்டிய போட்டியாளரின் உடலிலிருந்து 3 முதல் 5 லிட்டர் நீர் வெளியேறியி ருக்கும். உடல்எடையில் 5 கிலோ குறைந்திருக்கும். (தி இந்து 28.10.2011).

இவ்வளவு கொடுந்துன்பமான ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்தில் செருமானியரான செபாஸ்டின் வெட்டல் இப்பருவத்தில் மட்டும் 11 தடவை வென்றுள்ளார். மொத்தத்தில் இதுவரையில், 21 தடவை ‘பார்முலா ஒன்’ போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். பார்முலா ஒன் கார்பந்தயம் ஒருவரின் உடல் வலிமையையும், உள்ளத்தின் உரத்தையும், காரை ஓட்டுவதில் உள்ள திறனையும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மை தான். ஆனால் இப்போட்டியால் வெகு மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் வினவினால், மட்டைப் பந்துப் போட்டியால் மட்டும் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது? என்று கார்பந்தய ஆதரவாளர்கள் எதிர் வினா தொடுப்பார்கள்.

கிரிக்கெட் போட்டியானாலும், கார் பந்தயப் போட்டி யானாலும் மக்களை - குறிப்பாக இளைஞர்களைத் தங்கள் வாழ்வின் சிக்கல்களுக்கான காரணங்கள் பற்றிச் சிந்திக்கவிடாமல் திசை திருப்பி, முதலாளித்துவப் போட்டி யின் கொள்ளை இலாபத்துக்கான நுகர்வியக் கலாச் சாரத்தில் அவர்களைத் திளைக்கச் செய்வதையே நோக்கமாகக் கொண்டவைகளாகும். இந்தியா முழு வதிலும் இன்று இளைஞர்களின் பெருங்கவலை - சச்சின் டெண்டுல்கர் எப்போது 100ஆவது முறையாக 100 ரன்னை அடிப்பார் என்பதேயாகும்.

ஆனால் நொய்டாவில் நடந்த கார் பந்தயத்தைக் காண டெண்டுல்கர் வந்தபோது, தடபுடலாக அவரை வரவேற்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த - விளையாட்டு நிகழ்ச்சிகளை மட்டுமே படம் பிடிக்கும் செய்தியாளர்களில் பெரும்பாலோர், ‘யார் இந்தக் குள்ள மனிதர்’ என்று கேட்டனர். அவர்களுக்கு டெண்டுல்கர் யார் என்பதே தெரியவில்லை. ஏனெனில் உலகில் பத்துப் பதினைந்து நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ, டெண்டுல்கர் ‘ஓர் அவதார புருஷராகப்’ போற்றப்படு கிறார்.

கிரிக்கெட் விளையாட்டு ஒரு சூதாட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாடும் வீரர்களே இதில் ஈடுபடுகின்றனர். சூதாட்டக் குற்றச்சாட்டின் பேரில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் விளையாட்டிலிருந்தே விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு இப்போது சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையில் இளை ஞர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். குறிப் பாக 20 : 20 போட்டி என்பது (ஐ.யீ.டு.) தொடங்கிய பிறகு, பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளின் பினாமிகளும், திரைப்பட நட்சத்திரங்களும், தங்கள் அணிக்காக, அக்காலத்தில் அடிமைகளை - அழகிகளைப் பொது ஏலத்தில் எடுப்பது போல், பல நாடுகளையும் சார்ந்த கிரிக்கெட் வீரர்களைப் பெருந்தொகைக்கு ஏலத்தில் எடுக்கின்றனர்.

இதைப்போலவே, கார் பந்தயத்துக்கான வீரர்க ளையும் பெருமுதலாளிய அணிகள் பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கின்றனர். நொய்டா கார்பந்த யத்தில், “ஃபோர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணி” கலந்து கொண்டது. இந்த அணியின் வீரர்கள் 9ஆம், 13ஆம் இடத்தைப் பிடித்தனர். இந்த அணி விஜய் மல்லய்யாவுக்குச் சொந்தமானது. இப்போது சகாரா குழுமம் இந்த அணியின் 42.5% பங்குகளை 10 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கி, விஜய் மல்லய்யா வுடன் இணைப் பங்குதாரராகச் சேர்ந்துள்ளது.

