சென்ற இதழில் உ.வே.சா. இந்தி ஆதரவாளர் என்பதை எழுதியிருந்தேன். உ.வே.சாவைப் பார்ப் பனர்கள் எப்படியெல்லாம் விளம்பரப்படுத்தி பெரிய மனிதராக்குகிறார்கள்; பார்ப்பனரல்லாத தமிழறிஞர் களை எவ்வாறு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்ப தைப் பற்றி உ.வே.சா. எண்பத்தோராம் பிறந்தநாள் விழா நடைபெற்ற காலக்கட்டத்தில், 1935இல், குடி அரசு இதழ் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தினை மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருக்கிறது.

“இன்று தமிழ்ப்பாஷை விஷயத்தில் உழைப் பவர்களும், அதில் தேர்ந்த விற்பன்னர்களும் பார்ப் பனரல்லாத மக்களிலேயே ஏராளமாக நிரம்பி இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாததல்ல. தோழர் களான சுவாமி வேதாச்சலம் (மறைமலையடிகள்), எஸ்.சோமசுந்தர பாரதியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கா.நமச்சிவாய முதலியார் போன்ற எவ்வளவோ சிறந்த புலவர்கள் இருந்தும், அவர்களை யெல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் மனதினால் நினைப் பது கூடப் பாவமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோழர்கள் உ.வே.சாமிநாதய்யர், ராகவையங்கார், ராமாநுஜாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களுக்கே தமிழ்ப் பாஷையின் பெயரினால் பெரிய விளம்பரமும் அவர்களால் தான் தமிழ்ப் பாஷையே நிலைத்திருக்கிறது என்ற பிரச்சாரமும் செய்துவருகிறார்கள்.

இந்த வாரத்தில் சென்னையில் மகாமகோத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் எண்பத் தோராம் வருஷம் பிறந்த நாள் கொண்டாட்டம் சம்பந்த மாகப் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாகச் செய்த விளம்பரத் தையும், பிரசாரத்தையும் முயற்சியையும் கவனித் தால், இதன் உண்மையைக் கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் மானமிருந்தால் தெரிந்துகொள் வார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை.

டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள், அவருக்கு முன்னிருந்தத சில புலவர்களாலும், சென்னைச் சர்வ கலா சங்கத்தாராலும், சில புத்தகங்களின் மூலப் பாடங்களும், சில புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் உரைகளும் வெளியிடப்பட்டிருந்த சங்க இலக்கியங்களையும், முழுப்பாகமும் வெளியிடப்படாமலிருந்த சில புத்தகங்களையும், பெரும்பாலும் பார்ப்பனரல்லா தாரின் துணைக்கொண்டு தேடிப்பிடித்து இராமநாதபுரம் அரசர், திருவாடுதுறை மடத்தார் போன்றவர்களின் உதவிபெற்று அவைகளை அச்சிட்டு வெளியிட்டு, அதன்மூலம் பிரயாசைப்பட்டதற்கு ஏற்ற பொருள் லாபமும் பெற்றிருந்தாலுங்கூட, விடாமுயற்சியுடன் தமிழ்ப் புத்த கங்களை, அதிலும் பழைய சங்க இலக்கியங்கள் என்பன பலவற்றை ஒழுங்கான முறையில் சீர்திருத்தி வெளியிட்டமைக்காகத் தமிழாபி மானிகள் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பதை நாமும் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்.

ஆனால் நேற்று, தோழர் இராஜகோபாலாச்சாரியார் போன்ற அரசியல் பார்ப்பனர் முதல் தமிழ் என்னும் வார்த்தையை உச்சரித்தாலே “சூத்திர பாஷை”யைச் சொன்ன பாவம் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டி ருக்கிற உஞ்சவிருத்திக்கார வைதிகப் பார்ப்பனர் வரை எல்லோரும் டாக்டர் அய்யர் அவர்களைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து, மகாமகோபாத்தியாயர், தாக்ஷ ணாத்க்ய கலாநிதி, டாக்டர் என ஏற்கனவே அவருக்கு கிடைத்திருக்கும் பட்டங்களைப் பாராட்டியதோடு, “தமிழ் வியாசர்” என்னும் புதிய பட்டத்தையும் சூட்டுவதாகப் பத்திரிகைகளில் விளம்பரம் பண்ணினார்கள். இவரு டைய புகழ்ச்சிக் கொண்டாட்டத்தை முன்னிட்டுப் பத்திரிகைகளில் அநுபந்தங்களும், புகழ் மாலைகளும் வெளியிட்டார்கள். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிக்கைகளும், பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரியும் தேசியக் கூச்சல் போடும் பத்திரிகைகளும் நாலைந்து தினங்கள் சர்வம் சாமிநாதய்யர்மயமாகவே விளங்கும் படிச்செய்தார்கள். இவ்வாறு செய்தமைக்காக நாம் பொறாமையோ, துவேஷமோ, வயிற்றெரிச்சலோ ஒரு சிறிதும் அடையவில்லை. பார்ப்பனர்களால் “சூத்திர பாஷை” என்று அலட்சியம் செய்யப்படுகின்ற தமிழ்ப் பாஷையின் மூலம் ஒரு பிராமணர் கௌரவிக்கப்பட்ட தற்காகச் சந்தோஷமே அடைகிறோம்.

பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக்கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பனரல்லாதார் நன் றாகத் தெரிந்துகொள்ளும்படி வெளிப்படுத்த விரும் பியே இவ்விஷயங்களை எழுத முன்வந்தோம்.

உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ்ப் பாஷையின் மேலும் தமிழ் அபிவிருத்தியிலும் ஆசை யுடையவர்களானால், இந்த டாக்டர் அய்யர் அவர் களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற் குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜியில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்துகொள்ளும்படிச் செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்பாருக்கு உதவியளிப்பாரும், இல்லாதிருந்த காலத் தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும் படிச் செய்து, அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித் துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதிலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங் களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்போது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்துப் பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணி வரும் தோழர் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும் கூட, பாதகஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறதுண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ்மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகிறவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அல்லாது யாராகிலும் பார்ப்பனர்களுக்கே பெருமை யும், விளம்பரமும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பதை மேலே எடுத்துக் காட்டியதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.”

“சில வருஷங்களாக அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற்று வருவத னாலும், பார்ப்பனருக்கு முன்போல அப்பதவிகளில் ஏகபோக உரிமை பெறுவதற்கு இடமில்லாமற் போனதனாலும் உத்தியோகப் பார்ப்பனர், அரசியல் பார்ப்பனர், வைதிகப் பார்ப்பனர், சீர்திருத்தக்காரப் பார்ப்பனர், உஞ்சவிருத்தி பார்ப்பனர், பத்திரிகைப் பார்ப்பனர் ஆகிய எல்லாப் பார்ப்பனர்களும் இப் பொழுது ஒன்றுசேர்ந்து பார்ப்பனரல்லாதாரை ஒரு துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்காகவே அவர்கள் காங்கிர° போர்வை, தேசியப் போர்வை, தீண்டாமை விலக்குப் போர்வை, கிராமப் பிரச்சாரப் போர்வை, சங்கீதப் போர்வை, இந்தி பிரச்சாரப் போர்வை, தமிழ்ப்பாஷைப் போர்வை முதலிய பலவகையான போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சூழ்ச்சிப் பிரச்சாரம் பண்ணப் புறப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாதார் சமூகமானது மானத்தோடும் சுதந்தரத்தோடும், சுய மரியாதையோடும் வாழவேண்டுமென்று கருதுகின்ற சுத்த ரத்தமும் பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல் லாதார் ஒவ்வொருவரும் இந்தப் பார்ப்பனர்களுடைய சூழ்ச்சிக்குக் கொஞ்சமும் ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்” (குடிஅரசுத் தலையங்கம் 10.3.1935).

பார்ப்பனரல்லாத தமிழ்ப் புலவர்களுக்குப் பாது காப்பு அரணாக விளங்க அவர்களைத் தூக்கி நிறுத்தி மக்களிடம் அவர்களுக்குச் செல்வாக்கு ஏற்படச் செய்தது திராவிடர் இயக்கம் தான்.

சென்னையில் 1933இல் தமிழ் அன்பர் மகாநாடு என்ற பெயரில் சில பார்ப்பனர்கள் மாநாடு நடத்த முயன்றபோது, சுயமரியாதை இயக்க ஏடான குடிஅரசு இதழ் அந்த மாநாட்டின் சூழ்ச்சியை விளக்கி எழுதியது.

“இம்மகாநாட்டின் சூழ்ச்சிகளிலெல்லாம் முதன் மையான சூழ்ச்சி என்னவென்றால், பார்ப்பனர்கள் தமிழர்கள் என்னும் தலைப்புக்கள் புகுந்துகொண்டு மக்களுக்குள் இருந்துவரும் பார்ப்பனர்-பார்ப்பன ரல்லாதார் என்கின்ற உணர்ச்சியை நசுக்கி, பழையபடி பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரமே இந்நாட்டில் இருக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதும் அதற்காக, சில பார்ப்பனரல்லாத செல்வான்களையும், எதையும் விற்றுத் தங்கள் சுயநலத்தையே நாடும் சில பார்ப்ப னரல்லாத மக்களையும் சேர்த்துக்கொண்டு பார்ப்பன ரல்லாத சமூகம் முழுவதையுமே ஏமாற்றிவிடலாம் என்பதேயாகும்.

