சுயமரியாதை இயக்கம் வேண்டும் என்கிற எண்ணம் ஈ.வெ.இரா. அவர்களுக்கு திடீர் என்று தோன்றிவிடவில்லை. தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட மக்களுடைய இழிநிலையைப் பார்த்துத் தான் - நாடார், பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய எல்லாத் தீண்டப்படாதவர்கள்பால் இரக்கம் கொண்டார்.

30.10.1922-இல் அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் பாலையம்பட்டியில் நடந்த காங்கிரசு மாநாட்டு முடிவில் - அதன் கணக்கு வழக்கைப் பார்ப்பதற்காக - தமிழ்நாடு காங்கிரசுச் செயலாளர் ஈ.வெ.இரா. அங்குத் தங்கியிருந்தார். அதை அறிந்த அருப்புக்கோட்டை நாடார் வாலிபர்கள் சிலபேர், ஈ.வெ.இரா. அவர்களை அங்குக் கண்டு பேசினர்.

அங்கு, 15 அருப்புக்கோட்டை நாடார் வாலிபர்கள் ஈ.வெ.இரா. அவர்களை நேர்காணல் செய்தார்கள். அவர்கள், “நாங்கள் தென் மாவட்டங்களில் கோயிலில் நுழையக்கூடாது எனத் தடுக்கிறார்களே! இந்தத் தீண்டாமையை நீக்குவதற்குக் காங்கிரசு பாடுபடுமா” என, ஈ.வெ.இரா.விடம் கேட்டார்கள். “ஓ! பாடுபடுமே” என ஈ.வெ.இரா. அவர்கள் உறுதியளித்தார். இது நடைபெற்றது 31.10.1922இல் ஆகும்.

21.12.1922-இல் திருப்பூரில் வாசுதேவ அய்யர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரசு மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் ஈ.வெ.இரா., பி. வரதராசுலு நாயுடு இருவரும் இணைந்து, “தீண்டாமையையும் கோயில் நுழைவுத் தடையையும் நீக்கக் காங்கிரசு பாடுபடும்” எனத் தீர்மானம் முன்மொழிந்தனர்.

சி. இராசகோபாலாச்சாரி உட்பட்ட பார்ப்பனர்கள் “இது மத சம்பந்தப்பட்டது; இதை நீக்கக் காங்கிரசு பாடுபடாது” என்று கூறித் தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டனர். அதுகண்டு சினங்கொண்டார் ஈ.வெ.இரா.

21.12.1922 அன்று இரவு, திருப்பூரில் நடந்த காங்கிரசுப் பொதுக் கூட்டத்தில், “தீண்டாமையையும் வருணத்தையும் - இராமாயணமும், மனுநீதியும் காப்பாற்றுகின்றன; இவற்றை எரிக்க வேண்டும்” என்று ஈ.வெ.இரா. தன் வாழ்நாளில் முதன்முதலில் பேசினார்.

திருப்பூரிலிருந்து ஊருக்குத் திரும்பும் பொழுது, ஈ.வெ.இரா.வும் இராசகோபா லாச்சாரியும் ஒரே மகிழுந்தில் பயணம் செய்தனர். ஈ.வெ.இரா.வைப் பார்த்து, இராசகோபாலாச்சாரியார், “இன்றைக்கு உங்கள் பேச்சு செம டோஸ்” என்று குறிப்பிட்டார். அதைக்கேட்ட ஈ.வெ.இரா. “இந்த மடப்பசங்களுக்கு இது என்ன? இதைவிட ஸ்ட்ராங்க் டோஸ் தேவை” எனக் காட்டமாகப் பதிலளித்தார்.

இராமாயணத்தையும் மனுநீதியையும் முதல் முதலில் காப்பாற்றியவன் புஷ்யமித்ர சுங்கன்.

அசோகனின் கொள்ளுப்பேரன் பிருகத்ரதன் ஆட்சிக் காலத்தில், அவனிடம் படைத்தளபதியாக இருந்த புஷ்ய மித்ர சுங்கன் எனும் பார்ப்பனன் பட்டப்பகலில் தன் அரசன் பிருகத்ரதனை வாளால் வெட்டிவிட்டு, அன்றே தான் அரசன் என்று அறிவித்தான்.

அவன் 1) பாடலிபுத்திரம், வைசாலி முதலான பகுதிகளிலிருந்த பவுத்தத் துறவிகளின் தலைகளை வெட்டிக் கொண்டு வருவோருக்கு மதிப்பு மிக்க பரிசுகள் அளித்தான். அப்படி வெட்டிக் கொடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பவுத்தத் துறவிகளின் தலைகளைக் கொதிக் கும் நெய்க்கொப்பரையில் போட்டுக் கருக்கி எடுத்து, வீசி எறிந்தான்.

