சில சமயம்
என்னோடு
யாருமே இருப்பதில்லை
அந்தத் தனிமை பிடித்திருக்கிறது.
அதற்குப் பிந்திய சமயங்களில்
என்னோடு
நானே இல்லாமல் போகிறேன்
அந்தத் தனிமைக்குள்ளான தனிமை
அதைவிட மிகவும் பிடித்திருக்கிறது

ராணியும் கடவுளும்

கடவுளும் ராணியும் கண்ணாமூச்சி ஆடினார்கள்
முதலில் கடவுள்
கண்ணை மூடி எண்ணி நிமிர்ந்தார்
கடவுளும்
ராணி ஒளிந்து கொண்டாள்
கடவுள் தேடினார்
ராணியை கண்டுபிடிக்க முடியவில்லை
கடவுள் தேடிக்கொண்டிருந்த தருணமொன்றில்
கடவுளைத் தொட்டுவிட்டு சிரித்தாள்.
'இப்ப நீ போய் ஒளிஞ்சுக்கோ...'
என்று சொல்லிய விநாடிகளில்தான்
ராணி சிறியவள் உலகிலிருந்து
பெரியவள் உலகிற்கு பிரவேசித்தாள்.
கண்களை மூடி எண்ணி நிமிர
கடவுள் ஒளிந்து கொண்டார்
ராணி தேடிக்கொண்டிருக்கிறாள்