திசம்பர் 7 - மாவோ நினைவு நாள்

எல்லா நேரங்களிலும் வேறுபாடற்ற ஒற்றுமை யைப் பற்றி மட்டுமே பேசி, போராட்டத்தைப் பற்றிப் பேசாமலிருப்பது மார்க்சியம் - லெனினியம் அல்ல. போராட்டத்தின் வழியாகவே ஒற்றுமை உருவாகிறது. இந்த வகையில் மட்டுமே ஒற்றுமை சாத்தியமாக முடியும். இதே மாதிரிதான் கட்சிக்குள்ளும், வர்க்கங் கள், மக்களிடையேயும் இப்படித்தான். ஒற்றுமை போராட்டமாக மாறுகிறது. பிறகு மீண்டும் ஒற்றுமை நிலவுகிறது. போராட்டத்தைப் பற்றியும் முரண்பாடுகள் பற்றியும் பேசாமல் மாறுபடாத ஒற்றுமையைப் பற்றி மட்டும் நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது.

தலைவர்களுக்கும், தலைமை தாங்கப்படுவோ ருக்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி சோவியத் யூனியன் பேசவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றால் போராட்டம் இருக்காது. அங்கே உலகம் இருக்காது. முன்னேற்றம் இருக்காது. வாழ்க் கை இருக்காது. எதுவுமே இருக்காது. எல்லா நேரத் திலும் ஒற்றுமை பற்றியே பேசுவது ‘தேங்கி நிற்கும் ஒரு குட்டை போன்றது’. இது வெறுப்பு ஏற்படவே வழிவகுக்கும். ஒற்றுமைக்கான பழைய அடிப்படை யை நாம் அழிக்க வேண்டும். போராட்டத்தின் மூலமாகவும் புதிய அடிப்படையிலும் ஒன்றுபடுத்த வேண்டும். எது சிறந்தது? தேங்கிய குட்டையா அல்லது விரைந்து சீறியோடி வரும் வற்றாத யாங்சே நதியா? இதைப்போல்தான் கட்சிக்கும்; இதைப்போல் தான் வர்க்கங்களுக்கும்; மக்களுக்கும் கூட. ஒற்றுமை - போராட்டம் - ஒற்றுமை. இதன் பொருள், நாம் நமது வேலையைச் செய்கிறோம் என்பதாகும்.

உற்பத்தி, நுகர்வாக மாறுகிறது; நுகர்வு, உற்பத்தி யாக மாறுகிறது. நுகர்வுக்காகவே உற்பத்தி செய்யப் படுகிறது. உற்பத்தி என்பது பிற உழைப்பாளி மக்களின் நலனுக்காக மட்டுமல்ல. உற்பத்தியாளர் களும் நுகர்வோரே.

ஒரு மனிதர் சாப்பிடவில்லையென்றால், அவருக்கு சக்தியே இருக்காது. அவரால் உற்பத்தி செய்யவும் முடியாது. அவர் சூடான உணவு சாப்பிட்டால், அவரால் கூடுதலாக வேலை செய்ய முடியும். மார்க்சு சொல் கிறார் - உற்பத்தி என்பது நுகர்வையும் உள்ளடக் கியதே. உற்பத்தியும் நுகர்வும், கட்டுமானமும் அழிவும் எதிர்மறைகளின் ஒற்றுமைகள். அவை ஒன்று மற்றொன்றாக மாறுகிறது.

எதிர்மறைகளின் ஒற்றுமை, அவை ஒன்று மற்றொன்றாக மாறுவது என்ற கோட்பாடுகளை ளக்குவதற்கு நாம் ஏராளமான எடுத்துக்காட்டு களைக் காட்ட வேண்டும். பல டசன் அல்லது நூறு எடுத்துக்காட்டுகளை முன்வைக்க வேண்டும். இதன்மூலமாக மட்டுமே நாம் நமது தத்துவத்தைச் சரிசெய்து கொள்ளவும், புரிதல் நிலையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். இளவேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என்பவையும் கூட ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. இளவேனில், கோடை ஆகியவற்றின் கூறுகள் இலையுதிர் காலத்தி லும், குளிர் காலத்திலும் இருக்கின்றன. பிறப்பும் இறப்பும் கூட ஒன்று இன்னொன்றாக மாறுகிறது. வாழ்வு சாவாக மாறுகிறது. உயிரற்ற பொருள் உயிருள்ளதாக மாறுகிறது. மனிதன் இறப்பது தவிர்க்க முடியாதது. இது இயற்கையின் நியதி.

