வரலாற்றுவரைவியற் குறிப்புகள்

இந்திய வரலாற்றாசிரியர்களாலும் மார்க்சிய அறிஞர்களாலும் வலிந்து பேசப்பட்ட, போது மென்ற அளவுக்கு விவாதிக்கப்பட்ட “இந்தியாவைப் பற்றி” மார்க்ஸின் “இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி”, “இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் ஆய்வுரைகள் மற்றும் காலனியாதிக்கம் குறித்து மார்க்ஸ் ரத்தினச் சுருக்கமாகச் சொன்ன கருத்தாக்கங்களனைத் தையும் இந்திய வரலாற்றாசிரியரும் மார்க்சிய அறிஞரும் புரிந்துகொண்டிருந்தவைகளுக்கு நேர் மாறாக எதிரான கருத்துக்களை முழங்கிவிட்டுச் சென்ற எட்வர்டு செயித்தின் “கீழைத்தேயயியம்” பார்வையில்தான் இன்றைய உலகமயமாக்கலை -- காலனிய--அரைக்காலனிய-- நவகாலனிய எதிர்ப்பு என்பது இயங்கிக்கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியை விளக்க முயல்கிறது இக்கட்டுரை.

*             இன்றைக்கு முதலாளித்துவப் பல்கலைக்கழகங் களில் ‘பண்பாட்டு ஏகாதிபத்தியம்’ குறித்த எட்வர்டு செயிதத் முன்வைத்த மிகவலுவான எதிர்ப்புக்குரலை ஆய்வுப்பாடமாக வைத்து உள்ளனர். செய்த்தை எதிர்த்து வலதுசாரி களிடமிருந்து கடுமையான கண்டனக்குரல் கிளம்பியிருந்த நிலையிலும் அமெரிக்க இடது சாரிகளுக்கு அவர் செய்த குறிப்பிடும்படியான பங்களிப்பு எதுவென்றால் (நவ)- தாராளவாதக் கொள்கையுடன் அவன்ட்கார்டு கொள்கையை இணைத்துப்பார்க்கும் தொழில்நுட்பத்தைத் தந்ததுதான். இப்படித்தான் காலனிய எதிர்ப்புக் கொள்கையைப் பின்நவீனத்துவத் தளத்திற்கு நகர்த்தி மார்க்சியத்தை எதிர்க்கும் கைங்கர்யத்தை செய்து முடித்தார். காலனியாதிக்கம் குறித்து மார்க்ஸ் முன்வைத்த சில ஆய்வு முன் முடிவு களைத் தனியாகக் கழற்றித் தன்னுடைய கீழைத் தேயயிய ஆவணத்திற்குள் இடைச்செருகி மேற் கொண்ட ஆய்வில் முரண்பட்ட, எதிரான முடிவுகளுக்கு வந்தடைந்தார் எட்வர்டு செயித் அவர்கள்.

*             ஐரோப்பிய நாகரிக சூழலில் வைத்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படைக் கோட் பாடுகளை வரையறுக்கும் பணியில் முழுமை யாக ஈடுபட்டிருந்த மார்க்ஸ் 1843-1853 வரை ஆசியா குறித்து எந்தவித நம்பிக்கையான முடிவு களையும் வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக, மேற்கத்திய நாகரிகத்தின் வரலாற்று வளர்ச்சியைப் பிரதானமாகக் கவனத்தில்கொண்டு பேசும் ‘ஜெர்மன் சித்தாந்தம்’ மற்றும் ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ படைப்புகளில் குறிப்பாக ஆசியா குறித்த தகவலேதும் முன்வைக்கப்பட வில்லை. 1848 புரட்சி தோல்வியடைந்ததும் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டுப் பிறகுள்ள காலகட்டத்தில் (பிரிட்டிஷ் நூலகத்தில்) ஆசியா குறித்த தமது ஆய்வை மேற்கொண்டார். இந்தியா, சீனாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்த நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் பத்திரிகை “இந்தி யாவில் பிரிட்டிஷார் ஆட்சி”, “இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” ஆய்வுரைகளுக்குப் பொது மராமத்தும், கிராம சமூகமும் என்ற இரண்டு கருத்தாக்கங்களே அடிப்படையானவை.

