நம் அண்டத்தில் மனிதர்களுக்கு விளங்கிடாத, எண்ணில்லா புதிர்களில், வாழ்க்கையின் அடிப்படைப் புதிராக, எவ்வாறு ஒருவன் பல நிகழ்வுகளையும் நினைவில் கொள்கிறான்? எவ்வாறு நினைவு செயல்படுகிறது? என்னும் கேள்விகள் இன்று வரை விளங்க முடியாப் புதிராகவே உள்ளது.

“நினைவு” என்று ஒன்று இருப்பதால்தான் நாம் நேற்று கேட்ட பாடலை இன்று மனதிற்குள் இரசிக்க முடிகிறது. சுற்றத்தாரை அறிந்து பழக முடிகிறது. சென்ற வாரம் உண்ட சுவையான உணவை நினைவு கூர்ந்து நாவில் நீர் ஊர மகிழ முடிகிறது. சிறு வயது நிகழ்வுகளை நினைத்து ஏங்க வைக்கிறது. இள வயது காதலை நினைத்து மகிழவும் முடிகிறது.            இவ்வாறு ஒரு மனிதனின் உயிர் போல என்று சொல்லு மளவிற்கு அடிப்படையான, எனினும் விளங்காத புதிராக இருக்கும் நினைவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

நினைவு என்றால் என்ன?

உளவியலின்படி நினைவு என்பது மனதின் செய்தியை சேமித்து வைத்து, பாதுகாத்து, தேவைப்படும் போது உபயோகித்துக் கொள்ளும் திறனையே நினைவு என்கிறோம்.

இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒருவரின் இறந்த கால நிகழ்வுகளை, நிகழ் காலத்தில் மீண்டும் முன்னிறுத்தும் திறனையே நினைவு என்கிறோம்.

நினைவு எவ்வாறு செயல்படுகிறது?

ஒரு தகவலை நினைவில் கொள்வதற்கு மூன்று முக்கிய படிமுறைகள் உள்ளன.

பதிவு செய்தல்: இந்த படிமுறையில் கிடைக்கும் தகவல்களை பெற்று, பரிசீலித்து, ஒருங்கிணைக்கப் படுகிறது.

சேமித்தல்: பதிவு செய்யப்பட்ட தகவல்களை நிரந்தரப் பதிவுகளாக மாற்றி வைத்தல்.

மீட்டு எடுத்தல்: ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள பதிவுகளை நினைவிற்குக் கொணர்தல்

இவ்வாறு ஒரு தகவல் எப்படி நினைவிற்கு ஏற்றப்படுகிறது என்பதை மூன்று படிமுறைகளின் மூலம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

நினைவுகளில் வகைகள் உண்டா?

நினைவுகள் பல அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகிறது. காலத்தை அடிப்படையாகக் கொண்டால் நினைவுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1.Shortterm Memory : குறுகிய கால நினைவு

2. Longterm Memeory : நீண்ட கால நினைவு

1.புலன் அறி நினைவு; நமது புலன்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை மிகவும் தெளிவாக, ஆனால் மிகவும் குறுகிய காலத்திற்கு நினைவு கொள்ள வைப்பது புலன் அறி நினைவாகும்.

புலன் அறி நினைவின் மூலம் ஒரு தகவலை பெற்றபின் சுமார் 200-500 மில்லி நிமிடங்கள் மட்டுமே நினைவில் கொள்ள முடியும். ஒரு பொருளை பார்த்து அது என்ன என்பதை உணர்வதற்கு இந்த நினைவு உதவுகிறது.

ஜார்ஜ் சாபெர்லிங் பரிசோதனை:

புலன் அறி நினைவைப் பற்றி அறிய இவர் ஒரு சிறிய செய்முறையை நிகழ்த்தினார்.

இதில் அவர், 12 எழுத்துக் களை ஒரு வரிசைக்கு நான்கு எழுத்து என்கிற விகிதத்தில் மூன்று வரிசைகளாக ஒன்றன் கீழ் ஒன்றாக அமைத்துக் கொண்டார். இந்த அமைப்பை பங்கேற்பாளர்களுக்கு மிக குறுகிய கால அளவில் (கால் வினாடி) திரையில் காண்பித்தார்.

