(2009 நவம்பர் 1- ‘தி ஏசியன் ஏஜ்’ நாளேட்டில் வெளியாகியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்)

அன்பார்ந்த (அமெரிக்கக்) குடியரசுத் தலைவர் அவர்களே,

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளமைக்கு என் காலந்தாழ்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்விருதுக்குத் தாங்கள் தகுதியற்றவர் என்று பலரும் நினைக்கும் வேளையில், இதற்கு முன் அதனைப் பெற்ற பலரை விடவும், நீங்கள் கூடுதல் தகுதி உள்ளவர் என்றே நான் கருதுகின்றேன்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வாழ்கின்ற இந்திய- இந்துக்கள் பலரின் உற்சாகத்தை மிகுவித்துள்ள காரணத்தால், வெள்ளை மாளிகையில், இந்திய விழாவான தீபாவளியை நீங்கள் கொண்டாடியிருப்பதற்கும் என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனினும், வகுப்பு மற்றும் சாதிச் சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில், நீங்கள் அழைத்திருந்த பார்ப்பன வைஷ்ணவக் குருக்களோடு, தலித் வகுப்பைச் சேர்ந்த சைவரையும் சேர்த்து அழைத்திருந்தால், நான் அக்கொண்டாட்டத்தை ரசித்திருப்பேன்.

ஆனாலும் இது குறித்து நான் வேறு எங்காவது பேசிக்கொள்வேன். இங்கே, நீங்களும், உங்கள் அரசும் மிகவும் கவலை கொண்டுள்ள, நம் சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

அரக்கன் என்று சொல்லப்படும் நரகாசுரனை, கிருஷ்ணனின் மனைவி சத்தியபாமா கொன்ற நாள் என்ற அடிப்படையில், தென்னிந்தியாவில் தீப ஒளித் திருநாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்துக்கள், நரகாசுரன் இருளின் குறியீடு என்றும்,விளக்குகளை ஏற்றுவதன் மூலம் அவன் சாவு கொண்டாடப் படுகிறது என்றும் நம்புகின்றனர். (வரலாற்றின்படி, அமெரிக்கக் கருப்பர்களும், இந்தியப் பஞ்சமர்களும் கூட,இருளின் குறியீடு என்றுதான் நம்பப்படுகின்றனர்)

வேளாண்மைக்குத் தேவையான மின்சாரத்தை வீணாக்குகின்ற போதிலும், ஒளி விளக்குகளை ஏற்றுவதில் நமக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. பழைய விளக்குகளோ, எண்ணையை மிகுதியும் உறிஞ்சி விடுகின்றன. எவ்வாறாயினும், சுற்றுச்சூழலுக்கு இவை பெரும் கேடுகள் இல்லை.

மிகப் பெரிய அளவில் பட்டாசுகளைத் தீபாவளியையயாட்டி வெடிப்பது என்பதுதான் உண்மையான பிரச்சினை. தீபாவளியன்றும், அந்த வாரத்திலும் கொளுத்தப்படும் பட்டாசுகளின் அளவு எண்ணிப் பார்க்க முடியாததாக உள்ளது.

(இந்தியாவின்) ஐந்தாவது பெரிய மாநகரமான ஹைதராபாத்தில் நான் வசித்து வருகின்றேன். அம்மாநகரத்தில் மட்டும், தீபாவளி இரவில் வெடிக்கப்படும் பட்டாசுகளின் மதிப்பு ஒரு நூறு கோடி ரூபாய் இருக்குமென்று ஊடகங்கள் கூறுகின்றன.

தீபாவளியன்று வெடிக்கப்படுவதை விடச் சற்றுக் குறைவாக இருந்த போதிலும், மறுநாளும், அடுத்த இரண்டு நாள்களும் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப் படுகின்றன. ஹைதராபாத்தில் மட்டுமே, இருநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை மக்கள் வெடித்திருக்க வேண்டும். ஆதலால், நான்காயிரம் கோடி ரூபாய்க்குக் குறையாத அளவில், தீபாவளி நாட்களில், இந்தியாவில், பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்பது மிகையாக இருக்காது.

