இந்தி நடிகை அனுஷ்கா ஆண்களைப் புரட்டிப்போடுவதைப் பார்க்கும்போது அசைவ வீரராகத் தெரிகிறார். ஆனால் அவர் சைவ உணவே உண்பவர். சைவ உணவே பற்றிய இயக்கத்தில் இருந்து சைவ உணவின் நன்மைகளை பரப்புபவர் (vegetarianism movement) அனுஷ்கா சர்மா ஆண்களைப் புரட்டிப்போட்ட படம் ((NH 10 - என்ஹெச் 10 ) அனுஷ்கா இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோஹ்லியையும் புரட்டிப் போடுபவர். விராட்டையை விரட்டி விரட்டி காதலித்து அவருடனான சூட்டு முத்தக்காட்சிகளுக்கு போஸ் கொடுத்து உலகக் கோப்பை போட்டிகளில் வேடிக்கை பார்க்கச் சென்று

அந்த மேட்சுகள் தோற்றதால் ரசிகர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

அன்ஷ்கா சர்மா ((NH 10 -என்ஹெச் 10) படத்தில் ரசிகர்களையும் புரட்டிப் போட்டுவிட்டார். கவர்ச்சி பிம்பமாக ஓடி ஆடுபவர் சாதி வெறி கொண்ட ஆண்களைத் துரத்தித் துரத்தி இந்தப்படத்தில் கொல்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவரே. சென்றாண்டில் வெள்ள நிவாரண நிதிக்காக தான் போட்ட லெதர் ஜாக்கட்டை ஏலம் விற்று அந்த பெரும் தொகையை கொடுத்தார். இந்த ஆண்டு நேபாளம் நிலநடுக்கத்திற்காக பெரும் தொகையை வசூல் செய்து தந்திருக்கிறார்.

13 படங்கள்ல் நடித்திருக்கும் அனுஷ்கா சர்மா நடித்த இன்னொரு சமீபத்திய வெற்றிப்படம் பீகே. (அமீர்கான் வேற்று கிரக வாசியாக நடித்து வசூலை கொட்டிக் கொண்ட படம்).

என்ஹெச் 10 : தனக்கு மிகவும் இஷ்டமான சிக்ரெட்டைப் புகைத்துத் தள்ளி ஆண்களை இரும்புக்கம்பிகளால், கடப்பாறையால் அடித்துத் தள்ளுகிறார். ஒரு சாலையோர உணவு விடுதியில் சிகரெட் பிடிக்கப்போன அனுஷ்கா ஒரு பெண்ணின் கதறலைக் கேட்டு செவி சாய்க்க ஓடுகிறது முழுப்படமும்.

அனுஷ்கா தன் காதல் கணவனுடன் ஒரு நண்பரின் இரவு விருந்திற்குச் செல்கிறார்கள். கணவனுக்கு அலுவலகத்திலிர்ந்து அவசர அழைப்பு. அனுஷ்கா விருந்தினை அனுபவித்து விட்டு காரில் திரும்புகிறார். வழிப்பறி கும்பல் ஒன்று காரிலும் பைக்கிலும் அவரைத் தாக்க சிரமப்பட்டு தப்பிக்கிறார். அடுத்த நாள் கணவனுடன் காவல் நிலையம் சென்று புகார் தருகிறார்.

ஒரு துப்பாக்கியை பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். அடுத்த நாளும் இரவு. அவளின் பிறந்த நாளைக் கொண்டாடக் இரவில் கிளம்புகிறார்கள். தில்லியில் ஆரம்பித்து ஹரியானா, பஞ்சாப், பாக்கிஸ்தான் என்று நீளும் ( NH 10-என்ஹெச் 10) சாலையில் செல்கிறார்கள்.

பாதிவழியில் ஒரு உணவு விடுதியில் சாப்பிட இறங்குகிறார். அனுஷ்கா. சிகரெட் பிடிக்கப்போன அனுஷ்கா ஒரு பெண்ணின் கதறலைக் கேட்டு பின் தொடர்கிறார். அப்பெண் தன்னை அந்த ஆணகளிடமிருந்து காப்பாற்றச் சொல்லி கதறுகிறாள்.

அந்தக் கும்பலைப் பின்தொடர்ந்து அப்பெண்ணைக் காப்பற்ற முயல்கிறார்கள். அவள் கணவன் துப்பாக்கி எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அந்த கும்பல் அந்தப் பெண்ணையும், காதலனையும் கொலை செய்கிறார்கள். எதிர்க்கும் அனுஷ்காவின் கணவனை அடித்துத் துவமசம் செய்கிறார்கள். அனுஷகா அதிர்ச்சியடைகிறாள். கும்பல் அவளைத் துரத்துகிறது. தஞ்சம் புகும் வீட்டில் ஆண்களின் தொல்லை.

தஞ்சம் கேட்கும் காவல்துறையினரும் மோசமானவர்களாக இருக்கின்றனர். ஓடுகிறாள். ஓடுகிறாள். நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஓடிக்கொண்டே இருக்கிறாள். ஆண்கள் குரூரமானவர்களாக இருக்கிறார்கள். பெண்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் இருக்கும் பெண்ணின் நடவடிக்கையும் விரோதமாக இருக்கிறது.

பாலியல் வன்முறையை சாதாரணமாக பெண் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. துணிந்து தனக்குப் பிடித்த சிகரெட்டைப் பற்ற  வைத்துக்கொண்டு ஆண்களை துவம்சம் செய்கிறார். படம் முழுக்க இரவுக் காட்சிகள். இருட்டும், நெடுஞ்சாலையும் முக்கிய கதாபாத்திரங்கள்.

இரவின் குரூரம், சாதியக் குரூரம், ஆணாதிக்க குரூரம்... இவற்றையெல்லாம் அந்த இருட்டு காட்டுகிறது. இருட்டில் வெளிச்சமாக அனுஷ்காவின் வீர தீர செயல் ஆணகளுக்கு எதிராக இருக்கிறது. பழி வாங்கும் படலம் படத்தை வசூலுக்கும் கொண்டு சென்றிருக்கிறது.

இந்தியாவின் நெடுஞ்சாலை ஏன் இப்படி கொடூரமானவர்களால் நிறைந்திருகிறது என்ற கேள்வி மனதில் வருகிறது.

இந்தியில் வசூல் குவித்த அவரின் தயாரிப்பு இது. 27 வயது அனுஷ்கா ஆவணப்படங்கள் எடுப்பதில் அக்கறை கொண்டவர். இதன் மூலம் முழு நீள இரவுப்படத்தையே எடுத்து விட்டார். இந்தியாவின் நெடுஞ்சாலை ஏன் இப்படி கொடூரமானவர்களால் நிறைந்திருகிறது என்ற கேள்வி மனதில் வருகிறது.

அனுஷ்காவின் பெயர் இப்படத்தில் மீரா. மீரா ஆக்ஷ்ன் ஹீரோவாக வெளிச்சம் போடுகிறார். வீணை வாசிக்கும் பெண்ணாக அல்ல. கவுரவக் கொலைகள், சாதி வெறி, பெண்கள் மீதான வன்முறையை நேபாளம், குஜராத் இயற்கை பேரிடர் போல் அபாயமானதாகச் சரியாகக் காட்டுகிறார்.