ஆசிய சமூக மாதிரியே மார்க்ஸின் கண்டு பிடிப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய சான்றாதார மாகும்.

“மிகப்பரந்த தளத்தில் ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக் காலகட்டங்களாக ஆசிய, புராதன, நிலப்பிரபுத்துவ மற்றும் நவீன முதலாளித்துவ உற்பத்திமுறைகளைக் கொள்ள லாம்” என மார்க்ஸ்அரசியல் பொருளாதார விமர் சனத்துக்கு ஓர் பங்களிப்பு நூலில் சொன்னது ஆசிய உற்பத்திமுறை என்றொரு தனிவடிவமாக எங்கும் நிலவியதென்று தவறாகப் புரிந்துகொள்ளப் படுகிறது.

*             சிலகாலமே தம்முடன் இணைந்து Deutsch-Franzosische Jahrbucher பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய (புகழ்பெற்ற மார்க்ஸின் “யூதர் பிரச்சினை குறித்துக்” கட்டுரை வெளியான ஜெர்மானிய-- பிரெஞ்சு வரலாற்றுப் பத்திரிகை இதுவாகும்) ஜெர்மன் தத்துவவாதி, அரசியல் விமர்சகர் அர்னால்டு ரூஜ் என்பாருக்கு எழுதிய கடிதமொன்றில், ஐரோப்பிய கொடுங்கோன்மை மன்னராட்சிக்கும் ஆசிய சர்வாதிகார ஆட்சிக்கும் வேறுபாடுள்ளது-கொடுங்கோன்மை, சர்வாதி காரம், அராஜகம் வேறு வேறானவை என்று சொன்ன மான்டெஸ்கியுவை முற்றிலும் நிராகரிக் கிறார். மக்களை அடக்கியொடுக்கிச் சுரண்டும் ஒரே சித்தாந்த அரசு கருவியின் பலவிதப் பெயர் களே இவை. 18-ஆம் நூற்றாண்டு கீழைத்தேய சர்வாதிகார ஆட்சியென வலிந்து பேசிய மான் டெஸ்குவின் கருத்தாக்கம் அடிபட்டுப்போகிறது. நிலப்பிரபுத்துவம், பேரரசும் பெருந்தத்துவமு மாகிய பலவித அரசாட்சிகள் உண்டெனப் பெயர் சூட்டிய பிரெஞ்சு அரசியல் விமர்சகர், தத்துவவாதி மான்டெஸ்குவின் பார்வையை மார்கஸ் மறுத்தார்.

*             ஆர்.எஸ்.சர்மா அவர்களின் பண்டைய மத்திய கால இந்திய சமூகம் என்ற நூலில் “இந்திய நிலப்பிரபுத்துவம் குறித்து மார்க்ஸும் கோவ லெவ்ஸ்கியும்” அத்தியாயத்தில் “இந்தியா ஓர் நிலப்பிரபுத்துவ நாடு என வரையறுக்கும் சமூக வியலாளர் கோவலெவ்ஸ்கியின் ஆய்வை மார்க்ஸ் மறுக்கிறார். மொகலாயராட்சியில் விவசாயிகள் மீது நிலவரி கடுமையாக, சுமத்தப்பட்டு வசூலிக்கப் பட்டதன் விளைவு இறுதியில் நிலம் பறிக்கப்பட்டு நிலவுடைமையாளர் உருவாகினர் என்ற ஆய்வையும் மார்க்ஸ் மறுக்கிறார்.” என்கிற விஷயம் இடம் பெறுகிறது.

