குழந்தை சிகிச்சை மருத்துவர் - மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென், சத்தீஸ்கர் செஷன்ஸ் நீதிமன்றத்தால் 124-ஹ சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

செஷன்ஸ் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்தியாவில் பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மருத்துவர் சென், பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். செஷன்ஸ் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சரி என்று சொல்லி உயர்நீதிமன்றம் இவரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

“இந்து” ஆங்கில நாளிதழில் (18.4.2011) அற்புதமான ஒரு தலையங்கம் எழுதியதோடு, குற்ற சட்டம் 124-ஹ உடனடி யாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி யிருந்தது.

இந்தச் சட்டம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் எப்படி காந்திஜிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நினைவுகூர்ந்தது. அன்று நீதிமன்றத்தில் காந்தி பேசிய சில கருத்துக்களையும் சுட்டிக்காட்டியது. உண்மையிலேயே அன்று நடந்த நீதிமன்ற நிகழ்ச்சி இந்தியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இப்போதுகூட யாரேனும் அந்த வரலாற்றைப் படித்தால் அசந்துபோவார்கள்…... ஆச்சரியத் தில் ஆழ்ந்துபோவார்கள் ...

காந்தியின் துணிவான பேச்சு, தெளிவான விளக்கம் நீதிமன்றத்தில் வீற்றிருந்த ஆங்கிலேய நீதிபதி ராபர்ட் ப்ரும் பீல்ட் என்பவரை உணர்ச்சி வயப்படுத்தியது. காந்தி என்ன குற்றம் செய்தார்? ஏன் அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார் என்பதை அறிவதும் பயனுள்ளதுதான்.

1922 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்தி அறைகூவல் விட்டார். ஆங்கிலேயர் களின் கொடுங்கோன்மை ஆட்சியால் கொதித்துக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த அறைகூவல் கோபத்தைத் தீர்க்க ஒரு வடிகாலாய் அமைந்தது. நாடே சூறாவளியாய் மாறியது. மக்கள் சில இடங்களில் நேரிடையாகத் தாக்குதல் களில் இறங்கிவிட்டார்கள்.

உதாரணமாக சௌரிசௌராவில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்தையே தாக்கி, தங்கள் கையகப் படுத்திவிட்டார்கள். மோதலில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டார்கள்.

மதராசிலும், பம்பாயிலும்கூட பல இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்து விட்டன. உண்மையிலேயே ஆட்சி ஆடிப் போனது. ஆனால், காந்தியோ இந்த அசம்பாவிதங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். உடனே, அவர் தமது ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டார். மக்க ளின் எரிமலையாய் எழுந்த ஆவேசம், இவர் அறிவிப்பால் கப் என சோர் வோடு அடங்கிப்போனது.

காந்தியின் இந்த திடீர் வாபஸ், காந்தியோடு நெருக்கமாக இருந்த சிலருக்குக்கூட கசந்துபோனது. ஆங்கி லேயர் ஆட்சி இதனால் மேலும் தைரியம் கொள்ளும், திமிர் கொள்ளும் என்று கணித்தார்கள். காந்தி மீது பரவலாக விமர்சனம் எழுந்தது. ஆனால், அந்த மா மனிதர் அசையவில்லை. என்னுடைய “அகிம்சை” தத்துவத்தின் உட்பொருளை என் மக்கள் இன்னமும் சரியாக உள் வாங்கவில்லை. ஆகவே, ஒத்துழை யாமை இயக்கத்தை வாபஸ் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று உறுதியாக இருந்துவிட்டார். ஆனாலும், ஆங்கிலேயே ஆட்சி இவரை விட வில்லை. நாட்டில் கலவரம் நடக்க இவர்தான் முக்கிய காரணம் என்று சொல்லி சட்டம் 124-ஹ படி தண்டனை விதித்துவிட்டது.

நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்திவைக்கப்பட்ட காந்தியைப் பார்த்து வெள்ளை நீதிபதி ராபர்ட் ப்ரூம்பீல்ட் சொல்லுவது:

“மிஸ்டர் காந்தி அவர்களே, நீங் களே உங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்ட தால் என்னுடைய தீர்ப்பு எழுதும் பணி யை எளிதுபடுத்திவிட்டீர்கள். ஆயினும், தண்டனையை உறுதிப்படுத்தி எழுதுவது எனக்கு சிரமமான பணியாகும். நீங்கள் மற்றவர்களைப்போல் அல்ல. மிக மிக வித்தியாச மானவர். அதை என்னால் மறுக்க இயலாது. நான் எத்தனையோ பேர்களை விசாரித்து இருக்கிறேன். இன்னும் பலரை விசாரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், அவர் களுக்கெல்லாம் நீங்கள் மாற்றான மனிதர். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இதே சட்டத்தின்படி குற்றவாளியாக நிறுத்தப்பட்ட ஒருவர் பாலகங்காதர திலகர். அவர் வழக்கை விசாரித்து ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தேன். அதேபோன்று உங்களுக்கும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். இதை நீங்கள் நியாயமற்ற தண்டனை என்று எண்ணமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

இனியும் இந்தியாவில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளால் அரசாங்கத்துக்கு மறு சிந்தனை உண்டாகி உங்களின் தண்டனைக் காலத்தைக் குறைத்துவிடச் செய்தால், இந்த விஷயத்தில் என்னைவிட மகிழ்ச்சி அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது” - என்று சொல்லி தன் மனநிலையை வெளிப்படுத்தினார்.

நீதிமன்றத்தில் காந்தி தந்த வாக்குமூலம் - அந்த உண்மை ஒளி - நெஞ்சை அள்ளும் புதிர் சித்தாந்தம். அவருக்கே உரிய நெஞ்சுறுதி அந்தப் பேச்சில் சுவாலையாய்க் கணகணத்தது.

1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினெட்டாம் நாள் அவர் பேசியது:

“நீதிமன்றத்தில் அரசின் சார்பில், நன்கு படித்த அட்வ கேட் ஜெனரல் என் செயல்பாடுகள் பற்றி பேசியவைகளை நான் முழுமையாக ஏற்கிறேன். அவர் பேசியவை அனைத் துமே உண்மைதான். இந்த அரசுக்கு எதிராக அமைதியைக் கெடுக்கும் வகையில்(னளையககநஉவiடிn) போதிப்பது, செயல்படுவது என்னுடன் உறையும் பேருணர்வாகும். இதை நீதிமன்றத்தில் மறைக்க நான் கிஞ்சிற்றும் விரும்பவில்லை. அரசுக்கு எதிராக இந்த போதனையை நான் ‘யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதுவதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டேன் என்று அட்வகேட் ஜெனரல் சொல்லுகிறார். ஆம், உண்மைதான். அதற்கு முன்பாகவே அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் துhண்டுவது சிரமமான பணிதான். ஆனாலும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு என்மீது விழுந் துள்ளது. மெட்ராஸ், பம்பாய், சௌரிசௌரா போன்ற இடங்களில் நடந்த கலவரங்களுக்குக் காரணம் நான்தான் என படித்த அறிவாளர் அட்வகேட் ஜெனரல் என் மீது அவைகளை சுமத்து கிறார். அரசுக்கு எதிராக சௌரி சௌராவில் நடந்த பயங்கரமான கலவரங்களை, பம்பாயிலும், மெட்ராசிலும் நடந்த சித்தம் குழப்பிய அழி செயல் களை ஆழமாக இரவு பகலாக சிந்தித்துப் பார்த் தேன். நான்தான் அவைகளுக்குக் காரணம் என பொறுப்பு ஏற்கிறேன்.

“இந்த நீதிமன்றத்தில் கற்ற அட்வகேட் ஜென ரல் என்னைப் பற்றி பேசுகிறபோது, நான் பொறுப் புள்ள மனிதர், நன்கு கற்ற நபர், நிரம்ப உலக அனுபவம் உள்ளவர் என்றும் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட நான் இப்படிப்பட்ட எந்த ஒரு செயலும் என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று நான் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவர் மிகச் சரியாகவே சொன்னார்.

