1. இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோயில் களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இயக்கத்தினை அறிந்துகொள்ள கல்வெட்டுச் சான்றுகளையும் பக்தி இலக்கியங்களையும் முதன்மைச் சான்று களாகக் கொள்வதுடன் கோயில்களில் நிகழ்த்தப் படும் விழாக்களின் கூறுகளையும் ஆய்தல் வேண்டும். கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு சமூகக் காரணி உண்டு. தமிழகத்து ஊர்க் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்விற்குப் பிறகு நிகழும் சமூகப் போக்குகளை மானிடவியல் பின்புலத்தில் அறிதல் நலம். காப்பு கட்டுதல் மூலம் ஓர் ஊரின் உறுப்பினர்கள் ஊரினைவிட்டு வெளியேறாமல் இருத்தி வைத்தல் என்பது Working forces தக்க வைத்துக்கொள்ளப்படுவதனையும் உள்ளூர்க் குள்ளேயே relations of productions உறுதிப்படுத்தப் படுவதனையும் காட்டுகிறது. இடைக்காலத்து நிலவுடைமைச் சமூகம், கோயில் நிறுவனங்களின் மூலம் வரைந்த இவ்வெழுதாச் சட்டம் இன்று வரைக்கும் நடைமுறையில் செயல்படுவதனை oriental cultureன் ஒரு கூறு எனலாம்.

கோயில்விழா நடைமுறைகளில் கோயில்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு சடங்குகளில் பதியப்படுகிறது. இதுபோன்ற நடப்புகள் கோயில் ஒழுகு என்ற நூலில் ஸ்ரீரங்கம் கோயிலின் வரலாறு பதியப்பட்டுள்ளது. பலவகைச் சான்றுகளைக் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அன்றாட நடைமுறையினை மானிடவியல் பின்னணியில் புல்லர் ஆய்ந்தார். கே.கே.பிள்ளையின் சுசீந்திரம் கோயிலாய்வு தருக்க முறையில் அமைய வில்லையென்றாலும் கோயில் நிர்வாகம் பற்றிய தொடக்க நிலை ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது. பி.சுரேஷ் பிள்ளையின் தஞ்சைப் பெருவுடையார் கோயில் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தே அக் கோயிலின் சமூக இருப்பினை நா.வானமாமலை, ஜார்ஜ் டபிள்யூ. ஸ்பென்சர் போன்றோர் ஆய்வினை மேற்கொண்டனர். சோழர் காலக் கோயிலின் சமூக ஊடாட்டத்தினைத் தனியொருவர் முழுமையாக ஆயவியலாது. சோழர்களின் தொடக்க காலக் கோயில்கள் சோழ நாட்டின் விளிம்புநிலைப் பகுதிகளான புதுக்கோட்டை, திருச்செந்துறை, பழுவூர் போன்ற இடங்களில்தான் அமைந்துள்ளன. நேர்த்தியாகக் கட்டப்பட்ட இவற்றைவிடவும் தலைநகர் கோயில்களான தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில், இராஜராஜபுரத்து கோயில்கள் போன்றன அரசு நிறுவனங்களாகவே பெயர் பெற்றன.

தமிழகத்தில் பல்லவர், பாண்டியர் எழுச்சியினை ஒட்டி எழுந்த கோயில்கள் அரசியல் - சடங்கு ஊடகங்களாகச் செயல்பட்டன. காஞ்சி கைலாச நாதர் கோயிலின் முடிசூட்டுவிழாவினைக் காட்டும் புடைப்புச் சிற்பம், கோயில்கள், அரசு நிறுவனங்கள் என்பதனைச் செதுக்கிச் சொல்கின்றன. தமிழகத்தில் சில புகழ்பெற்ற கோயில்களின் அருகிலேயே அதே பெயரில் பிறிதொரு பழங்கோயில் வழிபாட்டில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. காட்டாக, பாடல் பெற்ற தலமான திருக்கடையூர் கோயிலின் அருகிலேயே மூன்று கி.மீ. தொலைவில் பழங் கோயில் ஒன்றுண்டு. புதுக்கோட்டை வட்டாரத்தில் இதுபோன்ற போக்கினை வெகுவாகக் காணலாம்.

திருக்கோகர்ணம், நார்த்தாமலை, குடுமியான் மலை, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் இரண்டு சதுர கி.மீ. பரப்பளவிற்குள்ளேயே குகைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் குமிழி - மடைகள் கொண்ட பாசனக் குளங்களும், ஊரிருக்கைகளும் அமைந்துள்ளன. இவற்றினருகிலேயே மரப்புதர்களிடையே மக்கள் வழிபடும் தெய்வக் கூட்டங்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவற்றைத் தொல்குடிகளின் வழிபாட்டுத் தலங்கள் எனலாம். காவிரிச் சமவெளியில் தொல்குடிகளின் வழிபாட்டுத் தலங்களாக இருந்து பாடல் பெற்ற பக்தி இயக்கத்தலங்களாக மாறிய பெரும்பாலான கோயில்கள் இன்றைக்கும் வழிபாட்டு நிறுவனங் களாக உள்ளன. மன்னர்கள் விருப்பத்திற்கேற்றபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தலைநகர்க் கோயில்கள் இன்றைக்குச் சுற்றுலாத் தலங்களாக மாறிப்போயின. காரணம், அவை பாடல் பெறாத தலங்கள் என்பதால் மட்டுமல்ல, அவை தொல் குடிகளின் வழிபாட்டுத் தலங்களாகவும் இருந்த தில்லை என்பதாலும் தான்.

