நூல் அறிமுகம்...

அலிகர் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் து.மூர்த்தியின் புதிய திறனாய்வு நூல் இது. அவரே தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் கவிதை, நாவல், சிறுகதை, திறனாய்வு, இலக்கணம், கல்வி, சமூக வரலாறு எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட நூலாக இது விளங்கு கிறது.

பாரதியின் கண்ணன் பாட்டு, பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, நா. காமராசனின் கருப்பு மலர்கள், மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள், ஏ.தெ. சுப்பையனின் முறையீடு, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் எனக் கவிதை இலக்கியத்தின் மரபையும் புதுமையையும் தனக்கே உரிய கூரிய சொற்களால் குருதி கொப்பளிக்கச் சொல்கிறார் நூலாசிரியர்.

‘நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் கற்பிக்கப்பட்டு வரும் வாழ்க்கை போலித்தனமாக இருக்கிறது. ஒரு வன்முறை யான சமூக அமைப்புத் தேவையில்லாமல் நம் மீது சுமத்தப் பட்டிருக்கிறது. இந்த இரும்புக் கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் மனித வர்க்கம், ஒரு நொடி கூட இனிமேல் இந்த அமைப்பில் வாழக் கூடாது என என்று முடிவு கட்டுகிறதோ அன்றுதான் இந்தியாவில் உண்மையான விடுதலை மலரும். அதற்கான போராட்டத்தை விரைவுபடுத்தும் - முன்னுக்குக் கொண்டு செல்லும் கவிதைகளே இன்றைய இலக்கியத் தேவையாக இருக்கின்றன’ என முரசறையும் மூர்த்தி கவிஞர் இன்குலாப் பின் பல பாடல்களிலிருந்து (பக்கம் 54) இதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

முற்போக்கு முகமூடி அணிந்த இலக்கியவாதிகளால் இன்றளவும் தூக்கிப் பிடிக்கப்படும் புகழ் பெற்ற எழுத்தாளர் களில் முதன்மையானவர்கள் ஜெயகாந்தனும் ராஜம்கிருஷ் ணனும். இதில் முன்னவரின் ‘ஜயஜய சங்கர’, பின்னவரின் ‘வேருக்கு நீர்’ நாவல்களில் புதைந்து கிடக்கும் வஞ்சகமான போலித்தனங்களை, மூர்த்தி எவ்வகைப் பூச்சுகளும் இன்றிப் போட்டு உடைக்கிறார்.

எதிரி வர்க்க ஆயுதத்தைத் தாங்கள் பயன்படுத்தவே முடியாது என்று உணர்ந்த உழைக்கும் மக்கள், தங்களுக் கென்றே பணிபுரியும் ஓர் அரசை நிறுவிக்கொள்ளப் போராடு கிறார்கள். இவர்களைத் திசைதிருப்ப, இவர்கள் குரலைக் கேட்கக் கூடத் தயாராக இல்லாத எதிரி வர்க்க ஆயுதத்திடமும், அதைப் பாதுகாக்கும் சட்டத்திடமும் சக்தியிடமும் விசுவாசம் காட்ட வேண்டுமென்பதும், வேண்டுமெனில் நாம் அதைப் பிடித்துக் கொண்டு பயன்படுத்த முடியும் எனத் தூண்டும் (பக்கம் 228) ஜெயகாந்தனின் திரிபுவாதத்தை மூர்த்தி சரியாகத் திறனாய்ந்துள்ளார்.

இன்னொரு பக்கம் சூரியதீபனின் ‘இரவுகள் உடையும்’ சிறுகதைத் தொகுப்பும் அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதைத் தொகுப்பும் இந்நூலில் நேரிய முறையில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நூலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கட்டுரை களுள் ஒன்று ‘திறனாய்வு : பாராட்டும்! தாக்குதலும்’ என்ப தாகும். ஒரு படைப்பை ஒரு பக்கச் சார்பாக நின்று மிகைபடப் பாராட்டுவதும், அல்லது கறுத்துச் சினந்து காய்ந்து உமிழ் வதும் கற்றோர்க்கு அழகல்ல என்பதைத் திறம்பட இக்கட்டு ரை இயம்புகிறது.

