இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை, மதத்தின் அடிப்படையில் கைப்பற்ற வலதுசாரி சக்திகள் வலுவாகப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் தருணம் இது.  மதத்திற்குள் வலுவாக மறைந் திருக்கும் சாதியம்தான், பாரத அரசியலின் அடிப் படை அலகு என்பதையும், மதத்திற்குள் சாதிய சமத்துவத்தை வளர்த்தெடுக்க வர்க்க பார்வை யுடன் கூடிய நடவடிக்கைகள்தான் உதவும் என்பதுடன், அதுவே எதிர்கால விடுதலையை நோக்கி நகர்த்தும் காரணியாக இருக்கும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.  அதைத்தான் இந்நாவலும் பிரதிபலிக்கிறது.

பாரத மக்களில் 2.7ரூ (1.55ரூ கத்தோலிக்கர்கள்) மட்டுமே பின்பற்றும் மூன்றாவது பிரதான மதமான கிருத்துவமும், இந்த மேற்கண்ட போக்கிற்கு விதிவிலக்கல்ல.  மதத்தின் ஊடாக சாதிய சமத்துவத்துக்காகப் போராடும் அனைத்துப் போராட்டமுமே வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி தான் என்றாலும், அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் நமது வரலாற்றை மீள்ஆய்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் யார் மேலும் யாரும் அதிகாரம் செலுத்தாத மீள்வெளிக்குள் செல்ல வேண்டும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது.

நம்மிடம் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப, தமிழக சூழ்நிலைக்கு ஏற்ப, சாதிய தேசங்களாக பிளவுண்டு கிடக்கும் மத தேசியத்திற்குள் மானுடத்தை முன்னெடுத்துச் செல்ல, எந்தவித திட்டவட்ட மான சூத்திரமும் இல்லை; கடலுக்குள் குதித்து நீந்தக் கற்றுக்கொள்வதைப் போல, நாம்தான் இந்திய மற்றும் தமிழக சூழ்நிலைக்கு ஏற்ப, வழிமுறைகளையும் தீர்வுகளையும் கண்டடைய வேண்டும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது.

இந்தியாவில் 35ரூக்கும் குறைவான மக்களே பின்பற்றும் மதமாக கிருத்துவம் இருந்தாலும், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், அருணாசல பிரதேசம் போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் மதமாக அது திகழ்கிறது.  இது தவிர்த்து கேரளம், கோவா, அந்தமான் நிகோபர் தீவுகளில் கணிசமானவர்கள் கிருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.  கேரள மக்கட்தொகையில் 18ரூ பேர் மட்டுமே பின்

பற்றி கேரளத்தின் மூன்றாவது பிரதான மதமாக கிருத்துவம் திகழ்ந்தாலும், மற்ற ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ளதைக் காட்டிலும், கேரளத்தில் கிருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.  தமிழகத்தில் 6ரூ மக்கள் கிருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இந்தியாவில் சாதிய புள்ளிவிவரத்தை ஆய்வு செய்தால், நமக்கு ஒரு உண்மை புரியும்.  இந்து மதத்தில் உயர்சாதியினர் 26ரூ-மும், தலித் மக்கள் 31.3ரூ-மும் உள்ளனர்.  ஆனால் கிருத்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3ரூமும், தலித் மக்கள் 41.8ரூ-மும் உள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள கத்தோலிக்கச் சபைகளில் தலித்துகள் 65ரூ உள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆகவேதான் தமிழக கிருத்துவ சபைகளை தலித் கிருத்துவ சபைகளாக கையளித்துச் செல்லுங்கள் என்ற கோஷங்கள் எழுகின்றன.