2.     மேற்சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டோமானால் வல்லிபுரம் மகேஸ்வரன் ஆய்ந்து எழுதிய சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும் என்ற நூலினைப் புரிந்துகொள்வது எளிது. இடைக்காலத் தமிழக வரலாற்றினைப் புரிந்துகொள்ளத் தமிழறிஞரும் வரலாற்றறிஞரும் போட்டி போட்டுக்கொண்டு முயன்றுள்ளனர். தொட்டால் பட்டியல் நீளும். சென்ற நூற்றாண்டின் கடைக்கூற்றில் புதிய புதிய நோக்குடன் சோழர் காலத்துச் சமூகத்தினையும், அரசியலையும் நாம் பார்ப்பதற்கு அறிஞர் பலர் கற்றுத் தந்துள்ளனர். தா.த. கோசாம்பி தொடங்கி வைத்த புள்ளியியல் முறைக்குப் புத்துயிர் தந்து இடைக்காலத் தமிழர் சமூகத்தினை அணுகுதற்குப் புதுவழி வகுத்தவர் நொ.கரசிமாவும், எ.சுப்பராயலுமாவர். இப்பரம்பரை வரிசையில் வரும் இந்நூலாசிரியரும் புள்ளியியல் முறையினை ஓர் உத்தியாக்கி ஆய்வினை மேற் கொண்டுள்ளார். பலனாக, சில புதிய முடிவுகளுக்கு வருகிறார்.

3.     சோழர் காலத்து சமூகப் போக்குகளைக் கண்டறியப் பரந்து விரிந்த சோழர் நிலப்பரப்பின் வெவ்வேறு திணைகளில் அமைந்த குறுநில வட்டங் களைத் தெரிவு செய்து அவ்வட்டங்களிலுள்ள கல்வெட்டுக்களைப் பகுப்பாய்வு செய்து கருத்துக் களைப் பெறுவது ஆய்வு முறையில் ஓர் உத்தியாகும். இம்முறையினை முதலில் அறிமுகப்படுத்தியவர் நொ.கரசிமா ஆவார். காவிரிபாயும் நிலப்பரப்பின் இருவேறு திணைப் பகுதிகளிலுள்ள கல்வெட்டுக் களை ஒப்பாய்வு செய்து ஆசிய உற்பத்திமுறை என்ற கோட்பாட்டினைத் தம் நூலில் சோதித்துள்ளார் (1984). இதே ஆய்வு முறையினைப் பயன்படுத்தி கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருக்கோயிலூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை என்ற வெவ் வேறு திணைகளில் கிடைக்கும் சோழர் கல்வெட்டுக் களைத் தொகுத்தாய்வு செய்து சோழர் கால உற்பத்தி முறையினை ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மன் ஆய்ந்தார் (1997). இவ்வரிசையில் சோழர் காலத்துப் பெண்களின் நிலை பற்றி ஆய்ந்த லெஸ்லி ஓர் வெவ்வேறு திணைகளில் அமைந்த ஏழு குறுநில வட்டங்களைத் தெரிவு செய்துள்ளார் (2002). இங்கு வல்லிபுரம் மகேஸ்வரன் காவிரியின் வளமை கொழிக்கும் மையப் பகுதிகளிலிருந்து (திருவாரூர், திருவையாறு, திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர்) கல்வெட்டுத் தரவுகளை ஆய்ந்துள்ளார். நொ.கரசிமா, எ.சுப்பராயலு வகுத்த காலப் பிரிவினை அடியொற்றித் தடம் பிறழாமல் சில முடிவுகளைத் தருகிறார்.

4.     கல்வெட்டுக்களை முதன்மைச் சான்று களாகக் கொண்டு வரலாற்றை ஆய்வோருக்குத் தமிழ் இலக்கியத்தில் நேரிய பயிற்சி இருக்குமாயின் அவர்கள் ஆய்வில் எப்படிப் பரிணமிப்பர் என்பதற்கு ஆ.வேலுப்பிள்ளை நல்லதோர் முன்னுதாரணம். அவரிடம் பயின்ற இந்நூலாசிரியருக்கும் அத்திறம் உள்ளது. இலக்கியச் சான்றுகளையும், கல்வெட்டுச் சான்றுகளையும் பயன்படுத்திய கோயில் என்ற சொல்லாய்வு இவரின் தனித்திறம். ஆனால் சங்க காலத்தின் பரத்தையர் பின்னாட்களில் தோன்றப் போகும் தளிச்சேரிப் பெண்டுகளுக்கு முன்னோர் என்று சொல்லத் துணியும் கருத்தினை மீளாய்வு செய்ய வேண்டும். இது பரத்தையரையும், கோயில் பெண்டிரையும் இழிவாகப் பார்த்ததன் வெளிப்பாடு, வெகுண்டெழுந்த நிலவுடைமைச் சமூகத்தின் உடனிகழ்ச்சியாகத் தாய்வழிச் சமூகத்தின் எச்சசொச்ச கூறாக இல்பரத்தையர், சேரிப்பரத்தையரைப் பார்க்க வேண்டும். சங்க காலத்தில் புறக்கணிக்கப் பட்டது போல் இடைக்காலத்தில் இத்தாய்வழிச் சமூகத்தின் செல்விகளைப் புறக்கணிக்க முடியாமலே அவர்களை அரசர்கள் மணந்ததும் அவர்களின் உரிமைச் சுற்றம் கோயில் பெண்டிரானதும், சோழர் காலத்துக்குள்ளேயே இவர்களின் பொருளியல் அந்தஸ்து தளர்ச்சியுற்றது என்ற வல்லிபுரம் மகேஸ்வரன் முடிவு காண்கிறார். சரிதான், ஆட்சிப் படியிலிருந்து நெகிழ்ந்து வெளிவந்தனர் என்பதனை சமூக இறுக்கத்தின் ஒரு வகையான தளர்ச்சி என்று கொள்வோம். தளிச்சேரிப் பெண்டு களுக்கும், கோயில்களுக்கும் இடையிலான உறவினை மானிடவியல் பின்னணியிலும் பார்க்கலாம்.

