Vijayakanth 400மழைக்காலம். சுறுசுறுப்பாக வலைகளுக்குள் இருக்கும் தவளைகள் வரப்புகளின் மேல் நின்று கத்தத் தொடங்கி விடுகின்றன.

தேர்தல் காலம்! சுறுசுறுப்பாகக் கம்யூனிஸ்டுகள் கூச்சலிடுவார்கள் மூன்றாவது அணி என்று. நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் நாளைக் காணாமல் போவது போலத்தான் மூன்றாவது அணி.

வேறு என்னதான் செய்வார்கள், பொதுவுடைமைக் கட்சியினர். இந்த நேரத்தில் அவர்களுக்கும் வேலை வேண்டுமே. ஊழல் காங்கிரஸ் அல்லாத, மதவாத பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்து கொண்டிருப் பதாகச் சொல்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அயோத்தி கரசேவைக்கு ஆதரவு, போயஸ் தோட்டத்தில் மோடிக்கு விருந்து என்று மதவாதத்திலும் மூழ்கித் திளைப்பவர் ஜெயலலிதா.

ஆனால் ஊழலை எதிர்ப்பதாகவும், மதவாதத்தை எதிர்ப்பதாகவும் கூறும் கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவை ஆதரிக் கிறார்கள்.

பா.ஜ.க.வும் ஜெயலலிதாவும் ஒருவரையருவர் விமர்சனம் செய்வ தில்லை. தேர்தலுக்குப் பிறகு இருவரும் அணிசேருவதற்கான வாய்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.

இதனைக் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களும் உறுதியாக அறிவார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.

ஜெயலலிதாவை மட்டும் ஆதரிக்கவில்லை. மூன்றாவது அணி என்ற பெயரில், முலாயம்சிங் யாதவ், நித்திஷ் குமார், தேவகவுடா, பிரவின் பட்நாயக் என எல்லோரையும் இடது சாரிகள் ஆதரிக்கிறார்கள்.

நாளைய தேர்தலில், தப்பித்தவறி வெற்றி கிடைத்து விடுமானால், இவர்களுள் யார் பிரதமர் என்னும் கேள்விக்கு இடது சாரிகளால் விடை காண முடியாது. காங்கிரசும் பா.ஜ.க.வு-ம் கூட ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்து விடுவார்கள்.

ஆனால் இடது சாரிகள் உருவாக்கியுள்ள மூன்றாவது அணித் தலைவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்த உண்மையை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் மூன்றாவது அணிதான் ஆட்சிக்கு வரும் என்கிறார்கள் நம் தோழர்கள்!

 

Pin It