“ஆம்., அவர் சொன்னதுபோல் நான் நெருப் போடு விளையாடுகிறேன், அபாயங்களைச் சந்திக் கிறேன், நான் விடுதலை செய்யப்பட்டால் அதையே திரும்பவும் செய்வேன். இங்கே இந்த நீதிமன்றத்தில் நான் இதைச் சொல்லவில்லை என்றால் நான் என் கடமையிலிருந்து தவறியவ னாவேன். நான் வன்முறையைத் தடுக்க விரும்பி னேன், விரும்புகிறேன். என் நம்பிக்கையில் அகிம்சை என்பது முதலிடம், என் சமயக் கொள்கை யும் அதுவே. என் நாட்டுக்கு சொல்லொணாக் கொடுமைகளை விளைவிக்கும் இந்த அரசு அமைப்புக்கு நான் சரணாகதி அடையவேண்டும்; அல்லது நான் சொல்லும் அகிம்சை எனும் உண்மை யைப் புரிந்து கொள்ள முடியாமல் சில சமயங்களில் என் மக்கள் சிந்தனைச் சீற்றத்தால் வெடித்தெழுந்து சில சீர் குலைவுகளை செய்து விடுகிறார்கள். அதற்காக நான் ஆழமாக வருந்து கிறேன். ஆனால், அதற் காக நான் லேசான தண்டனை கோரவில்லை. எவ் வளவு அதிகபட்ச தண்டனை உண்டோ அதை வழங்க வேண்டு கிறேன். நான் என் மீது இரக்கம் காட்டுங்கள் என்று உங்களை வேண்டவில்லை. உயர்ந்தபட்ச தண்டனையை மகிழ்வோடு வரவேற்கிறேன். உங்கள் சட்டப்படி அது தண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கலாம். ஆனால், எனக்கு அது குடி மக்களுக்குச் செய்யும் உயர்ந்தபட்ச கடமையாகக் கருதுகிறேன்.

“நீதிபதிக்குள்ள ஒரே வழி நான் சொன்னது சரி என்று பட்டால், நியாயம் என்று தோன்றினால் அவர் ராஜினாமா செய்துவிடட்டும்(தண்டிக்கும் சங்கடத்திலிருந்து மீள) அல்லது இந்த அரசும், சட்டமும் மக்களின் நலனுக்கு உதவிடத்தான் நிர்வகிக்கப்படுகிறது, என் செயல்பாடுதான் இந்த நாட்டு மக்களின் நலன்களுக்கும் சௌகரியங் களுக்கும் நஞ்சாக இருக்கிறது என்று தோன்றினால் என்மீது கடுமையான தண்டனையை சுமத்தட்டும்.

“நீதிமன்றத்தில் அப்படியேதும் பெரிய திருப்பம் ஏற்பட்டுவிடும் என்று நான் நினைக்க வில்லை. ஆனால், நான் என் வாக்குமூலத்தை முடிக்கும் தருவாயில் நீதிபதியின் மனதில் ஒரு கண நேர ஒளி உதித்து இருக்கும்., அதாவது என் மனத் திரையில் ஓடிய ஆக்ரோஷத்தை அவர் புரிந்திருப் பார். சில நேரங்களில் மக்களால் நாட்டில் ஏற் பட்டுவிடும் சிந்தனை அற்ற இடர் வரவுகளை என்னைப்போல உள்ள ஒரு சிந்தனை மனிதர் எப்படி சமாளிப்பர் என்பது நீதிபதிக்குப் புரிந்திருக்கும்”

-இவ்வாறு காந்தி பேசி முடித்தார். சிறையும் சென்றார். நாட்டில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அவரை ஆறு ஆண்டுகள் சிறையில் வைக்க ஆங்கில அரசால் முடியவில்லை. விரைவில் விடுதலை ஆனார்.

ஆயுதமற்ற அகிம்சாவாதிக்கு மன பலமே ஆயுதமாகிவிடுகிறது. வெளிப்படையான உண்மை எந்தத் தாக்குதல்களையும் தாங்கும் பாதுகாப்புக் கவசமாக மாறிவிடுகிறது. காந்தியையும், திலகரை யும், இன்னும் எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களை - அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போராடி யவர்களைப் பழிவாங்கிய குற்றச் சட்டம் 124-ஹ இப்போதும் அமலாகிறது என்றால் அதன் பொருள் என்ன?