‘தமிழகத்தில் பட்டமேற் படிப்புக் கல்வி’, ‘தொடக்கக் கல்வியில் தாய்மொழிப் பயிற்சி’, ‘கலைக் களஞ்சிய உரு வாக்கம் : சில அடிப்படைக் குறிப்புகள்’ ஆகிய தலைப்புகளில் அடங்கியுள்ள கல்விப் புலம் சார்ந்த கட்டுரைகளில் நூலா சிரியர், ‘கல்வி மக்களின் சொத்தாக மாற்றப்படாத வரை நாட்டு முன்னேற்றம் என்பது முயற்கொம்பே’ என்னும் கருத்தைத் தன் ஆழமான ஆசிரியப் பட்டறிவு கொண்டு நிறுவுகிறார்.

‘பொற்காப்பியம் அல்லது பொன்னூல்’ என்னும் அரிய கட்டுரை முனைவர் பொற்கோ அவர்களின் ‘இக்காலத் தமிழ் இலக்கணம்’ நூல் பற்றியதாகும். ‘தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையான தமிழ் இலக்கண வளர்ச்சி மரபிற்குள் இந்நூலை வைத்து நோக்கும் புலமையர்க்கும், தமிழ் படிக்கத் தொடங்கும் தொடக்க நிலையர்க்கும் ஒரு சேரப் பயன்படும் பெருமையளிக்கும் நூலாக’ இந்நூல் எவ்வாறு விளங்குகிறது என்பதை ஆழமாக ஆய்வு செய்துள்ள அரிய படைப்பு இது.

நூலின் நிறைவுப் பகுதியில் 19ஆவது கட்டுரையாய் இடம்பெறுவது, ‘தமிழ்நாட்டுச் சமூகச் சக்திகளின் வரலாறு’ என்பதாகும். ‘சமுதாயத்தின் பொது வாழ்க்கைக்கு - தனிமனி தனின் வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படாத எந்தத் தத்துவங்கள் ஆனாலும் சரி, அவை தூக்கி எறியப்படத்தான் வேண்டும் என்கிறார், து. மூர்த்தி!

தமிழர் அனைவரும் தம் இல்லத்தில் வாங்கி வைத்துப் படிக்க வேண்டிய அரிய ஆய்வு நூல் இது.

நூல் பெற :

விடியல் பதிப்பகம்,

88, இந்திரா கார்டன் 4ஆவது வீதி, உப்பிலிப்பாளையம், கோவை - 641 015. தொ.பே. : 0422-2576772.

- தமிழேந்தி 

அலிகர் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் து. மூர்த்தியின் புதிய திறனாய்வு நூல் இது. அவரே தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் கவிதை, நாவல், சிறுகதை, திறனாய்வு, இலக்கணம், கல்வி, சமூக வரலாறு எனப் பல்வேறு பரிமாணங் கள் கொண்ட நூலாக இது விளங்கு கிறது.

பாரதியின் கண்ணன் பாட்டு, பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, நா. காமராசனின் கருப்பு மலர்கள், மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள், ஏ.தெ. சுப்பையனின் முறையீடு, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் எனக் கவிதை இலக்கியத்தின் மரபையும் புதுமையையும் தனக்கே உரிய கூரிய சொற்களால் குருதி கொப்பளிக்கச் சொல்கிறார் நூலா சிரியர்.

நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் கற்பிக்கப்பட்டு வரும் வாழ்க்கை போலித்தனமாக இருக்கிறது. ஒரு வன்முறை யான சமூக அமைப்புத் தேவையில்லாமல் நம் மீது சுமத்தப் பட்டிருக்கிறது. இந்த இரும்புக் கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் மனித வர்க்கம், ஒரு நொடி கூட இனிமேல் இந்த அமைப்பில் வாழக் கூடாது என என்று முடிவு கட்டுகிறதோ அன்றுதான் இந்தியாவில் உண்மையான விடுதலை மலரும். அதற்கான போராட்டத்தை விரைவுபடுத்தும் - முன்னுக்குக் கொண்டு செல்லும் கவிதைகளே இன்றைய இலக்கியத் தேவையாக இருக்கின்றனஎன முரசறையும் மூர்த்தி கவிஞர் இன்குலாப் பின் பல பாடல்களிலிருந்து (பக்கம் 54) இதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

முற்போக்கு முகமூடி அணிந்த இலக்கியவாதிகளால் இன்றளவும் தூக்கிப் பிடிக்கப்படும் புகழ் பெற்ற எழுத்தாளர் களில் முதன்மையானவர்கள் ஜெயகாந்தனும் ராஜம்கிருஷ் ணனும். இதில் முன்னவரின் ஜயஜய சங்கர’, பின்னவரின் வேருக்கு நீர்நாவல்களில் புதைந்து கிடக்கும் வஞ்சகமான போலித்தனங்களை, மூர்த்தி எவ்வகைப் பூச்சுகளும் இன்றிப் போட்டு உடைக்கிறார்.