பட்டாசுகள் கொளுத்தப்படுவதால் உருவாகும் மாசு நிறைந்த காற்றை, எப்போதாவது நீங்கள் சுவாசித்திருப்பீர்களா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, இந்தியாவில் வெடிக்கப்படுவதைப் போல, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற வேளையில், யாராவது பட்டாசுகளை வெடித்தார்களா என்பது பற்றியும் எனக்கு உறுதியாகத் தெரியாது. யாரேனும் சில வெளிநாடு வாழ் இந்தியர்களை, வெள்ளை மாளிகையில் பட்டாசுகள் சிலவற்றைக் கொளுத்த நீங்கள் அனுமதித்திருந்தால், நான் கூறும் செய்தி என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் அமெரிக்கச் சுற்றுச்சூழல் ஆர்லர்கள், அன்று அங்கு பட்டாசுகள் வெடிக்கப்படும்போது இருந்திருந்தால் கூட, இனி என்றும் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடப்படக் கூடாது என்று தடைவிதிக்கக் கோரியிருப்பார்கள்.

எனினும், உங்கள் நாட்டின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் அறிவியல் பட்டங்களைப் பெற்றுள்ள இந்தியச் சுற்றுச்சூழலியலார் எவரும், தீபாவளியால் ஏற்படும் விளைவுகள் குறித்துக் கவனம் செலுத்தவோ, நாட்டின் மக்கள் நலம், சுற்றுச் சூழல், உள்கட்டமைப்புக் குறித்துக் கவலைப்படவோ இல்லை. அவர்கள் அனைவரும், உங்களைப் போலவும், என்னைப் போலவும் கறுப்புத் தோல் கொண்ட நரகாசுரனை அழிப்பதற்கே, வெடிகள் வெடிக்கப்படுவதாகக் கருதுகின்றனர் என்று தெரிகிறது.

பட்டாசுத் தொழிற்கூடங்கள் பல இயங்கும் தமிழ்நாட்டிலுள்ள, ஒரு சிறு நகரமான சிவகாசிக்கு நீங்கள் என்றேனும் ஒருநாள் செல்வீர்களானால், அத் தொழிற்சாலைகள், அந்த நகரிலும், சுடயே வேலை செய்யும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். பலர் இளமையிலேயே இறந்து போகின்றனர்.

ஒருவனின் வாழ்நாளை நியமிப்பதாகக் கூற நினைக்கிறேன். உலகக் குடிமக்களாகிய அந்தக் குழந்தைகள், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைச் சாசனப்படி, உடல்நலம், கல்வி, மற்றும் நீங்கள் அடிக்கடி தொடர்ந்து பேசிவரும் ‘நம்பிக்கை’ ஆகியவைகளைக் கண்டிப்பாகப் பெறும் உரிமையுடையவர்கள்.

உங்கள் நாட்டின், கொடைத்தன்மை மிக்க குடிமக்களின் நிதியுதவியால் தொடங்கப்பட்ட தலித் கல்வி மையத்தின் ஆங்கில வழிக் கல்விக்கூடம், அக்குழந்தைகள் கற்கும் திறன் உடையவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தக் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில், தேறியுள்ள முதல் அணியினர் அனைவரும் முதல் வகுப்பில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதோடு, அவர்களில் சிறந்த மாணவர்கள் 96 சதவீதம் மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். பட்டாசுத் தயாரிப்புத் தொழிலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நிர்வாகமே உணவும், உடையும் அளித்துள்ளது. சிவகாசியில் உள்ள பொதுவான பிற குழந்தைகளை விட, அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி ஆவோம் என்ற நம்பிக்கையுடனும் உள்ளனர்.

உங்களோடு அன்று வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய, வெளிநாட்டுவாழ் இந்தியர் எவரேனும், அந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் சிறுவர்களுக்கு உதவும் வகையில், சிறு தொகையையேனும் கொடையாகத் தந்துள்ளனரா?

அதிபர் அவர்களே! அடுத்த ஆண்டு தீபாவளியை நீங்கள் கொண்டாடுவதற்கு முன்பு, பட்டாசுகளால், சுற்றுச் சூழலுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்படக்கூடிய கேடுகளை ஆராய்ந்து அறிய, சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் மக்கள் நல விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் தீபாவளியை ஒழிக்க வேண்டுமென்றோ, அது பன்னாட்டிற்கும் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்றோ விரும்பவில்லை. ஆனால் சிவகாசிச் சிறுவர்களின் வாழ்விலும் ஒளி விளக்குகள் மிளிர்வதைக் காண பெருவிருப்பம் கொண்டுள்ளேன்.

(கட்டுரை ஆசிரியர், ஹைதராபாத், உஸ்மானியாப் பல்கலைக் கழகத்தின், அரசியல் விஞ்ஞானத் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர்)

-தமிழில்: இனியன்