லத்தீனும் சமஸ்கிருதமும்:

இத்தாலியில் லத்தீன் மொழி எவ்வாறு செவ்வியல் மற்றும் சாம்ராஜ்ய மொழிப் பெருமை பெற்று அதுவே நிறுவனமயமாக்கப்பட்ட சமய மடாதிகார அமைப்பின் மொழியாகத் தலைமைப் பீடத்தில் இறுகி வேறெந்த (வெகுஜன) வட்டார மொழிக்கும் இடம் கொடாமல் நூற்றாண்டுகளாக முரணான நிலைமையோடேயே ஆட்சியதிகார மொழியாகவும் தேவ பாஷை என்ற பெருமையுடன் வெகுஜன கலாசார பண்பாட்டு வேற்றுமைகளைக் குறிக்கவும் இன்றைய நவீனமொழி வளம் பெறு வதற்கான வேர்ச்சொல் அடியுமாகவும் புழங்கி வருகிறது. லத்தீனிலிருந்து உருவான இத்தாலிய மொழியானது தன்னை நிலைநிறுத்திக்கொள்ள லத்தீன் மொழியோடு எதிர்த்துப் போராடி ஒன்று பட்ட இத்தாலிய தேச இணைப்பில் தேசிய மொழி என்ற அந்தஸ்து பெற வேண்டியிருந்தது.

செவ்வியல் மற்றும் மத்திம கால இந்திய வரலாற்றில் சமஸ்கிருதத்தின் சமூக வரலாறும் இதே போன்றது. செவ்வியல் மற்றும் பிராமணி யத்தின் மொழியாகவும் சாம்ராஜ்ய ஆட்சியிலும், உயர் பண்பாட்டு அடையாளமாகவும் (இந்திய) வெகுஜன வட்டார மொழிகளோடு நூற்றாண்டு களாக எதிர்த்தும் எதிர்க்கப்பட்டும் குறைந்தபட்சம் வட இந்தியாவில் வட்டார மொழி உருவாகி வடிவமைத்துக் கொடுத்த மூலஸ்தானமாகவும் விளங்கிற்று. உலகளாவிய சமயமாகவோ மத்தியப் படுத்தப்பட்ட சர்ச்சாகவோ பிராமணியத்தால் ஒருபோதும் வரமுடியவில்லை. கத்தோலிக்க சர்ச்சைப் போன்று பெரும் சொத்துக்களுக்கு அதிகாரபூர்வ ஆதிபத்யத்தையும் எட்ட முடிய வில்லை. ஆனால் நம்பிக்கை (ஆன்மிகம்) என்ற அமைப்பு முறைக்குள் பெரும் ஜனத்தொகையை ஒன்றுபோல ஒரே சீராகக் கொண்டு வரமுடிந்தது மேல் பிராமணியத்தால். பக்தியின் அதிகாரத்தின் மொழிக்குள்ள தனிப்பட்ட உறவும் இந்திய அமைப்பு முறையின் சித்தாந்தக் காவலன் போன்ற ஏஜண்ட் வேலை பார்ப்பதன் மூலம் விவசாயியைச் சுரண்டி அடக்கவும் முடிந்தது. புரோகித அமைப்பின் மேல் தட்டு நெறிமுறைக் கட்டுக்குள் பின்னிக் கிடந்தது. இந்தப் புரோகிதத் தொழிலுக்குக் கன கச்சிதமாக சமஸ்கிருதம் பொருந்தி வந்தது. சாஸ்திரிய அறிவும் மேல்தட்டு பிராமணிய சமஸ்கிருதமும் எந்தவொரு வரலாற்று முக்கியத்துவமும் பெறமுடியவில்லை.

சமஸ்கிருதத்திற்கு எதிராக வெகுஜன வட்டார மொழி பல பண்பாட்டுப் போராட்டங்களை நடத்தியது. தேசிய அளவில் பிராமணிய செவ்வியலும் சமஸ்கிருதமும் கைகோத்து நடத்திய மேலதிகாரப் போக்கிற்கு எதிராகவும் கலாசாரப் போரை நடத்த வேண்டியிருந்தது.

