திருக்குறள் மாமணி மருத்துவர் க.கோபால், பூலாம்பாடி கு.வரதராசன் திருக்குறளில் அறிவியல் கலைச் சொல்லாக்கம் எனும் இந்நூல் திருக்குறள் மாமணி, மருத்துவர் க.கோ பால் அவர்களின் ஆய்வுரைத் தொகுப்பு நூலாகும். நூலாசி ரியர் சமூகச் சிந்தனையா ளரும் களப்பணியாளரும் ஆவார். இவர் வள்ளுவத்தில் அறிவியல் திருக்குறள், பன்மணி மாலை வினவலும், விடையிறுத்தலும் நூல்களைத் தொடர்ந்து இந்நூலைப் படைத்துள்ளார்.

அறிவியல், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை, மேலாண்மை அறிவியல், பொதுவானவை என எட்டுத் தலைப்புகள் சார் கலைச் சொற்கள் அடங்கிய நூலைப் படைத்துள்ளார். இதில் அறிவின் வகைப்பாடுகள் உலகியலறிவு, பகுத்தறிவு, புல்லறிவு, முதிரா அறிவு, காரறிவு, பேரறிவு, வாலறிவு எனக் காண்கிறார்.

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயர்க்கு’

குறளில் எண் என்பது இலக்கம், கணிதம், மனச் சிந்தனை ஆகியவற்றை ஒருசேரக் குறிக்கும் என்பதைக் குறிப்பிடுகிறார். நூலாசிரியர் நல்மருத்துவர் ஆனமையால் உடல் நலம் மனநலம் காக்க,

நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்னும் குறளை விளக்குகிறார். திருவள்ளுவர் உழவுத் தொழிலின் சிறப்பை என்றும்

“உழந்தும் உழவே தலை, உழுவார்

உலகத்தார்க்கு ஆணி என்றும்

குறள் வழியில் உணர்த்துவதைக் கூறுகிறார். அடுத்துச் மேலாண்மை அறிவியல் கலைச் சொற்கள் குறித்து “பொருள், கருவி, காளம் வினை, இடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் எனும் குறளை எடுத்துக் காட்டுகிறார்.

இதேபோன்று மேலே சொன்றன பிற துறைகள் சார் கலைச் சொற்கள் குறித்தும் நூலாசிரியர் இந்நூலில் சிறப்பாகச் சொல்கிறார். இங்கே நவில்தொறும் நூல் நயம் என்ற குறளுக்கு ஏற்ப ஆய்வறிஞர்கள் பன்முறை திருக்குறளைப் படித்துப் பெரு நூலாக்க முயலுவோர்க்கு ஒரு திறவுகோல் இந்நூல்; வரவேற்று வாங்கிப் படித்து நூலாசிரியரைப் பாராட்டுவோம்.

- பூலாம்பாடி கு.வரதராசன்