உடைப்பாயா அணையை? எம்மை

                உதைப்பாயா? மதகின் தண்ணீர்

அடைப்பாயா? அன்பு, நேயம்

                அழிப்பாயா? அழுவோர் கண்ணீர்

துடைப்பாயா? துக்க டாபோல்

                தோள்களைத் தட்டித் தட்டிப்

புடைப்பாயா? வம்புச் சண்டை

                போக்கிலி தான்ஆ வாயா?

மறுப்பாயா நீதித் தீர்ப்பை?

                மதிப்பாயா? குப்பைத் தாள்போல்

எரிப்பாயா? எதிரி போல்தான்

                இருப்பாயா? அணையின் மட்டம்

குறைப்பாயா? குண்டு வைத்துக்

                கூண்டோடு எம்மைக் கொன்று

சிரிப்பாயா? சிலம்பு சொன்ன

                சேரனும் நீயா? வெட்கம்!

உயிர்ப்பாயா? எங்கள் நாட்டின்

                உணவின்றி உறங்கு வாயா?

பயிர்விளை கறிகள் கீரை

                பசுமாடு, எருமை, கோழி

வயிறோடு நிறைத்துத் தின்றும்

                வன்னெஞ்சம் கொண்டா யேடா!

மயிர்போலா நாங்கள்? மூடா

                மலையாளக் கொழுப்புக் கேடா!

அடுக்குமா? தில்லிக் காரா!

                அனைத்துக்கும் விதைநீ தாண்டா!

துடிக்கின்ற எங்கள் துன்பம்

                துளிகூட எண்ணாய்! ரத்தம்

குடிக்கின்ற ஓநா யேஉன்

                குரல்வளை கடிப்பர்; மக்கள்

துடைப்பத்தை தூக்கி உன்னைத்

                துரத்துவர் பார டாநீ!

Pin It