*             இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி குறித்த மார்க்ஸின் கருத்தை அடியொற்றி 1848 இல் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனியாட்சியை ஆதரித்த ஏங்கல்ஸ்; வடமெக்ஸிகோவைத் தன தெல்லைக்குள் இணைத்துக் கொண்ட அமெரிக் காவின் செயலைப் பாராட்டிய ஏங்கல்ஸ் பின்னால் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனியாட்சியைக் கண்டிக்கிறார். 1850களில் இரண்டாம் அபினி போரில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சீனாவை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் வரவேற்றனர். இந்தச் சூழலில்தான் 1857 சிப்பாய்க் கலகத்தை பிரிட்டிஷ் காலனியாட்சிக்கெதிரான இந்தி யாவின் முதல் சுதந்திரப்போர் என முழங்கித் தமது முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

                டூரிங்கிற்கு மறுப்பு என்னும் நூலில் ஏங்கல்ஸ் “கிராம சமூகம் அல்லது அரசே விவசாய நிலச் சொந்தக்காரனாக நிலவும் மொத்த கீழைத் தேயங்களிலும் புழங்கும் எந்த மொழியிலும் நிலவுடைமையாளர் என்ற சொல் காணப்பட வில்லை” என்றெழுதியிருக்கிறார்.

இந்தியாவில் நில வரி-நில வாடகை குறித்து மார்க்ஸுக்கு கிடைத்த நூற்குறிப்புகள்

*             ஹெகலை அடியொற்றிக் கீழைத்தேய வரலா றென்பது ஏன் மதவாத வரலாறாகத் தோற்ற மளிக்கிறது என்கிற கேள்விக்கு விடைதேடும் முயற்சியில் முகலாய மன்னர்களின் பிரத்தியேக பிரெஞ்சு மருத்துவர், யாத்திரிகர் பிராங்காய்ஸ் பெர்னியரின் (1625-1688) Voyage de Francois Bernier, Paul Maret, 1710 நூலைப் படித்த மார்க்ஸ், ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் “துருக்கி, பாரசீகம், ஹிந்துஸ்தான் போன்ற கீழைத் தேயங்களில் தனியார் நிலச் சொத்துடைமை இல்லாத ஒரு நிலைமையை பெர்னியர் சரியாகப் பார்த்திருக்கிறார். இதுவே கீழைத்தேய சொர்க்கத் திற்கு மிக முக்கியமான தகவலாக இருக்கும்.” கீழைத் தேயங்களில் நிலச்சொத்துடைமை இல்லை என்பது மிக முக்கியமான தகவல்தான். ஆனால் நிலப்பிரபுத்துவ நிலைக்குகூட கீழைத் தேயங்கள் வரவில்லையென்பதை விளக்குவ தெப்படி?” என ஏங்கல்ஸ் பதில் கேட்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி முதலாளி களுக்கு ‘சதி’ குறித்து பெர்னியர் நூல்தான் முக்கிய தகவலாகக் கிடைத்திருக்கிறது.

                தனியார் நிலச்சொத்துடைமை ஆசியாவிற்கு ஐரோப்பியர்களால் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. எந்தவொரு சரக்குடைமையாளரும் தம் சரக்குகள் தொடர்பாகச் செய்யக்கூடிய தெல்லாம் நிலவுடைமையாளரும் நிலம் தொடர்பாகச் செய்ய முடியும் என்பதற்குமேல் ஒன்றுமில்லை. இந்தக் கருத்து, நிலத்திலான தடையிலாத் தனியுடைமை தொடர்பான இந்தச் சட்டக்கருத்து, புராதன உலகில் கூட்டுத்துவ சமுதாய அமைப்பு கலைவுறும்போதுதான் தலையெடுக்கிறது. நவீன உலகில் முதலாளித்துவப் பொருளுற்பத்தி வளர்ச்சியடையும் போதுதான் தலையெடுக்கிறது.” வேக்ஃபீல்டு, “இங்கிலாந்தும் அமெரிக்காவும்”. லண்டன் 1833.