வெறும் பண்டித மேட்டிமைக்காக உயிர் வாழ்ந்த அந்தச் செவ்வியல் கால மொழி காலப் போக்கில் பின்தங்கிப் போயிற்று. ஆனால் இருபெரும் வளர்ச்சி பின்வரும் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தன. முதலாவதாக, சமஸ்கிருதத்திற்கு மாற்றாக வேறெந்த வெகுஜன வட்டார மொழியையும் ஆட்சி மொழி யளவுக்கு இந்தியாவில் வளர்த்தெடுக்கப்படவில்லை. (செம்மொழிக்கும் பேச்சு மொழிக்கும் ஓர் இயங்கியல் உறவு உண்டு) அரசு உருவாக்கத்தில் முக்கிய பங்கை வட்டார மொழிக்கு உரிமை அளித்து மொழிவாரி ஆட்சி புரிந்த ராஜ்யங்கள்கூட வட இந்திய சாம்ராஜ்ய நகர அரசுகளோடு போட்டி போட முடியவில்லை அல்லது மாறும் நிலையிலுள்ள குறுநில மன்னராட்சி யாகவே பின்தங்கிவிட்டது. அதே சமயம் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக, முதலில் பார்ஸியும் (உருதுவும் ஹிந்தி மொழியும்) பின்னால் ஆங்கிலமும் முன்னுக்கு வந்தது. ஆங்கிலப் புலமை, சரளம் இன்றைய இந்தியாவில் ஒரு தகுதியாகவே பார்க்கப்படுகிறது.

கிராம்சி காலத்து சார்டியர்களுக்குள்ளே டஸ்கன் மொழிப் புலமை மற்றும் சரளம் இதேபோல பார்க்கப்பட்டது. இன்றைக்கு பாசிச அறிவு ஜீவிகள், பாரம்பரிய அறிவுஜீவித போர்வையில் நம்மிடையே உலா வருகின்றனர். செவ்வியல் படைப்புக்களை மிகுந்த அக்கறையுடன் உள்வாங்கி மீட்டுருவாக்கம் செய்து பழைய பிராமணிய உலகைச் சந்தையில் விலை போகக் கூடிய இந்துத்வாவாக மெருகேற்றி நவீன மரபான மதச்சார்பின்மை, சோசலிசம், அடிப்படை அறிவுப் பார்வை, மத சகிப்புத் தன்மை மற்றும் பன்முகப் பார்வை போன்றவைகளுக்கு எதிராகப் புதிய சித்தாந்தம் போல் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் அறிவுச் சந்தையில் கூவி விற்கின்றனர்.

நிறுவனமயமாக்கப்பட்ட பேரரசும் பெருந் தெய்வ மடாதிபதிகளும் இணைந்து ஆட்சி புரிந்த லத்தீனிய கலாசார செழுமையில் வீற்றிருந்த இத்தாலிய வரலாறு புராதன நாகரிகப் புகழ் பெற்று வாழ்ந்த இத்தாலிய வரலாறு இன்றைக்கு நாம் பார்க்கின்ற இத்தாலி, ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திகழ்ந்த ஒன்றிணைந்த அரசியல் வாழ்க்கையாக இனி ஒருபோதும் இருக்காது. சார்டினியாவிலிருந்து கிளம்பி வந்த யுவராஜன், முதலாம் உலகப்போரின் இறுதிவாக்கில் டூரின் தொழிற்சங்கத் தலைவனாகிப் பின்னர் இத்தாலிய கம்யூனிசத்தின் பிதாமகனாக வளர்ச்சி அடைந்த கிராம்சியின் காலகட்டமென்பது கலாசார பண்பாட்டு சிதிலமடைந்து பிளவுபட்டுக் கிடந்த இத்தாலி தான். மிஞ்சிற்று பெரும்புகழ் நாகரிக ஆழமும் அதே சமயம் சிதிலமடைந்து கிடக்கும் தேசப் பிரிவினையும் என்ற முரண் கிராம்சிய பார்வையில் இரண்டுங்கெட்ட தோல்வியாகும்.

சீர்திருத்தம் என்ற பெயரில் இத்தாலிய கலாசார பண்பாட்டு ஒருங்கிணைப்பு மறுமலர்ச்சி (அடைந்த) தோல்வியும் கனவான ஒன்றிணைந்த இத்தாலியை உருவாக்குவதில் அடைந்த தோல்வியும் ஆகும். அரசியல் சேர்மானம் நிகழ்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால் வாடிகனை மீறி மதச்சார்பற்ற கலாசார இணைப்பு என்பது, அது முதலாளித்துவ பாணியிலமைந்த தேசிய வெகுஜன எழுச்சியில் பூர்ஷுவாக்களின் தேசிய திட்டத்தில் விவசாயி நலனையும் இணைத்துக் கொண்டதில் ஏற்பட்ட தோல்வி. இவ்விரு தோல்விகளையும் கண்டித்து கிராம்சி பல கட்டுரைகளை எழுதினார்.

