ஏகாதிபத்தியக் காலகட்டத்தில், வி.ஐ. லெனின், மார்க்சின் தத்துவத்தை மேலும் வளர்த்தார். தனது புரட்சிகர நடைமுறை சார்ந்த செயல்களின் மூலம் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு (நவம்பர் 7, 1917) தலைமை தாங்கி வெற்றிபெறச் செய்தார். காலனி யாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியப் புரட்சிக்கான பாதைக்கு ஒளி தந்ததோடு, சோஷலிசத் திற்காகப் ‘போராடும் உழைக்கும் மக்களுக்கும், தங்களின் விடுதலைக்காகப் போராடும் அடிமைப் பட்ட மக்களுக்கும் இடையே ஒருமைப்பாட்டை உருவாக்கினார்.’

“புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான நடைமுறை இருக்க முடியாது” என மார்க்ஸ் கூறினார். அவரது காலத்தைப் போன்றே இன்றும் அது உண்மையாகும். புரட்சிகர விஞ்ஞான சித்தாந்தத்தோடு தொடர்புடைய இவ்விருவரின் பெயரால் நாம் அதனை மார்க்சிசம்-லெனினிசம் என அழைக்கிறோம். மார்க்சிய சித்தாந்தத்தை பயில்வதிலும், தத்துவத்தோடு நடைமுறையை இணைப்பதன் தேவை குறித்தும் கம்யூனிஸ்டு களாகிய நாம் மிகப்பெருமளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையும் சார்ந்த உழைக்கும் மக்களுக்கு, சோஷலிசம் அடையக்கூடிய குறிக் கோள் என்பதை உணர்த்தியது. இந்தியப் புரட்சி யாளர்கள் புரட்சிகர சித்தாந்தமான மார்க்சி யத்தை ஏற்று சோஷலிச லட்சியத்திற்காகப் பாடுபட உறுதியேற்றனர்.

மார்க்சிய- லெனினியக் கருத்துக்களையும், சோஷலிச லட்சியத்தையும் மக்களிடையே பரப்பு வதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்தி லிருந்தே பணியாற்றியது. இந்திய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகளுக்கேற்ப மார்க்சிய- லெனினிய விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதல் முயற்சிகளை மேற் கொண்டது. இதற்கு மிகப்பெரும் முதிர்ச்சியும், இந்தியாவின் சமூக யதார்த்தம், அதன் பாரம் பரியங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை தேவைப்படுகின்றன. இந்தியாவின் திட்டவட்டமான சூழ்நிலைகளுக்கேற்ப மார்க்சி யத்தை இணைக்கும்போது, அவ்வப்போது கட்சி சில தவறுகளை இழைத்துள்ளதோடு, சில குறை பாடுகளும் இருந்தன. சரியான பாதையிலிருந்து விலகி, இடதுசாரி மற்றும் வலதுசாரித் திரிபுகள் ஏற்பட்டன.

ஆனால் விரைவிலோ, அல்லது சற்றுத் தாமதமாகவோ திருத்திக் கொள்ளப் பட்டன. சில கட்சிகள் தாங்கள் எப்போதும் தவறுகளே செய்ததில்லை என்றும் தற்பெருமை பேசுகின்றன. நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. எவ்வாறிருப்பினும், சோசலிசம் ஒரு வழக்குச் சொல்லாக ஆகவும், ஏராளமானோர் மார்க்சிய சித்தாந்தத்தின் ஆதரவாளர்களாக ஆகி, சோஷலிசத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பதிலும் கம்யூனிஸ்டுகளின் ஆரம்ப காலப் பணிகள் காரணமாக அமைந் துள்ளன. எல்லா வகையான ஏற்ற இறக்கங்களினூடே, மார்க்சிய லெனினியத்தின் பொருத்தத்தையும், சோஷலிசக் குறிக்கோளையும் கம்யூனிஸ்டுகள் விடாப்பிடியாகப் பின்பற்றி நின்றுள்ளனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் மார்க்சியம் மரித்துவிட்டது எனவும், சோஷலிச அமைப்பு முடிவுக்கு வந்துவிட்டது எனவும் கூறியவர்களின் கருத்தை கம்யூனிஸ்டுகள் மறுதலித்துள்ளனர். முன்னெப்போதைக் காட்டிலும் சோஷலிசம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரே மாற்றாக உள்ளது.