*             ‘ஆசிய சர்வாதிகாரமே’ சொத்துக்கான சட்ட மில்லாத நிலைமைக்குக் காரணமாகும். இனக் குழுவிற்குச் சொந்தமான அல்லது பொதுச் சொத்து நிலவியது -- மார்க்ஸ் அடிக்குறிப்பு: “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாற்று விவரணக் கணக்கு” ஹக் முர்ரே & ஜேம்ஸ் வில்ஸன் 1832 வரலாற்றில் தூங்கிக் கிடந்த ஆசியாவைத் தட்டியெழுப்பி முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றன மேற்கத்திய ஆதிக்க சக்திகள். மத்தியக் கிழக்கு மற்றும் ஆசியப் பெரு நகரங்களில் மார்க்ஸ் வருணித்த கீழைத்தேய சர்வாதிகாரம் “ஆசிய உற்பத்திமுறை” கருத்தாக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு இன்றைக்குக் கீழைத்தேய சர் வாதிகார நிலைமையே காலனிய ஆக்கிரமிப்பு களுக்கு இடங்கொடுத்தது என்றெல்லாம் கூறும் ஆய்வேடுகள் மலிந்துவிட்டன.

*             “உபரி-லாபம் நில-வாடகையாக மாற்றமடைதல்: வெண்சணல், சாயப்பொருட்கள் போன்ற விவ சாயப்பண்டங்களின் உற்பத்தியிலும் சுயேச்சை யான கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் முதலீடாகும் மூலதனத்திற்கான நில-வாடகை, பிரதான உணவுப் பயிரின் உற்பத்தியில் முதலீடாகிற மூலதனத்திலிருந்து பெறப்படும் நில-வாடகையால் நிர்ணயிக்கப்படுவதை நிரூ பித்தது ஆதம் ஸ்மித்தின் பெரும் பங்களிப்பு களில் ஒன்றாகும். (ஸ்மித். நாடுகளின் செல்வம், அதன் இயல்பும் காரணங்களும் பற்றிய ஆய்வு --1848.),. நிலத்திலான தனியுடைமைக்கு ஹெகல் தரும் விளக்கம் வேடிக்கையிலும் வேடிக்கை யானது”. -- மார்க்ஸ் மூலதனம் 3-ஆம் நூலில்.

*             வேறுபாட்டு நில வாரம் பற்றி ரிக்கார்டோ: உழவர்கள் நிலத்தில் விளையும் கண்டு முதலை நில-உடைமையாளர்க்குப் பாதி, உழுது பயிரிடு வோருக்குப் பாதி எனப் பங்கு போட்டுக் கொள்ளுதலே வாரம் ஆகும். காலனிகளில் தனியார் நிலச்சொத்துடைமை இல்லாத நிலை

*             நேரடி சாகுபடியாளர் தனியார் நிலவுடைமை யாளரோடு முரண்படாத நிலையில் ஆனால், ஆசியாவில் நிலவியதைப் போல் நிலப்பிரபு அதிகாரமுடைய அரசின் நேரடி உத்தரவின் கீழ்ப் பயிர் சாகுபடி செய்யும்போது வாடகையும் வரிகளும் ஒன்றாகிவிடும். அல்லது இதுபோன்ற தான நில-வாடகை வடிவத்திலிருந்து வித்தியாசப் படும் வேறுவரி அங்கே இல்லை. இந்தியாவில் நிலவிய வரி-வாடகை சமன்பாடு தன்னளவிலேயே ஒரு பொருளாதார ஒழுங்கமைப்பைக் குறிக் கின்றது. குத்தகைக் காலம்--குத்தகையும், நிலத்தில் உள்ளிணைக்கப்பட்ட மூலதனத்தின் மீதான வட்டியும்--பயிர்ப்பகிர்வு--குத்தகையும் வார நிர்ணயிப்பும்--குத்தகைப்பணம்--குத்தகையும் விவசாயத் தொழிலாளர்களின் கூலியும்--குத்தகையும் வாரமும்

விநியோக உறவுகளும் உற்பத்தி உறவுகளும்: (அரசியல் பொருளாதாரத்தில் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் - 1844 ஜான் ஸ்டவர்ட் மில்)