பவுத்தம், புத்தர், பவுத்தத் துறவிகள் பேரில் மக்களுக்கு வெறுப்பு உண்டாக வேண்டி, அவ்வளவு கொடுமைகளைச் செய்தான்.

2) புஷ்யமித்ர சுங்கன் தான், அன்று வரையில் செவிவழிக் கதையாக வழங்கி வந்த இராமன் பற்றிய செய்திகளைத் தொகுக்கச் செய்து - இராமாயணத்துக்கு முதன்முதலாக ஒரு வடிவம் கொடுத்தான்.

தென்னாட்டில் பார்ப்பான் அரசனாக வரும் வாய்ப்பு நேரவில்லை.

ஆனால், கி.பி.7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சிகளிலும், நாயக்கர், மராட்டியர், நவாபுகள் ஆட்சிகளிலும்-பார்ப்பான் முதல மைச்சனாக, படைத் தலைவனாக, அரச குருவாக, கோவில் அர்ச்சகனாக, வரி செலுத்த வேண்டாத வள மான நில உடைமைகளைப் பெற்றவனாக அரசர்களால் ஆக்கப்பட்டான். அரசனே பார்ப்பனர்களை வளர்த்தான்; மதித்தான்; புரந்தான்.

இத்துடன் நில்லாமல், தமிழகத்தில் ஆங்காங்கே வேதபாடசாலைகளை நிறுவி, வேத சாத்திரங்களைப் பார்ப்பனர்கள் கற்றிட எல்லா வசதிகளையும் அரசனே செய்து தந்தான்.

கி.பி.12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இராமாயணம் நாடக வடிவிலும், கீர்த்தனைகள் வடிவிலும் தமிழ் மக்களிடம் பரப்பப்பட்டது. இராமன் ‘கடவுள்’ என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டான். அவன் பிறவி இழிவு மறைக்கப்பட்டது.

மேலும் 1835-க்குப் பிறகு பொதுக்கல்வி என்கிற பேரால் - தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி ஆகியவற்றில் இராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்கள் பாடமாக இன்று வரை கற்பிக்கப்படுகின்றன.

இருந்தாலும் தந்தை பெரியார் அவர்கள் ‘இராமகாதை’ என்கிற வால்மீகி இராமாயணத்தின் 27 வகையான பதிப்புகளை ஆய்ந்து படித்தவர்.

அதில், இராமன், பார்ப்பானுக்கு யாகம் மூலம் பிறந்தவன் எனக் கண்டுள்ளது.

பண்டித மன்மதநாத தத்தர், கவுசல்யை எப்படி இராமனைப் பெற்றாள் என்கிற செய்தியை வால்மீகி இராமாயணத்தில் உள்ளபடி, பின்வருமாறு ஆங்கிலத் தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

“Kausalya with three strokes slew that horse, experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas jointed the King’s wives.”

இதன் பொருள் வருமாறு :

“கோசலை மூன்று வெட்டில் அந்தக் குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு, உகதா முதலிய ரித்விக்குகள் இராஜபார்யைகளைப் புணர்ந்தார்கள்.

இந்த இழிந்த பிறவியுடைய-இராமன், ஒரு கடவுள் என இந்துக்களால் வணங்கப்படுவதைக் கண்டனம் செய்து, 1928 முதல் 1973 வரை, தந்தை பெரியார், பரப்புரை செய்தார்; பல கட்டுரைகள் எழுதினார். ஆனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெரியார் எழுதிய இராமாயணம் பற்றிய கட்டுரைகள் கட்டாயப் பாடங் களாகக் கற்பிக்கப்படவில்லை.

இநதியா 1947-இல் விடுதலை பெற்றது.

இந்திய ஆட்சிக் கருவி, பார்ப்பனரிடம் வந்தது.

ஆட்சிக் கருவி பார்ப்பனர்களின் கைக்கு வந்தவுடன், முதலாவதாகச் செய்த கேடான பணி, “இந்திய அரசமைப்புச் சட்டம் 1950-இல் நடப்புக்கு வந்த பிறகும், நெடுங்காலமாக இங்கு நடைமுறையில் இருந்து வந்த - வருகிற எல்லா மதப் பழக்கவழக்கங்களும் செல்லும்” என்று அரசமைப்புச் சட்டம் செய்ததுதான்.