திருவாரூர், திருவிடைமருதூர், திருவையாறு போன்ற ஊர்களின் தளிச்சேரிப் பெண்டுகள் என்பன தேங்கியிருந்த தாய்வழிச் சமூகத்தின் நிறுவனங்கள் எனலாம். இடைக்காலத்தில் எந்தெந்த ஊர்களின் கோயில்களிலெல்லாம் தளிச்சேரிப் பெண்டுகள் இருந்தார்களோ (தலைநகர் கோயில் களைத் தவிர்த்து) அவ்வூர்கள் எல்லாம் தாய்வழிச் சமூகங்களின் தளங்களாக செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வூர்களிலுள்ள கோயில்களைக் களஆய்வு செய்கையில் அக்கோயில்கள் வழிபாட்டுத் தளங்கள் என்பதனையும் தாண்டி இன்றைய சமூக நடை முறைகளையும், குறிப்பாக மருத்துவம், கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அண்மைக் காலம்வரை தேவதாசி முறைக்குப் பெயர் போன மூவலூர் என்ற ஊரிலுள்ள கோயிலில் யானை பிரசவிக்கும் காட்சி சுற்றாலைச் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தாய்வழிச் சமூகத்தின் அடையாளம் என்றே கொள்ளலாம்.

பிரசவ தைலத்திற்குப் பெயர் போன திருக்கருகாவூர் கோயில் காற்றோட்டமுள்ள ஒரு யசஉhவைலயெட மருத்துவமனை போன்று தோற்றமளிக்கிறது. திருநீறு மருந்திற்குப் பெயர் போன வைத்தீஸ்வரன் கோயில் தேவதாசி முறைக்குப் பெயர் போன ஒன்று. 1970களில் அவ்வூரின் சில தெருக்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விளம்பரப் பலகைகள் இருந்தன. ஆடல் சிற்பங்கள் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கோயில் பெண்டிர் இருந்திருப்பர். அங்குப் பெண்களே பூசாரிகளாகவும் இருந்திருப்பர். திருவானைக்கா கோயிலின் ஆண்பூசாரி உச்சி காலைப் பூசையினைப் பெண் வேடமிட்டு நடத்துகிறார். சீர்காழியில் ஒரு தேவி கோயிலின் பூசனை வேலைகளைத் தலைமுறை தலைமுறையாகப் பெண்களே செய்கின்றனர். நடன சிற்பங்களைக் கொண்டுள்ள தில்லையம்மன் கோயில் பூசனைகளை அண்மைக் காலம் வரை பெண்தான் நடத்தி வந்திருக்கிறார்.

5.     கோயில் பெயர்கள், கடவுள் பெயர்கள் பற்றிய இவரின் ஆய்வு தொடத்தொட வளரும் போலுள்ளது. இப்பகுதி புதிய தரவுகளைத் தருகின்றன. இளங்கோயில் என்பது கோயில் வகை களில் ஒன்றைக் குறிக்குமா? வேறு பொருளுண்டா? என்று ஆயலாம். புதுக்கோட்டைப் பகுதியில் கோனாடு, இளங்கோனாடு என்று நாட்டுப் பிரிவுகள் உண்டு. சார் என்றொரு ஊரும், இளஞ்சார் என்று பிறிதொரு ஊரும் இருந்துள்ளன. சித்தன்னவாசல் கல்வெட்டில் இளையர் என்ற சொல் உள்ளது. சித்தன்னவாசலுக்கருகே, அன்னவாசல் என்றொரு ஊரும் உண்டு. இனக்குழு உடைபட்டு இளைய குழு புதியதொரு ஊர்ப் பகுதியினை வரலாற்றுக் காலங்களில் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படி உருவான குழு தமக்கென்று இளங் கோயில் ஒன்றினையும் உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்புண்டு. ஆகமமுறைப்படி கோயில்கள் கட்டப்படவில்லை என்பது தெரிந்த ஒன்று.

6.     கோயிலும் இடையரும், கோயிலும் நிர்வாகமும் என்று தலைப்பிட்ட இயல்கள் புதிய புதிய முடிவுகளைத் தருகின்றன. ஸ்ரீகார்யம் பற்றித் தரப்பட்டுள்ள பட்டியல்கள் அத்துறையில் ஆய்வோர்க்குப் பயனுள்ளது. சான்றுகளை இவரே தேடித் தந்துள்ளார். கோயிலும் நிர்வாகமும் இயலில் (கோயில்கள் ஆட்சி மன்றங்கள் போன்றன) அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலான மேனிலைச் சமூகங்களினது சங்கமமாகவும் இவ் வமைப்புகள் இருந்தன என்பதில் முக்கால் பங்கு உண்மையுள்ளது. போர்க் குலத்தவரையும் சேர்க்கும் போது முழு உண்மையும் கிட்டும். போர்க் குலத்தவரான பாடிகாவல் வரி வசூலிப்பவரை அப்பர் சாடியதாக அண்மையில் ர.பூங்குன்றன் சுட்டியுள்ளார் (2008).

