ஏக் பனேசியா என்னும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் திரு இளங்கோ தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். அவர் ஒரு பார்வையற்ற  மாற்றுத்திறனாளி என்பது குறிப் பிடத்தக்கது. டிசம்பர் 3 ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழகத் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் விருதினைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளியான நிறுவனத்தலைவர் மற்றும் ஒரே பின்னணிக் குரல் கலைஞர் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு அந்த விருதினை அவருக்கு வழங்கியிருக்கிறது. ஏக் பனேசியா நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தேசிய வங்கிகள் போன்றவற்றிற்கும், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். தடைகளைத் தகர்த்துச் சாதனை படைத்திருக்கும் திரு இளங்கோ அவர்களுக்குப் பாராட்டுகள்.

மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்புக் கவனத்துடன் திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க அரசு. இதுபோன்ற விருதுகள் மூலம் அவர்கள் மேலும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஊக்கமளித்துவரும் நற்செயலையும் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

---------------------------------------------------------------------------------------------------------------------