கத்தோலிக்கத் துறவற சபைகளில் ஒன்றான சேசு சபை 16-ஆம் நூற்றாண்டு முதலாகவே தமிழகத்தில் செயற்பட்டு வருகிறது.  தமிழில் தேம்பாவணி இயற்றிய இத்தாலியைச் சார்ந்த வீரமாமுனிவர் இச்சபையைச் சேர்ந்தவர்தான்.  அந்தக் கண்ணியின் தொடர்ச்சிதான் மாற்கு என்றழைக்கப்படும் மாற்கு ஸ்டீபன்; மீள்வெளி என்ற இந்நாவலின் ஆசிரியர்.

இடுகாடு மற்றும் சுடுகாடுகள் அமைப்பதிலும் ஈமச்சடங்கு நடத்துவதிலும் நிகழும் சாதிய பாகு பாடுகளை முன்நிறுத்த மாற்கு எழுதிய நாவல்தான் ‘சுவர்கள்’; உத்திரமேரூரில் தேவாலயத்திற்குள் நடக்கும் தீண்டாமைக் கொடுமையைப் பற்றி பேசியதுதான் அவரது ‘யாத்திரை’ நாவல்; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்க புரத்தில் தலித்துகள் மேல் தொடுக்கப்பட்ட அரசு வன்முறைக் கொடுமையை கண்முன் கொண்டு வந்தது ‘மறியல்’ நாவல்; தென்னாற்காடு எறையூரில் தலித்துகள் இரண்டாம் நிலை கத்தோலிக்கர்களாக நடத்தப்படும் உண்மையை உலகுக்குப் படம் போட்டு காண்பித்தது அவரது ‘மறுபடியும்’ நாவல்; தென் மாவட்டங்களில் சாதிய அடிப் படையில் மறைமாவட்டம் பிரிக்கப்பட்டது குறித்து, அவரது ‘எப்படியும்’ நாவல் பேசுகிறது.

யூதர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியப் பிரிவு பெண்மணியிடம் யேசு நீர் வாங்கி அருந்தினார்.  இந்த மரபு மீறல்தான் யேசுவின் தனித்த அடை யாளம்.  அந்த மரபைப் பின்பற்றி படைப்பாக்கத்தில் மாற்கு செய்யும் மீறல்கள்தான், அவரது தனித்த அடையாளம்.

யாத்திரை நாவல் வந்து இருபத்தைந்து வருடமாகி விட்டது.  அதில் பேசப்பட்ட விஷயங் களை இன்னும் பரந்த தளத்தில் பேச வேண்டிய அவசியம் உள்ளது.  ஆகவே அதன் நீட்சியாக 25 வருடங்களுக்குப் பிறகு, மீள்வெளி நாவலை எழுத வேண்டிய அவசியம் மாற்குக்கு ஏற்பட்டுள்ளது.

மீள்வெளிக்கு முன் அவர் எழுதிய நாவல்கள், லகான் போட்ட குதிரையைப் போல ஒற்றைப் பாதையில் பயணிக்கக் கூடியவை.  ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை இலக்காகக் கொண்டு செல்லும் வண்ணம் எழுதப்பட்டவை.

ஆனால், மீள்வெளியில் ஒரு பரிணாம மாற்றம் ஏற்பட்டுள்ளது.  மீள்வெளி வாழ்க்கையின் பல தளங்களில் விரிந்து படர்கிறது.  வாழ்க்கையின் பல கோணங்களை பல வெளிகளை, பரந்துபட்டுப் பார்க்கும் மனப்பக்குவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்த மீள்வெளி முயல்கிறது.

மீள்வெளி இரண்டு பாகங்களைக் கொண்டது.  முதற்பாகம் யாத்திரை நாவலின் நீட்சி.  அதன் இரண்டாம் தளத்தில்தான் மாறுபட்ட தளத்தில் நாவல் தனது பிரயாணத்தை நடத்துகிறது.