மறுமலர்ச்சி இயக்கம் தோல்வியுற்றதற்குக் காரணமாக கிராம்சி, மத நிறுவனங்களின் நிலைப்பாட்டையும், லத்தீனுடைய அழுத்தம் என்பது இத்தாலிய அறிவுஜீவிகளுக்கு தேசிய உணர்வுக்குப் பதிலாகப் பன்னாட்டுப் பார்வையையும் பெருங் கண்ட செயல்பாட்டையும் தந்ததையும் சுட்டிக் காட்டினார். மத நிறுவன - அறிவு ஜீவித சீரமைப்பை வென்றெடுப்பதில் கண்ட தோல்விக்கும் பெருங் கொண்ட நாகரிக ஆழத்திலிருந்து நவீன தேசிய அரசை உருவாக்குவதில் ஏற்பட்ட தோல்விக்குமான காரணம் ஒன்றுதான். இது கலாசார தளத்தில் ஏற்பட்டதோ அல்லது தேசிய ஒருமைப்பாட்டில் நிகழ்ந்த தோல்வியோ அல்ல. மொத்த தோல்விக்கும் காரணம் சமூகம் முழுமையையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தங்குதடையற்ற சர்ச் மடாதிபதிகள்தான்.

இத்தாலிய பியூரிடன் மாதிரியிலான உள்நாட்டு பூர்ஷுவா புரட்சிகூட நடைபெற வில்லை. முற்போக்கு சக்திகளிடையே வலுவான ஒற்றுமை இல்லாதது, பிராந்திய அமைப்புச் சக்தி களின் பிரிவினை மனோபாவத்தால் நாட்டு ஒருமைப் பாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவு, வியாபாரிகளின் மூலதனக் குவிப்பும் சிதறலும், விவசாயப் புரட்சி நிகழாதது, புரட்சிகர எழுச்சியைத் தூண்டும் விதத்தில் இலக்கிய மறுமலர்ச்சி, பூர்ஷுவா பாணியில்கூடப் படைப்பு நகர்வு இல்லாதது - ஆக மொத்தம் உள்நாட்டுப் போரினால் சிதறிய இத்தாலி வெளிநாட்டு இராணுவத்திற்கும் கொள்ளையருக்கும் இரையானது; சமூகம் மேலும் சிதறுண்டு எதிர் பார்த்த தொழிற்சமூகம்கூட உருவாகவில்லை.

கம்யூனிச புரட்சியின் பின்விளைவுகளைப் போல தேசியவாதத்தின் பின்விளைவுகள் என்ன? என்ற கிராம்சிய கேள்விக்குச் செவ்வியல் புகழும் பேரரசின் பெருமையும் கொண்ட இத்தாலிய வெகுஜனங்களோடு ஒட்டி உறவாடும் சக்தியாக மொழி உணர்வோ தேசிய உணர்வோ அல்ல சமய சித்தாந்தமே பூர்ஷுவா புரட்சி நடைபெறாமல் போனதற்கும் இத்தாலிய கலாசார சிதறலுக்கும் காரணம். வட இத்தாலிய பாட்டாளி வர்க்கத்துக்கும் தென்னக விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் இடையே எந்தவித சமூக - கலாசார பண்பாட்டு ஈர்ப்பும் இல்லாது தேச ஒருமைப்பாடு அற்றுப் போய் தேசிய பூர்ஷுவாக்கள் விவசாய வெகு ஜனங்களைச் சுரண்டிக் கொழுத்ததன் விளைவு தொழில்வள நகரமாக்கும் திட்டமிடலுக்கு நகர முடிந்தது. வலுவான முதலாளித்துவ கட்டுமானம் இல்லாமலேயே நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட தன் விளைவு புதிய பின் நிலப்பிரபுத்துவ அமைப்பு தோன்றி மிச்சசொச்ச எஜமான விசுவாசத்தில் வாழும் விவசாயிகள் விவசாயத் தொழிலாளிகள் தேசிய பூர்ஷுவாக்களின் அடக்குமுறைக்குள் அகப்பட்டு விவசாயி - பாட்டாளி இணைப்பு அற்ற தொழில்மய மண்டலமாக இத்தாலியின் சொத்துடைமை பகுதிகளாகவும், மையம் - விளிம்பு, தொழில் கொழிக்கும் நகரம் - நாட்டுப்புறம் என்று காலனிய ஆட்சிமுறை வடிவில் சிதறலுற்றது.

