நான் பிறக்கும் போது தொட்டில் இல்லை 

நான் இறக்கும்போது சுடுகாடு இல்லை 

ஊருக்கு செருப்பு தைப்பது என்வேலை 

ஊரார் இறந்து போனால் என்னைத் தேடிவரும் ஓலை 

சாவு செய்தி சொல்ல 

சாமமெல்லாம் தப்படிக்க 

சுடுகாட்டில் சாவுக்குழி தோண்ட! 

நானோ தீண்டதகாதவன் 

நான்தோண்டிய குழியில் படுக்கலாமா? 

நான் வெட்டிய கிணற்று நீரை புழங்கலாமா? 

நான் நட்ட பயிரின் விளைச்சலை உண்ணலாமா? 

ஏனோ எனைத்திட்டி இழிபுபடுத்தி 

என்ன சுகம் காண்பாரோ? தெரியவில்லை! 

இழிசாதி சக்கிலியென 

மேல்சாதி இழிவாய்ப்பேச 

சட்டம் திடுக்கிறதாம்? 

தீண்டாமையைத் தீயை அணைக்க வேண்டாமா? 

மனிதர்களை மனு பிரித்தான் சாதியாய்! 

மானுட நீதி இதை ஏற்பது சரியா? 

- கே.துரைராஜ் ஈரோடு 

Pin It