‘இந்திய நாட்டையே அதிரச் செய்த போபால் விஷவாயு துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனமோ, அதன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனோ குற்றவாளி அல்ல’ என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி, இந்தியாவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு என்னும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து மீத்தைல் ஐசோ சயனைட் என்னும் விஷவாயு கசிந்ததில் பல்லாயிரக்கணக்கான மக்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நோய்க்கு ஆளாகினர்.

இந்த வழக்கில் குற்றவாளியும், யூனியன் கார்பைட் கார்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட எட்டு நபர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஆண்டர்சன் ஜாமீனின் விடுதலை யாகி, பின்னர் அமெரிக்காவுக்குத் தப்பியோடி விட்டார். இந்தியாவில் 1984-இல் தொடரப்பட்ட வழக்கில் பல முறை நேரில் ஆஜராகும்படி நீதி மன்றம் ஆணை பிறப்பித்தும், ஒருமுறைகூட அவர் இந்திய நீதிமன்றத்துக்கு வரவேயில்லை.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்க, போபால் பகுதியில் நீரும் நிலமும் மாசுபட்டு, அதன் தீய விளைவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பாதிக்கப்பட்டோரின் சந்ததியினரும் நோயாளி களாகவும் ஊனமுற்றோ ராகவுமாகத் துன்புறுகிற அளவுக்கு நச்சும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் களால் 1999-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் மன் ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் யூனியன் கார்பைடு கார்பரேஷன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒரு வழியாக வழக்கை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி போபால் நகரில் நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் சுகாதாரக் கேடுகளுக்கு யூனியனின் கார்பைடு இந்தியா நிறுவனமே காரணமின்றி அதன் தலைமை நிறுவன மான யூனியன் கார்பைடு கார்பரேஷனோ அதன் முன்னாள் தலைவரான ஆண்டர்சனோ காரண மல்ல என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் எந்த மூலையில் பேரிடர் என்றாலும், சிலிர்த்தெழும் இந்தியா தனது நாட்டு மக்கள்

கால் நூற்றாண்டு காலமாகத் துன்பத்தில் துடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கிறது.

“தனியார் பெரு நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கும் பல்லாயிரம் கோடி வரிச் சலுகையில் அரை சதவிகிதம் குறைத்தாலே போதும்... மிகச் சாதாரணமாக 5000 கோடி பணத்தை போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணமாக அளித்து, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க முடியும்” என்று அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர் காணலில் காங்கிரஸ் பிரமுகர் மணிசங்கர் வெளிப் படையாகக் கருத்து கூறியிருப்பது கவனத்திற்குரியது.

இந்திய அரசு இவ்விஷயத்தில் நடந்துகொள்ளப் போகிற பாங்கினைப் பொருத்துத் தான், அவ்வப் போது இங்கே உச்சரித்துக்கொண்டிருக்கும் இறை யாண்மை என்ற சொல்லுக்குப் பொருள் புலப்படப் போகிறது.

Pin It