ஆங்கிலேயர் அடிமை ஆட்சிக்கு அந்த சட்டம் தேவைப்பட்டதுபோல், காங்கிரஸ் ஆட்சிக்கும், பா.ஜ.க. ஆட்சிக்கும் ஜனநாயகத்தை ஒடுக்க இந்தச் சட்டம் அவசியமாகத் தேவைப்படுகிறது.

1951 ஆம் ஆண்டு மக்களவையில் நேரு இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய சட்டம், அருவருப்பான சட்டம் - என்றார். அதோடு அவர் நிற்கவில்லை. “எவ்வளவு சீக்கிரமாக இந்தச் சட்டம் ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது” - என்றார்.

நேரு பேசி 60 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்போதுதான் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இந்தச் சட்டம் 124-ஹ மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், இந்திய சட்டக்குழு இந்தச் சட்டத்தின்மீது புதிய பார்வையை செலுத்த வேண்டும் என்று நீட்டி முழங்கியுள்ளார். எந்தப் பின்னணியில் மத்திய சட்ட அமைச்சர் இப்படிப் பேசியுள்ளார் என்பது கவனத்துக்குரியது.

பினாயக் சென் இந்த ஆள்தூக்கிச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டதால், தண்டனை வழங்கப் பட்டதால் நாட்டில் பரவலாக எதிர்ப்பு கிளம்பிய தாலும், பெரும்பான்மையான பத்திரிகைகள் ஆட் சேபணை செய்ததாலும், கண்டனங்கள் எழுந்த தாலும், உச்சநீதிமன்றம் தலையிட்டதாலும்தான் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை இப்படிப் பேச வைத்தது.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது இந்தச் சட்டம் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து வைத்திருந்தது. அதேபோல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அது தன் பங்கிற்கு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது.

ஆங்கிலேயர்கள் ஆண்டபோது என்னென்ன மக்கள் விரோத சட்டங்கள் இருந்தனவோ, அந்தச் சட்டங்களை வைத்து காங்கிரஸ்காரர்களை கைது செய்து பழிவாங்கியது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அதேபோல் கம்யூனிஸ்ட்டுகளை அதே மக்கள் விரோத சட்டங்களின்கீழ் கைது செய்து பழி வாங்கியது. கொடுமையிலும் கொடுமை கம்யூ னிஸ்ட்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் அல்லல் பட்டார்கள், காங்கிரஸ் ஆட்சியிலும் தொல்லைகள் பட்டார்கள்.

இப்போதுகூட மாவோயிஸ்ட் கட்சியைத் தடை செய்ய மத்திய அரசு ஆணையிட்ட போது மார்க்சிஸ்ட் கட்சி கரம் நீட்டி வரவேற்கவில்லை. மாவோயிஸ்ட்டுகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடுமையான துயரங்களும், தொல்லை களும் ஏற்பட்டாலும் உயிர் இழப்புகள் ஏராளமாக ஏற்பட்டாலும் மேற்கு வங்க முதலமைச்சர் புத்த தேவ் சொன்னது, தடை செய்வது பரிகாரமல்ல., அவர்களின் ஆகாத கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதுதான் உண்மையான தீர்வு என்றார். இப்படிப்பட்ட அரசியல் நோக்கு வேறு எந்தக் கட்சிக்கு உண்டு?

இவையெல்லாம் ஒரு புறமிருக்க பினாயக் சென் என்ன குற்றம் செய்தார் என்பதற்காக சத்தீஸ்கர் அரசு அவரை 124-ஏ சட்டத்தின்கீழ் கைது செய்தது?

அரசு சொல்லும் வாதம் அவர் மாவோ யிஸ்ட்டுகளின் புத்தகம் வைத்திருந்தார் என்பது ஒரு குற்றம். ஆவர் அந்தப் புத்தகம் வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் அக்கட்சியைச் சேர்ந்தவர் என்று ஆகிவிடுமா? சில அறிவு ஜீவிகள் அந்த மேதாவிலாசங்கள் மாவோயிஸ்ட்டு களைத் தலையில் துhக்கி வைத்து ஆடுவது ஒரு ஆடம்பரம். அது ஒரு புறம் இருக்க பினாயக் சென்னிடம் புத்தகம் இருந்த காரணத்தினாலேயே அவரைத் தண்டித்துவிட முடியுமா? வேறு வலுவான ஆதாரங் கள் தேவை இல்லையா?