நமது நாட்டில் தமிழ் கற்றறிந்த பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையானவர்களுக்கு பகுத்தறி வில்லை என்று நாம் சொல்லுவதற்குத் தமிழ்ப் பண்டி தர்கள் மன்னிக்க வேண்டுமென்று கோருகிறோம். ஏனெனில் தமிழ்பாஷையைக் கற்று பண்டிதர்களா னவர்கள் 100க்கு 99 பேர்கள் மதவாதிகளாகவும், மதத்துக்காகத் தமிழைக் கற்றவர்களாகவும், தமிழில் மதத்தைக் காண்கிறவர்களாகவும் இருந்து வருவ துடன் தங்கள் புத்தியை மதத்துக்குப் பறிகொடுத்து மதக் கண்ணால் தமிழைப் பார்க்கின்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அறிவுக்கு மரியாதை கொடுத்த பண்டிதர் ஒருவரையாவது காண்பது கஷ்ட மாகவே இருக்கின்றது.

உதாரணமாக மதத்தையும் மத மேற்கோள்களையும் தள்ளிவைத்துவிட்டு, ஒரு பதினைந்து நிமிஷம் பேசுங்கள் பார்ப்போம் என்றால், பேசக் கூடிய தமிழ்ப் பண்டிதர்கள் எத்தனைப் பேர் நம் நாட்டில் கிடைப் பார்கள் என்று பார்த்தால் உண்மை விளங்கிவிடும். மதத்தை நீக்கிய - மத சம்பந்தப்படாத தமிழ்ப் புத்தகம் இலக்கிய வடிவத்திலோ, இலக்கண வடிவத்திலோ, சரித்திர வடிவத்திலோ, விஞ்ஞான ஆராய்ச்சி வடிவத் திலோ காண்பதென்பது “குதிரைக்கொம்பாக” இருக் கிறது. இப்படிப்பட்ட நூல்களைப் படித்த பண்டிதர்கள் பரிசுத்த பகுத்தறிவுவாதிகளாக இருப்பார்கள் என்று எப்படி எண்ண முடியும்? பகுத்தறிவுக்காரருக்குப் பயந்த சில பண்டிதர்கள் தங்கள் வாய் சமார்த்தியத் தால் மத சம்பந்தமான சில கோட்பாடுகளையும் ஈரருத்தம் உள்ள சில வாக்கியங்களையும் விஞ்ஞான முறைக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்த முயற்சிக்கிறார் கள் என்றாலும், விஞ்ஞானத்துக்கு மாறுபட்டதையும் பகுத்தறிவுக்கு மாறுபட்டதையும் தள்ளி வைக்கச் சம்மதிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு நம்மை வையத்தான் அல்லது நம் மீது குறைகூறத்தான் தெரியுமே ஒழியத் தங்கள் நிலைக்கு வெட்கப்படவோ, வருந்தவோ சிறிதும் தெரியவே தெரியாது.

இந்த நிலையில் தமிழ்க்கல்வி அமைந்துவிட்டதால், இந்தப் படிப்பு படித்த தமிழ்ப் பண்டிதர்களைப் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டப்படிக்கு ஆட்டிவைத்துத் தங்கள் காரியங் களைச் சாதித்து கொள்ளத் துணிவதில் அதிசய மொன்றுமில்லை. இந்த நிலையுள்ள தமிழ்ப் பண்டி தர்கள் “மயிலைக் கண்ட பச்சோந்தியானது தானா கவே வந்து கண்ணைக் கொத்திக் கொள்ள வசதி கொடுக்கும்” என்று சொல்லும் வாசகம் போல், தமிழ்ப் பண்டிதர்கள் தாங்களாகவே பார்ப்பனர்களுக்கு அடிமையென்று ஒப்புக்கொள்ளுவதில் அதிசயமில்லை.