இதனைக் காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியின் தூதுவராகத் தில்லிக்குச் சென்ற அக்னி கோத்ரம் இராமாநுச தாதாச்சாரியின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினர்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.ஜி.கோபாலசாமி அய்யங்கார், டி.டி. கிருஷ்ணமாச் சாரி, கே.எம். முன்ஷி முதலான பார்ப்பனர்கள் நிறை வேற்றி வைத்தனர். இச்செய்தி, அப்போதே தந்தை பெரியார் அவர்கட்கும் தெரியும்.

இதன்படி மதப்பழக்க வழக்கங்களுக்கு அளிக் கப்பட்ட பாதுகாப்பு -  இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 25(2-அ), 372(1) இவற்றில் கெட்டி யாக உள்ளது.

1919 முதற்கொண்டு காங்கிரசில் இருந்த பெரியார், 1922-இல் காங்கிரசுப் பொதுக் கூட்டத்திலேயே இராமா யணத்தையும் மநுநீதியையும் எரிக்க வேண்டும் என முழங்கினார். அன்று சி. இராசகோபாலாச்சாரி அதற்கு அங்கேயே சாட்சியாக இருந்தார்.

1944 முதல் இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் இவற்றிலுள்ள மூட நம்பிக்கை களை விளக்கி எண்ணற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டார், பெரியார். 1956-இல் இராமன் படத்தை எரித்தார். 10.4.1965-இல் தமிழ்நாட்டில் ஊர்தோறும் இராமாயணத்தைக் கொளுத்தச் செய்தார். “இராமாயணம்” என எழுதிய தாளை 11.8.1966 அன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் எரிக்கச் செய்தார்.

பெரியார் ஈ.வெ.இரா. இராமாயணத்தை எரிக்க வேண்டும்; மநுநீதியை எரிக்க வேண்டும் என 1922-இலேயே கூறினார்.

ஆனால் இந்தியாவை ஒரு இந்துக்கள் நாடாக - இராமன் ஆட்சி செய்யும் நாடாக அமைக்க வேண்டும் என்று, 1925 அக்டோபர் மாதம் விசய தசமி நாளில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நிறுவினார். ஹெட்கேவருக்குப் பின், தலைவராக நீண்ட காலம் இருந்த எம்.எஸ். கோல் வால்கர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தத்துவத் தந்தை யாகக் கருதப்படுகிறார். (திருச்சியில் 1970-வாக்கில் இரண்டு தடவைகள் டாக்டர் கோல்வால்கர் உரை யாற்றியதைத் தேசிய உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்சி வே.ஆனைமுத்து, நோபிள் கு. கோவிந்தராசலு இருவரும் நேரில் கேட்டு, அதன் சாரத்தைத் தந்தை பெரியாரிடம் நேரில் கூறினர்).

இன்று ஆர்.எஸ்.எஸ். நிலைமை என்ன?

பாரதிய சனதா கட்சி 303 மக்களவை உறுப்பினர்களையும், கூட்டணிக் கட்சிகள் 50 பேர்களையும் ஆக 353 உறுப்பினர்கள் கொண்ட கெட்டியான அடித்தளத் தோடு மோடி அவர்கள் ஆட்சி அமைத்துள்ளார்.

2014 முதல் 2019 செப்டம்பர் முடிய உள்ள காலத்தில் 13,584 ஷாகாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் 19,584 ஷாகாக்கள் அமைக் கப்பட்டன. நாடு முழுவதும் 57,411 ஷாகாக்கள் உள்ளன என்று அண்மையில் புவனேசுவரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழு, செயற்குழுவை ஒட்டி வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

57,411 ஷாகாக்கள் நாள்தோறும் 40 மணித் துளிகள் உடற்பயிற்சி, 20 மணித்துளிகள் கொள் கைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர, வாரம் ஒருமுறை நடக்கும் ஷாகாக்கள் 18,923 இருக்கின்றன. மொத்த ஷாகாக்களில் 60 விழுக்காட்டில் 20 அகவைக் குக் குறைவான மாணவர்கள், இளைஞர்கள் இருக் கின்றனர். இவர்களே பா.ச.க.வின் முக்கிய பொறுப்பு களில் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரியாரிய உணர் வாளர்கள் 05.01.2020 ஞாயிறு அன்று சென்னையில் கூடி, இணக்கமான வேலைத் திட்டங்களை வகுத்திடுவோம். வாருங்கள் என, மாநாட்டுக் குழுவினர் சார்பில் - மா.பெ.பொ.க. சார்பில் அன்போடு அழைக்கிறேன்.