“ஏதேனுமொரு சமுதாயப் பொருளுற்பத்தி வடிவம் (எடுத்துக்காட்டாக புராதன இந்திய கிராம சமுதாயங்கள், அல்லது ‘பெரு’வியர்களின் இன்னுங்கூடத் திறம்பட வளர்ச்சியடைந்த பொது வுடைமை) நிலவுவதாகக் கொண்டால் எப்போதுமே உழைப்பின் இரு கூறுகளையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியும். அவற்றின் வேறுபாடுகளையும் பிரத்தியேக வடிவங்களையும் பிரித்தகற்றிவிட்டு, அவற்றின் வேற்றுமைக்கு மாறாக ஒற்றுமையை மட்டும் மனத்தில் இருத்துவோமேயானால் அவை முழுதொத்தவை யாகும்.”

*             1882-இல் கார்ல் காவுத்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் ஏங்கல்ஸ்”: விடுதலை வேள்வியில் போராடும் பாட்டாளி இனிமேலும் காலனிய போரிலீடுபடமாட்டார்; அனேகமாக உண்மை யிலேயே இந்தியாவில்தான் புரட்சி நடக்கும். இதே சூழலுடைய அல்ஜீரியா, எகிப்து போன்ற நாடுகளிலும் நடந்தால் நமக்கு நன்மையே...வட அமெரிக்காவின் பேரழிவுச் சக்தி உதவியுடன் ஐரோப்பா மறு அணி சேர்ந்ததும் அரை நாகரிக நாடுகள் தாமாகவே புரட்சியிலிறங்கும்.” அரேபிய ராட்சியில் ஸ்பெயினும் சிசிலியும் வளர்ச்சி யடைந்ததற்குக் காரணம் விவசாய--நீர்ப்பாசனத் திட்டத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல் பட்டதுதான்.

*             கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்துக்குள் இருந்தபோது இந்தியாவில் 25 முறை பஞ்சம் ஏற்பட்டன. இந்தப் பஞ்சத்துக்குக் காரணம் நிர்வாகக் கோளாறுகள்தான். குறிப்பாக, அதிக வரி, பெருமளவு உணவுத் தானியங்கள் இங் கிலாந்துக்கு ஏற்றுமதியானது, நீர்ப் பாசன முறைகளை அக்கறையின்றிக் கைவிட்டது, பணப் பயிர்களை அதிகம் பயிரிடச் சொல்லி வற்புறுத்தியதோடு, விவசாயத் துறை முதலீடு களைப் பலவீனமாக்கியது என இப்படி முறை யற்ற அதிகாரச் சீர்கேடுகள் காரணமாகவே இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. ‘இந்தியாவை உலுக்கிய’ மாபெரும் பஞ்சங் களில் மூன்று மிகக் கொடுமையானவை. அவை, 1770-களில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம், 1876 மற்றும் 78-களில் தாது வருஷப் பஞ்சம். 1943 மற்றும் 44 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பஞ்சம். வங்காளப் பஞ்சம் 1769 முதல் 73 வரை கோரத் தாண்டவம் ஆடியது.