வெகுஜன ஒப்புதலுக்கும் (அவர்களை) மேலதிகாரத்துக்குள் வைத்துக்கொள்வதற்குமான உறவு - சாத்தியப்பாடு என்கின்ற ஒற்றைத் தேடலின் மூன்று வித தளங்களில் கிராம்சியின் கருத்தாக்கம் உருப்பெறுகிறது. கோட்பாடாக்கத்தின் மூலாதாரமே வலுவான அனுபவ உள்வாங்கல்தான். பங்கு கொள்வது மூலம்தான் (எந்தவொரு) கருத்தாக்கமும் கோட்பாடாக்கமும் ஒரு புரிதல் வடிவம் பெறுகிறது. எந்தவொரு அரசியலும் அது ஏற்கனவே பழக்கப் பட்ட பொது விவேகமாகப் புழக்கத்திலிருந்தால் தான் புரட்சியை நோக்கிய வீறுகொண்ட பாதையில் தேசிய - வெகுஜன உணர்வு மட்டத்தில் வெளிப் பட்டு நடைமுறைக்குச் செயல்திட்டமாக அமையும் - லெனினிய அர்த்தத்தில் தகுதிக்கான போர் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கையிலெடுக்க முடியும்.

பாசிசத்தின் அதிகாரத்தை அமைப்பிய பகுப் பாய்விலிருந்து பாசிசத்தின் அரசியல் மேற் கட்டமைப்பு அதாவது கலாசார பண்பாட்டுச் சித்தாந்த முக்கியத்துவத்தில்தான் இத்தாலிய சமூக உருவாக்கமும் ரோம சாம்ராஜ்ய கட்டமைப்பும் லத்தீனிய சர்ச்சின் மேலதிகார ஆக்கிரமிப்பும் வலுவடைகின்றன.

இந்தியாவில் பாசிச சொல்லாடல்

பாசிசம் ஏதோ மேலோட்டமான, சமூக மேற் கட்டமைப்பின் நிகழ்வு என்று புரிந்துகொண்டு எளிதில் வீழ்ந்து போகக்கூடிய தத்துவமாக - பாசிச இந்துத்வாவையும் நாம் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறோம். மதச்சார்பற்ற, பாசிசமற்ற ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மலிந்துவிட்ட இன்றைய அரசியலில் இடதுசாரிகளுக்கு பார்லி மென்ட் எம்பிக்கள் பலத்தில் வாழும் நமக்கு பாசிச இந்துத்வா குறித்த புரிதல், ஒரே மாதிரியான புரிதல் தளத்தில் நிலைகொள்ளாமல் இருந்த போதிலும் அனைத்துக் கட்சி பாசிச எதிர்ப்பாக ஓரணியில் திரளும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

பாசிசத்தின் தர்மகர்த்தாக்கள் யாரென்றால் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து வெளித் தள்ளப்பட்டவர்களும் வரலாற்று முக்கியத்துவம் தேடுபவர்களுமே. தேசியவாதம் பாசிசத்தின் கூட்டாளி. தேசியவாதம் ஒரு பாசிச சொல்லாடல். மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி பேசும் தேசிய பாரம்பரியத்திலிருந்து, மரபிலிருந்து மாறுபட்டது பாசிச இந்துத்வா சொல்லாடல்.

விளிம்பு நிலை (கீழிருந்து புரட்சி?) மக்கள்:

விவசாயி உலகப் பார்வையை, கட்டமைப்பை உருவாக்குவதில் கத்தோலிக்கத்தின் திட்டங்கள் குறித்த ஆய்வுக்குள் சென்றோமானால் இந்திய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மலை வாழ், காடுவாழ் ஆதிவாசி விளிம்புநிலை மக்கள் வெளிப்படுத்தும் ஜாதி உணர்வைத் தூண்டியவர்கள் யார் என இனங்காணலாம். இத்தாலிய சுதந்திரத்திற்குப் பிறகு பெரும் புகழ் செவ்வியல் பாரம்பரியமிக்க அரை - தொழிற்சாலை சமூகங்கள் உருவான கால கட்டத்தில் பாசிசம் மேற்கொண்ட வடிவம் போல் இன்றைக்கு பாசிச இந்துத்வாவின் வடிவம் சமூகத்தைச் சூறையாடுகிறது. இந்திய அரசியல் சூழல் என்பது மதச்சார்பின்மைக்கும் கம்யூனிசத் திற்குமான போராட்டமல்ல மாறாக சோசலிச கட்டுமானத்திற்கும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல வடிவமெடுக்கும் பாசிசத்திற்குமான போராட்டமே.

