karunanidhi 250உவமை என்பது
உயர்ந்ததாய்
இருக்க வேண்டும் என்று
இலக்கணம் சொல்கிறது
எங்கள் தலைவனே
உன்னைவிட
உயர்ந்ததாய்
உவமை ஒன்று தேடுகிறேன்
எங்கும் கிடைக்கவில்லை!

கலப்படப் பாட்டுக் காலத்தில்
கலைஞர் ஒரு தமிழ்ப்பாட்டு
பெரியார் இசையமைக்க
அண்ணா இயற்றிய பாட்டு
திரைப்பாட்டு அல்ல - மூடத்
திரைகளைக் கிழிக்கும் பாட்டு!

தமிழ்நாட்டில் தமிழ்ப் பிள்ளைகள்
தமிழில் படிக்கட்டும் என்று
ஆணையிட்டார் கலைஞர்
ஆனால் பெற்றோர் சுதந்திரத்தில்
தலையிடாதே என்றது
நீதிமன்றம்
அடிமையாவதற்குச் சுதந்திரமா?
வர வர
நீதிமன்றத்தின் தீர்ப்புகள்
எரிச்சலூட்டுகின்றன
கன்னக்கோல்களுக்குச் சிறையாம்
திருடருக்கு விடுதலையாம்

இயலெழுதி இசையெழுதி
இசைகொண்ட அண்ணன்
உயிலெழுதி வைத்ததோர்
உயிர்ச்செல்வம் நீ எமக்கு

(முத்தமிழின் முகவரி நூலில் இருந்து)