மாற்கு நாவல் யதார்த்தத்தை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் எனக் கருது கிறார்.  ஆனால், அதே சமயம் பாதிக்கப்பட்டவர் களுக்குப் பரிந்து பேசும் அறவியல் பார்வையுடன் படைப்பாளி இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.  பரிந்து பேசினால் மட்டும் போதாது.  பாதிக்கப் பட்டவர்கள் எத்திசையில் செல்ல வேண்டும் என்பதையும் படைப்புச் சுட்டிக் காட்ட வேண்டு மென மாற்கு விரும்புகிறார்.

மாற்கு எப்போதும் மாற்றுக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்.  மாற்றுக் கருத்துகளின் அடிப்படையில் நடக்கும் உரையாடல்கள் விவாதங்கள் நமது சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மைப் படுத்தும் என மாற்கு உறுதியாக நம்புகிறார்.

நாம் வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் வித்தி யாசம் தெரியாத சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம்.  ஆரோக்கியமற்ற வீக்கத்தை, சமத்துவமற்ற வீக்கத்தை வளர்ச்சி என பேதமையாக நினைத்து வருகிறோம் என மாற்கு கருதுகிறார்.  இயற்கையோடு இணை வதும், அதைப் பாதுகாத்துப் பேணுவதும், இயற் கையை வளர்த்து எடுப்பதும்தான் வளர்ச்சி என மாற்கு கருதுகிறார்.

மீள்வெளி இரண்டு பாகங்களாக எழுதப் பட்டுள்ளன.  முதல் பாகம் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.  யாத்திரையின் நீட்சி முதற்பாகம் எனப் பார்த்தோம்.  அதில் இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்து ஆண்டுகளைத் தலித் ஆண்டுகளாக அறிவித்து பத்து அம்சத் திட்டங்களின் மூலம் தலித் வாழ்க்கையை முன்னேற்றுவது என்று ஆயர்கள் அறிவிக்கவே நடத்த வேண்டிய போராட்டங்கள் பேசப்படுகிறது.

அதன்படி கத்தோலிக்கப் பள்ளிகளில் விகிதா சாரப்படி தலித் கத்தோலிக்கர்களுக்கு வேலை அளிக்க வேண்டும்.  கத்தோலிக்கப் பள்ளிகளில் தலித்துகள் படிப்பதற்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.  குருவானவராக தலித் சமூகத்தில் இருந்து வருவதற்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.  இப்படிப் பல அம்சங்கள் அந்தப் பத்து அம்சங்களில் இருந்தது.

ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல் போன போது, அதை வலியுறுத்தி நடத்திய சாகும் வரை உண்ணாநோன்பு போராட்டம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அதற்கு வழிகாட்டி யாக இருந்த அந்துவான் தனது தேவ சபைப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்.

போராட்டத்தின் முன்னணி வீரர்களான செல்லையா, வேளாங்கண்ணி, கபிரியேல் ஆகியோரது வாழ்க்கைகளும் இப்போராட்டத்தினூடே பேசப் படுகிறது.  கபிரியேல் எப்படி நீர்த்துப் போகிறான் என்பதும் பேசப்படுகிறது.

இரண்டாம் பாகம் 15 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.  வாழ்க்கையைப் பல கோணங் களில் சிந்தித்து இருக்கும் அத்தனைச் சாத்தியங் களையும் பயன்படுத்தி முன்னேறுவது எப்படி என்ற போராட்டம் இரண்டாம் பாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

