karunanidhi_anbazhagan

பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய ‘தி.மு.க.ஆட்சி தொடர வேண்டும் - ஏன்? ’ என்னும் நூலைத்  திராவிட இயக்கத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. இச்சிறு நூலை, 07.03.2011 திங்கள் பகல் 12 மணியளவில், சென்னை  அறிவாலயத்தில், மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட, இனமானப் பேராசிரியர் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சட்ட மன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், மகளிர் அணியைச் சேர்ந்த விஜயாதாயன்பன், தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் துறைமுகம் காஜா, சதாசிவம், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரும், நூலின் ஆசிரியருமான பேரா.சுப.வீரபாண்டியன், அவைத் துணைத் தலைவர் மா.உமாபதி, துணைப் பொதுச்செயலாளர்கள் சிற்பி செல்வராசு, ஆ,சிங்கராயர், மாநில அமைப்புச் செயலாளர் மு.சேக்தாவூத், கொள்கைப் பரப்புச் செயலாளர் குமார், கிழக்கு மண்டலச் செயலாளர் இராசேந்திரன், சென்னை மாவட்டச் செயலாளர் குமரன், இளைஞரணி மாநிலச் செயலாளர் கவிஞர் மகிழன், மாநிலப் பொருளாளர் இளஞ்சித்திரன்,  ஆகியோர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத் தலைவருடன் சந்திப்பு

k_veeramani_subavee

அறிவாலயத்தில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில், பெரியார் திடலுக்குச் சென்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர். அங்கு ஆசிரியருக்குப் பேரவையினர் பொன்னாடை அணிவித்து, நூலினை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.