பரபரப்பான அலுவலகத்தில் ஒரு காட்சி.

அலுவலக மேலாளர் அவசரக் கடிதம் ஒன்றினைத் தட்டச்சருக்குச் சொல்லிக் (Dictate) கொண்டு இருக்கிறார். அவரும் கரும சிரத்தையாக அதனைக் குறிப்பு எடுத்து வருகிறார்.  குறிப்பெடுத்த அந்தச் சீட்டினை வைத்துக் கடிதத்தினைக் கணினியில் தட்டச்சு செய்து அதனை மெய்ப்புப் பார்த்து அச்சு எடுக்கிறார். பின்னர் மேலாளரின் ஒப்புதல் பெற்று மின்னஞ்சல் அனுப்புகிறார். அதன் பிறகு  மூன்று நன்கு படிநிலைகளைக் கடந்து அந்தப் பணி முடிகிறது.

அதற்கு பதில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.  

இப்போது அந்த மேலாளர் கணினி முன் உட்கார்ந்து கொள்கிறார். அவர் என்ன செய்தியை அனுப்ப வேண்டுமோ அதைச் சொல்கிறார். யாருடைய உதவியுமின்றி கணினியே விரைவாகத் தட்டச்சு செய்கிறது. இவ்வசதி ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழில் இருக்கிறதா?    இது தமிழ் மொழிக்குச் சாத்தியம்தானா?  இது போன்ற வசதி தமிழுக்கு வந்தால் பெருமகிழ்ச்சி. இப்போது மகிழ்ச்சி அடைக்கூடிய காலம் கனிந்திருக்கிறது.  

ஆம். இவ்வசதி பெற நாம் கணினியை நோக்கிகூடச் செல்ல வேண்டாம்.  நாம் கைகளில் இருக்கும் திறன் பேசியில் இப்போது பேசினாலே போதும். தமிழில் அதுவாக வேகமாகச், சரியாகச் சொற்களை அறிந்து தட்டச்சு செய்கிறது. எவ்வளவு அதிகமான சொற்களாக இருப்பினும் அதனை எளிதாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது வளரும் தொழில் நுட்பம். இந்த வசதியினை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனத்திற்கு நாம் நன்றியினைத் தெரிவித்தே ஆகவேண்டும்.

சரி இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம். உங்கள் திறன் பேசியில் முதலில் Google Play Store செல்லுங்கள். அதன் பிறகு Gboardஎனத் தட்டச்சு செய்யுங்கள். இச்செயலி பெரும்பாலும் உங்கள் திறன் பேசியில் ஏற்கனவே நிரப்பி இருக்க கூடும். இல்லை என்றாலும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இதனை ஆக்டிவேட் செய்ய, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திவரும் விசைப்பலகையினை மாற்ற வேண்டும். இந்த Gboard setting™ சில மாற்றங்களைச் செய்வதின் மூலம் நாம் குரல் வழி தட்டச்சு செய்யும் முறையில் மிக எளிதில் பெறலாம்.

உங்கள் திறன்பேசியின் அமைப்புக்குச் (Settings) செல்லுங்கள். அங்கே Language and Input என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் க்ஷிஷீவீநீமீ tஷீ ஜிமீஜ்t  என்பதை தேர்வு செய்யுங்கள். பின்னர் மொழியினைத் தேர்வு செய்யுங்கள். அதில் ஹிsமீ sஹ்tமீனீ றீணீஸீரீuணீரீமீ  என்பதை அணைத்துவிட்டு தமிழைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். தமிழ் உள்ளீட்டு வகையினில் நான்கு வழிகள் உள்ளன. தமிழ் (இந்தியா), சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என்பதாக உள்ளது. உங்கள் மொழி உச்சரிப்புக்கு தகுந்தவாறு தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது. தட்டச்சுத் திரைக்கு வாருங்கள்.

ஒலி வாங்கி போன்ற அமைப்பு இருக்கும். அதனை தொட்டுக்கொண்டே தமிழில் பேசுங்கள் அதுவாகவே தட்டச்சு செய்வதை நீங்கள் காணலாம். விரைவாகப் பேசினாலும் இது நமது குரலினைப் புரிந்துகொண்டு எளிதில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சினைச் சாத்தியமாக்குகிறது. இப்போது பல பேருக்குத் தமிழின் சிறப்பு ழகரம் உச்சரிக்க வரவில்லை.  இதனையும் சொற்களுக்கு ஏற்றவாறு கூகுள் சரிசெய்து கொள்வது வியப்பாக இருக்கிறது. அதாவது ‘தமிள்’ என்று உச்சரித்தால் கூட ‘தமிழ்’ என்று தட்டச்சு செய்து தருவது வியப்புதானே.

இது கூகுளின் முதல் பதிப்பு என்பதால் நமது உச்சரிப்பினை நுனுக்கமாகப் புரிந்து கொண்டு தட்டச்சு செய்வதில் சில தடுமாற்றங்கள் எழக்கூடும். ஆனால் அடுத்தடுத்து வரும் பதிகைகளில் இது மேம்படுத்தப்படும். காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் குறியீடு என்பதெல்லாம் குரல் வழி அல்லாது செய்து கொள்ளக் கூடிய நிலை உள்ளது. இதுவும் பிற்பகுதியில் கூகுள் சரிசெய்யும் என நம்புகிறோம். இன்றே பதிவிறக்கம் செய்து ஒலி வழித் தட்டச்சினை செய்யுங்கள். இனி விரல் வழி மட்டுமல்ல குரல் வழியாகவும் தமிழ் சிறகடிக்கும்