Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

கருஞ்சட்டைத் தமிழர்

கால்டுவெல் தந்த ஒப்பிலக்கண நூலுக்குப் பிறகு, திராவிடம் என்னும் சொல் நடைமுறை வழக்கிற்கு வரத் தொடங்கியது. அதனை முதலில் இதழ்கள் மற்றும் இயக்கங்களின் பெயர்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களே. அவர்களுள் முதன்மையானவர் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்.

ayothidasa_2501885ஆம் ஆண்டிலேயே, ரெவரென்ட் ஜான் ரத்தினம் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், "திராவிடப் பாண்டியன்' என்னும் இதழைத் தொடங்கினார். அவ்விதழின் ஆசிரியரா கவோ, ஆசிரியர் குழுவிலோ அயோத்திதாசப் பண்டிதர் பணியாற்றினார் என்னும் குறிப்புகள் கிடைத்துள்ளன.

முதன் முதலாகத் "திராவிட' என்பதை இயக்கத்தின் பெயரில் சேர்த்த நிகழ்வு 1892 செப்டம்பரில் நடைபெற்றது. அயோத்திதாசப் பண்டிதர் "ஆதி திராவிட ஜனசபா' என்னும் அமைப்பை அப்போது தொடங்கினார். பிறகு, 1894 அக்டோபரில், ரெட்டை மலை சீனிவாசன் அவர்களால், "பறையர் மகாஜன சபா' என ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டு, அதுவே பின்னாளில் "திராவிட மகாஜன சபா' என்று மாற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவைப் போக்கிக் கொள்ள, திராவிடர் என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டனர் என்று தன் நூல் ஒன்றில் (Indian Political Associations and Reform of Legislature) கூறுகின்றார், வரலாற்று ஆசிரியர் பி.பி. மஜும்தார்.

இவ்வாறு இழிவு நீக்கும் வாளாகத்தான் திராவிடம் என்னும் சொல் அரங்கிற்கு வந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலும் அது கூர்மைப்பட்டது.

குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் சிலரால் அச்சொல் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு பெருவழக்காயிற்று என்னும் வரலாற்றை, அன்றைய ஆங்கில ஏடுகள் (தி மெட்ராஸ் மெயில் முதலானவை), நூல்கள் மூலம் விரிவாகவும், அதே வேளையில் நுட்பமாகவும், தன் ஆய்வேடான "தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும்' என்னும் நூலில் திறம்பட நிறுவுகின்றார், முனைவர் கு. நம்பிஆருரன். இந்நூல் மிக அண்மையில், க. திருநாவுக்கரசு, பி.ஆர். முத்துக் கிருஷ்ணன் ஆகியோரால் தமிழில் மொழிபெயர்க் கப்பட்ட ஒன்றாகும்.

1909ஆம் ஆண்டு பி. சுப்பிரமணியம், எம். புருசோத்தமன் ஆகிய இரு வழக்கறிஞர்கள், "சென்னைப் பார்ப்பனர் அல்லாதார் சங்கம்' (The Madras Non Brahmin Association) என் ஓர் அமைப்பை உருவாக்கினர். அவ்வமைப்பின் சார்பில் அவர்களின் நேர்காணல் ஒன்று, 01.05.1909 அன்று தி மெட்ராஸ் மெயில் நாளேட்டில் வெளியாகி உள்ளது. அதனை நம்பிஆருரன் அப்படியே எடுத்துத் தந்துள்ளார். அந்நேர்காணலில்,

"சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அல்லாத வகுப்பினரைச் சீர்படுத்தி, சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு அவர்களை எடுத்துச் செல்லவும், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் அளித்து, கல்வியில் அவர்கள் முன்னேறு வதற்கு வழிவகுப்பதும், இந்த இளைஞர் கள் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு நிலைகளில் பயிற்சி பெறுவதும், இதரக் கல்வித் திட்டங்களுக்கு உதவித் தொகை வழங்குவதும், அவர்களின் சமூகப் பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதும் ஆகிய நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.'' என அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

அதே மெயில் நாளேட்டில், 06.05.1909 அன்று, வி.வண்ணமுத்து என்பார் ஆசிரியருக்கு எழுதிய மடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாதவர்கள், திராவிட இன வழி வந்தவர்கள். எனவே, இந்த அமைப்பிற்கு, 'தி மெட்ராஸ் திராவிடியன் அசோசியேசன்' என்று பெயர் சூட்டலாம்''என அவர் எழுதியுள்ளார். இவ்விரு இன்றியமையாத ஆவணங்களையும் தேடி எடுத்துத் தந்துள்ள முனைவர் நம்பிஆரூரன் நம் நன்றிக்குரியவர்.