*             மொகலாயர் காலம் முதல் நவாப் ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தை, தனது தந்திரத்தால் ஆக்கிரமித்துக் கொண்டு, தானே நிர்வகிக்கத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி, வங்காளத் தைத் தனது உணவு ஏற்றுமதிக் கிடங்காக மாற்றியது. அதுவரை, நடைமுறையில் இருந்த நில வரியைப் பல மடங்கு உயர்த்தியது. வணிகப் பொருட்களுக்கு மிதமிஞ்சிய வரி விதித்ததும், விளைச்சலில் பாதியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ததுமே பஞ்சம் ஏற்பட்டதற்கான மூல காரணங்கள். மொகலாயர்கள் காலத்தில் நில வரி வசூல் செய்வது மான்செப்தர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் வழியாக நடைபெற்றது. ஒரு மான்செப்தர் வரி வசூல் செய்துகொள்ள ஐந்து முதல் பத்து கிராமங்கள் வரை கொடுக்கப்படும். வசூலித்த தொகையைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டும். மான்செப்தர்கள் மக்களை அடித்து உதைத்து இரண்டு மடங்கு வரி வசூல் செய்ததுடன் பாதியைத் தாங்கள் எடுத்துக்கொண்டு மீதியை மைய அரசுக்குச் செலுத்தினர். வரிக் கொடுமை விவசாயிகளை மிகவும் பாதித்தது. அதே நிலைப் பாட்டை மேலும் கடுமையாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. அதாவது, விளைச்சலில் பாதியை வரியாகச் செலுத்த வேண்டும். 1770-ஆம் ஆண்டு பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் வரியை 10 சதவீதம் உயர்த்தியது பிரிட்டிஷ் அரசு. இங்கிலாந்து இந்தியாவிலிருந்து செய்யும் இறக்குமதிகளுக்கு சமதையேதும் செலுத்துவ தில்லை.

*             “ஆயுதமேந்திய விவசாயிகள்”, “இந்தியப் புரட்சி-- 1857”, “காலனிய இந்தியாவில் வேளாண் சமூகமும் விவசாயப் போராளியும்” போன்ற ஆய்வு நூல்களை எழுதிய பிரிட்டிஷ் வரலாற்றா சிரியர் எரிக் ஸ்டோக்ஸ்: “அரசின் வருவாயில் பாதிக்கும் மேற்பட்டது நிலத்தின் மீது விதிக்கப் படும் வரியிலிருந்து பெறப்படுவதாகும்; விவசாயி உயிர்வாழ்வதற்குத் தேவையானதை மட்டும் அனுமதித்துவிட்டு, கிட்டத்தட்ட நிலத்தில் உற்பத்தியாகும் உபரி அனைத்தையும் அரசே எடுத்துக்கொண்டதானது, இந்திய சமுதாயத்தின் கட்டமைப்பை வடிவமைப்பதில் தீர்மானகரமான செல்வாக்கு செலுத்தியது என்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நில உடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

*             ஏழைகளையும் விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண் டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும். உண்டு. 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலுக்காவி லிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவ சாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

*             சம்பரண் போராட்டம் 1918-19 காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்திலும், பீகார் மாநிலத்தின் சம்பரண் மாவட்டத்திலும் விவசாயிகளின் போராட்டம் வெடித்தன.. சம் பரண் மாவட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாயி களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணவுப் பயிர்களைப் பயிரிடாமல், காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரி (ஐனேபைடிகநசய வiஉவடிசயை) முதலான பணப்பயிர்களைப் பயிரிட்டு வந்தனர். இதனால் அவர்களுக்குத் தேவையான உணவு கிட்டவில்லை. மேலும் அவுரிப் பயிரினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணை யார்களுக்கு விற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். 1910-களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் ஏற்படும் நிலை உருவானது. விவசாயிகளில் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது ஒரு புதிய வரியொன்றை விதித்தது; அடிக்கடி அவ்வரி விகிதத்தை அதி கரித்தும் வந்தது. இதனால் 1910களில் ஆங்காங்கே அரசுக்கு எதிராகக் கலகங்கள் மூண்டு வந்தன.