7.     ஆள் பெயர்கள் இடப்பட்டுள்ள பட்டியலில் கஞ்சன், குப்பை என்பனவற்றை இழிந்த பெயர் என்று நூலாசிரியர் குறிப்பிடுதல் சரியன்று. கஞ்சன் என்ற சொல் பொன்னை உடையவன் என்று பொருள்படும். குப்பை என்ற பழந்தமிழ்ச் சொல்லிற்குத் தானியக் குவியல், செல்வநிதி என்றும் பொருளுண்டு. நெற்குப்பை, உளுத்துக் குப்பை என்று ஊர்ப் பெயர்கள் தமிழகத்தில் உண்டு.

8.     சோழர் காலத்தில் கோயில்கள் என்ற இயலில் சமூகத்திலும், அரசாட்சியிலும் பல நிலைகளிலும் இருந்துவந்த கடவுளரைப்பற்றி ஆய்ந்துள்ளார். கல்வெட்டுக்களில் பரவலாக பிடாரி கோயில்கள் இவரால் சுட்டப்படுவதனை ஆய்வுக் களத்திற்கு இழுக்க வேண்டும். புறநிலையில் அரச கட்டமைப்பிற்கு வெளியில் நின்று இதுபோன்ற கோயில்கள் மக்களுடன் இயைந்து வருகின்றன. இதுபோன்ற கோயில்கள் போர்க்குலத்தவர் கனிசமாக வாழும் பகுதிகளிலேயே இயங்குவன. தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவெட்பூர் மாரியம்மன் கோயில், வேளாண்கன்னியாக இருந்து அன்னையாக மாறியதாகச் சொல்லப்படும் வேளாங்கண்ணி மாதாகோயில் போன்றவற்றை இப்பின்னணியில் பார்க்க வேண்டும். இங்கெல்லாம் ஆட்சியாளர்கள் பணிய வேண்டியிருந்தது. பிடாரிகளைக் கண்டு குனிய வேண்டியிருந்தது.

9.     பள்ளிப்படைக் கோயில்கள், அரசுக் கோயில்கள் இரண்டின் இருப்பினையும் தெளி வாக்கி விளக்கியிருக்கிறார். கடவுள், அரசன் பற்றிய வாதங்களுக்கு இது நல்லதோர் முன்னேர். இந்தியாவின் வடபுலத்தில் இறைவனே அவதார மெடுத்து அரசனாகி ஆளுதல் வேண்டும் என்று எண்ணப்பட்டது. அதனால்தான் விஷ்ணு என்ற கடவுளின் அவதாரமாக இராமன் அரசனாக வரவேற்கப்பட்டான். இந்திரனின் தன்மை கொண்ட நர அரசனான தசரதன் மடிய நேர்ந்தது. அங்கு, தேவன் அரசனாக வேண்டுமென்று எதிர்பார்க்கப் பட்டது. தமிழகத்தில் ராஜன் இந்திரனாக அதாவது கடவுளாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவேதான் இங்கு இராஜேந்திரன், வடக்கில் தேவன் இராஜனான்; தெற்கில் இராஜன் தேவனான். எனவேதான் கோயில் அரசனின் இருப்பிடத்தினையும் சுட்டுகிறது. ஆண்டவனின் இருப்பிடத்தினையும் சுட்டுகிறது. என்றாலும், ஆண்டு மாண்டுபோன மன்னர்களுக்குச் சுட்டப் பட்ட பள்ளிப்படைக் கோயில்கள் தத்துவ வறட்சி கொண்ட அகப்புறச் சமயத் தளத்தில்தான் வைக்கப் பட்டன. அரசு கட்டமைப்பில் அங்கம் பெற முடியவில்லை. இந்த இயல் சமயத் தத்துவங்களை உய்த்துணரவும் மேலாய்விற்கும் வழிகாட்டும் படியாக அமைந்துள்ளது.

10.    தம்மிடம் பயின்ற மாணவரின் நூலிற்கு பேரா.எ.சுப்பராயலு அணிந்துரை வழங்கியுள்ளார். அவரிடம் பயின்ற மாணவர்களில் அவர் போற்றும் படியாகத் தரமான நூலொன்றினை இதுவரையில் நான் எழுதாமை நான் முயலாமை. வல்லிபுரம் மகேஸ்வரன் தம் ஆய்வில் கண்டு சொன்ன அரசிற்கும் வணிக நகரங்களுக்கும் இருந்த முரண்பாட்டினை ஊன்றிப் பார்க்க வேண்டும் என்று பேரா.எ.சுப்பராயலு அறிவுறுத்துகிறார். கல்வெட்டாராய்ச்சியின் மூலம் கண்ட இம்முடிவினைப் பல்லாண்டுகளுக்கு முன்பே பேரா.க.கைலாசபதி தம் சிலப்பதிகாரச் சிந்தனைகள் என்ற கட்டுரையில் “வணிக வர்க்கத்துக்கும் அரசுக்கும் ஏற்பட்ட கூர்மையான முரண்பாட்டை நாம் கண்டு கொண்டாலன்றி” இளங்கோவடிகள் வற்புறுத்தும் தமிழர் அடையாளங்களை இனம் காண முடியாது என்கிறார். (சிலப்பதிகாரச் சிந்தனைகள், 1970). இதே கருத்தினை தொ.மு.சிதம்பரரகுநாதன் கூறுகையில் (1984) கிண்டலடிக்கப்பட்டார்.

11.    இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங் காங்கே தலை தூக்குகின்றன. தமிழர் சமூகத்தில் கோயில் உருவாக்கம் என்ற இயலினை இவ் விதமான ஆய்வுக் கூறுகளைக் கொண்டு விரித்துப் பெருக்கின் நூலாசிரியரின் ஆய்வுப் புலமை வளர்பிறையாகும்.

1. இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோயில்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இயக்கத்தினை அறிந்துகொள்ள கல்வெட்டுச் சான்றுகளையும் பக்தி இலக்கியங்களையும் முதன்மைச் சான்று களாகக் கொள்வதுடன் கோயில்களில் நிகழ்த்தப்படும் விழாக்களின் கூறுகளையும் ஆய்தல் வேண்டும். கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு சமூகக் காரணி உண்டு. தமிழகத்து ஊர்க் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்விற்குப் பிறகு நிகழும் சமூகப் போக்குகளை மானிடவியல் பின்புலத்தில் அறிதல் நலம். காப்பு கட்டுதல் மூலம் ஓர் ஊரின் உறுப்பினர்கள் ஊரினைவிட்டு வெளியேறாமல் இருத்தி வைத்தல் என்பது Working forces தக்க வைத்துக்கொள்ளப்படுவதனையும் உள்ளூர்க் குள்ளேயே relations of productions உறுதிப்படுத்தப் படுவதனையும் காட்டுகிறது. இடைக்காலத்து நிலவுடைமைச் சமூகம், கோயில் நிறுவனங்களின் மூலம் வரைந்த இவ்வெழுதாச் சட்டம் இன்று வரைக்கும் நடைமுறையில் செயல்படுவதனை oriental cultureன் ஒரு கூறு எனலாம்.

கோயில்விழா நடைமுறைகளில் கோயில்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு சடங்குகளில் பதியப்படுகிறது. இதுபோன்ற நடப்புகள் கோயில் ஒழுகு என்ற நூலில் ஸ்ரீரங்கம் கோயிலின் வரலாறு பதியப்பட்டுள்ளது. பலவகைச் சான்றுகளைக் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அன்றாட நடைமுறையினை மானிடவியல் பின்னணியில் புல்லர் ஆய்ந்தார். கே.கே.பிள்ளையின் சுசீந்திரம் கோயிலாய்வு தருக்க முறையில் அமைய வில்லையென்றாலும் கோயில் நிர்வாகம் பற்றிய தொடக்க நிலை ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது. பி.சுரேஷ் பிள்ளையின் தஞ்சைப் பெருவுடையார் கோயில் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தே அக் கோயிலின் சமூக இருப்பினை நா.வானமாமலை, ஜார்ஜ் டபிள்யூ. ஸ்பென்சர் போன்றோர் ஆய்வினை மேற்கொண்டனர். சோழர் காலக் கோயிலின் சமூக ஊடாட்டத்தினைத் தனியொருவர் முழுமையாக ஆயவியலாது. சோழர்களின் தொடக்க காலக் கோயில்கள் சோழ நாட்டின் விளிம்புநிலைப் பகுதிகளான புதுக்கோட்டை, திருச்செந்துறை, பழுவூர் போன்ற இடங்களில்தான் அமைந்துள்ளன. நேர்த்தியாகக் கட்டப்பட்ட இவற்றைவிடவும் தலைநகர் கோயில்களான தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில், இராஜராஜபுரத்து கோயில்கள் போன்றன அரசு நிறுவனங்களாகவே பெயர் பெற்றன.

தமிழகத்தில் பல்லவர், பாண்டியர் எழுச்சியினை ஒட்டி எழுந்த கோயில்கள் அரசியல் - சடங்கு ஊடகங்களாகச் செயல்பட்டன. காஞ்சி கைலாச நாதர் கோயிலின் முடிசூட்டுவிழாவினைக் காட்டும் புடைப்புச் சிற்பம், கோயில்கள், அரசு நிறுவனங்கள் என்பதனைச் செதுக்கிச் சொல்கின்றன. தமிழகத்தில் சில புகழ்பெற்ற கோயில்களின் அருகிலேயே அதே பெயரில் பிறிதொரு பழங்கோயில் வழிபாட்டில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. காட்டாக, பாடல் பெற்ற தலமான திருக்கடையூர் கோயிலின் அருகிலேயே மூன்று கி.மீ. தொலைவில் பழங் கோயில் ஒன்றுண்டு. புதுக்கோட்டை வட்டாரத்தில் இதுபோன்ற போக்கினை வெகுவாகக் காணலாம். திருக்கோகர்ணம், நார்த்தாமலை, குடுமியான் மலை, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் இரண்டு சதுர கி.மீ. பரப்பளவிற்குள்ளேயே குகைக் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் குமிழி - மடைகள் கொண்ட பாசனக் குளங்களும், ஊரிருக்கைகளும் அமைந்துள்ளன. இவற்றினருகிலேயே மரப்புதர்களிடையே மக்கள் வழிபடும் தெய்வக் கூட்டங்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவற்றைத் தொல்குடிகளின் வழிபாட்டுத் தலங்கள் எனலாம். காவிரிச் சமவெளியில் தொல்குடிகளின் வழிபாட்டுத் தலங்களாக இருந்து பாடல் பெற்ற பக்தி இயக்கத்தலங்களாக மாறிய பெரும்பாலான கோயில்கள் இன்றைக்கும் வழிபாட்டு நிறுவனங் களாக உள்ளன. மன்னர்கள் விருப்பத்திற்கேற்றபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தலைநகர்க் கோயில்கள் இன்றைக்குச் சுற்றுலாத் தலங்களாக மாறிப்போயின. காரணம், அவை பாடல் பெறாத தலங்கள் என்பதால் மட்டுமல்ல, அவை தொல் குடிகளின் வழிபாட்டுத் தலங்களாகவும் இருந்த தில்லை என்பதாலும் தான்.