‘சுருக்கமான தத்துவ அகராதி’ (1939இல் மாஸ் கோவில் வெளியிடப்பட்டது) என்னை எதிர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பிறப்பு இறப்பாக மாறுகிறது என்பது வறட்டு வாதம் என்றும், போர் சமாதானமாக மாறுகிறது என்பது தவறு என்றும் அது கூறுகிறது. இந்தக் காட்சி ஆய்வில் யாருடையது சரியானது? என்று நான் கேட்கிறேன். ஜடப்பொருளின் நிலை மாற்றத்தின் பயனே உயிருள்ள பொருள் என்று இல்லாமல் போனால், இவர்கள் எங்கிருந்து வந்த னர்? தொடக்கக் காலத்தில் புவியின் மீது உயிரற்ற பொருள்கள் தவிர வேறெதுவும் இல்லை. இதைத் தொடர்ந்தே உயிருள்ள பொருள் தோன்றியது. நைட் ரஜன், ஹைட்ரஜன் போன்ற தொண்ணூற்றிரண்டு மூலப் பொருள்களில் ஏற்பட்ட மாற்றங்களின் பயனே உயிர் வாழும் அனைத்துப் பொருள்களும், ஜடப் பொருள் நிலை மாறுபாட்டின் பயனே அனைத்து உயிர் வாழ் இனங்களும். தொகுத்துச் சொன்னால் குண மாற்றங்கள் அளவு மாற்றங்களாகின்றன. அளவு மாற்றங்கள் குணமாற்றங்களாகின்றன.

எல்லையுடையது எல்லையற்றதாக மாறுகிறது; எல்லையற்றது எல்லையுடையதாக மாறுகிறது. பண்டைக் காலத்து இயக்கவியல், மத்திய காலத்தில் கற்பனா வாதமாக மாறியது. மத்திய கால கற்பனா வாதம், நவீன காலத்தில் இயக்கவியலாக மாறியது. பிரபஞ்சமும் கூட மாறிக் கொண்டேயிருக்கிறது. அது நிலையானதல்ல. முதலாளித்துவம் சோசலிசத்துக்கு இட்டுச் செல்கிறது. சோசலிசம் கம்யூனிசத்துக்கு இட்டுச் செல்கிறது. கம்யூனிச சமூகம் இன்னும் மாற்றமடைய வேண்டியிருக்கிறது. அதற்குக்கூட ஒரு தொடக்கமும் முடிவும்உண்டு. நிச்சயமாக அது பல கட்டங்களாகப் பிரிக்கப்படும். அல்லது அவர்கள் அதற்கு வேறு பெயர் வைப்பார்கள். அது நிலையானதாக இருக்க முடியாது. அளவு மாற்றங்கள் மட்டும் இருந்து குணமாற்றங்கள் இல்லையென்றால் அது இயக்கவியலுக்கு எதிரான தாகப் போகும்.

பிறந்து வளர்ந்து அழியாதது உலகத்தில் எது வுமே இல்லை. குரங்குகள் மனிதர்களாக மாறின. மனிதகுலம் உருவானது. கடைசியில் மொத்த மனித குலமும் அழியலாம்; அது வேறெதுவாகவோ மாறலாம். அந்தச் சமயத்தில் இந்தப் பூமியேகூட அழிந்து போக லாம். இந்தப் பூமி நிச்சயம் அழிந்துதான் ஆக வேண்டும். சூரியன் கூட குளிர்ச்சியாகும். பண்டைக் காலத்தைவிட அது இப்போதே குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்தப் புவி முழுவதும் பனியாக இருந்த காலத்தில் 20 இலட்சம் ஆண்டுகளில் ஒரு மாற்றம் வந்தது. பனி வந்தபோது வாழும் அனைத்து உயிரி னங்களிலும் பெரும் பகுதி அழிந்து போயின. தென் துருவத்துக்குக் கீழே பெருமளவு நிலக்கரி இருக்கிறது. இதனால் பண்டைக் காலங்களில் அங்கே அதிக வெப்பம் இருந்ததை நீங்கள் காணமுடியும்.

நமது சிந்தனையை உயிர்ப்பூட்டுவதற்காகவும் விரிவுபடுத்துவதற்காகவுமே நான் இதைப் பற்றியெல் லாம் பேசியிருக்கிறேன். மனம் எப்போது கரடுதட்டிப் போனாலும் அது மிகவும் ஆபத்தானதாகும். நாம் நமது ஊழியர்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டும். மய்ய, மாகாண, மண்டல மற்றும் வட்டார நிலை ஊழியர்கள் மிகவும் முக்கியம். பல்வேறு அமைப்புகள் உட்பட பல நூறாயிரம் பேர் இருக்கிறார்கள். நாம் கூடுதலாகச் சிந்திக்க வேண்டும். செவ்வியல் இலக்கி யங்களையே மனதில் நிலையானதாக நாம் கொண் டிருக்கக் கூடாது. நமது மூளையை நாம் பயன்படுத்த வேண்டும். சிந்தனையை உயிர்ப்பூட்ட வேண்டும்.

(மாவோ 1958 மார்ச்சு மாதம், செங்டூ மாநாட்டில் நிகழ்த்திய உரை. மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 8, பக்கம் 79-82)