lenin 600நிகழ்காலமும், எதிர்காலமும்

மார்க்ஸ், லெனின் காலத்திலிருந்து உலகம் பெருமளவு மாறிவிட்டது. இந்த எண்பதாண்டு களில் இந்தியாவில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் புரட்சிகளும், எதிர்ப்புரட்சிகளும் நடந்தேறியுள்ளன. ஏகாதி பத்தியத்தால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தி யாவும், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளும் விடுதலை பெற்றுள்ளன. மனித அறிவாற்றல் மற்றும் தகவல் ஆகியவை மிகப் பெருமளவு விரிவடைந்துள்ளன. ஒரு விஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சி நடைபெற்றுள்ளது. அண்மைக் காலத்தில் ஜனநாயக இயக்கம் பரவியதன் காரணமாக நமது சமுதாயத்தில் உள்ள இதுவரை செயலற்றிருந்த, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப் பட்ட பகுதியினரான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கீழ் சாதியினர் என அழைக்கப்படுவோர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோர் விழிப்புணர்வு பெற்று உள்ளனர்.

செல்வ வளத்திலும், வாய்ப்புகளிலும், ஆட்சியதிகாரத்திலும் மற்றும் நாட்டின் எதிர் காலத்தை உருவாக்குவதிலும் தங்களுக்குரிய நியாயமான பங்கினைக் கோருகின்றனர். சம உரிமைக்காகவும், அதிகாரத்திற்காகவும் பெண்கள் தங்கள் குரலை உயர்த்துகின்றனர். நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வில், புதிய சமூக முரண்பாடுகள் முன்னுரிமை கோருகின்றன. இவற்றோடு கூட அண்மை ஆண்டுகளில், உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் கடும் சிக்கல்களும் திடீர் திருப்பங்களைக் கொண்ட மாற்றங்களும் ஏற்பட்டு உள்ளன. இவையாவும் இந்தியாவிலும், பிற நாடு களிலும் உள்ள மார்க்சீயவாதிகளின் முன்னர் புதிய சவால்களையும், பிரச்சினைகளையும் முன் வைத்துள்ளன.

மார்க்சிய- லெனினிய விஞ்ஞானம் இந்த மாற்றங்களையும், விஞ்ஞானம் தொழில்நுட்பம், அறிவு வளம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள புரட்சி கர முன்னேற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். வாழ்க்கையோடு அது தொடர்ந்து உடன் செல்ல வேண்டியுள்ளது. நமது நாட்டின் வரலாறு, அதன் சமூக யதார்த்தம், அதன் முற் போக்கான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் படிப்படியாக வளர்ச்சியுறுகின்ற குறிப்பிடத்தக்க சூழ்நிலைகள் ஆகியவற்றோடு அது தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நடைமுறையின் அடிப்படையில் அது தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு, தனது மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

சூழ்நிலையைப் புரிந்துகொள்ள மார்க்சியம் உதவுவதோடு, நடவடிக்கைக்கான முறைமையையும் தருகிறது.

‘சோஷலிசம் மரித்துவிட்டது’ எனவும் ‘வரலாறு முடிந்துவிட்டது’ என்றும் கூறியவர்கள் போலி யான தீர்க்கதரிசிகள் என்பது நிரூபணமாகி விட்டது. சமுதாயத்தின் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராகப் போராடுகின்ற வளர்ந்து வரும் வர்க்கங்கள், அவர்களின் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் குறியிலக்காக சோஷலிசம் தற்போது விளங்குகிறது. கட்சிகள் தங்கள் பதாகைகளில் சோஷலிசத்தைப் பொறித்துள்ளன. புரட்சிகளுக்குத் தலைமை தாங்கின. அளவிட முடியாததும், வர்ணிக்க இயலாததுமான தியாகங்களைச் செய்தன. பயங்கரமான, கடும் தோல்விகளையும், மண முடைந்து போகும் வகையான பின்னடைவு களையும் கண்ட பின்னும், அந்தக் குறிக்கோளை நோக்கி முன்னேறி வருகின்றன. சமூக முன்னேற்றத்தின் இலக்காக அது திகழ்கிறது.

விஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சியின் தொடக்கத்தையொட்டி புதிய சகாப்தம் தோன்றி யுள்ளதாகப் பேசுகிறோம், வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் அவற்றின் உள்ளார்ந்த தன்மையை இழந்துவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். பொது வாகக் குறிப்பிடப்படுகின்ற தொழிலாளிவர்க்கம் என்பது தற்போது இல்லை என்றும், ஏகாதி பத்தியம் தனது குணாம்சத்தை மாற்றிக் கொண்ட தென்றும் சொல்கிறார்கள். மக்கள் நல அரசு மூலம் இரு வேறு அமைப்புகளான முதலாளித் துவம், சோஷலிசம் ஆகியவற்றிடையே நெருங்கி, ஒருமுகப்படுவது அதிகரிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். விஞ்ஞான, தொழில் நுட்பப் புரட்சி மார்க்சியத்தை பழமையான ஒன்றாக ஆக்கிவிட்டதாகவும், பொருத்தமற்றதாக ஆக்கப் பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். சோவியத் முன்மாதிரி பற்றிய விமர்சனம், இவர்களது எண்ணத்தில் ஒட்டுமொத்தமாக மார்க்சியம்- லெனினியம், சோஷலிசம் ஆகியவை பற்றிய விமர்சனமாக மாறியுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சி சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மிகப் பெரு மளவில் விரைவுபடுத்தியிருக்கிறது என்பது உண்மை. மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பண்டங்களை உற்பத்தி செய்தல், நவீனமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றைப் பெரு மளவில் அதிகரிக்க விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வழிகண்டுள்ளது. ஆனால், முதலாளித்துவ சமுதாய அமைப்பு இந்த வளர்ச்சியை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பில் இது கண்டிப்பாக ஓர் அருட் கொடையாக இருப் பதற்கு மாறாக, ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, அதிகரித்துவரும் துன்பம் ஆகியவற்றிற்கான மூலகாரணமாக அமைந் துள்ளது. முதலாளித்துவ அமைப்பு தற்போதைய கட்டம் உட்பட அதன் வளர்ச்சி கட்டத்தில் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்ற முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதா?

வறுமையை அகற்றவோ, அல்லது குறைந்த பட்சம் அதனைக் குறைக்கவோ முடிந்ததா? இல்லை! பசி, பட்டினி ஆகியவற்றை இல்லாதொழித்ததா? இல்லை! வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்ததா? நிச்சயமாக இல்லை!

நோய்கள், கொள்ளை நோய்கள் ஆகிய வற்றைக் குறைத்து சிறிதளவாவது மக்களுக்கு ஆரோக்கியப் பாதுகாப்பை வழங்கியுள்ளதா? முழுமையாகவே இல்லை! பள்ளி செல்லும் வயதடைந்த எல்லாக் குழந்தை களுக்கும் கல்வி கிடைக்க வழி செய்துள்ளதா?

இந்தக் கேள்விக்கான பதில் மீண்டும் இல்லை என்பதுதான். மனம் நொந்துபோகும் வகையில், உலக அளவில் உள்ள வறுமை நிலை பற்றிய விபரங்கள் முதலாளித்துவ அமைப்பின் சீர்கேட்டைச் சொல் கின்றன.

சமூக உற்பத்திக்கும், அதன் பலனைத் தனியார்கள் தமக்குரிமையாக்கிக் கொள்வதற்கும் இடை யிலான முரண்பாடு ஆழமாகி வருகிறது. உலகில் உற்பத்தியும், நுகர்வும் அதிகரித்திருந்தாலும், பணக்காரர்- ஏழை என்ற இடைவெளி அதிகரித்து வருகிறது.

உலகம் மற்றும் அடுத்து வரும் தலைமுறை களின் எதிர்காலமும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது.

