பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படுகிற 42 இந்தியத் தனித்தனி மொழிகள் விரைவில் மறையக் கூடும்.

இந்திய அரசியல் சட்டப்படி, அண்மையில் எடுத்த மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவில் அட்டவணைப்படுத் தப்பட்ட மொழிகள் 22 ஆகும். அட்டவணைப்படுத்தப்படாத மொழிகள் 100க்கும் மேல் உள்ளன.

இந்த அட்டவணைப்படுத்தப்படாத 100 தனித்தனி மொழியையும்-ஒரு இலட்சம் பேர் அல்லது ஒரு இலட் சத்துக்கும் சற்றுக்கூடுதலான எண்ணிக்கையுள்ள பேர்களே பேசுகிறார்கள்.

இவற்றுள், 42 தனித்தனி மொழியையும் 10 ஆயிரத் துக்கும் குறைவான மக்களே பேசுகின்றனர். அப்படிப் பேசப்படும் 42 இந்திய மொழிகளும் விரைவில் வழக் கொழிந்துபோகும் ஆபத்து உள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்து இருக்கிறார். ஐக்கிய நாடுகள் கல்வி பண்பாட்டுக் கழகம் (UNESCO) இந்த 42 இந்திய மொழிகள் அல்லது மொழிப் பிரிவுகள் (Dialects) விரைவில் மறையக் கூடும் என்றும் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் கண்டுள்ளபடி, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பேசப்படும் - பெரிய அந்தமனீ°, ஜரவா, லமங்சே, லூரோ, லூமூவட், ஓங்கே, பூ, சனேன்யோ, செட்டிலீ°, ஷாம்பென், தக்கஹானி லேங் ஆகிய 11 மொழிகளும்; மணிப்பூர் மாநிலத்தில் பேசப்படும் ஐமோல், ஆகா, கொய்ரென், லம்காங், லங்ராங், புரம், தாரோ ஆகிய 7 மொழிகளும்; இமாச் சலப்பிரதேசத்தில் பேசப்படும் பாகதி, ஹந்துரி, பங்வலி, சிர்மௌதி ஆகிய 4 மொழிகளும் அழியக்கூடும்.

அழியக்கூடிய மொழிகள் பட்டியலில் ஒடிசா மாநிலத் தில் மண்டா, பர்ஜி, பெங்கோ ஆகிய மொழிகளும்; கர்நாடகா மாநிலத்தில் கொரகா, குருபா ஆகிய மொழிகளும்; ஆந்திரப் பிரதேசத்தில் கடபா, நைகி ஆகிய மொழிகளும்; தமிழ்நாட்டில் கோடா, தோடா ஆகிய மொழிகளும், அருணாசலப் பிரதே சத்தில் மரா, நா ஆகிய மொழிகளும்; அசாம் மாநிலத்தில் தைநோரா. தைராங் ஆகிய மொழிகளும்; உத்தரகாண்ட் மாநிலத்தில் பங்கனி மொழியும், ஜார்கண்ட் மாநிலத்தில் பிர்ஹோர் மொழியும், மகாராட்டிரா மாநிலத்தில் நிஹாலி மொழியும், மேகாலயா மாநிலத்தில் ருகா மொழியும், மேற்குவங்க மாநிலத்தில் டோடோ மொழியும் மறையும் நிலையில் உள்ளன.

மேலே கண்ட 42 தனித்தனி இந்திய மொழி களும் வழக்கொழிந்து போகாமல் காப்பாற்றுவதற்கு, கர்நாடகத்தில் மைசூரில் செயல்பட்டுவரும் “இந்திய மொழிகளுக்கான மய்ய அரசு மய்யம்” நடவடிக்கை எடுத்து வருகிறது; இதற்கான திட்டங்களும் தீட்டப்பட் டுள்ளன என்று மைசூர் மய்ய நிறுவன்த்தின் அலுவலர் ஒருவர் குறிப்பிட்டார் (The Hindu, 19.2.2018, பக்கம் 7).

இம்மொழிகள் விரைவில் வழக்கொழிந்து அழியப் போவதைத் தடுக்க விரைந்து செயல்படாமல், இன் றைய இந்திய அரசு, ஒரே மொழி - ஒரே தேசம் - ஒரே பண்பாடு என்று முழங்கி இந்தியையும், சம°கிருதத்தையும் வலுக் கட்டாயமாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பாடத்திட்டங் களிலும் அரசு அலுவலகங்களிலும் திணித்து வருவது கண்டிக்த்தக்கது.

அழிவை நோக்கி உள்ள 42 இந்திய மொழிகளின் எழுத்துகளை முதலில் மய்ய அரசு காப்பாற்ற வேண்டும்; அடுத்து அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்கள் மொழியில் பேசவும் பள்ளியில் பாடம் படிக்கவும் மய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; மாநில அரசுகளும் இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.