தமிழர்கள் இலங்கைத் தீவின் மண்ணின் மைந்தர்கள். இந்திய தீபகற்பத்தில் உள்ள கலிங்கநாட்டிலிருந்து சென்ற விஜயன் என்பவனின் வழித்தோன்றல்களே சிங்களர்கள். வந்தாரை வாழ வைத்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அடிமைகளாகும் சோகம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இலங்கையில் இந்த இரு இனங்களும் தொன்றுதொட்டே வேறுவேறாகவே வளர்ந்து வந்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் இரு இனங்களையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தார்கள். இலங் கையில் இந்தியாவைப் போன்று விடுதலைப் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை; இரண் டாம் உலகப் போருக்குப் பின், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்து விட்டு வெளி யேறியது போலவே இலங்கைக்கும் விடுதலை அளித்தனர்.

விடுதலை பெற்றபின் சிங்களர்கள் தந்திரத்துடனே செயல் பட்டனர். அவ்வப்போது சில உறுதிகளைக் கொடுப்பது, ஒப்பந் தம் செய்வது, அவற்றைத் தக்க நேரத்தில் மறப்பது, செயல் படுத்தாமல் வைப்பது அல்லது மீறுவது என்கிற நரித்தந்தி ரத்துடன் நடந்து கொண்டனர்.

1970 வரை - இராணுவத்திலும், காவல்துறையிலும் ஆள் சேர்க்கும்போது, சிங்களர்களை மட்டுமே பெருவாரியாகத் தேர்வு செய்தனர். வளர்ச்சித் திட்டங்களாக இருந்தாலும் , இயற்கைச் சீற்றங்களுக்கான நிவாரணப் பணிகளாக இருந்தாலும் தமிழர் பகுதிகள் உரிய பங்கீடு அளிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டே வந்தி ருக்கின்றன. இவற்றை எல்லாம் தாண்டி, தமிழர்கள் தங்கள் கல்வி யால், அறிவாற்றலால் வேலை வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். இதனைத் தடுக்க 1956இல் “சிங்களம் மட்டும்” ஆட்சிமொழி என்று சட்டம் கொண்டுவந்து தமிழர்களின் வாய்ப்புகளை யெல்லாம் பறித்தனர்.

1958இல் சிங்கள “சிறீ” எழுத்தினை மோட்டார் வண்டி களின் எண் பலகைகளில் கட்டாயமாகப் பொறிக்க வேண்டு மென கட்டளையிட்டனர். இதற்குத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரி வித்தபோது தமிழ்ப் பெண்களின் மார்பில் சிங்கள “சிறீ” எழுத்தினை பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் எழுதினர்.

1974ஆம் ஆண்டு நான்காம் உலகத் தமிழ் மாநாடு யாழ்பாணத்தில் நடந்த போது , காவல்துறையின் வன்முறையில் 9 தமிழர் உயிரிழந்தனர். இக்கொடுமைக்குக் காரணமான காவல்துறை அதிகாரி சந்திர சேகராவைக் கொல்ல “தமிழ் மாணவர் பேரவையை” சேர்ந்த சிவகுமாரன் வெடிகுண்டு வீசினான். குண்டு வெடிக்கவில்லை. அவரைக் காவல்துறையினர் தேடிக் கண்டுபிடித்துச் சுற்றி வளைத்த போது “சயனைடு” அருந்தி வீரமரணமடைந்தார். ஆயுதப் போராட்டத்திற்கும், பிடிபட்டால் சயனைடு கடித்து மரணத்தைத் தழுவுவதற்கும் முதல் விதை போட்டவன் சிவகுமாரன்.

இனி அகிம்சை மொழி சிங்கள இனவெறியர்களுக்குப் புரியாது என்ற முடிவுக்கு வந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முடிவெடுத்தனர். பல்வேறு போராளிக்குழுக்கள் உறுவாயின. அவற்றில், ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை உறுதி, இலட்சிய வேட்கை கொண்ட இளைஞர்கள் “தம்பி” பிரபாகரன் தலைமையில் “தமிழீழ விடுதலைப் புலி”களாக அணி வகுத்தனர். தனித்தமிழ் ஈழம் ஒன்றே தங்களின் இலக்கு என்ற உறுதியுடன், போராட்டக் களத்தில் இறுதிவரை செயல் பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே. காரணம் பெறற்கரிய மாவீரனைத் தலைவனாகப் பெற்ற இயக்கம் அது.

பணம் காசுக்காகவும், பதவி சுகத்திற்காகவும் போராளிக் குழுக்களைக் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்ட சில புல்லுருவிகள் களை எடுக்கப்பட்டனர். அப்படி சிங்கள அரசுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட யாழ்ப் பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு ஜூலை 27இல் சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்கள அரசு, சிறப்புக் காவல் துறைகளை நிறுவி, தமிழ்ப் போராளிக் குழுக்களை நசுக்க முயன்றது.

