கடந்த சில நாள்களாக நடந்து வரும் கொலைகள், தமிழ்நாடும் அதன் தலைநகரும்  பாதுகாப்பற்றவை என்னும் எண்ணத்தை உருவாக்கியுள்ளன.. பட்டப்பகலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற பெண் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை போன்றே சுவாதியின் கொலையும் நடந்துள்ளது. கூலிப்படைகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் மிகுதியாகி உள்ளது என்பதையே இவை காட்டுகின்றன. அப்படியானால் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முற்றும் சீர் கெட்டுப்  போயுள்ளன என்றுதானே பொருள்.

சென்னை மாநகரக் காவல் ஆணையர் ராசேந்திரன், “கடந்த ஆறு மாதங்களில் 608 போக்கிலிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்னும் தகவலைத் தந்துள்ளார். அவ்வாறாயின், அவர்கள் அல்லாமல் இன்னும் பல்வேறு வன்முறைக் குழுக்கள் வெளியில் உலாவிக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.

சுவாதி கொலைக்குப் பிறகு சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் ‘ரௌடிகள்’ என்கிறது காவல்துறை.  அவர்கள் அத்தனை பெரும் இவ்வளவு காலம் வெளியில் சுதந்திரமாகத் திரிந்துள்ளனர். அவர்களை எல்லாம் கைது செய்வதற்கு ஒரு  சுவாதி கொலை செய்யப்பட வேண்டியுள்ளது.

குடும்பச் சிக்கல்கள்,  தவறான பாலியல் உறவுகள் காரணமாக, உணர்ச்சி வயப்பட்டுக் கொலைகள் நடக்குமானால், அவற்றைக் காவல்துறை தடுப்பது கடினம். ஆனால் கூலிப்படைகள் ஒரு நாட்டில் மிகுதியாகின்றன என்றால், அரசு செயலாற்றுப் போயுள்ளது என்பதன் அடையாளமே அது!

உணவு, விளையாட்டு, அரசியல் என அனைத்தும் வணிகமயமாகி வருவதை போல இன்று தமிழ்நாட்டில் கொலைகளும் வணிகமயமாகி விட்டன. எனவே இனிமேல் தமிழகத்துடன் மோதல் போக்கு இல்லாமல், இணக்கமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் கேரள முதல்வர்.

புதிய அணை கட்டவேண்டியதில்லை என்று அவர் சொன்னபோதே, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.

இது தமிழகம், கேரளம் மக்களின் உறவு வலிமை பெற வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

கேரள முதல்வர் பினராய் விஜயன் சென்னதுடன் நிற்காமல் அவர் சொன்னதை செயல்வடிவப்படுத்துவார் என்ற நம்பிக்கை எழுகிறது.