இவ்விரண்டையும் ஆழ நோக்குங்கால், பல உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது, பார்ப்பனர் அல்லாதார் என்னும் சொல்லுக்கு மாற்றாகவே, திராவிடன் என்னும் சொல் முன் மொழியப்பட்டுள்ளது என்பதாகும். ஆந்திர, கேரள, கர்நாடக மக்களையும் சேர்த்துக் கொள்ளும் சொல்லாகத் திராவிடன் என்னும் சொல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நடைமுறை வழக்கில் இல்லை என்பது தெளிவாகிறது. பார்ப்பனர் அல்லாத தமிழர் என்பதையே திராவிடர் எனக் குறித்துள்ளனர்.

பார்ப்பனர் அல்லாதவர்களிலும், ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதையே அவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே வருண அடிப்படையிலும், வர்க்க அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே திராவிட இயக்கத்தின் நோக்கமாக இருந்துள்ளது.

எனினும் அவ்வமைப்பு நிலைத்து நின்று செயல்படவில்லை என்பதாகவே தெரிகிறது. மெயில் ஏட்டிலும் கூட, ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வேறு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்கிறார் நம்பிஆரூரன். Natesanar_250அதன் பிறகே, 1912ஆம் ஆண்டு "சென்னை ஐக்கிய சங்கம்' (The Madras United League) என்னும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் செயலர் மருத்துவர் சி.நடேசனார் ஆவார். வருவாய்த் துறையிலும், அரசுப் பொதுப்பணித் துறையிலும் பணியாற்றியவர்களே இவ்வமைப் பின் பெரும்பான்மையான உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இவ்வமைப்பின் நோக்கமும், ஏறத்தாழ 1909ஆம் ஆண்டில் தோன்றி மறைந்த பார்ப்பனர் அல்லாதார் சங்கத்தின் நோக்கத்தை ஒட்டியே உள்ளது.

ஓராண்டிற்குள் 300 உறுப்பினர்கள் புதிய சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது அனைவருக்கும் ஒரு புதிய ஊக்கத்தைத் தந்தது. அமைப்பின் முதல் ஆண்டு விழாவில், அமைப்பின் பெயர் பற்றிய விவாதம் எழுந்தது. நோக்கத்திற்கும் பெயருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பதாகப் பலரும் கருதினர். பார்ப்பனர் அல்லாதார் சங்கம் என்ற பெயரையே சூட்டிக்கொள்ளலாம் என்று சிலர் கூறினர். ஆனால் எதிர்மறையாக ஏன் நாம் பெயர் சூட்டிக்கொள்ள வேண்டும் என்னும் கேள்வி எழுந்தது. இறுதியில், சென்னை ஐக்கிய சங்கத்தின் பெயர், "திராவிடர் சங்கம்' என மாற்றப்பட்டது. இங்கும், பார்ப்பனர் அல்லாதார் என்பதற்கு மாற்றாகவே திராவிடர் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

1912இல் உருவான திராவிடர் சங்கம், மூன்று விதமான பணிகளை மேற்கொண்டது. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் அனைவரும் கல்வி பெற ஒத்துழைப்பது, பார்ப்பனர் அல்லாத பட்டதாரிகளுக்குப் பாராட்டு விழா நடத்துவது, மாதம் தோறும் சமூக, இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்துவது என மூன்று தளங்களில் அவர்கள் பணியாற்றினர்.

சென்னை திருவல்லிக்கேணியில், திராவிடன் விடுதி என்னும் பெயரில், சுற்றுப்புறக் கிராமத்து மாணவர்கள் தங்கிப் படிக்க ஓர் இல்லத்தையும் சங்கம் உருவாக்கியது. ஏழை மாணவர் கள் பலருக்கு உதவித் தொகை வழங்கியது. மாதம் தோறும் நடை பெற்ற கூட்டங்களில், மாணவர்களுக்கு சமூக வரலாறு விளக்கிச் சொல்லப்பட்டது. எனவே கல்விக்கான உதவி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், கல்வியின் தேவை குறித்த விழிப்புணர்ச் சியையும் திராவிடர் சங்கம் ஏற்படுத்தி உள்ளது.