எதிரி வர்க்க ஆயுதத்தைத் தாங்கள் பயன்படுத்தவே முடியாது என்று உணர்ந்த உழைக்கும் மக்கள், தங்களுக் கென்றே பணிபுரியும் ஓர் அரசை நிறுவிக்கொள்ளப் போராடு கிறார்கள். இவர்களைத் திசைதிருப்ப, இவர்கள் குரலைக் கேட்கக் கூடத் தயாராக இல்லாத எதிரி வர்க்க ஆயுதத்திடமும், அதைப் பாதுகாக்கும் சட்டத்திடமும் சக்தியிடமும் விசுவாசம் காட்ட வேண்டுமென்பதும், வேண்டுமெனில் நாம் அதைப் பிடித்துக் கொண்டு பயன்படுத்த முடியும் எனத் தூண்டும் (பக்கம் 228) ஜெயகாந்தனின் திரிபுவாதத்தை மூர்த்தி சரியாகத் திறனாய்ந்துள்ளார்.

இன்னொரு பக்கம் சூரியதீபனின் இரவுகள் உடையும்சிறுகதைத் தொகுப்பும் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறைசிறுகதைத் தொகுப்பும் இந்நூலில் நேரிய முறையில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நூலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கட்டுரை களுள் ஒன்று திறனாய்வு : பாராட்டும்! தாக்குதலும்என்ப தாகும். ஒரு படைப்பை ஒரு பக்கச் சார்பாக நின்று மிகைபடப் பாராட்டுவதும், அல்லது கறுத்துச் சினந்து காய்ந்து உமிழ் வதும் கற்றோர்க்கு அழகல்ல என்பதைத் திறம்பட இக்கட்டு ரை இயம்புகிறது.

தமிழகத்தில் பட்டமேற் படிப்புக் கல்வி’, ‘தொடக்கக் கல்வியில் தாய்மொழிப் பயிற்சி’, ‘கலைக் களஞ்சிய உரு வாக்கம் : சில அடிப்படைக் குறிப்புகள்ஆகிய தலைப்புகளில் அடங்கியுள்ள கல்விப் புலம் சார்ந்த கட்டுரைகளில் நூலா சிரியர், ‘கல்வி மக்களின் சொத்தாக மாற்றப்படாத வரை நாட்டு முன்னேற்றம் என்பது முயற்கொம்பேஎன்னும் கருத்தைத் தன் ஆழமான ஆசிரியப் பட்டறிவு கொண்டு நிறுவுகிறார்.

பொற்காப்பியம் அல்லது பொன்னூல்என்னும் அரிய கட்டுரை முனைவர் பொற்கோ அவர்களின் இக்காலத் தமிழ் இலக்கணம்நூல் பற்றியதாகும். தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையான தமிழ் இலக்கண வளர்ச்சி மரபிற்குள் இந்நூலை வைத்து நோக்கும் புலமையர்க்கும், தமிழ் படிக்கத் தொடங்கும் தொடக்க நிலையர்க்கும் ஒரு சேரப் பயன்படும் பெருமையளிக்கும் நூலாகஇந்நூல் எவ்வாறு விளங்குகிறது என்பதை ஆழமாக ஆய்வு செய்துள்ள அரிய படைப்பு இது.

நூலின் நிறைவுப் பகுதியில் 19ஆவது கட்டுரையாய் இடம்பெறுவது, ‘தமிழ்நாட்டுச் சமூகச் சக்திகளின் வரலாறுஎன்பதாகும். சமுதாயத்தின் பொது வாழ்க்கைக்கு - தனிமனி தனின் வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படாத எந்தத் தத்துவங்கள் ஆனாலும் சரி, அவை தூக்கி எறியப்படத்தான் வேண்டும் என்கிறார், து. மூர்த்தி!

தமிழர் அனைவரும் தம் இல்லத்தில் வாங்கி வைத்துப் படிக்க வேண்டிய அரிய ஆய்வு நூல் இது.

நூல் பெற: விடியல் பதிப்பகம், 88, இந்திரா கார்டன் 4ஆவது வீதி, உப்பிலிப்பாளையம், கோவை - 641 015. தொ.பே. : 0422-2576772.

- தமிழேந்தி

Pin It