இறுதியாக பங்கேற்பாளர் களிடம் நினைவு கூர்ந்து அந்த எழுத்துக்களை சொல்லும்படி கேட்ட போது, பெரும்பாலான வர்களால் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களை மட்டுமே நினைவில் வைத்துக் கூறமுடிந்தது.

இன்னும் அதிக எழுத்துக் கள் காண்பிக்கப்பட்டது என்பதை அவர்களால் உணர முடிந்தாலும், எல்லா எழுத்துக் களையும் நினைவில் வைத்துக் கூற முடியவில்லை.

இந்த செய்முறை மூலம் “திரையில் காண்பிக்கப்பட்ட எழுத்துக்கள், புலன் அறி நினைவில் சேமிக்கப் படுகிறது. ஆனால் அந்த ஒளிப்பிம்பம் மிக விரைவாக சிதைந்து விடுகிறது.” எனக் கருதினார்.

இதே செய்முறையில் ஒரு சேர்க்கையாக, திரையில் எழுத்துக் கள் காண்பிக்கப் பட்டவுடன் ஒரு ஒலியைக் கொடுத்தார்.

ஒலி குறைவாக இருந்தால் மூன்றாம் வரிசையைத் தெரிவிக் கவும், ஒரளவு ஒலி இருந்தால் இரண்டாம் வரிசையையும், ஒலி மிகுந்திருந்தால் முதல் வரிசையை நினைவு கூர்ந்து தெரிவிக்கும் படியும் அறிவித்தார்.

இந்த செய்முறையின் முடிவில் “பெரும்பாலானவர்கள் எந்த ஒலியைக் கொடுத்தாலும், வரிசைகளில் உள்ள எழுத்துக்களை சரியாக நினைவில் கொண்டு தெரி வித்தனர் என்பதை உணர்ந்தார்.”

இந்த செய்முறைகளின் மூலம், ஒளி வடிவ நினைவுகள் ஒலி வடிவ நினைவுகளை விட குறுகிய காலமே நீடிக்கிறது - எனும் முடிவை எட்டினார்.

ஜார்ஜ் சாபெர்லிங், இதன் மூலம் புலன் அறி நினைவு என்று ஒன்று உள்ளது என்பதனை நிரூபித்தார்.

ஞாபகங்கள் தொடரும் என்பதை நினைவில் நிறுத்து வோம்!

Shortterm Memory : குறுகிய கால நினைவு:

சில நொடிகள், சில நிமிடங்களுக்கு முன் கிடைத்த தகவல்களை சேமித்து ஞாபகத்திற்கு கொண்டு வர உதவுகிறது. இதன் திறனும் குறைவானதே ஆகும்.

ஜார்ஜ் ஏ.மில்லர் என்பவர் சில சோதனைகளின் மூலம் குறுகிய கால நினைவகத்தில் ஒரேசமயத்தில் 7-2 குறிப்புகளை மட்டுமே சேமிக்க முடியும் என்றுகண்டறிந்தார். அவருக்குப் பின் சமீப கார ஆராய்ச்சிகளில் குறுகிய கால நினைவகத்தில் 4-5 குறிப்புகளை மட்டுமே சேமிக்க முடியும் என்று கண்டறிந் தனர். இதனை மந்திர எண் 7-2 என்கின்றனர்.

ஆனாலும் ஒரு சில முறைகளை கையாளவதன் மூலமும் தொடர் பயிற்சியின் மூலமும் குறிப்புகளை தெளிவாகவும், நீண்ட நேரமும் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

1.Chunking : கூறு போடுதல்:

8005842367 போன்ற எண்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் கடினம். அதையே 800-584-2367 என்று மூன்று பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொண்டால் நினைவில் நீண்ட நேரம் வைத்திருக்கலாம்.

