rahul gandhi and chandrababu naiduமதவாதம், விலைவாசி உயர்வு, ஆணவப் போக்கு, வெளிநாட்டுப் பயணம் - இவையே மோடி ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுச் சாதனை என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இவை அனைத்துக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கனவை நினைவாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடத் தொடங்கியுள்ள காட்சிகள் ஊக்கம் தருகின்றன.

அந்த நல்ல பணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு தொடங்கியுள்ளார். நேற்று (01.11.2018) தில்லி சென்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததோடு, சரத் பவார், பரூக் அப்துல்லா ஆகிய தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தைக் காக்கவும், இந்திய அமைப்புகளைக் காக்கவும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடிப் பணியாற்ற முடிவெடுத்துள்ளோம் என்று ராகுல் காந்தி ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

1933 ஆம் ஆண்டு ஹிட்லருக்கு வாக்களித்த ஜெர்மானிய மக்கள், அதன் பிறகு, சில தலைமுறைகளுக்குத் தேர்தலைச் சந்திக்கவே முடியவில்லை. அழிவுகளை மட்டுமே சந்தித்தனர். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், நம்.நாட்டின் நிலைமையும் அவ்வாறே ஆகிவிடும் என்னும் உண்மையை உணர்ந்து, ஒன்றுகூடியுள்ள எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தருகின்றன.

இது நல்ல தொடக்கமாகவும், கலங்கரை விளக்கம் போல் ஒரு நம்பிக்கை விளக்கமாகவும் உள்ளது.