நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1956 இல் தொடங்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிக அத்தியாவசியமான மின்சாரத்தை சுமார் 2,490 மெகாவாட்டை மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ரூ.1,000 கோடிக்கு மேல் இலாபம் ஈட்டி வருகின்றது. இந்நிறுவனம் அரசுக்கு ஈவுத்தொகையாகக் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.3,000 கோடிக்கும் மேலாகவும், அதற்கான வரித் தொகை யாக ரூ.400 கோடியும் செலுத்தியுள்ளது.

நிறுவன சேமிப்பில் (FD) ரூ.1,000 கோடி வரை உள்ளது. தன்னுடைய வளர்ச்சி யால் இன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், உத்திரப்பிரதேசத்திலும் மற்றும் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் சீர்காழி போன்ற இடங்களில் மின் உற்பத்தி நிலை யங்களைத் தொடங்கி வருகின்றது. இந்நிறு வனத்தின் தொடர் வளர்ச்சியால் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைத்து தொழில் வளர்ச்சி பெருக வாய்ப்புள்ளது.

நெய்வேலியில் தற்சமயம் 13,000 நிரந் தரப் பணியாளர்களும், 5,000 அதிகாரிகள் மற்றும் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர் களும் பணியாற்றி வருகிறார்கள். இந்நிறு வன வளர்ச்சியால் சுற்று வட்டார மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதா ரம் வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் தன் மொத்த பங்கில் 6.44 சதவிகிதத்தை தொழிலாளர்களுக்கும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கும் 1998ஆம் ஆண்டில் விற்றுவிட்டது. மீத முள்ள 93.56 சதவிகிதப் பங்குகள் நெய்வேலி நிறுவனத்திடம் உள்ளது.

பங்கு பரிவர்த்தனை குழுமம் செபி (SEBI) 2001ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனத்தின் 10 சதவிகிதப் பங்குகளை யும், தனியார் துறை நிறுவனத்தின் 25 சதவிகிதப் பங்குகளையும் பொதுமக்க ளுக்கு விற்க முடிவெடுத்துள்ளது.

எனவே 2002, 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலிருந்து 10 சத விகித பங்குகளை விற்க செபி முயற்சித்து வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் தலைமை யில் 1924ஆம் ஆண்டு செங்கற்பட் டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட, மக்கள் பயன்பாட்டிற்குரிய தொழில்களை அரசே நடத்த வேண்டுமென்ற தீர்மானத் தின்படி இன்றுவரை செயல்பட்டு வரும் தலைவர் கலைஞர் அவர்கள், மத்திய அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி னார் என்பது வரலாறு.

அதோடின்றி, பங்கு விற்பனையை நிறுத் தாவிடில் மத்திய அரசில் பங்கு வகிக்கும் கழக அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்கிக்கொள்ளவும் முடிவெடுத்து, பொதுத்துறையினைக் காப்பாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பங்கு விற்பனையென்பது வெறும் தொழிலாளர்களை பாதிக்கும் நிலை மட்டுமல்ல, பொதுமக்களையும் பாதிக்கும் பிரச்சினை என்பதையும் குறிப்பிட விரும் புகிறோம். மக்கள் தி.மு.கழகத் தலைவர் கலைஞர் அவர்களை நம்பி வாக்களிக் கும்போதெல்லாம், நம்முடைய பலத்தை வைத்து, பங்கு விற்பனையை தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், பொதுமக்கள் தவறாக வாக்களித்து நமது பலத்தைக் குறைத்ததால், நாம் சொல்வதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதையும், தவறாகத் தேர்வு செய்யப்பட்டவர்க ளால் பயன் ஏதும் இல்லை என்பதை பொது மக்கள் உணர வேண்டிய தருணம் இது என்பதையும் குறிப்பிட் டாக வேண்டும்.

தற்பொழுது 5 சதவிகி தப் பங்குகளை விற்க முயற் சிக்கும் தீவிர முடிவினை எதிர்த்து தொழிலாளர்கள் வழக்கம்போல் போராட்டத் தில் இறங்கி, ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.

ஆனால் நடுவண் அரசு(காங்கிரஸ்) “செபி” என்னும் நிறுவ னத்திற்கும், அரசுக்கும் எவ்விதத் தொடர் பும் இல்லாததுபோல், செபி சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென வாதாடி வருகிறது. போராடும் தொழிலாளர் களைப் பற்றியோ, இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுப் பொதுமக்களும் பாதிக் கப்படுவார்கள் என்பதையோ நடுவண் அரசு சிறிதும் சிந்திக்கவில்லை.