2.     மேற்சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டோமானால் வல்லிபுரம் மகேஸ்வரன் ஆய்ந்து எழுதிய சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும் என்ற நூலினைப் புரிந்துகொள்வது எளிது. இடைக்காலத் தமிழக வரலாற்றினைப் புரிந்துகொள்ளத் தமிழறிஞரும் வரலாற்றறிஞரும் போட்டி போட்டுக்கொண்டு முயன்றுள்ளனர். தொட்டால் பட்டியல் நீளும். சென்ற நூற்றாண்டின் கடைக்கூற்றில் புதிய புதிய நோக்குடன் சோழர் காலத்துச் சமூகத்தினையும், அரசியலையும் நாம் பார்ப்பதற்கு அறிஞர் பலர் கற்றுத் தந்துள்ளனர். தா.த. கோசாம்பி தொடங்கி வைத்த புள்ளியியல் முறைக்குப் புத்துயிர் தந்து இடைக்காலத் தமிழர் சமூகத்தினை அணுகுதற்குப் புதுவழி வகுத்தவர் நொ.கரசிமாவும், எ.சுப்பராயலுமாவர். இப்பரம்பரை வரிசையில் வரும் இந்நூலாசிரியரும் புள்ளியியல் முறையினை ஓர் உத்தியாக்கி ஆய்வினை மேற் கொண்டுள்ளார். பலனாக, சில புதிய முடிவுகளுக்கு வருகிறார்.

3.     சோழர் காலத்து சமூகப் போக்குகளைக் கண்டறியப் பரந்து விரிந்த சோழர் நிலப்பரப்பின் வெவ்வேறு திணைகளில் அமைந்த குறுநில வட்டங்களைத் தெரிவு செய்து அவ்வட்டங்களிலுள்ள கல்வெட்டுக்களைப் பகுப்பாய்வு செய்து கருத்துக்களைப் பெறுவது ஆய்வு முறையில் ஓர் உத்தியாகும். இம்முறையினை முதலில் அறிமுகப்படுத்தியவர் நொ.கரசிமா ஆவார். காவிரிபாயும் நிலப்பரப்பின் இருவேறு திணைப் பகுதிகளிலுள்ள கல்வெட்டுக் களை ஒப்பாய்வு செய்து ஆசிய உற்பத்திமுறை என்ற கோட்பாட்டினைத் தம் நூலில் சோதித்துள்ளார் (1984). இதே ஆய்வு முறையினைப் பயன்படுத்தி கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருக்கோயிலூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை என்ற வெவ் வேறு திணைகளில் கிடைக்கும் சோழர் கல்வெட்டுக் களைத் தொகுத்தாய்வு செய்து சோழர் கால உற்பத்தி முறையினை ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மன் ஆய்ந்தார் (1997). இவ்வரிசையில் சோழர் காலத்துப் பெண்களின் நிலை பற்றி ஆய்ந்த லெஸ்லி ஓர் வெவ்வேறு திணைகளில் அமைந்த ஏழு குறுநில வட்டங்களைத் தெரிவு செய்துள்ளார் (2002). இங்கு வல்லிபுரம் மகேஸ்வரன் காவிரியின் வளமை கொழிக்கும் மையப் பகுதிகளிலிருந்து (திருவாரூர், திருவையாறு, திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர்) கல்வெட்டுத் தரவுகளை ஆய்ந்துள்ளார். நொ.கரசிமா, எ.சுப்பராயலு வகுத்த காலப் பிரிவினை அடியொற்றித் தடம் பிறழாமல் சில முடிவுகளைத் தருகிறார்.

4.     கல்வெட்டுக்களை முதன்மைச் சான்று களாகக் கொண்டு வரலாற்றை ஆய்வோருக்குத் தமிழ் இலக்கியத்தில் நேரிய பயிற்சி இருக்குமாயின் அவர்கள் ஆய்வில் எப்படிப் பரிணமிப்பர் என்பதற்கு ஆ.வேலுப்பிள்ளை நல்லதோர் முன்னுதாரணம். அவரிடம் பயின்ற இந்நூலாசிரியருக்கும் அத்திறம் உள்ளது. இலக்கியச் சான்றுகளையும், கல்வெட்டுச் சான்றுகளையும் பயன்படுத்திய கோயில் என்ற சொல்லாய்வு இவரின் தனித்திறம். ஆனால் சங்க காலத்தின் பரத்தையர் பின்னாட்களில் தோன்றப் போகும் தளிச்சேரிப் பெண்டுகளுக்கு முன்னோர் என்று சொல்லத் துணியும் கருத்தினை மீளாய்வு செய்ய வேண்டும். இது பரத்தையரையும், கோயில் பெண்டிரையும் இழிவாகப் பார்த்ததன் வெளிப்பாடு, வெகுண்டெழுந்த நிலவுடைமைச் சமூகத்தின் உடனிகழ்ச்சியாகத் தாய்வழிச் சமூகத்தின் எச்சசொச்ச கூறாக இல்பரத்தையர், சேரிப்பரத்தையரைப் பார்க்க வேண்டும். சங்க காலத்தில் புறக்கணிக்கப் பட்டது போல் இடைக்காலத்தில் இத்தாய்வழிச் சமூகத்தின் செல்விகளைப் புறக்கணிக்க முடியாமலே அவர்களை அரசர்கள் மணந்ததும் அவர்களின் உரிமைச் சுற்றம் கோயில் பெண்டிரானதும், சோழர் காலத்துக்குள்ளேயே இவர்களின் பொருளியல் அந்தஸ்து தளர்ச்சியுற்றது என்ற வல்லிபுரம் மகேஸ்வரன் முடிவு காண்கிறார். சரிதான், ஆட்சிப் படியிலிருந்து நெகிழ்ந்து வெளிவந்தனர் என்பதனை சமூக இறுக்கத்தின் ஒரு வகையான தளர்ச்சி என்று கொள்வோம்.

