திசம்பர்இரு     பத்து நான்கு

     திதிதரும்  நாளா?    இல்லை

அசைபோடும்    நாளாம்    நெஞ்சில்

     அய்யாவின்     நெடிய     தொண்டை!

இசைவான துறைகள்  தோறும்

     எண்ணிலா ஆண்டுக்   காலம்

பசைபோட்டே    ஒட்டிக்    கொண்டு

     பார்ப்பானே கிடந்தான்  எங்கும்

சீரான     மதிப்பு     மேன்மை

     செல்வாக்கு எதிலும்    பெற்றான்

ஈரோட்டு   பெரியார்   வந்தார்

     இந்நிலை  உற்றுப்    பார்த்தார்

போராடும்  மக்கள்     வாழ்க்கை

     புரிந்தது;         பூணூ லானை

வேரோடு  பிடுங்கிப்   போட்டார்

     விடுதலை நமக்குத்   தந்தார்

பச்சைப்பு   ராணம்    தன்னைப்

     பகுத்தறிவு கொண்டே  ஆய்ந்தார்

கொச்சையாய்ப்  பேசி னாலும்

     குடுமிகள்  வேர்த்தே  ஓட

நச்சென்று  கேள்வி    கேட்டு

     நரிகளின்  தோல்உ   ரித்தார்

அச்சமோ  துளியும்   இல்லை

     அகன்றது  அவாளின்  தொல்லை

மொத்தமாய்     இழிவு     நீக்கும்

     முயற்சியில்     வென்றோம்     இல்லை

எத்தனை  சூத்தி ரர்தம்

     இழிவெண்ணும்  நிலையில் உள்ளார்

பக்தனாய்  வீழ்ந்து    பார்ப்பான்

     பாதத்தை  வணங்கு   கின்றார்

அத்தகு    நிலைமா   றட்டும்

     அய்யாபணி நிறைவே  றட்டும்