மேலும் தமிழக அரசு மத்திய அரசு விற்கும் பங்குகளை வாங்க முன் வந்தது. ஆனால் இதனையும் ஓரணியில் நின்று எதிர்த்தனர் தொழிலாளர்கள். இக்கருத் தினை ஒரு சில அரசியல் இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில், அவர் களைச் சார்ந்த தொழிற்சங்கங்களும், தமிழக அரசு பங்குகளை வாங்கிக் கொண் டால் கூட்டுப் போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வது நிச்சயம்.

தமிழக அரசு வாங்க நினைக்கும் பங்கு செபி விற்க முடிவு செய்துள்ள பொதுப் பங்காகும் (Public Share) ஆனால், தமிழக அரசின் கோரிக்கை யினை ஏற்று மத்திய அரசு விற்க வுள்ள பங்கு “நிறு வன பங்கு பரிவர்த் தனையாக” (Institutional buyer) அறிவித் துள்ளது. இந்த அறிவிப்பினால் செபியின் முடிவின்படி 5 சதவிகித பொதுப்பங்கை விற்பனை செய்வதை நிறுத்தப் போவ தில்லை என்னும் தந்திரத்தைக் கண்டு பிடித்த தொ.மு.ச. பேரவை, தமிழக அரசை எச்சரித்தது. அதனால் விழித்துக் கொண்ட தமிழக அரசு, தன் முடிவை உறுதிப்படுத்தித் தாங்கள் விற்க அறிவித்த பொதுப் பங்கை மட்டும் வாங்கவுள் ளோம் என்பதை தெளிவுபடுத்தியதால், செபியின் தந்திரம் எடுபடவில்லை.

மேலும் 2010ஆம் ஆண்டில் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமான செபியின் விதிகளைத் திருத்தம் செய்து ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர்கள் Promoter) மற்றும் அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கக் கூடிய நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனங்கள் பங்கை வாங்கினாலும் அதனை பொதுமக்களுக்கு விற்கும் பங்காகக் கருதலாம் என்று தளர்த்தி, தனியார் நிறுவனங்கள் தங்கள் 25 சதவிகிதப் பங்குகளை பொதுமக்களுக்கு விற்காமல் தனியார் நிறுவனங்கள் காப்பாற்றியுள்ளதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

 எனவே, நடுவண் அரசு மேற்கூறிய தளர்த்தப்பட்ட விதிகளின்படி, நெய்வேலி நிறுவனத்தின் விற்கப்பட்டுள்ள 6.44 சதவிகிதத்தை பொதுமக்களுக்கு விற்ற பங்காகக் கணக்கில் கொண்டால், மீதும் விற்பனை செய்ய வேண்டியது 3.56 சதவிகிதம் மட்டுமே. எனவே நடுவண் அரசு பொதுமக்களுக்கும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு, நாட்டிற்கு நன்மை செய்யும் அரசாக இருப்பின், தமிழக அரசு 5 சதவிகதம் கேட்டால் கூட, 3.56 சதவிகிதம் மட்டும் விற்க முன்வர வேண்டும். ஆனால், 35,000 தொழிலா ளர்கள் ‘ஒரு வார’ காலமாகப் போராடு வதைப் பற்றியும், நிறுவனம் இயங்காத தால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதை சற்றும் சிந்திக்காமல், தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நிதி அமைச்சர், வெளிநாட்டிற்குச் செல்வதும், மற்ற அமைச்சர்கள் தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் வேதனைக் குரியதாகும்.

ஆனால், போராடும் தொழிலாளர்களின் நிலைகளை நாள்தோறும் கண்காணித்து வரும் தலைவர் கலைஞர் அவர்கள், இப்போராட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத் தோடும், தொழிலாளர்கள் எடுக்கும் முடிவினை பரிந்துரை செய்தும், தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதியும், பேசியும் வருகிறார். தொழிலா ளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றொரு கடிதத்தையும், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு அவர்களின் மூலமாக, நேரிடையாக பிரதமருக்கு அனுப்பியுள்ளார். என்.எல்.சி. பங்கு விற்பனைப் பின்னணியில் நடைபெறும் அரசியல் நாடகங்களைப் பொதுமக்கள் புரிந்து கொண்டு, நல்ல முடிவுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

- மு.சண்முகம், பொதுச்செயலாளர், தொ.மு.ச.பேரவை