தளிச்சேரிப் பெண்டு களுக்கும், கோயில்களுக்கும் இடையிலான உறவினை மானிடவியல் பின்னணியிலும் பார்க்கலாம். திருவாரூர், திருவிடைமருதூர், திருவையாறு போன்ற ஊர்களின் தளிச்சேரிப் பெண்டுகள் என்பன தேங்கியிருந்த தாய்வழிச் சமூகத்தின் நிறுவனங்கள் எனலாம். இடைக்காலத்தில் எந்தெந்த ஊர்களின் கோயில்களிலெல்லாம் தளிச்சேரிப் பெண்டுகள் இருந்தார்களோ (தலைநகர் கோயில் களைத் தவிர்த்து) அவ்வூர்கள் எல்லாம் தாய்வழிச் சமூகங்களின் தளங்களாக செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வூர்களிலுள்ள கோயில்களைக் களஆய்வு செய்கையில் அக்கோயில்கள் வழிபாட்டுத் தளங்கள் என்பதனையும் தாண்டி இன்றைய சமூக நடை முறைகளையும், குறிப்பாக மருத்துவம், கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அண்மைக் காலம்வரை தேவதாசி முறைக்குப் பெயர் போன மூவலூர் என்ற ஊரிலுள்ள கோயிலில் யானை பிரசவிக்கும் காட்சி சுற்றாலைச் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தாய்வழிச் சமூகத்தின் அடையாளம் என்றே கொள்ளலாம். பிரசவ தைலத்திற்குப் பெயர் போன திருக்கருகாவூர் கோயில் காற்றோட்டமுள்ள ஒரு யசஉhவைலயெட மருத்துவமனை போன்று தோற்றமளிக்கிறது. திருநீறு மருந்திற்குப் பெயர் போன வைத்தீஸ்வரன் கோயில் தேவதாசி முறைக்குப் பெயர் போன ஒன்று. 1970களில் அவ்வூரின் சில தெருக்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விளம்பரப் பலகைகள் இருந்தன. ஆடல் சிற்பங்கள் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கோயில் பெண்டிர் இருந்திருப்பர். அங்குப் பெண்களே பூசாரிகளாகவும் இருந்திருப்பர். திருவானைக்கா கோயிலின் ஆண்பூசாரி உச்சி காலைப் பூசையினைப் பெண் வேடமிட்டு நடத்துகிறார். சீர்காழியில் ஒரு தேவி கோயிலின் பூசனை வேலைகளைத் தலைமுறை தலைமுறையாகப் பெண்களே செய்கின்றனர். நடன சிற்பங்களைக் கொண்டுள்ள தில்லையம்மன் கோயில் பூசனைகளை அண்மைக் காலம் வரை பெண்தான் நடத்தி வந்திருக்கிறார்.

5.     கோயில் பெயர்கள், கடவுள் பெயர்கள் பற்றிய இவரின் ஆய்வு தொடத்தொட வளரும் போலுள்ளது. இப்பகுதி புதிய தரவுகளைத் தருகின்றன. இளங்கோயில் என்பது கோயில் வகை களில் ஒன்றைக் குறிக்குமா? வேறு பொருளுண்டா? என்று ஆயலாம். புதுக்கோட்டைப் பகுதியில் கோனாடு, இளங்கோனாடு என்று நாட்டுப் பிரிவுகள் உண்டு. சார் என்றொரு ஊரும், இளஞ்சார் என்று பிறிதொரு ஊரும் இருந்துள்ளன. சித்தன்னவாசல் கல்வெட்டில் இளையர் என்ற சொல் உள்ளது. சித்தன்னவாசலுக்கருகே, அன்னவாசல் என்றொரு ஊரும் உண்டு. இனக்குழு உடைபட்டு இளைய குழு புதியதொரு ஊர்ப் பகுதியினை வரலாற்றுக் காலங்களில் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படி உருவான குழு தமக்கென்று இளங் கோயில் ஒன்றினையும் உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்புண்டு. ஆகமமுறைப்படி கோயில்கள் கட்டப்படவில்லை என்பது தெரிந்த ஒன்று.

6.     கோயிலும் இடையரும், கோயிலும் நிர்வாகமும் என்று தலைப்பிட்ட இயல்கள் புதிய புதிய முடிவுகளைத் தருகின்றன. ஸ்ரீகார்யம் பற்றித் தரப்பட்டுள்ள பட்டியல்கள் அத்துறையில் ஆய்வோர்க்குப் பயனுள்ளது. சான்றுகளை இவரே தேடித் தந்துள்ளார். கோயிலும் நிர்வாகமும் இயலில் (கோயில்கள் ஆட்சி மன்றங்கள் போன்றன) அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலான மேனிலைச் சமூகங்களினது சங்கமமாகவும் இவ் வமைப்புகள் இருந்தன என்பதில் முக்கால் பங்கு உண்மையுள்ளது. போர்க் குலத்தவரையும் சேர்க்கும் போது முழு உண்மையும் கிட்டும். போர்க் குலத்தவரான பாடிகாவல் வரி வசூலிப்பவரை அப்பர் சாடியதாக அண்மையில் ர.பூங்குன்றன் சுட்டியுள்ளார் (2008).

7.     ஆள் பெயர்கள் இடப்பட்டுள்ள பட்டியலில் கஞ்சன், குப்பை என்பனவற்றை இழிந்த பெயர் என்று நூலாசிரியர் குறிப்பிடுதல் சரியன்று. கஞ்சன் என்ற சொல் பொன்னை உடையவன் என்று பொருள்படும். குப்பை என்ற பழந்தமிழ்ச் சொல்லிற்குத் தானியக் குவியல், செல்வநிதி என்றும் பொருளுண்டு. நெற்குப்பை, உளுத்துக் குப்பை என்று ஊர்ப் பெயர்கள் தமிழகத்தில் உண்டு.

