ramanujar 263ராமானுஜர் வரலாற்றைக் கலைஞர் எழுதுகிறார் என்றதுமே வைணவர்களின் வாக்குகளைக் குறிவைத்தே எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டு, சில ஆரியச் சிந்தனைக் குள்ளர்களின் குருவி மூளை வெளியேற்றிய கழிவு. இதில் உண்மை எதுவும் இல்லை. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை, கவிதை வடிவில் முன்பு கலைஞர் தந்தார். இது பொதுவுடைமை ஆதரவாளர்களின் வாக்குகளைக் கவரும் சதி என்று அன்று எவரும் கூறவில்லை.

**

பார்ப்பனர்களால் மறைக்கப் பட்ட ராமானுஜரின் வரலாற்றின் ஒளிவீசும் பகுதியை மட்டுமே கலைஞரின் ராமானுஜர் வெளிப்படுத்தி இருக்கிறது. 1) மனு தர்மத்தை எதிர்த்த ராமானுஜர் 2) சாதி ஒழிப்புப் போராளியான ராமானுஜர் 3) சூத்திரனைக் குருவாக ஏற்ற ராமானுஜர் 4) தீண்டப் படாத குலத்தவரை மாணவராக ஏற்ற ராமானுஜர் 5) சமஸ்கிருதத்தை அகற்றித் தமிழை முன்னிலைப் படுத்திய ராமானுஜர் ............. என்று இவ்வாறாக ராமானுஜரின் மனுசாஸ்திர எதிர்ப்புப் பணிகள் ஏராளம். இதைத்தான் மக்களுக்குத் தெரியப் படுத்துகிறார் கலைஞர்.

**

பார்ப்பனர்கள் எதை மூடி மறைத்தனரோ, அதை வெளிச்சம் போட்டுக் காட்ட, கலைஞர் முற்படுவதன் விளைவே கலைஞரின் ராமானுஜர். இக்காவியத்தின் மூலம், மேலும் அதிகமாகப் பார்ப்பனர்களின் எதிர்ப்பு வந்து சேரும் என்று நன்கு உணர்ந்தே கலைஞர் இதை எழுதுகிறார். 

Pin It