1918இல் சம்பரண் விவசாயிகளின் வரிகொடா இயக்கப் போராட்டக்காரர்களின் வேண்டுகோள் களை ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் அவர் களுடன் உடன்படிக்கைசெய்து கொண்டனர். அதன்படி பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப் பட்டன. அவுரி பயிரிடுவோருக்கு அதிக விலையும் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. .....தமிழ் நாட்டின் தென்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவுரி இலை பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.50 கோடி அளவுக்கு அவுரி இலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. விளை நிலங்களில், நெல் அறுவடைக்குப் பின் அதில் அவுரி பயிரிட்டு, பின் தண்ணீர் வந்து உழ ஆரம்பிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார். பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும் தாங்களாகவே நெய்த பருத்தித் துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்திச் சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது. நமது பருத்தியையும் அவுரியையும் கொள்ளையடிக்கவே ஆங்கிலேயர் இங்கே வந்தனர். ஏற்றுமதியில் உலகில் சீனா வுக்குப் பிறகு குறிப்பாக, தமிழ் நாட்டில் --தூத்துக்குடி அவுரி, சென்னா, அவுரி திருநெல் வேலி சென்னா -- மதுரை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கேடா போராட்டம்

இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அங்குள்ள விவசாயிகள் நில உரிமையாளர்களாக இருந்தாலும், பஞ்சத்தினால் ஏற்பட்ட பயிரிழப் பினை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மும்பை மாகாண பிரித்தானிய அரசு வரித்தள்ளுபடி வேண்டிய அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து. அவ்வாண்டு முழு வரியினையும் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. மேலும் அவ்வாண்டே வரியினை 23 விழுக்காடு உயர்த்தியது. இங்கும் ஒரு வரிகொடாப் போராட்டம் வெடித்தது. கேடா விவசாயிகளுக்கு ஆதரவாக குஜராத்தின் பிற பகுதி களிலிருந்து வந்த தன்னார்வலர்கள் போராட்டங் களில் கலந்துகொண்டனர். அவ்வாண்டுக்கான வரியினைக் கட்டாத விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஆனால் அதனால் தளர் வடையாத விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. வரி கொடுக்க இணங்கியவர்களையும் மற்றும் ஏலத்தில் சொத்துக்களை வாங்கியவர்களையும் பர்தோலி மக்கள் சமூகப் புறக்கணிப்பு செய்தனர். இறுதியில் அரசு இணங்கியது. அவ்வாண்டுக்குரிய மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டது. வரிவிகித உயர்வும் திருப்பிப் பெறப்பட்டது. பற்றுகையான நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டன.

நிலவரியில் மாற்றம்?

*             குமரி மாவட்ட விவசாயிகளுக்கு நிலவரி ஒரு பயங்கரமான சுமையாய் இருந்தது. அன்றைக்குச் சில நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 35 ரூபாய் வரை வரி இருந்தது. பெரும்பான்மை யான நிலங்களுக்கு 28 ரூபாய்க்குக் குறைவில்லை. 1929ஆம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால், 75 படி கொண்ட கோட்டை நெல் 3 ரூபாய்க்கு வந்துவிட்டது. விவசாயிகள் தாங்களாகவே பயிரிட்டு மீதம் உள்ள நெல்லை அப்படியே விலைக்குக் கொடுத்துவிட்டாலும், நிலவரி கட்ட முடியாத அளவு வரி உயர்ந்து இருந்தது. இந்த நிலையில், நிலவரிச் சுமையால் தவித்துக் கொண்டிருந்த மக்கள் போராட்டத்தின் விளைவால் எந்த இராஜ்யத்திலும், மாகாணத் திலும், இல்லாத ஒரு நடைமுறையாக நிலத்தின் அடிப்படை வரியில் -- ஒரேயடியாக நிலம் சம்பந்தப்பட்ட எல்லா வரிகளையும் நீக்கிவிட்டு, ஏக்கர் ஒன்றுக்குச் சராசரி ஒரு ரூபாய் வரி என்றும், தண்ணீர் வரி தனியாக ஒரு ரூபாய் என்றும். அத்தோடு, பெரும் நிலக்கிழார்களுக்கு ஒரு சிறுதொகையை விவசாய வருமான வரியாக 25 ஏக்கர் உள்ள ஒருவர் முன்பு 700 ரூபாய் வரி செலுத்திக் கொண்டிருந்தால் இந்த மாற்றத்திற்குப் பிறகு 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்றாயிற்று. அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத் தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித் தனியான நில வரிகள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரிகளுக்குப் பெயர்.

நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, ‘மணியகரம்’ என்ற வரி மிக அதிகப்படியாக வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏப், 3, 1949-இல், ‘மணியகரம் கண்டன மாநாடு’ நடத்தப்பட்டது. வரிப் பாக்கிக்காக உழவர்களது நிலங்களை ஏலம் விட அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்ற விவசாய இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு கிட்டியது. ஆங்கில அரசு சோழர், பாண்டியர், விசயநகர அரசர் காலத்து வரிகளையெல்லாம் ஒரு ஒழுங்கு முறைக்குக் கொண்டு வர எண்ணியது. தமிழ்நாட்டுடன் சேர்ந்த பின்னர், ‘இரயத் வாரி’ வரிக்குட்பட்டது. அது முந்திய வரிகளைவிடக் கொடுமையானது. குடிமக்கள் தாமே நேரில் வரியைக் கட்டும் ரயத்து வாரி முறை.  மொத்த விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு. இது நெல்லாகவோ அல்லது பொன்னாகவோ வசூலிக்கப்படும் அந்த நிலத்தில் எவ்வளவு விளைந்தது என்று முடிவு செய்யக்கூடிய உரிமை ஊர் சபைக்கே உண்டு அவர்கள் பார்த்து வைத்து தான் விளைச்சல். அதில் 6இல் 1 பங்கினைச் செலுத்தியே ஆக வேண்டும். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வரி செலுத்தாவிட்டால் நிலம் பறிமுதல் செய்யப்படும் அதை விற்று வரியை எடுத்துக்கொள்வார்கள்.

வரிகளில் சிலவகை.

கல்வெட்டாதாரப்படி மொத்தம் 400 விதமான வரிகள் மக்கள் மீது விதிக்கப்பட்டன. நிலத்தில் ஊடுபயிராக விளைவிக்கப்பட்ட பயறு வகைகள் மீது கூட தனியாக வரி விதிக்கப்பட்டது. வட்டி நாழி தண்ணீர் பாய்ச்சுவதற்கான நாழிகையைக் கணக்கிட்டு வசூலிக்கப்பட்ட வரி ராசேந்திர சோழன் தன்னுடைய படைஎடுப்புக்காக ஒரு வேலி நிலத்திற்கு ஒரு கழஞ்சுப் பொன் வரி விதித் தான் என்று சதாசிவப் பண்டாரத்தார் எழுது வார். மிராஸ்தாரி என்ற நிலவரி முறை, படை நாயகம் செய்த பாளையப்பட்டு முறை எனப் பல்வேறு முறைகள் நடைமுறையில் இருந்தன. இவற்றைக் கண்ட ஆங்கிலேயர் பாளையக்காரர் களிடமிருந்த படையைக் கலைத்து, நீதி வழங்கும் அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டனர். பாளையக் காரர்கள் தாம் இருக்கும் பகுதியில் வரி வசூலித்து அரசுக்குச் செலுத்தும் உரிமையை மட்டும் பெற்றிருந்தனர். ஆங்கிலேயர் அவர்களுக்கு ஜமீன், ஜாகீர், மிட்டாதாரர், பட்டக்காரர் எனப் பெயர் மாற்றம் செய்து தமது விசுவாசிகளாக வைத்துக்கொண்டனர். இன்றைக்கு உலகமய மாக்கலென்ற பெயரில் நடத்தும் நிலம் சார்ந்த வளி சார்ந்த இயற்கைவளச் சுரண்டலை எதிர்த்து, சுற்றுச்சூழலை, சுவாசிக்கும் காற்றையே நஞ்சாக்கி விடும் மெகாகார்ப்பரேட்டுகளை எதிர்த்துப் பாதுகாப்பற்ற அணு உலைகளை எதிர்த்து ‘கீழைத்தேயயியம்’ என்றெல்லாம் கவலைப் படாமல் வீதியிறங்கிப் போராடுகிறோம் என்பது தான் உண்மை.

Pin It