8.     சோழர் காலத்தில் கோயில்கள் என்ற இயலில் சமூகத்திலும், அரசாட்சியிலும் பல நிலைகளிலும் இருந்துவந்த கடவுளரைப்பற்றி ஆய்ந்துள்ளார். கல்வெட்டுக்களில் பரவலாக பிடாரி கோயில்கள் இவரால் சுட்டப்படுவதனை ஆய்வுக் களத்திற்கு இழுக்க வேண்டும். புறநிலையில் அரச கட்டமைப்பிற்கு வெளியில் நின்று இதுபோன்ற கோயில்கள் மக்களுடன் இயைந்து வருகின்றன. இதுபோன்ற கோயில்கள் போர்க்குலத்தவர் கனிசமாக வாழும் பகுதிகளிலேயே இயங்குவன. தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவெட்பூர் மாரியம்மன் கோயில், வேளாண்கன்னியாக இருந்து அன்னையாக மாறியதாகச் சொல்லப்படும் வேளாங்கண்ணி மாதாகோயில் போன்றவற்றை இப்பின்னணியில் பார்க்க வேண்டும். இங்கெல்லாம் ஆட்சியாளர்கள் பணிய வேண்டியிருந்தது. பிடாரிகளைக் கண்டு குனிய வேண்டியிருந்தது.

9.     பள்ளிப்படைக் கோயில்கள், அரசுக் கோயில்கள் இரண்டின் இருப்பினையும் தெளி வாக்கி விளக்கியிருக்கிறார். கடவுள், அரசன் பற்றிய வாதங்களுக்கு இது நல்லதோர் முன்னேர். இந்தியாவின் வடபுலத்தில் இறைவனே அவதார மெடுத்து அரசனாகி ஆளுதல் வேண்டும் என்று எண்ணப்பட்டது. அதனால்தான் விஷ்ணு என்ற கடவுளின் அவதாரமாக இராமன் அரசனாக வரவேற்கப்பட்டான். இந்திரனின் தன்மை கொண்ட நர அரசனான தசரதன் மடிய நேர்ந்தது. அங்கு, தேவன் அரசனாக வேண்டுமென்று எதிர்பார்க்கப் பட்டது. தமிழகத்தில் ராஜன் இந்திரனாக அதாவது கடவுளாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனவேதான் இங்கு இராஜேந்திரன், வடக்கில் தேவன் இராஜனான்; தெற்கில் இராஜன் தேவனான். எனவேதான் கோயில் அரசனின் இருப்பிடத்தினையும் சுட்டுகிறது. ஆண்டவனின் இருப்பிடத்தினையும் சுட்டுகிறது. என்றாலும், ஆண்டு மாண்டுபோன மன்னர்களுக்குச் சுட்டப் பட்ட பள்ளிப்படைக் கோயில்கள் தத்துவ வறட்சி கொண்ட அகப்புறச் சமயத் தளத்தில்தான் வைக்கப் பட்டன. அரசு கட்டமைப்பில் அங்கம் பெற முடியவில்லை. இந்த இயல் சமயத் தத்துவங்களை உய்த்துணரவும் மேலாய்விற்கும் வழிகாட்டும் படியாக அமைந்துள்ளது.

10.    தம்மிடம் பயின்ற மாணவரின் நூலிற்கு பேரா.எ.சுப்பராயலு அணிந்துரை வழங்கியுள்ளார். அவரிடம் பயின்ற மாணவர்களில் அவர் போற்றும் படியாகத் தரமான நூலொன்றினை இதுவரையில் நான் எழுதாமை நான் முயலாமை. வல்லிபுரம் மகேஸ்வரன் தம் ஆய்வில் கண்டு சொன்ன அரசிற்கும் வணிக நகரங்களுக்கும் இருந்த முரண்பாட்டினை ஊன்றிப் பார்க்க வேண்டும் என்று பேரா.எ.சுப்பராயலு அறிவுறுத்துகிறார். கல்வெட்டாராய்ச்சியின் மூலம் கண்ட இம்முடிவினைப் பல்லாண்டுகளுக்கு முன்பே பேரா.க.கைலாசபதி தம் சிலப்பதிகாரச் சிந்தனைகள் என்ற கட்டுரையில் “வணிக வர்க்கத்துக்கும் அரசுக்கும் ஏற்பட்ட கூர்மையான முரண்பாட்டை நாம் கண்டு கொண்டாலன்றி” இளங்கோவடிகள் வற்புறுத்தும் தமிழர் அடையாளங்களை இனம் காண முடியாது என்கிறார். (சிலப்பதிகாரச் சிந்தனைகள், 1970). இதே கருத்தினை தொ.மு.சிதம்பரரகுநாதன் கூறுகையில் (1984) கிண்டலடிக்கப்பட்டார்.

11.    இந்நூலாசிரியரின் ஆய்வு முறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனை விடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங் காங்கே தலை தூக்குகின்றன. தமிழர் சமூகத்தில் கோயில் உருவாக்கம் என்ற இயலினை இவ் விதமான ஆய்வுக் கூறுகளைக் கொண்டு விரித்துப் பெருக்கின் நூலாசிரியரின் ஆய்வுப் புலமை வளர்பிறையாகும்.

சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும்

ஆசிரியர் : வல்லிபுரம் மகேஸ்வரன்

வெளியீடு : குமரன் புத்தக இல்லம்,

சென்னை.

Pin It