இந்தக் கார் பந்தயத்தை நடத்துபவர்களின் ஏகாதி பத்திய - ஆணவப்போக்கை அறிந்துகொள்ள ஒரேயொரு சான்று - இவர்கள் இந்திய நடுவண் அரசின் விளை யாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கானை இப்போட் டிக்கு அழைக்கவேயில்லை என்பதாகும். ஏனெனில் அவர் இப்போட்டிக்கு வரிச்சலுகை அளிக்க மறுத்து விட்டார். இருப்பினும் கார் போட்டியில் கிடைக்கும் இலாபம் முழுவதும் பல கணக்குகளாகக் காட்டப்பட்டு, குறைவான வரியே செலுத்தும் நிலையை உருவாக்கு வார்கள். விளையாட்டை ஊழலற்றதாக்கி முறைப்படுத் திட, நடுவண் அரசு கொண்டுவர உள்ள விளையாட்டுச் சட்டத்தை இந்தியக் கிரிக்கெட் வாரியம் எதிர்க்கிறது; சரத்பவார் எதிர்க்கிறார். மாநிலங்களிலும், இந்திய அள விலும் கிரிக்கெட் வாரியத் தலைவர்களாக விளையாட்டு வீரர் யாரும் இருப்பதில்லை. பெருமுதலாளிகளே தலை வர்களாக இருக்கின்றனர்.

கிரிக்கெட், கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளை முதலாளிகள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன? தங்கள் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்துவது மட்டுமே அவர்களின் நோக்கம் ஆகும். ‘பார்முலா ஒன்’ கார் பந்தயத்தை உலகில் 52.7 கோடிப் பேர் தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அடங்கிய முன்னைய இந்தியத் துணைக் கண்டத்திலோ, கிரிக்கெட் பைத்தியம் தலைவிரித்தாடுகிறது. இரண்டாவதாக, இனி, இந்நாடு களின் இளைஞர்கள் கார் பந்தயப் பைத்தியங்களாகவும் ஆகப் போகிறார்கள்.

இப்போது, தொலைக்காட்சியில் கார் பந்தயங்களைப் பார்க்கும் குழந்தைகள் வகைவகையான கார் பொம் மைகள் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். கணினி உள்ள வீடுகளில் சிறுவர்கள் ‘கேம்ஸ்’ (ழுயஅநள) என்ற பெயரில் கார் பந்தய விளையாட்டில் பெருமளவு பொழுதைக் கழிக்கின்றனர். நகரங்களில் கணினி இல்லாத வீடுகளின் சிறுவர்கள் வெளியில் இதற்கென உள்ள கடைகளில் காசு கொடுத்து விளையாடுகிறார் கள். கணினியில் உள்ள எந்தவொரு விளையாட்டும், மற்றவர்களைக் காட்டிலும் தான்மட்டும் முந்திச் செல்ல வேண்டும் - வெற்றியின் உச்சியை அடைய வேண்டும் என்கிற வெறியை, குழந்தைகள் - சிறுவர்கள் - இளை ஞர்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைக்கின்றது.

உலகமயத்தின் திறந்த சந்தைப் போட்டிக்கான முதலாளித்துவ - ஏகாதிபத்திய உளவியல் பிஞ்சுமனங் களில் உரமூட்டப்படுகிறது. அன்பு, நட்பு, சுற்றம், சமூகம், மொழி, நாடு என்பன பற்றி எள்ளளவும் கவலைப் படாத, தன்னல வெறிகொண்ட - தான் மட்டுமே துய்க்க வேண்டுமென்ற ஆசை கொண்ட சமூகத்தைப் படைப் பதற்கான கூறுகளில் ஒன்றுதான் - பார்முலா ஒன் கார் பந்தயம்.

இந்தியாவில் தற்போது 4 கோடி கார்கள் உள்ளன. பெரிய பணக்காரர்களின் வீடுகளில் ஆளுக்கு ஒரு கார் உள்ளது. எனவே இந்தியாவில் தற்போதுள்ள 24 கோடி குடும்பங்களில் 2 அல்லது 3 கோடி குடும்பங்கள் மட்டும் கார் வைத்துள்ளன.

‘நொய்டா பார்முலா ஒன்’ கார் பந்தயத்தின் முதன்மையான நோக்கம் பெரிய சந்தையாக உள்ள இந்தியாவில் கார்கள் விற்பனையை அதிகமாக்க வேண்டும் என்பதேயாகும்.

‘கார் வைத்திருப்பவன் பணக்காரன்’ என்ற மன நிலை கடந்த நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே முதலாளியத்தின் ஒரு குறியீடாகக் கார் இருந்து வருகிறது.

‘பார்முலா ஒன் கார் பந்தயம்’ உலகமயச் சந்தைப் போட்டியின் - ஆணாதிக்கத்தின் - ஏகாதிபத்திய மனநிலை யின் குறியீடாகவும், மாபெரும் சூதாட்டமாகவும் இருக் கிறது. எனவேதான், இந்தியாவில் தடகளத் தங்க மங்கை என்று போற்றப்படும் பி.டி. உஷா, “பார்முலா ஒன் கார் பந்தயம் ஒரு பணக்காரச் சூதாட்ட விளையாட்டு” என்று சாடியுள்ளார். குதிரைப் பந்தயம் போல், பார்முலா ஒன் கார் பந்தயமும் ஒரு சூதாட்டமே!