தமிழ்த்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் அட்டூ ழியங்களை இதுவரை எந்தப் பார்ப்பனரல்லாத பண்டிதர்களாவது எடுத்துச்சொன்னதே கிடையாது. இங்கிலீஷ் பாஷையில் பார்ப்பனர்களுக்கே எல்லா ஆதிக்கமும் இருந்துவருகிறது. உபாத்தியாயர்கள் பார்ப் பனர்கள்; புத்தகம் எழுதுகிறவர்கள் பார்ப்பனர்கள்; இலாக்கா அதிகாரிகள் பார்ப்பனர்கள்; பரிக்ஷகர்கள் பார்ப்பனர்கள். சமஸ்கிருத பாஷையிலோ இதைவிட அதிகமான ஆதிக்கம். புதியதாக வந்து நுழைந்த ஒரு அனாமதேய இந்தி பாஷையிலோ இன்னும் அதிக மான ஆதிக்கம். தமிழ்ப்பாஷையில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துடன் பார்ப்பனரல்லாதவர்கள் ஆதிக்கமும் சிறிது உண்டு என்று சொல்லக்கூடுமானால், அந்தச் சிறிதும் பார்ப்பனர்களின் அடிமைகளான பார்ப்பன ரல்லாதார்களாய்த்தான் இருக்க முடியுமே ஒழிய, மற்றபடி சுதந்தரப் பார்ப்பனரல்லாதாரைச் சுலபத்தில் காணமுடியாது. இந்தப் படியான கல்வியின் ஆதிக்கம், பாஷையின் ஆதிக்கம், இலாக்காவின் ஆதிக்கம், அவர்கள் இருந்துவருகின்றதை இன்னும் அதிகமாய்ப் பலப்படுத்திக்கொள்ளவே இந்த சூழ்ச்சி மாநாடு கூட்டப் படுகின்றது என்பதே நம்முடைய அபிப்பிராயமாகும்.

பார்ப்பனரல்லாத தமிழ்ப் பண்டிதர்களையும் தமிழில் ஞானமோ, தமிழ் மக்களிடத்தில் அன்போ, தமிழ்ப் பாஷைக்கும் தமிழ் மக்களுக்கும் உலகில் சுயமரியாதை இருக்கவேண்டும் என்ற கருத்தோ கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் இம்மாநாடு சம்பந் தத்தில் இருந்து கண்டிப்பாய் விலகிக் கொண்டு இதன் சூழ்ச்சியைத் தைரியமாய் வெளியாக்க வேண்டு மென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம்.

இந்தப் பண்டிதர்கள் சுமார் 40, 50 வருஷங் களுக்கு முன்னால் இருந்தே பார்ப்பனர்களை விட்டு விலகி இருப்பார்களேயானால், இன்றைய தமிழின் நிலைமையும், தமிழ்ப் பண்டிதர்களின் நிலைமையும் வேறாக இருந்திருக்கும். இன்று அப்படியில்லாமல் பண்டார சன்னதிகள் என்பவர்களிடம் கூடப் பார்ப் பனத் தமிழ்ப் பண்டிதர்களுக்கே மதிப்பு இருக்கிறது. தமிழ்ச்சங்கம் என்பதில் கூடப் பார்ப்பனர்களுக்கே ஆதிக்கம் இருந்து வருகின்றது. அது மாத்திரமில் லாமல் பார்ப்பனரல்லாத தமிழ் கற்ற வித்துவான்கள் என்பவர்களைப் பார்ப்பன வித்துவான்கள் அழுத்தி வைக்கவே பார்க்கிறார்கள்.

சமீப காலத்தில் தமிழில் மிக மேன்மையாய்த் தேறிய ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு அதாவது சென்னை டி.பி. மீனாட்சிசுந்தரம், எம்.ஏ., பி.எல். இவர் கல்வி விஷயத்தில் மிக்கத் தேர்ச்சியுடையவர். பல விஷயங் களில் பண்டிதர் தமிழை ஒரு சந்தோஷத்திற்காகப் படித்து இம்மாகாண மாணவர்களில் உயர்தர வகுப் பில் தேறியவர். தமிழில் உயர்தர வகுப்பில் தேறிய வருக்குப் பரிசளிக்கவென்று திருவாவடுதுறை பண்டார சன்னதியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 1,000 ரூபா பரிசை, பரிசு முறைப்படிக்கு அடையத் தகுதி உடையவர். இப்படிப்பட்ட இவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்ப தால் இவ்வருஷப் பரிசு இவருக்கு வழங்கப்படாமல் போயிற்று. இந்தப் பெருமை தோழர் மகா மகோபாத்தி யாயர் வே. சுவாமிநாதய்யர் அவர்களுக்கே சேர்ந் தது. பார்ப்பனரல்லாதார் செய்யும் தற்காப்புக் காரியங் கள் பார்ப்பன துவேஷமாய்ப் போய்விடுகிறது. பார்ப் பனர் செய்யும் சகல விதக் கொடுமைகளும் அவர் களைப் பட்டதாரிகளாகவும் பதவிதாரர்களாகவும் ஆக்கி விடுகிறது.