2Maintenance Reharsal : தொடர்ச்சியான ஒத்திகை:

ஒருகுறிப்பிட்ட மீண்டும் மீண்டும் மனதுள் ஒப்பித்து பார்ப்பதன் மூலம் சிறிது நேரம் அந்த குறிப்பை தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொலைபேசி எண்ணை ஒரு முறை பார்த்து விட்டு அதனை மனதுள் தீண்டும் மீண்டும் ஒப்பிப்பதன் மூலம் அந்த எண்னை காணாமலேயே டயல் செய்யலாம். இதன் மூலம் குறிப்புகளை நீண்ட கால நினைவகத்துக்கு கொண்டு செல்ல முடியாவிட்டாலும் குறுகிய கால நினைவக சேமிப்புப் பகுதியில் சிறிது காலம் நீட்டிக்கலாம். பின்னர் அந்த குறிப்பு தானாகவே நினைவகத்திலிருந்து சிதைந்து விடும்.

3.Elaborative Reharsal : விரிவான ஒத்திகை:

ஒரு புதிய குறிப்பை முன்பே நினைவகத்தில் தெளிவாக சேமிக்கப் பட்டுள்ள குறிப்பு களுடன் ஒப்பிட்டு, தொடர்பு படுத்தி ஒருங்கிணைத்து செயல்படும் போது குறுகிய கால நினைவகத்திலிருந்து எளிதாக நீண்ட கால நினைவகத்திற்கு செல்கிறது.

ஒரு குறிப்பை விரிவாக அலசி ஆராய்வதன் மூலம் அது எளிதாக நீண்ட கால நினைவகத்தில் சேமிக்கப் படுகிறது. அதாவது +பூதக் கண்ணாடி+ என்பதை ஒரு பெயராக மனதில் சேமிப்பதை விட பூதக் கண்ணாடி உருவங்களை பெரிதாக்கிக் காண்பிக்கும் என்பதை உணர்ந்து மனதுள் சேமித்தால் அது நீண்ட காலம் நினைவில் நிற்கும்.

Longterm Memory : நீண்ட கால நினைவு

புலன் அறி நினைவுகளும், குறுகிய கால நினைவுகளும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கே மனதில் நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு எதிர்மறையாக நீண்ட கால நினைவகத்துக்கு எண்ணற்ற தகவல்களை நெடுங்காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் சக்தியும் உள்ளது.

நமது தினசரி பழக்க வழக்கங்கள், நமது திறமைகள், வார்த்தைகளின் அர்த்தங்கள் என பல முக்கியமான தகவல்கள் நீண்ட கால நினைவகத்திலேயே சேமித்து வைக்கப் படுகின்றன. நீண்ட கால நினைவகத்தை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர்.

1.Declarative Memory :அறிவிப்பு நினைவு

வாழ்க்கைச் சம்பவங்கள், கருத்துக்கள், சுற்றத்தை பற்றிய தகவல்கள் போன்றவை இந்த நினைவகத்திலேயே சேமிக்கப்படுகின்றன.

இது இன்னும் இரண்டு குறும் பிரிவுகளை உள்ளடக்கியது.

Semantic Memory : சொற்பொருள் நினைவு:

வார்த்தைகளின் அர்த்தங்கள், கருத்தியல்கள், கணக்கிடும் திறன், போன்றவை இந்த வகையைச் சார்ந்தது.

Episodic Memory : சிறுதொகுப்பு நினைவு:

முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள், சம்பவங்கள் போன்றவை இந்த வகையைச் சார்ந்தது.

இதனை முழுமையாக “நினைவு” என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் நம் வாழ்வில் நாம் நினைக்காமலேயே தானாக நடக்கும் செயல்கள் அதாவது பல் துலக்குவது, நம் பெயரை எழுதுவது, கண்ணில் தூசி விழுந்தால் கண்ணை கசக்குவது போன்ற செயல்கள் ஏற்கனவே நமது ஆழ்மனதில் தெளிவாக பதிக்கப்பட்டுள்ளன. இச்செயல்கள் நாம் எந்த வித சரமும் இன்றி எளிமையாக நினைவு கொண்டு செயலாற்றலாம். நாம தினசரி கடைபிடித்துவரும் பழக்க வழக்கங்கள் எல்லாம் இவ்வகையையே சாரும். லி

Working Memory : செயலில் உள்ள நினைவு:

நிகழ் காலத்தில் நினைவிலே இருக்கும் தகவல்களையே, நீங்கள் தற்போது நினைத்துக் கொண்டிருக்கும் செய்தியையே, செயலில் உள்ள நினைவு என குறிப்பிடுகிறோம்.