திராவிடர் சங்க நிறுவனரான மருத்துவர் சி. நடேசனார், இன்னொரு பெரும் பணிக்கும் மூல வித்தாக விளங்கினார். அன்று இரு துருவங்களாக இருந்த, சர்.பிட்டி. தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் இருவரையும் இணைத்த பாலமும் நடேசனார்தான். அதன் விளைவாகவே 1916ஆம் ஆண்டு "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' தொடங்கப்பட்டது. அதுவே பின்னாளில் நீதிக்கட்சி என அறியப்பட்டது.

தமிழ்கூறு நல்லுலகம் நடேசனாருக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது. திராவிடர் சங்கத்தின் நூற்றாண்டில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நமக்கு மகிழ்வையும், பெருமையையும் தருகின்றதெனினும், மீண்டும் பார்ப்பனிய மேலாதிக்கமும், ஆரிய அடிவருடிகளின் காவடிகளும் மிகுந்து கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்பு நம் முன்னோர்கள் தொடக்கிச் செயல்படுத்திய பணிகளை இப்போது மீண்டும் தொடக்க வேண்டிய இடத்தில் நிற்கிறோமோ என்னும் ஐயமும் உருவாகின்றது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Tamil Murugesan 2012-02-24 08:55
பார்பன மேலாதிகதை விட திராவிட மேலாதிகமே அதிகமாக உள்ளது. எனவே திராவிடதை ஒழிப்போம். தமிழ் தேசியம் படைப்போம்.கால்ட ுவெல் கிருத்துவ மதப் பிரசாரகர். கிருதுவத்துக்கு ஆள் பிடிக்க திராவிடர் என புளுகினார். அதை பேசியே தமிழன் அழந்தது போதும்.
Report to administrator
0 #2 எச்.பீர்முஹம்மது 2012-02-24 23:42
திமுகவில் அதிகாரபூர்வமற்ற தலைவராக அறிவித்துக்கொண் டிருக்கும் சுப.வீரபாண்டியன ார், மீண்டும் திராவிட கருத்தியலை தூக்கி பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மொழிவழி மாகாணங்கள் அமைந்த பிறகு மூன்றாம் உலக நாடுகள் என்பது மாதிரி அது ஓர் அருவ கருத்துருவே (abstract concept). இதை பருண்மையாக்க முயற்சிப்பது அபத்தமானது.மேலு ம் அன்றைய நீதிக்கட்சி அமைச்சராவையில் தலித் இனத்தை சேர்ந்த எவருமே அமைச்சர்களாக இருந்ததில்லை. மாறாக சேதுரத்தினம் அய்யர் தான் இருந்தார். பெரியாருக்கு பிந்தைய காலகட்டத்தில் திராவிடம் பார்ப்பணியத்தோட ு சகலவிதத்திலும் சமரசத்தையும் உள்வாங்கலையும் நிகழ்த்தியது. முரசொலி மாறன் இதற்கு சிறந்த உதாரணம். அவர் எந்த இனத்தில் திருமணம் செய்தார் என்பதை கூட தங்கள் செல்வாக்கால் மறைக்கப்பார்க்க ிறார்கள். திமுகவிலிருந்து வெளியேறிய தருணத்தில் கண்ணதாசன் சொன்ன ஒன்றை இங்கு குறிப்பிடுவது நல்லது. திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பார்ப்பணரை விரட்டுவோம், விரட்டுவோம் என்கிறார்கள். ஏன் பார்ப்பணத்திகளை விரட்டுவோம் விரட்டுவோம் என்று சொல்ல தயங்குகிறார்கள் . வரலாறு சிலர் கையை விட்டு நழுவ முயற்சிக்கிறது. அதை நிலைநிறுத்துவது அவசியம். சதுர்வர்ண கட்டமைப்பு இந்தியா முழுவதிலுமே இருக்கிறது. வட இந்தியாவில் மட்டுமல்ல. தமிழர்களை மீண்டும் இளிச்சவாய் திராவிடர்கள் ஆக்க முயற்சிக்க வேண்டாம்.
Report to administrator
0 #3 iniyan@gmail.com 2012-02-25 00:57
பார்ப்பனர்களால் பல்வேறு சாதிகளாக பிரிக்கப் பட்டு, பார்ப்பனர்களை விட தாழ்ந்த சாதிகளாக ஒடுக்கப் பட்டு, "வேசி மக்கள்" எனப் பொருள்படும்படி "சூத்திரர்களாகவ ும்", ஆதி சூத்திரர்களாகவு ம் (பஞ்சமர்களாகவும ்) ஒடுக்கப் பட்ட பிற்படுத்தப்பட் ட - தாழ்த்தப்பட்ட மக்களையே பெரியார் "திராவிடர்" என்று அழைத்தாரே தவிர, "தென்னாட்டவர்" என்ற நிலப் பரப்பு குறிக்கும் பொருளில் திராவிடர் என்ற சொல்லை பெரியாரியக்கம் பயன்படுத்தவில்ல ை. ஆகவே, இன்றும் பார்ப்பனரல்லாத, பார்ப்பனீயத்தை எதிர்க்கும் - சாதி ஒழிப்பை வலியுறுத்தும் பிற்படுத்தப் படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க "திராவிடர்" என்ற சொல்லை பயன்படுத்துவது பொருத்தமானதே. "திராவிடர்" என்ற சொல்லால் தமிழர்கள் வீழ்ந்தார்கள் என்று கூறுவது மடமையாகும். திராவிட இயக்கந்தான் தனித் தமிழ் வளர்த்து - வடமொழி கலந்த மணிப் பிரவளாத்தில் இருந்து தமிழை மீட்டது. தமிழ் நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் வைத்ததும் திராவிட இயக்கந்தான், தமிழ் வளர உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தியதும் திராவிட இயக்கங்கள்தான், பிற்படுத்தப்பட் ட - தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்தியது ம் திராவிட இயக்கந்தான். திராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டின் தமிழ் பேசும் திராவிட மக்கள் உயர்ந்து இருக்கிறார்கள் - வீழவில்லை! திராவிடத்தால் - திராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டுத் தமிழர் உயர்ந்தனர் !
Report to administrator
0 #4 செல்வன் 2012-02-26 23:13
********
பார்பன மேலாதிகதை விட திராவிட மேலாதிகமே அதிகமாக உள்ளது. எனவே திராவிடதை ஒழிப்போம். தமிழ் தேசியம் படைப்போம்.கால்ட ுவெல் கிருத்துவ மதப் பிரசாரகர். கிருதுவத்துக்கு ஆள் பிடிக்க திராவிடர் என புளுகினார். அதை பேசியே தமிழன் அழந்தது போதும்.
********