சத்தீஸ்கர் அரசின் இந்த தவறான குற்றச் சாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தொடுத்த கேள்வி:

ஒருவர் காந்தி எழுதிய புத்தகத்தை வைத்திருந் ததாலேயே, அவர் காந்தியவாதி என்ற முடிவுக்கு வந்துவிட முடியுமா என்ற கேள்வி தொடுத்தது…. . . காரணம் இது ஒரு வலுவான சாட்சியம் ஆகி விடாது. இது எப்படி 124-ஹ சட்டப்படி ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த அல்லது ஆட்சிக்கு எதிராக வெறுப்பு உணர்வை - எதிர்ப்புப் பகைமையை துhண்டியதாகும். அப்படி அவர் செய்தார் என்ப தற்கு ஆதாரம் உண்டா என்பதுதான் கேள்வி.

இரண்டாவது குற்றம் மருத்துவர் பினாயக் சென், சிறையில் அடைபட்டுக் கிடக்கும் மாவோ யிஸ்ட் நாராயண் சன்யால் என்பவரை சந்தித்த போதெல்லாம் அடிக்கடி அவர் தரும் செய்திக் கடிதங்களை மறைமுகமாக வெளியில் எடுத்துச் சென்று உரியவர்களிடம் கொடுக்க அவர் உதவி செய்தார் என்பது.

சிறைச்சாலை ஜெயிலர் முன்பாகத்தான் இந்தச் சந்திப்புகள் நடக்கும். அவர்கள் விழிப் புடன் இந்தச் சந்திப்பை கவனிப்பார்கள். அப்படி நடக்கிறபோது, கையும் களவுமாக அவர்களைப் பிடித்து, ஏதேனும் ரகசியக் கடிதங்களை அவர்களிட மிருந்து அபகரித்ததாக ஏதேனும் சாட்சியத்துக்கு அடையாளம் உண்டா என்றால் ஏதும் இல்லை.

மூன்றாவது குற்றச்சாட்டு, சத்தீஷ்கர் சிறப்பு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் 2005-ஐ மீறியது என்பதாகும்., இதுவும் ஆள்துhக்கிச் சட்டம்தான். இந்தச் சட்டத்தை எதிர்த்து – ஞநடியீடநள ருniடிn டிக ஊiஎடை டுiநெசவநைள - என்ற அமைப்பு வழக்கு தொடுத்துள்ளதாக பினாயக் சென் பத்திரிகையாளர் கூட்டத்தில் சொல்லியுள்ளார்.

இப்படிப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அதன் மீது வழங்கப்படும் தண்டனைகள் பற்றி உச்சநீதிமன்றம் சொல்லும் கருத்து சிந்திக்கத் தக்கவை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றும் தொழில் ரீதியாக திறமையுள்ள காவல்படையும், சிறப்பான முறையில் செயல்படக்கூடிய நீதிமன்றமும் இருந்திருக்குமேயானால் இப்படிப்பட்ட வழக்குகளெல்லாம்., ஆரம்ப கட்டத்திலேயே, மாநிலத்திலேயே நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு விரைவாக முடிந்திருக்கும். இந்த பலகீனமான குற்றச்சாட்டுக்கள் உச்சநீதி மன்றம்வரை வந்து அம்பலமாக வேண்டிய அவசி யம் இருந்திருக்காது என்று வன்மையாக விமர் சனம் செய்துள்ளது.

மக்கள் உரிமைகள் சம்பந்தப்பட்ட எந்தச் சட்ட மும் ஆட்சியாளர்களால் தவறாக வியாக்கியானம் சொல்லப்பட்டு மக்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பற்றி மூச்சே விடவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரசுக்கும் இந்தச் சட்டம் பழிவாங்க வசதியாக இருப்பதால் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியது பற்றிக் கவலைப்படவில்லை.

இந்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகளின் குரல் பலமாகிறபோதுதான் அரசு செவி மடுக்கும் - அசையும்.

Pin It