நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தண்டிக்கபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை ஏதோ புனிதர் என்பதுபோலத் தூக்கிவைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இது அவர்கள் பிரச்சனை.

100 மீட்டருக்கு ஒரு பேனர் என்று சாலைகளை ஆக்கிரமித்து பெரிய பெரிய பேனர்களையும் அலங்கார வளைவுகளையும் வைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பேரிடைஞ்சல் செய்வது இன்றைய அரசின் வாடிக்கை. இது குறித்து உயர்நீதி மன்றம் எடப்பாடி அரசுக்குக் கண்டனம் செய்ததுடன், தடையும் விதித்தது. நீதிமன்றத்தை அவர்கள் மதிப்பதில்லை.

கோவை அரசு அச்சகத்தை இழுத்து மூடி, வடநாட்டுக்கு மோடி அரசு கொண்டுபோகிறது என்பது 6 மாதங்களுக்கு முன்னரே தமிழ் மக்களுக்குத் தெரியும்.

எல்லாம் முடிந்து அச்சகத்தை இழுத்து மூடும் நிலையில் ‘வேண்டாம்Õ என்று ஒரு பயணற்ற மனுவைப் போடுகிறார் எடப்பாடி.

குமரியில், நெல்லையில் ஓகி புயல் ஆடிய பேராட்டத்தால் மக்களின் வாழ்வு நிலை குலைந்து கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ஏறத்தாழ ஆயிரம் மீனவர்கள் கரை திரும்பவில்லை. புயலில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்த மக்கள் துண்டிக்கப்பட்ட புழுபோலத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசு மக்களுக்கான அரசாக இருந்திருந்தால் முதல்வர் எடப்பாடி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் துடித்துக்கொண்டு அல்லவா அந்த மக்களிடம் போய் இருக்க வேண்டும்!

மாறாக ஆட்டுக்குத் தாடிபோல இருக்கும் ஆளுனர் பன்வாரி புரோகித், அவருடைய வேலையை விட்டுவிட்டு, மாநில வேலையில் தலையிட்டுக் கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் போனதும், அம்மீனவர்களின் கோபத்திற்கு அவர் ஆளாகித் திரும்பியதும் நாளிதழ்களில் வந்த செய்தி.

ஆனால் நம்முடைய மந்திரி பிரதானிகள் ஆர்.கே.நகர் தேர்தலுக்குள் புகுந்துக்கொண்டிருப்பதும் &

மறைந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ஆடம்பரமாக, ஆரவாரமாகக் கொண்டாடிக் கொண்டிருப்பதும் &

அதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவுகள், அதில் தடைசெய்யப்பட்ட பேனர்கள் வளைவுகள் என்பதில் மட்டும் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இருந்தும் கூட, சொரணையற்று, தூசி தட்டிக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

இதற்குப் பெயர் மக்கள் ஆட்சியாம்!

பிரஞ்ச் நாட்டின் 17ஆம் லூயி, இரஷ்யாவின் சார் மன்னன் ஆட்சிகளைப் போல எடப்பாடியின் ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி.

17ஆம் லூயியின் ஆட்சி நெப்போலியன் தலைமையில் பிரஞ்ச் மக்களால் வீழ்த்தப்பட்டது. லெனின் தலைமையில் இரஷ்ய மக்களால் வீழ்த்தப்பட்டான் சார்.

உதய சூரியன் தலைமையில், தமிழக மக்களால் பா.ஜ.க.வின் பின்புல எடப்பாடியின் ஆட்சி வீழ்த்தப்பட்பட வேண்டியது கட்டாயம்.