நல்லா சொன்னீங்க. திராவிடம்-நு கதைய கட்டி தமிழர் தலையிலே மிளகாய் அறைச்சுட்டாங்க
Report to administrator
0 #5 செல்வன் 2012-02-27 05:30
*********
இவ்விரண்டையும் ஆழ நோக்குங்கால், பல உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புலப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது, பார்ப்பனர் அல்லாதார் என்னும் சொல்லுக்கு மாற்றாகவே, திராவிடன் என்னும் சொல் முன் மொழியப்பட்டுள்ள து என்பதாகும். ஆந்திர, கேரள, கர்நாடக மக்களையும் சேர்த்துக் கொள்ளும் சொல்லாகத் திராவிடன் என்னும் சொல் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நடைமுறை வழக்கில் இல்லை என்பது தெளிவாகிறது. பார்ப்பனர் அல்லாத தமிழர் என்பதையே திராவிடர் எனக் குறித்துள்ளனர்.
**********

:-).. நீங்க ஆழமா நோக்குங்க.. இல்ல நீளமா நோக்குங்க.. ஆனா இந்த "திராவிடர்"-நா பிராமணர் இல்லாத தமிழர்-எ குறிக்கும்நு கதை விடாதீங்க.

நடேச முதலியார் ஆரம்பித்த 'திராவிடர் சங்கத்தின்" முதல் தலைவர், "பனகல் ராஜா" என்று அழைக்கப்படும் ஸிர் பனகன்டி[1] ராமரயநின்கர் ஒரு தெலுங்கர்.