இது தகவல்களை குறுகிய கால நினைவிற்கும் பின்பு நீண்ட கால நினைவிற்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதில் நிகழும் குறைபாட்டால் சில சமயம் கற்றல் திறனும், கவனமும் வெகுவாக பாதிக்கப் படுகிறது.

இதனை விவரிக்கும் கோட்பாடுகள்:

1.Baddelay Model

பேட்லி மற்றும் ஹிட்ச் இந்தக் கோட்பாட்டினை அறிமுகப் படுத்தினர். அந்த கோட்பாடு முக்கூறுகளை உள்ளடக்கியுள்ளது.

a.Phonological coop :

ஒலிக்கூறுகளை சேமிப்பது. நாம் கேட்கும் வார்த்தைகளை சேமித்து வைக்கிறது.

b.Visuo Spatial Sketdh pad :

ஒளி-ஒலி வரை குறிப்பகம்; நமது நினைவில் சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை மனதில் படமாக மாற்ற இது உதவுகிறது.

c.Central Executive

ஒருங்கிணைப்பாளர். மேற்கூறிய இரண்டு பகுதிகளையும் நிர்வகிக்கிறது. அத மட்டுமின்றி நமத் கவனத்தை தேவையான வற்றிற்கு மட்டும் செலுத்தவும், தேவையற்ற விஷயங்களில் இருந்து கவனத்தை விலக்கவும் உதவி செய்கிறது.

பேட்லி 2000 ல் எபிசோடிக் பஃபர் எனும் பகுதியையும் இதனுடன் இணைத்தார்.

d.Episodic Buffer - சிறிய தொகுப்பு

மேற்கண்ட ஒலி மற்றும் ஒளிப்படங்களை ஒருங்கிணைத்த பின்பு கிடைக்கும் தகவல்களை மனதில் காண்பிக்கிறது.

2. Cowan கோட்பாடு :

இந்தக் கோட்பாடு இதனை நீண்டகால நினைவின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.

3.Ericson & Kintsh கோட்பாடு :

செயல் நினைவில் ஒருசில குறிப்புகள் மட்டுமே பெறப்படுகின்றன. பின்பு அந்த குறிப்பைச் சார்ந்துள்ள மற்ற தகவல்கள் அனைத்தும் தானாவே நினைவில் லிபெறப்படுகின்றன என இந்தக் கோட்பாடு விளக்குகிறது.

Models - நினைவுகள்-இயங்கு மாதிரிப் படிவம்;

இது வரை நினைவகத்தின் பல்வேறு பகுதிகளை விரிவாகக் கண்டோம். இப்பொழுது நினைவுகள் எந்த வழிமுறையில் செயல்படுகிறது என்பதை காண்போம். இதனை பற்றி பலர் பலவிதமாக விவரிப்பதால் குழப்பம் நீடிக்கிறது எனினும் சில முக்கியமான மாதிரிப் படிவங்களை மட்டும் விரிவாகக் காணலாம்.

1.Atkinson – Shiffrin : இயங்கு மாதிரிப் படிவம்

-Sensory storage - உணர்வுகள் சேமிப்பு; நமது புலன்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. இதில் முக்கியமாக இரு வகைகள் உள்ளன.

-Iconic Memory -உருவக நினைவு-ஒளி சார்ந்த நினைவுகளை சேமிக்கிறது.

-Echoic- செவிகள் மூலம் பெறப்படும் தகவல்கள். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் ஒரு விநாடிக்கும் குறைவான அல்லது ஒரு சில விநாடிகளுக்கு மட்டுமே நினைவில் நிற்கும்.

-Pattern Recognition - அறிந்துணர்தல்; பெறப் பட்ட தகவல்களை நீண்டகால நினைவகத் திலிருக்கும் தகவல் களுடன் ஒப்பிட்டு அறிந்து உணர்தல்.

-Attention- கவனம் செலுத்துதல்;

ஆழ்ந்த கவனம் செலுத்துவதன் மூலம் பெற்ற தகவல்களை குறுகிய கால நினைவகத்திற்கு கொண்டு செல்லலாம்.