பாசிச இந்துத்வா

இந்துத்வா இயக்கம், கிராம்சி சொன்னது போல ‘தகுதிக்கான போர்’ மற்றும் ‘இயக்கத்திற்கான போர்’ தந்திர முறைகளைக் கையாண்டு அதனுடைய அரசியல் திட்டத்தின்படி முன்னேறுகிறது. இன்றைக்கும் தேசிய கல்வித் திட்டம், சமச்சீர் கல்வித் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் களத்தில் இறங்கி மதச்சார்பற்ற கல்வித் திட்டத்தைப் பாதுகாக்கவும் அதல்லாத வேறு கல்வித் திட்டங்கள் கொண்டு வரப்படுவதை எதிர்த்தும், கற்பிதத்தையும் வரலாற்றையும் அருகருகே வைத்துப் பார்க்கும் அதே போல் பொய் விஞ்ஞானத்தை அடிப்படை விஞ்ஞானம் போல் வைத்துப் பார்த்து தகுதியை எட்ட வைக்க முனையும் பிற்போக்குத் தனத்தையும் கண்டித்துப் போராட்டக் களத்திலிறங்கியுள்ளனர். இந்தியாவுக்கு வலுவாக எதிர்த்துப் போராடும் ஒரு பெரும் மதச்சார்பற்ற அறிவு ஜீவி அணி வாய்த்திருக்கிறது.

விளிம்புநிலை (மக்கள்) ஆய்வுப் பல்கலைக் கழகத்தாரால் ஆரம்பத்தில் கிராம்சிய பார்வையில் பந்தாவாக துவக்கி கடைசியில் கம்யூனிஸ்டு உரிமைக்கு எதிரான கோஷமாக ஆய்வை முடிக்கின்றனர். விளிம்புநிலை ஆய்வுகள் மார்க்சியத்திற்கு எதிரான ஒரு குரலை முன்நிறுத்துகிறது. பாசிச இந்துத்வாவின் இந்தியச் சொல்லாடல் வெளிநாட்டு நிதியத்தின் ஆசிபெற்று ஒரு வலுவான அறிவுஜீவிக் குழுவினரைக் களமிறக்கியிருக்கிறது. பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த மேற்கத்திய தத்துவமும் இந்திய சூழலுக்குப் பொருந்தாது என்ற கோஷத்துடன் முதலாளித்துவத்தையும் சோசலிசத்தையும் அவை வர்க்கப் பகைமையையும், போட்டி பொறாமை தலைவிரித்தாடும் சமூகச் சூழலில் தனிமனித சமூகப் பாதுகாப்பும் முன்னேற்றத்தையும் மறுதலிக்கும் ஒரு ஒட்டுமொத்த சமூகக் கொடுங்கோன்மையை நிகழ்த்துகின்றன என்ற ஓங்கிய குரலுடன் அனைத்து இந்தியப் பிரஜையும் ஒரு பொதுவான பண்பாட்டு வரலாற்று, இன, மூதாதையர் வழியைப் பின்பற்ற வேண்டுமென்பதே பாசிச இந்துத்வாவின் பண்பாட்டு தேசியம் ஆகும். வேற்றுமையில் பண்பாட்டு ஒற்றுமை காணும் நாடு இந்தியா. சடங்குகள், பாரம்பரியங்கள், மரபுகள், வழிபாட்டு முறைகள் அனைத்தையும் இணைக்கும் ஊடுபாவாக இந்திய பண்பாட்டு தேசியம் அமையும். அனைத்து இந்து நாட்டினருக்கும் ஒரே தத்துவம், ஒரே மதிப்பீடுகள், ஒரே லட்சியம் அதுவே ஒரு தேசத்தின் வலுவான நாகரிக பண்பாட்டு அடிப் படையாக அமையும். பாரதமே எங்கள் தாய்நாடு, தந்தையர் நாடு, புண்ய பூமி - அகண்ட பாரதம்.

சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் இந்து சமூகம் பிளவுண்டு கிடக்கிறது. சமூகத்தில் அசம நிலையேற்பட்டு தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகள், அநீதிகள் பல்கிப் பெருகின. தலித் சமூகத்தை தலைமையிடத்துக்கு உயர்த்திட வேண்டும். ஒரே குடிமைச் சட்டத்தின் கீழ் இந்தியர் அனைவரையும் ஒன்றிணைத்து முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் முன்னுரிமையை ரத்து செய்து உண்மையான மதச்சார்பற்ற தேசமாக இந்தியாவை வலுப்படுத்த வேண்டும். ஆரிய இன சித்தாந்த மேலாண்மைக்கான வடிவமே பாசிச இந்துத்வா முன்வைக்கும் பண்பாட்டு தேசியம் என்ற கோஷம்...

Pin It