இறுதியாக இலங்கையிலே நடந்த போரில்
      ஈனமிகு சிங்களரால் புலிகள் மக்கள்
கருதிடவே முடியாத கடுவஞ் சத்தால்
     கணக்கற்ற எண்ணிக்கை கொல்லப் பட்டார்
போரறத்தை மீறியதால் பொறுக்கி பக்சே
    பொல்லாத வன்என்றே நல்லோர் சொன்னார்
பொறுக்காத பன்னாட்டார் காறித் துப்ப
     பொறுத்தவரும் மனங்கலங்கிக் கண்ணீர்விட்டார்

மனமற்ற மன்மோகன் மந்தி போன்று
    மரஉச்சி தனில்குந்திப் பார்த்தி ருந்தார்
இனப்பகையர் நாராயண மேனன் என்னும்
    இருள்நெஞ்சர் பார்வையிட ஈழம் சென்றார்
குலைகுலையாய்த் தமிழர்அங்கு சாதல் கண்டும்
    கொதிப்பின்றி விருந்துண்டு திரும்பி வந்தார்
“நிலையங்கே ஈழத்தில் நலமே” என்று
    நீதியின்றி இரக்கமின்றி அறிக்கை தந்தார்
இந்தியனாய் நாராயணன் நடந்தா ரென்றால்
    இந்தியர்தான் நாங்களும்;கா விரிநீர் எங்கே?
வெந்துமடி வதுமட்டும் தமிழர் என்றால்
    வெட்டிஇந்தி யாஎன்ன மயிருக் கிங்கே?
அணையங்கே வலுவற்ற தென்று சொல்லி
    அடாவடியாய்ப் பேசுகிறார் உம்மன் சாண்டி
துணையிருப்பார் மன்மோகன் என்றே நம்பித்
    துணியாதீர்; அறம்வெல்லும் சதியைத் தாண்டி
முள்ளிவாய்க்கால் தன்னிலங்கு முடிந்த சோகம்
    முல்லைபெரி யாற்றிலிங்கே தொடங்க வேண்டாம்
வில்லைவைத்து ஆண்டபுகழ்ச் சேரர் நீங்கள்
    கிள்ளிகளும் வழுதியுமாய்த் தமிழர் நாங்கள்
வாய்மடுத்த பால்மறவாப் பிள்ளை நாங்கள்
    வடமொழிநம் பூதிரிக்கு அடிமை நீங்கள்
தாய்க்குடிக்கும் தண்ணீரைப் பிடுங்க வேண்டும்
    தமிழ்க்கெடுத்து வடநஞ்சை அருந்த வேண்டாம்!