Short term Memory :

இதில் தகவல்களை 20 அல்லது அதிகபட்சம் 30 விநாடிகளுக்கு சேமிக்க லாம். தொடர் ஒத்திகை, விரிவான ஒத்திகை, கூறுபோடுதல் ஆகிய வழி முறைகளை கையாள்வதால் குறுகிய கால நினைவு நேரத்தை நீட்டிக்கலாம்.

Primacy & Recency

குறுகிய கால நினைவகத்தில்இவ்விரு பண்புகளையும் காணமுடிகிறது.

Primacy;

வெளியிலிருந்து தகவல்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நம்மால் அப்போது செய்தித் தொடரின் முதலில் பெறப்பட்ட தகவல்களை எளிதாக நீண்ட கால நினைவகத்தில் சேமிக்க முடியும்.

Recency;

அதைப் போலவே ஒரு செய்தித் தொடரின் இறுதி கட்ட தகவல்களும் எளிதாக நீண்ட கால நினைவகத்தை சென்றடைகின்றன. அந்த செய்தித்தொடரின் இடைப்பட்ட நேரத்தில் பெறப்பட்ட தகவல்கள் நினைவிலிருந்து வெளியேற்றப் படுகின்றன. அல்லது அவ்வளவு எளிதாக நினைவில் நிற்பதில்லை. குறுகிய கால நினைவகத்தில் பார்வை வழித்தகவல்களை விட செவி வழி தகவல்களே தெளிவாகவும், நீண்டகாலமும் சேமிக்கப்படுகின்றது என கருதப் படுகிறது.

Long  term Memory- நீண்ட கால நினைவகம்;  

அனைத்தையும் கடந்து இறுதியாக தகவல்களை நீண்ட கால நினைவகத்தில் நீங்கா இடம் பிடிக்கிறது.

இந்த இயங்கு மாதிரிப் படிவத்தில் சில குறைகள் காணப்பட்டாலும் எல்லோராலும் பொதுவாக இந்த மாதிரிபடிவங்கள் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

Levels of processing Approach- பகுத்தாய்தல் வழிமுறை:

கிரேயிக் மற்றும் லாக்கார்ட் எனும் ஆராய்ச்சியாளர்கள் 1972 ல் அறிமுகப்படுத்தினர். இந்த இயங்கு மாதிரிப் படிவம் பகுத்தாய்தலை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

1.Shallow Processing-

மேலோட்டமான பகுத்தாய்வு; ஒரு தகவலை அதன் தோற்றம் அல்லது புலன் சார் பண்புகளை மேலோட்டமாக பகுத்தாராய்தல்.

2.Deep Processing-

ஆழமாக பகுத்தாராய்தல்; அதே தகொலை அதன் பொருள் உணர்ந்து முன் அனுபவங்களுடன் ஒப்பிட்டு அதனை ஆழமாக ஆராய்வது.

இந்த இரு வழிமுறைகளின் மூலமே தகவல்கள் குறுகியகால நினைவகத்தில் அல்லது நீண்டகால நினைவகத்தில் சேமிக்கப் படுகின்றன என இந்த கோட்பாடு கூறுகிறது.

இதில் தொடர் ஒத்திகை, விரிவான ஒத்திகை இவை இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன.

Tuvling’s கோட்பாடு:

இது மூன்று பகுதிகளை கொண்டுள்ளது.

1.Episodic Memory- சிறு தொகுப்பு நினைவு:

இறந்த கால சம்பவங்களை சேமித்து வைப்பது

2.Semantic Memory- சொற்பொருள் நினைவு;

பொது அறிவுத் தகவல்கள் மற்றும் அடிப்படை உண்மைகளை சேமிப்பது.

3.Procedural Memory- முறையான நினைவு:

ஒரு வேலையின் செயல்முறையை சேமிப்பது. நாம் பெறும் அனைத்து தகவல்களும் அதன் தன்மைக்கு ஏற்ப பிரித்து சேமிக்கப் பெறுகின்றன என இந்தக் கோட்பாடு தெரிவிக்கிறது.

-R.விவேக்