உயர்ந்தபட்ச லாபத்தைப் பெறவேண்டும் என்ற மட்டுமீறிய வெறியால் உலகின் செல்வவளம் யாவும் கொள்ளையிடப்பட்டு, சுற்றுச்சூழல் அழிக்கப்படுகிறது. காற்று, மண், ஆறுகள், ஏரிகள், கடல்கள் ஆகிய அனைத்தும் வெகு வேகமாக மாசுபடுத்தப்பட்டு, மனித குலம் முழுமையின் எதிர்காலத்தை பேரிடருக்காளாக்கி வருகிறது.

வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை, நோய் ஆகியவை மட்டுமீறிய அளவில் உள்ளன. உற்பத்திக்கான ஆதார வளங்களின் (கிராமப் புறங்களில் நிலம்) உடமைகளில் நிலவும் படுமோசமான ஏற்றத்தாழ்வுகள் வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலை யின்மை, பகுதி வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான காரணங்களாக அமைந்துள்ளன. சாதி ஏற்றத் தாழ்வும், வேறுபாடுகளும் இவற்றை நீடித்திருக்கச் செய்கின்றன. மக்கள் தொகையில் பரந்த பகுதி யினரான பழங்குடியினரும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.

இருப்பினும், அரசாங்கங்கள் கடைப்பிடிக் கின்ற கொள்கைகள் பணக்காரருக்கு நலன் பயப்ப தாகவும், ஏழைகளைத் தாக்குவதாகவும் அமைந் துள்ளன.

கம்யூனிஸ்டுகள், இதர இடதுசாரிகள், தொழி லாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளை ஞர்கள், மாதர்கள் ஆகியோரின் அமைப்புக்கள் இத்தகைய கொள்கைகளுக்கெதிராகப் போராடு கின்றன. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக சில நலத்திட்டங்களும், வறுமை ஒழிப்பு நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரண மாக, கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தைக் கூறலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது போதுமானதா?

இடதுசாரி ஜனநாயக முன்னணியில் மூலமாக வறுமை, வேலையின்மை, எழுத்தறிவின்மை, நோய் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட, மாற்று வளர்ச்சிப் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது. தற்சமயம் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் உள்ள முன்னுரிமை பெற்ற கடமைகள் அமலாக்கப்படுவதோடு மட்டு மின்றி, குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கும் அப்பால் மேலும் முன் செல்வதற்கான கொள்கை களும் கடமைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மாணவர், இளைஞர் மாதர், ஆசிரியர், தொழில்கள் சார்ந்த மக்கள் பகுதியினர் ஆகியோர் தங்களின் அமைப்புகளின் மூலம் நடத்தும் வெகுஜனப் போராட்டங்கள் மூலமாக மட்டுமே இந்தத் திசையை நோக்கித் திரும்பச் செய்ய இயலும். தத்துவார்த்த அரசியல் இயக்கத்தின் மூலமாக இந்தப் போராட்டங்களை ஒருஅரசியல் மட்டத்திற்கு உயர்த்துவது அவசியமாகும். வர்க்க சக்திகளின் தொடர்பில் மாற்றம் கொண்டுவரும் நோக்கோடு மாற்றத்திற்காக போராட்டக் களமாக இது அமையும், உழைக்கும் மக்களின் இயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவையே மாற்றுப் பாதையை நோக்கி முன்னேறுவதற்கான திறவுகோல்களாகும்.

இதனைச் செய்து முடிக்க வலிமைமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேவை. இந்தியாவை மாற்றிட, புதிய இந்தியாவை உருவாக்கிட, எதிர்காலத்தில் சோஷலிச இந்தியாவைப் படைக்கும் கடமை களில் பங்கேற்க, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருமாறு இளைஞர்கள், மாணவர்கள், தொழி லாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் அழைக் கிறோம்.

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அது தொடர்ந்து மாறும். அதிகாரமையம் மேற்கி லிருந்து கிழக்கு நோக்கிப் படிப்படியாக மாறி வருவதை நம்மால் காண முடிகிறது.

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 80 ஆண்டுகள் நூல் தொகுப்பிலிருந்து...)