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட் டில், “இனியும் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது, தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு, தனித்தமிழ் ஈழமே” -என்று முடிவெடுத்தனர். தனி ஈழம் என்ற முடிவினை முன்வைத்து, 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தது தமிழர் விடுதலைக் கூட்டணி. தனித்தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக வாக்க ளிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டது. போட்டியிட்ட 19 தொகுதிகளில் 18 தொகுதிகளில் அக்கூட்டணியை வெற்றி பெறச் செய்து, தனித்தமிழ் ஈழத்துக்குத் தங்களின் 100 விழுக்காடு ஆதரவைத் தமிழ் மக்கள் தெரிவித்தனர். படுதோல்வியைச் சந்தித்த சுதந்திரக் கட்சியினர் அனுராதபுரத்தில் யாழ்தேவி ரயில் வண்டியைக் கொளுத்தி வெறியாட்டம் ஆடினார்.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான ‘யாழ்நூலகத்தை’ சிங்கள அமைச்சர் காமினி திசநாயக தலைமையி லான வன்முறைக் கும்பல் 1981 மே 31ஆம் நாளில் தீயிட்டுக் கொளுத்தியது.

இதனைப் பொறுக்க முடியாமல் விடுதலைப் புலிகள் 1983 ஜூலை 23 அன்று, பலாலியில் ராணுவ வாகனம் ஒன்றை வெடிவைத்துச் சிதறச் செய்தனர். அதில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட் டனர். இதனை அடுத்து சிங்கள அரசு, காவல்துறை, இராணுவம், சிங்கள காடையர்கள் கூட்டம் என்று அனைவரையும் ஒருங்கி ணைத்து மிகப் பெரிய கலவரத்தைத் தமிழர்கள் மீது கட்ட விழ்த்துவிட்டது. வாக்காளர் பட்டியலுடன் வந்து தமிழர்களைத் தேடித்தேடி தாக்கத் தொடங்கினர். தமிழர் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சொத்துகள் சூறையாடப்பட்டன. துண்டித்த தமிழர்களின் தலைகளை வீதிகளில் நட்டுவைத்து மகிழ்ந்தனர். “தமிழன் கறி இங்கு கிடைக்கும்” என்று விளம்பரப் பலகைகளை வைத்தனர். தமிழ்ப் பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாயினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வெலிக்கடை சிறையில் இருந்த, கொடூரமனம் கொண்ட சிங்களக் கைதிகளைக் கொண்டு, அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் போராளிகளான குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரையும், வேறு சில தமிழ்க் கைதிகளையும் இரும்புத் தடிகளால் தாக்கிக் கொன்றனர். அத்தோடு, குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்து, தரையில் போட்டு பூட்சு கால்களால் மிதித்தனர். ஒரு முறை “இனி சிங்களனின் சிறையில் இருந்து விடுதலை கிடைக்காது. சிங்கள அரசு மரண தண்டனை அளித்தால், என்னுடைய கண்களைப் பார்வையற்ற தமிழர் ஒருவருக்குப் பொருத்த வேண்டும். என்றேனும் ஒருநாள் தமிழ் ஈழம் மலரும்போது அக்கண்களால் அதைக் காணவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய விடுதலை தாகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத சிங்கள அதிகாரிகள் “இந்தக் கண்கள் இருந்தால்தானே தமிழீழத்தைப் பார்க்க விரும்பும்” என்று கூறி, கண்களைத் தோண்டியெடுத்து தரையில் போட்டு பூட்சு கால்களால் நசுக்கினர். சிறையில் இருந்த 35 தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டனர்.

ஜூலை 24ஆம் நாள் தொடங்கி 26ஆம் நாள் வரை நடைபெற்ற இந்தக் கொடுமைகளை வரலாறு “கருப்பு ஜூலை” என்று பதிவு செய்துள்ளது. இதனை அடுத்துதான் வாழ்வாங்கு வாழ்ந்த ஈழத் தமிழர்கள் பெருந்தொகையாக தமிழ்நாட்டை நோக்கி அகதிகளாக வந்தனர்.

காலங்கள் சில மாற்றங்களைத் தரும், அந்த மாற்றங்கள் பல ஏற்றங்களைத் தரும், என்று கூறுவார்கள். ஆனால் ஈழத் தமிழருக்கு மட்டும் துன்பங்களும் துயரங்களும் தொடர் கதையாகவே ஆகிவிட்டன. அதிலும் 2009 மே 17க்குப்பின் இலட் சக்கணக்கான உறவுகளையும், பாதுகாப்பளித்த போராளிக ளையும் பறிகொடுத்துவிட்டு, முள் வேலிகளுக்குள், தடுப்புக்காவல் முகாம்களில், வாழ்க்கையை நகர்த்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி யுள்ளனர். முகாம்களுக்கு வெளியில் வாழ்பவர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ வேண்டியுள்ளது.

இந்நிலை மாற, இரண்டு கோடி சிங்களர்களின், பவுத்த, இனவாத அரசிடமிருந்து சிறுபான்மைத் தமிழர்களைக் காக்க வேண்டும். அதற்கு உலகெங்கும் வாழும் எட்டுக்கோடி தமிழர்களும் ஓரணியில் சேர்ந்து உலக நாடுகளின் மனச்சான்றினைத் தட்டி எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டளை ஆகும். ஈழத்தமிழர்களின் துயர் தீர்க்க தாய்த் தமிழகத் தமிழர்களாகிய நாம் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளுவோம், ஒன்று படுவோம்! வெற்றி பெறுவோம்!