2013 செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தந்தை பெரியார் பிறந்தநாளை மகிழ்வுடன் பல்வேறு நிகழ்ச்சி களை நடத்தி சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். நன்றி உணர்வுள்ள ஒரு சில ஏடுகளும் தொலைக் காட்சிகளும் அந்நாளுக்குரிய சிறப்பு செய்து செய்தி களை அறிவித்தனர். நமக்கெல்லாம் பகுத்தறிவினை ஊட்டி, சூத்திர இழிவை நீக்கி, இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கக் காரணமாக இருந்த அரசு, “தொண்டு செய்து பழுத்த பழத்தை” நாம் அனைவரும் நினைவு கூர்ந்த வேளையில் அவரால் பயனடைந்து பல்வேறு பதவிகளை அனுபவித்து இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக விளங்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் அன்றைய தினத்தில் பகல் 12.30 முதல் 1.30 வரை நேரலை நிகழ்வாக “சீர்திருத்த திருமணங்களின் தற் போதைய நிலை என்ன?” என்பது குறித்து விவாத மேடை நடத்தி அதில் வேத ஆய்வு மையத்தின் பால கௌதம் என்கிற விஷமக்காரனைப் பேசவைத்து, தந்தை பெரியாரை எவ்வளவு கேவலமாகப் பேச முடியுமோ அவ்வளவு கேவலமாகப் பேசவைத்துப் பூரிப்பில் ஆழ்ந்தது.

அந்த விஷமக்காரன் எடுத்தவுடனேயே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ‘கருப்புச் சட்டைக்காரன்’ “சுயமரியாதைக்காரனுங்க” என்று ஏகவசனத்தில் பேசி, “ராமசாமி நாயக்கர்” என அழுத்தம் திருத்தமாகப் பேசித் தனது சாதிவெறியை ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சி மூலம் வெளிக்காட்டிக் கொண்டான். நிகழ்ச்சி நடத்திய இளம் வயதுப் பெண்மணி அவன் பேச்சை இரசித்துச் சிரித்தபடி இருந்தது; தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்ச்சியாகும்.

அவனுக்கு மறுமொழி கொடுத்த “பாமரன்” என்ப வரும் சரியான வாதத்தை முன்வைக்கவில்லை. அவரைப் பேசவும் அவன் விடவில்லை. “சாதியைக் கூறாதே” என்று பாமரன் கூறிய பிறகும், திமிர்த்தனமாக “ராமசாமி நாயக்கர்” என்று மீண்டும் மீண்டும் வெறிபிடித்தவன் போல் கத்தினான். நிகழ்ச்சி நடத்திய பெண்மணியும் அவனிடம் சாதியைக் கூறாதீர்கள் என்று அறிவுறுத்தவில்லை; மாறாகச் சிரித்தார். நேரலையில் தொலைபேசியில் பேசியவர்களும் சரியாகப் பேசவில்லை; பேச முயற்சி செய்த எனக்கும் இணைப் புக் கிடைக்கவில்லை.

மேலும் அந்த நிகழ்ச்சியின் இடையில் ஒரு கண வனும் மனைவியும் தோன்றி, சுயமரியாதைத் திருமணத்திற்கு ஆதரவானவாதத்தை முன் வைத்தனர். அவர்கள் தங்களை “இணையர்” எனக் கூறிக் கொண்ட போது, நிகழ்ச்சி நடத்திய பெண்மணி “இணையர்” என்ற சொல்லை இதுவரை கேட்டிராதவர் போலவும் இழிசொல்லைக் கேட்டவர் போலவும் முகத்தைச் சுளித்துக் கொண்டு நக்கலாகச் சிரித்தது தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய காட்சியாகும்.

மேலும் பாலகௌதம் என்கிற அப்பார்ப்பனர் புரோகிதத் திருமணத்தை ஆதரித்துப் பேசினான். சமஸ்கிருத மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த் துக் கூறச் சொன்னால், புரோகிதன் தமிழிலும் கூறுவார் என்று கூறித் தமிழும் அவமானப்படுத்தப்பட்டது.

தந்தை பெரியாரையும், சுயமரியாதைத் திருமணத் தினைச் சட்ட அங்கீகாரம் அளித்த பேரறிஞர் அண் ணாவையும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தைவிட இனியாரும் இழிவுபடுத்திவிட முடியாது.

தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என் பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It