திராவிடர் இயக்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் தெலுங்கர், மலையாளி நாயர், உயர் ஜாதி முதலியார், செட்டியார் போன்றவர்கள்.
Report to administrator
0 #6 பகுத்தறிவன் 2012-02-28 22:29
தமிழர்
தமிழராய் இருப்பதை
தடுக்க முயலும்
இன்நச்சுகள் மறுப்போம்,
தமிழர்
தமிழராய் இருப்பதை
தடுக்கும் ஆற்றல்
ஆரியத்திற்கும் இல்லை,
திராவிடத்துக்கு ம் இல்லை,
தமிழராய் இருப்போம்
தமிழ் தேசியம் அமைப்போம்
இனியேனும்
தமிழராய் இணைவோம்
(கருத்துக்கள் காலத்திற்கு காலம் மாறும்,
பொருந்தாதவற்றை புறம் தள்ளுங்கள்
-பெரியார் சொன்னது-நினைவில ் நிறுத்துவோம்)
Report to administrator
0 #7 ராகுல் திராவிட் 2012-02-28 22:30
பார்ப்பனர்களை ’ஆரியர்கள்’ என்று கூறும்போது, தமிழர்களை தமிழர்கள் என்று சொல்லாமல் ’திராவிடர்கள்’ என்று சொல்வதின் மர்மம் என்னவோ?
Report to administrator
0 #8 pukalenthi 2012-02-29 22:30
///முன்பு நம் முன்னோர்கள் தொடக்கிச் செயல்படுத்திய பணிகளை இப்போது மீண்டும் தொடக்க வேண்டிய இடத்தில் நிற்கிறோமோ என்னும் ஐயமும் உருவாகின்றது.//

அய்ம்பது அகவைதனை தாண்டியவர்களுக் கு இது புரியும். இளைய தலைமூறைக்கு தங்களின் வேதனை புரிய வாய்ப்ப்பில்லை.
" நல்ல காலத்தில் வாழ்கிறோம். தமிழுக்க்கு நல்ல காலம்-தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்-"
என்று முதல்வாரக இருந்த அண்னா அவர்களின் பேச்சு (திருவள்ளுவர் பட திற்ப்பு விழா ) ஒன்றை இணயத்தில் கேட்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அண்ணா மேலும் சொல்லுவார் 'இந்த காலம் இப்படியே இருந்துவிடும் என்று யாரும் கருதிவிட கூடாது' என்றும் எச்ச்ரிப்பார் அண்ணா.

உஙகளின் ஐயம் ..உளப்பூர்வமானது.

தமிழன் என்கிற அடயாளமே அசிஙம் என்று சொல்லுகிற அளவுக்கு தமிழன் 'வளர்ந்துவிட்டா ன்'.அடயாளம் தேவை இல்லை என்பானிடம் அவனது அடயாளப்பெருமை பேசி என்ன பயன்?
Report to administrator
0 #9 unmai 2012-03-04 12:15
திராவிடம் இலங்கை போன்ற தமிழின அழிவைத் தடுத்தது. தமிழர் என்ற அடையாளம் இருந்திருந்தால் , ஈழ நிலைமையே இந்தியாவில். ஆகவே திராவிடத்துக்கு தமிழர்கள் கடமைப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக தி.மு.க குடும்பம், அவர்களின் அருவருடிகளுக்கு .
Report to administrator
0 #10 Guest 2012-03-05 15:19
"திராவிடர்" இயக்கத்துக்கும் 'திராவிட' இயக்கத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தோழர் சுப.வீ இப்போது புரிந்து கொள்ள வேண்டும். தோழர் சுப.வீ. பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்ற நூலில் ஒரு இடத்தில் கூட "திராவிடர்' இயக்கம் என்று குறிப்பிடவில்லை . திராவிட இயக்கம் என்றே நூல் முழுவதும் குறிப்பிடுகிறார ். என்ன புரிதலோ?
Report to administrator
0 #11 naveen 2012-08-20 15:38
அய்யா பெரியார் அவர்கலின் வழியில் திரவிடம்.திராவி ட இயக்கம் தமிழர்கலின் வாழ்வு வலர வேன்டுமானால் அது உலக தமிழர்கலின் ஒப்பட்ர குரல் வைககோ அவர்கலால் மட்டுமே முடியும்
Report to administrator

Add comment


Security code
Refresh