புன்மை அறுபட

போலிமை நொறுங்கிட

பொய்மை ஆட்சி

பொடிபடப் பொடிபட,

போற்றரும் தமிழ்நெறி

பரவிடப் பரவிட

பொருந்தும் நல்லறம்

பொலிவுறப் பொலிவுற

பொன்நேர் கலைஞர்

புகழ் மொழி சீர்தர

பொழிலாய்த் தமிழகம்

புதுமணம் தூவிட

பொங்கலே! வா நீ

பொழிக இன்பமே!