குலதெய்வ வழிபாட்டில் இருந்து உரம் பெற்று, தலித் புனிதர்களை உருவாக்கி சக்தி பெற்று தங்கள் விடுதலையைத் தாங்களே வழிநடத்தும் மார்க்கம் குறித்து இந்த இரண்டாம் பாகத்தில் நாவல் பேசுகிறது.  இரண்டாம் பாகத்தில் பல அகப் பூர்வமான வினாக்கள் எழுப்பப்பட்டு, அதற்கான தீர்வுகள் முயற்சிக்கப்படுகின்றன.  இலத்தைக் குளம் கிராமத்தில், பிச்சைமுத்துவும் வேளாங் கண்ணியும் குட்டை மரத்தானுக்கும் ஞானத் துக்கும் திருவிழா எடுத்து, ஒரு கூட்டு கம்யூனை உருவாக்க முயலும் திசை நோக்கி நாவல் நகர்கிறது.  அங்கு இயற்கை வேளாண்மை நடக்கிறது.  கம்யூன் களாக வாழும் போது, தனிநபர்களுக்கான வேலைப் பளு குறைகிறது என்பது உணர்த்தப்படுகிறது.  சமூகத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவு வளர்கிறது.  ஆண் - பெண் உறவுகள் இயல்பாக உள்ளது.  குடும்பத்திற்கான அவசியம் உள்ளதா என்பது பரிசீலிக்கப்படுகிறது.  மக்கள், தொலைக் காட்சி போன்ற ஊடகப் பிடிகளில் இருந்து விடு பட்டு, நமது புராதன விளையாட்டுகளைக் கண்டு பிடித்து, மனமகிழ்வுக்கு அதைப் பயன்படுத்து கிறார்கள்.  இது பரிணாமப் பாதை.

பஞ்சமி நிலத்தை மீட்கப் போராடி உயிர்நீத்த ஜேம்ஸ் பீட்டரில் இருந்து துவங்கி, அவரது நண்பர் சவரியின் நடவடிக்கை என்று இன்னொரு தளத்தில் நாவல் நகர்கிறது.  இமானுவேல் சபையின் அங்கமாக செயற்பட்ட தலித் கிருத்துவ இயக்கத்தினர் அந்துவானின் வழிகாட்டுதலின் பேரில் தலித் கோரிக்கைகளை வென்றெடுத்தனர்.  அந்துவான் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதும், இமானு வேல் சபைக்கும் தலித் கிருத்துவ இயக்கத்தினருக்கும் இருந்த உறவு பெரும் சேதம் அடைந்தது.  இயக்கத்தினர் சபைகளின் சொத்துகளைக் கைப்பற்றி, கம்யூன் அமைப்பது பற்றித் திட்டமிட்டனர்.  அது புரட்சிப் பாதை.

இயற்கை வேளாண்மை, இயற்கையை நோக்கிச் செல்லுதல், தளைகளில் இருந்து விடுபடுதல், இந்துக்களும் கிருத்துவர்களும் இணைந்து வாழும் தலித் கிராமம் எனப் பல சாத்தியங்கள் குறித்து இந்நாவல் அலசுகிறது.

இயற்கையை நோக்கித் திரும்பும் புதிய ஆன்மீகத்துக்கு மதம் தடையாக இருப்பதில்லை என இந்நாவல் கருதுகிறது.  இப்புதிய ஆன்மீகம் சாதியத் தடைகளை வென்று கடந்து செல்லும் என்று நாவல் நம்புகிறது.

உலக கத்தோலிக்க எண்ணிக்கையில் சரி பாதியினர் லத்தீன் அமெரிக்காவில் உள்ளனர்.  அங்கு உருவான புதிய இறையியல் சிந்தனைதான் விடுதலை இறையியல்.  அது அங்கி அணிந்த பல கலகக்காரர்களை உருவாக்கியது.  தமிழகத்தில் அப்படிப்பட்ட சூழல் உருவாகவில்லை என்றாலும், தீண்டாமைக்கு எதிராக அப்படிப்பட்ட குரல் கிருத்துவ தேசியத்திற்குள் ஒலிக்க வேண்டிய அத்தியாவசியம் உள்ளது.

அதற்கான கட்டியம்தான் இந்த மீள்வெளி.

மீள்வெளி மாற்கு

வெளியீடு: பாவை பப்ளிகேஷ்ன்ஸ்

16 (142), ஜானி ஜான்கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை - 600014

தொடர்புக்கு : 044-28482441

விலை: ` 275/-

Pin It