ஓகிப் புயல் ஒரு வழியாக மாற்றிப் போட்டு விட்டது குமரி மாவட்டத்தை. 2004ஆம் ஆண்டு சுனாமிக்கு பிறகு, மீண்டும் ஒரு பேரிடரை அம் மாவட்டம் சந்தித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புயலின் வேகம் கூடியிருப்பதாகச் சொல்கின்றனர். அதனால் பல்வேறு உலக நாடுகள் வரவிருக்கும் புயல்களை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. ஆனால் நாம் அந்த உண்மையையே இன்னும் உணராமல் இருக்கிறோம். அதனால்தான் பேரிடர் நிவாரணப் பணிகள் இங்கு ஆமை வேகத்தில் அசைகின்றன.

இந்தப் புயலில் நெல்லை மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் பணகுடி என்னும் ஊர் ஏறத்தாழ வெள்ளத்தில் மூழ்கி விட்ட காட்சியைத் தொலைக்காட்சிகள் காட்டின. கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஏறத்தாழ 25 ஆயிரம் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஊரே இருளில் மூழ்கி இருக்கிறது.

ஒரு பக்கம் நீரின்றித் தவிக்கிறது நாடு. மழை கொட்டிக் கொடுத்தாலும் அதைச் சேமிக்க வழியின்றி அனைத்து நீரையும் கடலுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறோம் நாம். சேமிப்பு வழிமுறைகள் சரியாக இருக்குமானால், நாட்டில் வறட்சியும் வெள்ளமும் இருக்காது.

இப்போது இரண்டும் இருக்கிறது. மக்கள் வாழ்வில் நிம்மதிதான் இல்லை.

Pin It