இம்மாநாட்டுக்குப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயப் படாத “தமிழன்பர்கள்” யாராவது போவார்களானால் “புத்தகங்கள் பிரசுரிப்பதில் அறிவுக்கல்வி வேறு, மதக்கல்வி வேறு” என்று பிரித்துத் தனித்தனியாய் புத்தகம் எழுதப்பட வேண்டும் என்றும், அப்புதத்தகம் எழுதும் இலாக்கா அரசாங்கத்திற்கே உட்பட்டிருக்க வேண்டுமே ஒழிய தனிப்பட்ட நபர்களுக்கோ சங்கங் களுக்கோ சற்றும் சம்பந்தம் இருக்கக் கூடாது” என்றும் ஒரு தீர்மானம் செய்ய முயற்சிக்க வேண்டும். சர்க்கார் கொடுக்கும் படிப்பு என்பது அறிவுக்காகவே ஒழிய, மதத்துக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விஞ்ஞானத்திலும் பகுத்தறிவிலும் யார் மேன்மையுற்றிருக்கிறார்களோ அவர்கள்தான் அறிவுக் கல்வி புத்தகங்கள் எழுதத் தகுதியுடையவர்கள் என்றும் தீர்மானிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மகாநாட்டின் யோக்கியதை தானகவே வெளிப்பட்டுவிடும் (குடிஅரசு-தலையங்கம் 19.11.1933).

தமிழின் பெயரைச் சொல்லி மதத்தையும், பார்ப் பனிய ஆதிக்கத்தையும் வளர்க்கக் கூடாது என்பதே சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாகும்.1932 ஆகசுட்டு 6, 7 தேதிகளில் துறையூரில் நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாடு, தமிழ் மாணவர் மாநாடு, தமிழர் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டு நிகழ்ச்சிகளிலும் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த வர்கள் பெரும்திரளாகக் கலந்துகொண்டு, அதை சைவ மாநாடாக மாறிவிடாமல் தடுத்து நிறுத்தி, உண்மை யான தமிழ் வளர்ச்சி மாநாடாக மாற்றினார்கள் என்பது தான் வரலாறு. அம்மாநாடு முடிந்தவுடன் அம்மாநாட் டைப் பற்றிக் குடிஅரசு ஏட்டில் தலையங்கம் எழுதப்பட்டது.

“இச்சமயத்தில், தமிழ்ப் பண்டிதர்களுக்கும், தமிழ் அபிமானிகளுக்கும் சில வார்த்தைகள் கூற விரும்பு கிறோம். சுயமரியாதைத் தோழர்கள் தமிழ்மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டி தர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்ட வர்கள் அல்லர் என்று தெரிவிக்கின்றோம். இதற்கு, சுயமரியாதைத் தோழர்கள் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் “ஹிந்தி” மொழியைக் கண்டிப்பதாக மகாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். “ஹிந்தி” கண்டனத் தீர்மானத் தைச் சிலர் எதிர்த்தபொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரி யான பதில் இறுத்தி “ஹிந்தி” கூடாது என்பதைப் பெரிய “மெஜாரிட்டி”யாரை ஒப்புக்கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களேயாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை.

ஆனால் மற்ற பண்டிதர்களில் பலர் விரும்புவது போல, புராணங்களை எழுதுவதும், அவைகளைப் பற்றிப் பேசுவதும் தேவார, திருவாசகங்களைப் பாடு வதும்தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை.

மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம் மக்களுடைய அறிவையும், தமிழ்மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று கருதியிருப்பவர்கள் என்று கூறுகிறோம். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச் சிக்கான வழியுமாகும். ஆகையினால் இனியேனும் “மதம்” என்றும் “சமய உணர்ச்சி” என்றும் “தெய்விகப் பாடல்கள்” என்றும் சொல்லுகின்ற பல்லவிகளை விட்டுவிட்டு உண்மையான தமிழ் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டுகிறோம். இவ்வகைக்கு, சுயமரி யாதைத் தோழர்களும் மற்றவர்களும் துணை நிற் பார்கள் என்பதில் அய்யமில்லை என்று கடைசியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். (குடிஅரசு தலையங்கம் 14.8.1932).

சுயமரியாதை இயக்கம் (திராவிடர் இயக்கம்) என்பது தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக, மற்ற புலவர்களை விட மிக அதிக அளவில் பங்களிப்புச் செய்தே வந்தி ருக்கிறது என்பதைக் கடந்தகால வரலாறு நமக்குக் காட்டுகிறது.

(தொடரும்)